அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்


சமுதாயம்
பகுதி: 1

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

தத்தமக்கு விருப்பமான முறையில் வாழ்க்கை நடத்தவும் அத்தகைய வாழ்க்கை நடத்துவதற்கு தேவைப் படுபவைகளை, தத்தமது இயல்புக்கு தக்கவைகளை வேறு எவரும் பறித்துக் கொள்ளாது பார்த்துக்கொள்ளவும், தடுத்திடவும் தேவைப்படும் பாதுகாப்பு பெற்று வாழ்ந்து ஏற்பட்ட அமைப்பே சமுதாயம்.

அடிமைத்தனம் துவக்கத்திலே உணர்ச்சியற்ற நிலையை உண்டாக்கி வைக்கும். அல்லற்படும்போது அழத் தோன்றும். அழ மட்டும் தெரியும்போது நெஞ்சில் பீதி பிறக்கும். கொடுமை வளர, வளர பீதி அழிந்து படும். கண்ணீர் வரண்டுவிடும். நெஞ்சில் நெருப்பு மூண்டுவிடும்.
(நோ, நோ - 25.09.60)

முட்டாளே, என்று ஒருவன் சொன்னால் ஏற்படக் கூடிய கோபத்தைவிட, முட்டாள் பய மகனே என்றால் எழக்கூடிய கோபம் அதிகமாகவல்லவா இருக்கும்
(19.03.61)

பெரியாரின் பேராற்றல், தேர்தல் வெற்றியை எப்போதுமே, எந்தக் கட்சிக்கும் தேடிக்கொடுத்தது இல்லை. ஆமாம், தம்பி தோற்கும் கட்சிக்கு தேர்தல் பிரச்சார வேலை செய்து, செய்துதான் பெரியாருக்கு பழக்கம். ஜஸ்டிஸ் கட்சி தோற்றபோது வருத்தப்பட்டாரா? தொலையட்டும் சனியன்கள் என்றார். காங்சிரஸ் தோற்கும்போது தெரியும் எனக்கு என்று சந்தோஷம் கொண்டாடுவார். அவருக்கு தேர்தலில் நம்பிக்கை கிடையாதே.
(தீமைகள் ஒழித்துக்கட்ட - 03.12.60)

உழுதுண்டு வாழ்வானே, வாழ்வான், மற்றவர்கள் தொழுதுண்டு பின் செல்பவர்கள் என்று நகரத்திலே படிக்கிறோம். படித்தான பிறகு நமக்கே எண்ணம் அதுபோலிருப்பதில்லை. அவன் பட்டிக்காட்டான் என்றுதான் கேலி செய்கிறோம்.

சந்தைக் கடையில் இருக்க வேண்டியவர்களை சட்ட சபைக்கு அனுப்புவது, கட்சியின் நன்மைக்கு என்று கருதுவது, தாய்மார்களுக்கு தெரிந்த அளவு, தெளிவும் அரசியல் கட்சி பணியாளர்களுக், கட்சி பற்று காரணமாக தெரியாமல் போய்விடுவதுதான்.
(ஐயா சோறு - 10.12.60)

பெரும் நிலப் பிரபுக்களும், கோடீஸ்வரர்களும், தொழிலதிபர்களும், வெளிநாட்டு முதலாளிகளும் கூட்டாக பெருந்தொழில் நடத்துபவர்களும் காங்கிரசில் கூடி நின்று, ஜனநாயக சோசியலிசம் பேசுவது, இருபதாம் நூற்றாண்டின் இணையிலா மோசடி என்பேன். திருடனைக் கூட நடுநிசி உழைப்பாளி என்று கூறத்தயார்.
(நானும், நானும் - 06.09.64)

அகிலபாரதம் என்ற உணர்ச்சி பரவியிருக்குமானால் மைசூர்காரன் தண்ணீர் கொடுப்பதில் இவ்வளவு கஞ்சத்தனத்தை காட்டியிருப்பானா? நாமெல்லாம் இந்தியர்கள் என்ற உணர்ச்சியைப் பரப்பினீர்கள்
( வெற்றிபெறவில்லை - 06.04.60)

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்



முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai