அண்ணா களஞ்சியம்


இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

பண்பு

யாரையேனும் கொட்டிவிட்டத் தேள் அவன் எப்படித் துடிக்கிறான், என்ன மருந்து தேடுகிறான் என்பதைக் காண விரும்புகிறதா? வேலை முடிந்ததும் வேறிடம் செல்லும். அது போல உத்தமியின் வாழ்வை வதைத்த அந்த வன்னெஞ்சன் அவள் என்ன கதியானாள் என்பதையும் எண்ணவில்லை!
(பார்வதி பி.ஏ. - புதினம் - 1944)

மாந்தர்
தேன் இனிக்கும், தேள் கொட்டினால் வலிக்கும், பால் வெண்மையாக இருக்கும், பகலில் சூரியன் இருக்கும் என்று அறுதியிட்டு கூறுவது போல பாண்டுரங்கன் யோக்யன் சுந்தரம் சூதுக்காரன், கந்தன் கள்ளங்கபடமற்றவன், மாசிலாமணி மேதாவி, மாடசாமி முட்டாள் என்று அறுதியிட்டு கூற முடியாது.
(தசாவதாரம் - புதினம் - 1945)

சாது
குட்டிகளுக்கு அன்போடு பால் கொடுக்காமலா இருக்கிறது பெண் புலி! மானைப் பிடித்துக் கொன்று இரத்தத்தைப் பெண் புலி குடிக்கும்போது எப்படி இருக்கிறது. மக்களும் அப்படித்தான்.
எனவேதான் பரசுராமன் சாது, பாண்டுரங்கன் கோபக்காரன், பார்வதி போக்கிரி, பரிமளா சரசி என்ற பொதுவாக கூறிவிடுவது முழு உண்மை கிடையாது என்று பண்பு உணர்ந்தோர் கூறுகின்றனர்.
(சாது - 16.11.47)

மனிதன்
வாழ்வு அளிக்கும் நிதி, களங்கமற்ற நல்ல பெயர், கண்ணியம்தானே தவிர வேறல்ல. அவை இல்லவிடின் மனிதன் வர்ணம் பூசிய களிமண்தான்.
(வெள்ளி முளைத்தது - கடிதம் - 25.09.1949)

நிலம்
உழுதால் உணவளித்து, குடைந்தால் நீரளித்து, ஆழக் குடைந்தால் அரும்பொட்கள் பல அளித்து ஏனென்று கேட்காமல் எதுவும் பெற்றிடாமல் ஈன்றிட நான் உள்ளேன், பெற்றிடுவாய், பிழைத்திடுவாய். எத்தனை விதமான இன்னலும், இழிவும் நீ என் மீது சுமத்திடினும் எல்லாம் மறந்திடுவேன், பல் பொருட்களை தர மறுப்பேன் அல்லேன்.
(தேனில் தோய்த்த பழம் - கடிதம் - 14.01.1962)

உயர்ந்தோர்
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்றார் சான்றோர். உயர்ந்தோர் என்ற அந்தப் பண்பு உணர்ந்த அறம் கூறும் பெரியோன் கூறியது சாதியை அல்ல, குணத்தை, அறிவை, ஆற்றலை.
(கடிதம் - 06.05.1956)

விந்தை மாந்தர்
எதைக் கண்டும், கொண்டும் எவரும் மகிழ்ச்சியடையவோ, பெருமைப்படவோ விடமாட்டார்கள். பிறர் மகிழ்ச்சியும் பெருமையும், அடைய முடியாமல் போவதிலேதான் இவர்களுக்கு மகிழ்ச்சி, பெருமை. நல்ல பாலிலே விழுகிறதே ஈ, இரண்டு சொட்டுகளாவது குடித்து மகிழ்கிறதா? இல்லை. செத்து மிதக்கிறது. பால் கெட்டு சாக்கடையில் ஊற்றப்படுகிறது. இதனால் ஈக்கு என்ன பலன்? பால் சாப்பிட எண்ணியவன் சாப்பிடவில்லை அல்லவா? அதுதான்!
அறுடையும் அணிவகுப்பும் - கடிதம் - 01.04.1962)

உயர்ந்தது
தம்பி, உயர இருப்பதெல்லாம் உயர்ந்தது என்று யார் உனக்கு சொன்னார்கள். தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்தது என்று ஏன் கருதிக்கொள்கிறாய்? பூமியின் கீழே, மிக மிகக் கீழே கிடைக்கிறது வைரம்; உயரத்தில் அல்ல!

கட்டுவிரியன் குட்டி மரத்தின் உச்சாணி கிளையில் போய் இருந்துகொண்டால், மிக உயர்ந்ததாகிவிடுமா? ஆகாதன்றோ?
(கடிதம் - 16.10.2965)

பண்பு
எளிமைதான் நமது பண்பு. நிலை உயர, உயர மிக எளிமையாக இருப்பதுதான் அந்தப் பண்பின் சிகரம்.

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்




முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai