அண்ணா களஞ்சியம்

இனம்
| மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

இனம்
பகுதி:
4

பகுதி: 1 2 3 4

» அவர்கள் (இலங்கைத் தமிழர்கள்) சொந்த நாட்டிற்கே கதிகளாக வந்து சேரும்போது, விதவை மகளைக் கட்டித் தழுவி விம்மிடும் நலிவுற்ற தாய்போலாகிறது (தமிழ்) நாடு.
(அங்கே பவனம்! இங்கே படகு! - திராவிடநாடு)

» தமிழரின் தொன்மையை எடுத்துரைப்பது தொன்மையே சிறந்தது, புதுமை அன்று என்ற எண்ணமும் மருளால் அல்ல. அன்று எங்ஙனம். தமிழர்தம் அறிவாற்றலால் பல்வேறு நாட்டவர்களைக் காட்டிலும் எல்லாத் துறைகளிலும், ஏற்றம் பெற்று வளிங்கினரோ, அது போன்றே இன்று முயற்சித்தால், தடைகளை நொறுக்கினால், தன்னரசு அமைத்தால், தரணி கண்டு மெச்சத்தக்க வகையில் தமிழர் வாழ்வர், பண்புகாண்பர், பாருக்கு அளிப்பர் என்பதே நோக்கம்.
(திராவிடந்டு - 14.01.1960)

» தமிழ்ப் பண்பாடு உலகத்தில் எல்லா மனிதர்களையும் சகோதர்களாகவும் தோழர்களாகவும் ஏற்றுக்கொள்ளும். தன்னிடம் வரும் அவர்களை வாழ்த்தி வரவேற்கும். எந்த மொழியையும் உரிய முறையில், மதிக்கும். அறிவுச் செல்வம் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் தேடிச் சென்று எடுத்து வரும்! ஆனால் தமிழர்கள் தமக்கென்று உள்ளதை இழக்க ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள்!

» கிளியும் குயிலும் மாடப் புறாவும் மயினாவும் ஒரே சோலையில் உல்லாசமாக வாழும்; ஆனால் வல்லூறு வட்டமிடக் கண்டால் அதுவும் நம்மைப்போல் ஒரு பட்சிதானே என்று கருதா, வட்டமிடும் வல்லூறு தம்மை வதைக்கும் என்பதறிந்து! அதுபோலவே திராவிடப் பெருங்குடி மக்கள் தம்மில் சிற்சில வேறுபாடு கொண்டோராக இருப்பினும் ஒரே வட்டாரத்தில் வாழ இசைவர். ஆனால் தமது சுயமரியாதையைச் சூறையிடும் ஆரியருடன் வாழ இசையார்.
(சீறும் சில்லறைகள் - திராவிட நாடு தலையங்கம், 28.06.1942)

» ஆரியன் கூத்து காரியமின்றி நடவாது இந்து அரசர்கள் சிலர் சுதந்திரமிழந்தனரே தவிர ஆரியன் வாழ்வுக்குக் குறை ஏதும் வரவில்லை. யார் அழிந்தாலென்ன; கோட்டைகள் தூளானாலென்ன; தமது வாழ்விற்கு வழிகிடைத்தால் போதும் என்ற எண்ணம் ஆரியன் மாற்ற முடியாத சுபாவம். சிறுத்தையின் புள்ளி மாறினாலும் இந்தச் சிலரின் வாழ்வுப் பற்று மாறாது பாம்பு சீறிட மறந்தாலும் இந்தப் பண்டாக்கள் தம் பண்பை மறவார்.
(திராவிட நாடு - 28.06.1942)

» உலகிலேயே தமது பண்டைய இயல்பை மாற்றிக்கொள்ள துளியும் சம்மதிக்காது அத்தகைய பழைய ஏற்பாடு மகா பினிதமானது என்ற மமதையுடன் கூறிக்கொள்வதிலே ஆரியரும் - யூதரும் முன்னணி வீரர்கள். எனவே இவ்விரு இனமும் தத்தம் இன இயல்பைத் துளியும் மாற்றிக் கொள்ளாது இருப்பதற்கான முறைகளை சர்வ ஜாக்கிரதையுடன் பாதுகாத்து வருகின்றன.
(திராவிடநாடு - 30.5.1943)

» பழமை இருக்கிறதே அது காடி போன்றது. அதைப் பருகிய போதையில் உளறிக்கொண்டு கிடக்கும் கூட்டத்திறகு அது பொருத்தமான பெயர்தான். மேலும் ஒர் பழமொழி உண்டல்லவா. எல்லாம் சொல்லுமாம் பல்லி; காடிப் பானையிலே விழுமாம் என்று. அதேபோல, முன்பு நம்முடன் சேர்ந்து ஆரியத்தை அழிக்கவேண்டும், தமிழ் வீரியத்தை வளர்க்கவேண்டும் பார்ப்பனப் புரட்டைப் பொசுக்கவேண்டும். அதைப் பெரியார் இப்படி இப்படிச் செய்யவேண்டும் எனக் காட்டியிருக்கிறார் என்று பேசிக்கொண்டிருந்துவிட்டு இன்று அதே ஆரியத்திலே போய் வீழ்ந்துவிட்ட வீணர்களின் கூட்டத்திற்கு வேறென்ன பெயரிடுவது?
(திராவிடநாடு - 21.03.1943)

» வெள்ளையரைப் போ என்று கூறி போகச் செய்ய முடியுமானால் நாமும் ஆரியரையும் அங்ஙனமே ஏன் செய்ய முடியாது? போ வெளியே என்று கூறும் இந்த முறை மகாமேதாவித் திட்டமென்றால் அதேபோல் ஆரியரை அகற்ற நாமும் அதைப்போன்றே செய்வதில் தவறு என்ன இருக்க முடியும்? எனவே காந்தியாரின் போருக்கு ஆள் திரட்ட இந்த தமிழகத்தில் எவரேனும் முனைவரேல் பெரியார் படை திரட்டி ஆரியரே உமது ஜென்ம பூமிக்குச் செல்லுங்கள் என்று கூறிடச் செய்வார் என்பது திண்ணம்.
(திராவிடநாடு - 26.06.1942)


பகுதி: 1 2 3 4

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai