அண்ணா களஞ்சியம்


இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்


நீதி

நல்ல தீர்ப்பு
சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் தீர்ப்பு எதுவானாலும் அதுதான் நல்லதீர்ப்பு அது நல்லவர் செய்யும் தீர்ப்பாக என்றும் இருக்காது. ஏனென்றால் நல்லவர்கள் தீர்ப்பு என்றும் இரக்கமுடையதாக இருக்கும்.
(பொழிவு - நல்ல தீர்ப்பு - 19.02.1945)

தீர்ப்பு என்றால் பலவிதம் உண்டு. ஆண்டவன் அடியார்க்கு அளிக்கும் தீர்ப்பு ஒரு விதம். அரசன் குடிமக்களுக்கு அளிக்கும் தீர்ப்பு மற்றொரு விதம். சட்ட சபை தீர்ப்பு ஒரு தன்மையானது. வலியோர் எளியோருக்கும், முதாலாளிகள் தொழிலாளிக்கும் அளிக்கும் தீர்ப்பு பிரிதொரு தன்மைத்து. இவை யாவும் நல்ல தீர்ப்பு என்றே அவரவர் நவிலுவர். ஆனால் தீர்ப்பு காலத்திற்கு தக்கவாறும், நிலைக்குத் தக்கவாறும், கருத்துக்குத்தக்கவாறம் மாறும்; மாறித்தான் தீரவேண்டும். ஒரு காலத்தில் நல்ல தீர்ப்பாக விளங்கியது பிறிதொரு காலத்திலே நல்ல தீர்ப்பு அல்ல என்று எள்ளி நகையாடப்படும்.
(நல்ல தீர்ப்பு - பொழிவு - 19.02.1945)

தீர்ப்பளியுங்கள்.
ஒரு வழக்கு மட்டுமல்ல, பொதுவாகவே அதாவது ஏழைகள் செய்யும் குற்றங்களுக்குக் காரணம் அவர்களின் ஏழ்மை. ஆகவே தண்டிக்கப்பட வேண்டியது ஆட்களல்ல. பொருளாதார பேத அமைப்பு முறை.
(தீர்ப்பளியுங்கள் - 03.03.1946)

சட்டம்
சட்டம் ஓர் இருட்டறை!
அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு!
அந்தப் பிரகாசமான விளக்கு ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை!
(வேலைக்காரி - நாடகம்)

தீர்ப்பு
கைக்கூலி வாங்கிக்கொண்டு அனியாயமாகத் தீர்ப்பளிப்போர், கருத்திலே தெளிவற்ற காரணத்தால் வழக்கின் அடிப்படையையே அறிந்துகொள்ளாமல் அநீதியாகத் தீர்ப்பளிப்போர், நீதியாகத் தீர்ப்பளித்தால் அக்ரமக்காரன் தன்னை நிந்திப்பான், எதிர்ப்பான் என்ற அச்சத்தால் அநியாயத் தீர்பபளிப்போர் - இவ்விதம் எல்லா வகையினரும் வழக்கு மன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
(கடிதம் - 22.04.1956)

சட்டம் என்பது குற்றங்கட்கு தண்டனை தருகின்ற நீதிப் புத்தகமாக இருக்கிறதே தவிர, அது குற்றங்களுக்கான மூலத்தை ஆய்கின்ற மானுடப் புத்தகமாக இல்லை என்பார் அண்ணா.

ஏழை, என்பதற்காகச் சட்டம் இரக்கம் காட்டுமா? ஏதோ பணக்காரன் என்றாலாவது சட்டம், அச்சப்பட்டு ஏதாவது ஒரு சந்து, பொந்து காட்டும், அவன் தப்பித்துக்கொள்ள! (குற்றவாளி கூட்டுக்கு வெளியே - சிறுகதை - திராவிடநாடு கிழமை இதழ் - 02.10.1955)

சட்டம் பெரிய இடம், சின்ன இடம் என்று பார்க்காது . . . ஆனால் சமூகம் பார்க்கிறது. உள்ள சட்டம் அந்த சமூகத்தின் மனப்போக்கை மாற்ற முடியாது சரணாகதி அடைகிறது.
(நீதிபதி வக்கீலானார் - சிறுகதை - திராவிடநாடு கிழமை இதழ் - 14.01.1961)

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai