அண்ணா களஞ்சியம்


இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம் பொன்மொழிகள்


பொன்மொழிகள்

கலை
கலை ஓர் இன மக்களின் மனப்பண்பு. இவ்வின மக்களிடையே தோன்றும் தெளிவு வீரம் ஆகியவற்றின் எடுத்துக்காட்டு. எனவே கலை, இன வளர்ச்சிக்கு ஏற்றபடி மாறியும், விரிந்தும் வருமென்பது நுண்ணறிவினரின் துணிபு. கலை உலகில் அவ்வப்போது மாறுதல் உண்டாகும். இனத்துக்கோர் கலையும், இடத்தின் இயல்வு, தட்ப வெட்பம் ஆகியவற்றுக்கு ஏற்ற முறையிலும், கலை உண்டாகும், வளரும், மாறும்.
- தீபரவட்டும், சொற்பொழிவு - (09.02.1943)

பெண்
ஒரே குடும்பத்தின் மணிகளிலே ஒன்று மாணிக்கமாக்கப்பட்டு மற்றொன்று, மண்ணாங்கட்டியாக்கப்படுகிறது. சொத்து சுதந்திரம் ஆணுக்கு, சமயற்கட்டிலே வேகவும், சயனக்கிரகத்தில் சாயவும் பெண்.
- புலித்தோல் போர்வை, திராவிடநாடு - 04.04.1943

பேனா முனை
பழமை புதுமை என்ற இரு சத்திகளுக்கும் போர் நடக்கிறது. எழுத்தாளர்களின் பேனா முனைகளே அப்போரிலே உபயோகமாகும் போர்க் கருவிகள்!
- எழுத்தாளர் மாநாடு, திராவிடநாடு - 26.11.1944


இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம் பொன்மொழிகள்முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai