அண்ணா
களஞ்சியம்
இனம்
|
மொழி |
அரசியல் |
கல்வி |
மதம் |
நீதி |
பண்பு |
சமதர்மம் |
பகுத்தறிவு
|
பொதுவாழ்வு
பொருளாதாரம் |
பெண் |
சமுதாயம்
சமதர்மம்
சீமானின் சமதர்ம பிரச்சாரம்,
ஓய்வு நேர உல்லாசம். ஏழைக்கோ அது ஒன்றுதான் வாழ்க்கைத் தோணி.
(பார்வது பி.ஏ. - புதினம் - 1944)
பணம், படிப்பு,. இவைகளின் மூலம் ஜாதி பேதத்தின்
கொடுமையை ஓரளவுக்கு குறைக்க முடியுமேயொழிய அடியோடு அழிக்கமுடிவதில்லை.
அரசியலில் சமத்துவம் ஏற்பட்டுவிட்டால் மட்டும் சமூகத்திலுள்ள பேதங்கள்
போய்விடுவதில்லை. அந்தப் பேதம் இருக்கும் வரையில் சமதர்மம் என்ற
இலட்சியம் கனவில் காணும் காட்சியாகவே இருக்கமுடியும். மக்களுக்குள்
ஏற்படும் பேதம் பல காரணங்களால் அமைவதால் பேதத்தின் உருவம் பல வகையாகக்
காட்சியளிக்கிறது. ஜாதியால், மதத்தால், குலத்தால், அரசியல் நிலையால்,
பொருளாதாரத்தால் பேதம் ஏற்படுகிறது. இவையனைத்தையும் அகற்றியாக
வேண்டும். ஆனால் இந்த நாட்டிலே, ஜாதிதான் மக்களுக்குள் பேதத்ததை
ஏற்படுத்தும் முதல் சாதனம். மக்களின் இரத்தத்திலே கலக்கப்பட்டிருக்கும்
கடும்விஷம். மனதிலே முடக்கு நோயைப் புகுத்திவிட்ட முறை - எனவேதான்
பேதமற்ற சமுதாயத்தை - சமத்துவத்தை - சமதர்மத்தை நாம் காணவேண்டுமானால்,
முதலில் ஜாதி தொலைந்தாக வேண்டுமென்று நான் சார்ந்துள்ள அறிவியக்கம்
பல காலமாக கூறிவருகிறது.
ஒற்றுமை - கூட்டுறவு - ஒப்பந்தம் - கூடி வாழ்தல்
- நட்பு - அன்பு என்றுள்ள எத்தனையோ பதங்களும் ஒவ்வோர் அளவு வரை
மட்டுமே சொல்லக்கூடியவை - முழு திருப்தி தருபவையல்ல. தோழமை எனும்
நிலையை அடையும் படிக்கட்டுகள் இவை. ஆனால் தோழமை இவ்வளவுக்கும்
மேலான ஓர் நிலை. பேதம் நீங்கிய, நீக்கப்பட்ட அல்லது கவனிக்கப்படாத
நிலை அல்ல - பேதம் ஏற்படாத நிலை, ஏற்பட முடியாத நிலை.
(சமதர்மம் - பொழிவு)
பொருள் பாடுபடுபவனுக்குப் போய்ச் சேரவேண்டும்.
போய்ச் சேரும் பொருளும் பயனுள்ளக் காரியத்துக்குச் செலவிடப்படவேண்டும்.
இரண்டும் நமது கொள்கை.
(புரட்சியை அடக்க - பணத்தோட்டம் - 03.03.1946)
சோஷியலிசம் என்பது சேம நலமட்டுமல்ல, சேம நலத்திற்கு
உறுதி தருவதுமட்டுமல்ல, சமத்துவத்தை உண்டாக்க பாடுபடுவது சோஷியலிசம்.
லாஸ்கியின் கூற்றுப்படி சமத்துவம் என்பது எல்லோரையும் ஒரே மாதிரியாக
நடத்துவது அல்ல. எல்லோருக்கும் சம வாய்ப்பு தருவதாகும். (தில்லி
மாநிலங்கள் அவையில் - 01.05.1962)
இனம்
|
மொழி |
அரசியல் |
கல்வி |
மதம் |
நீதி |
பண்பு |
சமதர்மம் |
பகுத்தறிவு
|
பொதுவாழ்வு
பொருளாதாரம் |
பெண் |
சமுதாயம்