அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்


சமுதாயம்
பகுதி: 2

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

காதல் மணங்கள் நிகழ்ந்து, ஜோடிகள் சரியாக அமைந்து, காதலுக்கு ஜாதியோ, பீதியோ மற்ற ஏதோ தடையாய் இல்லாதிருப்பின், உள்ளபடி நாட்டில் விபச்சாரம் வளராது.
(1939 - குடியரசு இதழ் - தங்கத்தின் காதலன் - சிறுகதை)

மணம் செய்து கொள்வது மாடு பிடிப்பது போல இருக்கும்வரை, வாழ்க்கையில் பூரா இன்பத்தையும் நுகர முடியாது அதனால் காதல் இன்பத் சுவைத்தறியாத ஆடவரும் பெண்டிரும் காமச் சேற்றில் புரளுகின்றனர். அதில் விளையும் முட்புதரே விபச்சாரம். (தங்கத்தின் காதலன் - சிறுகதை - 09.07.1939)

காமம் பிடித்தவனுக்கு கண்மண் தெரியாது என்று சொல்வார்கள். காமம் பிடித்தவன் மட்டுமல்ல, எந்த எண்ணம் வெறிபோல பிடித்துக்கொண்டாலும் அவர்களுக்கு மற்றவை கண்ணுக்குத் தெரியாது
(சிறுகதை - திராவிட நாடு இதழ் - 1943)

கற்றோருக்கும் மற்றையோருக்கும் இதுதானே வித்யாசம். கற்றோர் காட்சியுடன் கருத்தினைப் பிணப்பார். மற்றையோர் காண்பர், களிப்பர், மறப்பர்!
(வர்ணாஸ்ரமம் - 06.02.1944) (தூண்டில் எச்சரிக்கை - கட்டுரை)

உழைப்பு இந்த நாட்டில் மட்டுமே மிக மிக அலட்சியமாகக் கருதப்படுகிறது. உழைப்பு மட்டுமா? உயிரும் அப்படியே! ஏதோ மனிதன் பிறந்தான். மாயப் பிரபஞ்சத்தில் சின்னாள் இருப்பான் பிறகு மறு உலகம் சென்று மகேஸ்வரனோடு கலந்து, மலரும் மணம் போல் இருப்பான் எனக் கருதப்படும் நாடன்றோ இஃது. ஆகவேதான் மனித உழைப்பும், உழைப்புக்கேற்ற பயன் பெறாத முறையில் வகுக்கப்பட்டுள்ள உழவு முறைக்கு பலியாக்கப்பட்டு வருகிறது. எத்துனை சேதம்! எவ்வளவு அமோகமான உழைப்பு வீணாகிறது. எத்தனை ஆயிரக்கணக்கானவர்கள் எலும்பு நொறுங்க வேலை செய்து வாழ்க்கையை நடத்துகின்றனர். அவ்வாழ்க்கையிலும் எவரும் நடைப்பிணங்களாக அல்லவோ உள்ளனர். உழவு பயனற்றதா? அல்ல உழவு நம் நாட்டவருக்கு பசி போகப் பண்டந்தரவல்லதன்றோ! செல்வம் கொழித்து நம் நாட்டவர் சீருடன் வாழவும், தேயிலைத் தோட்டம் சென்று தேம்பியழவும் தமிழர் யாவரும் தமிழகத்திலேயே தன் மதிப்போடு வாழவும் முடியும் எப்போது? உழவு வெறும் உழைப்பாக மட்டுமன்றி, உழவுத் தொழிலாக விஞ்ஞான முறையை துணை கொண்டு நடத்தப்படின்.
(கிராம சேவை - 10.12.1944)
அலங்கார நடை புகழை வாங்கித் தரும். ஆனால் அந்த வானவில் அதிக நேரம் இராது நடையை விட, நினைப்பு, நோக்கம், முக்கியம். இலட்சியமில்லா எழுத்து மணமில்லா மலர்!
(கட்டுரை - ஏழுத்தாளர் மாநாடு - 16.11.1944)

சமுதாயம்
மாடமாளிகை, கூட கோபுரங்களில் மட்டுமே மன்னர்கள் விறந்த காலம் மலையேறிவிட்டது. பட்டி தொட்டிகள் எங்கணும், குடிசைகள், குச்சு வீடுகள் அனைத்தும் இந்நாட்டு மன்னர்களின் பிறப்பிடமாய்த் திகழ்ந்திடும் நேரமிது.

பாட்டாளிகளுடைய கடமை சமுதாயத்திற்கு நன்மை செய்வதிலே இருக்கிறது. அவர்களுடைய கண்யிம் தங்களுடைய சக்தியைப் பாழ்படுத்திக் கொள்ளாததிலே இருக்கிறது. அவர்களுடைய கட்டுப்பாடு தங்களுடைய ஒற்றுமையை உடைப்பதற்கு யார் எந்த முயற்சி எடுத்துக்கொண்டாலும் ஒரு துளியும் இடம் கொடுக்காத தன்மையிலே இருக்கிறது.

பகட்டும், வெற்றுரைகளும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிடும் போக்கும் தகர்த்தெறியப்படவேண்டும். அப்போதுதான் மனிதத் தன்மை மானுடத்தின் மாண்பு அரசோச்ச முடியும்.

நம்முடைய சுதந்திரப் போராட்டம் இன்னம் முற்றுப் பெற்றுவிடவில்லை. பெற்ற சுதந்திரத்தைப் பேணி காப்பதுடன், மொழி உரிமை பெற, சாதி பேதங்கள் நீங்க - ஏழைகள் நல்வாழ்வு பெற, எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை; எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

கலப்புத் திருமணம் என்பது இலட்சியத்துக்காக செய்யப்படுகிறது மாத்திரம் அல்லாமல், நம் சமுதாயத்தையே மாற்றி அமைக்க எடுத்துகொள்ளப்படுகிற ஒரு தேசிய முயற்சியாகவும் இருக்கவேண்டும்.

எல்லா உலகங்களையும்விட பெரிது மனித மனம்,

சிந்திக்கத் தொடங்கிய முதல் சிந்தனையாளன், சுயநலமுள்ளவனாக தன்னைப் பற்றிய எண்ணத்தை மட்டுமே கொண்டவனாக இருந்துவிட்டிருந்தால், இன்றய உலகம் - நாகரீக உலகம் ஏற்பட்டிருக்கமுடியாது

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்



முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai