துணிவு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

லார்டு ரெஸ்கின் என்பவர் சென்னை மாநில ஆளுநராக இருந்த காலம். அவர் ஆளும் திறமற்றவர் என கணித்த அண்ணா விடுதலை ஏட்டில் தலையங்கம் எழுதினார் . . .

நீதிக்கட்சி தலைவர்கள் ஆங்கிலேயர்களிடம் இணங்கி நடப்பது என்று நினைத்துக் கொண்டிருந்தனர். அது ஆளுநர் பார்வைக்கு சென்று, அந்த தலையங்கத்துக்கு வருத்தம் தெரிவித்து அதே விடுதலையில் எழுத வேண்டும் என்ற ஆளுநரிடம் இருந்து ஒரு செய்தி ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சர்.எ.டி.பன்னீர் செல்வம் அவர்களுக்கு வந்தது. அதை அவர் எடுத்துக்கொண்டு சென்று விடுதலை யின் துணையாசிரியரான அண்ணாவிடம் காண்பித்து அதற்கு வருத்தம் தெரிவித்து எழுதச் கொன்னார். அண்ணாவோ துணிவோடு எழுத முடியாது என்று மறுத்துவிட்டார், அவர் பெரியாரிடம் சென்று சொன்னபோது ஐயாவோ, அண்ணா எழுதியது சரிதான் என்று எழுதிவிட்டார்.

பின்னர் பல நாட்களுக்குப் பிறகு அண்ணாவை சந்தித்த சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள் நீங்கள் அந்த ஆளுநரைப் பற்றி எழுதியது சரியானதுதான், உங்கள் கணிப்புதான் சரி என்று பாராட்டினார்.

1939-ஆம் ஆண்டு அண்ணா விடுதலை யில் துணை ஆசிரியராக இருந்த போது ஒரு தலையங்கம் எழுதினார். அதில் திரு. குமாரராசா (இன்றைய ராஜா சர்) அவர்களைத் தாக்கி இரண்டு வரிகள் இருந்தன. அந்த இரண்டு வரிகளை நீக்கி அச்சிட்டுவிடுமாறு செய்தி அனுப்பினார், பெரியார். அந்த இரண்டு வரிகளோடு தலையங்கம் வரவேண்டும். இல்லையேல நான் வெளியேறுகிறேன் என்று சொல்லிவிட்டார் அண்ணா.

தந்தை பெரியார் அவர்கள் எல்லோரும் கருப்புச்சட்டை அணிய வேண்டுமென்றும் விரும்பினார். அண்ணாவுக்கு இதிலே உடன்பாடு இல்லை. அதற்காக அவர் குள்ள நரி என்று தூற்றப்பட்டார்.

ஆனால் 1948-ல் காந்தியார் சுடப்பட்டதின் விளைவாக கருப்புச் சட்டை படையை ஓமந்தூரார் ஆட்சி தடை செய்தது. அப்போது பகலிலும் இரவிலும் தொடர்ந்து கருப்புச் சட்டை அணிந்திருந்தார். இடுக்கன் வரும் போது தடுக்கி விழாமல் மிடுக்குடன் நின்றார் அடுக்கு மொழி வேந்தன் அண்ணா.
அண்ணா சில நினைவுகள், கவிஞர். கருணாநந்தம்

இந்திய விடுதலை நாள் ஆகஸ்டு பதினைந்து 1947. நமக்கு துக்கநாள் என்றார் தந்தை பெரியார். தனது தலைவர் இப்படிச் சொல்லிவிட்டாலே என அஞ்சாமல், தன் மனதில் பட்டதை துணிவோடு, இல்லை விடுதலை நாள் மகிழ்ச்சிநாளே என அறிக்கை வெளியிட்டார் அண்ணா.

நானோ இந்த அறிக்கையின் விளைவாகவே கூட உங்களில் பலரால் கூட சந்தேகத்துக்கும், நிந்ததனைக்கும் ஆளாகச் கூடிய நிலையில் உள்ளவன். ஆனால் கூறுவது உள்ளத்தில் இருந்து வருபவை.

. . . இது கட்சிக் கட்டுப்பாட்டையும், தலைவரின் அறிக்கையையும் மீறுவதாகும் என்று கருதப்பட்டு என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன் வருவதானாலும் என் வாழ்நாளில் பிரிடிஷ் ஆட்சி கூடாது என்ற கொள்கையைக் கொண்டவன் நான் என்பதை மக்களுக்கு கூற எனக்கிருக்கும் ஒரே நாளான ஆகஸ்ட் 15-ம் தேதியின் முக்கியத்துவத்துக்காக வேண்டி கட்சியின் கடுமையான நடவடிக்கைக்கும் சம்மதிக்க வேண்டியவனாகிறேன். தலைவரும் கட்சியும் என் போக்கு தவறு என்று கருதி என்னை கட்சியை விட்டு நீக்கினாலும், நான் கமூக சீர்திருத்தம், பொருளாதார சமத்துவம், திராவிட தனி அரசு எனும் அடிப்படைக் கொள்கைகளை, கட்சிக்கு வெளியே இருந்தாலும் செய்துவருவேன் என்பதை கூறி இநத் அறிக்கையை முடிக்கிறேன். வணக்கம்.
திராவிடநாடு இதழ், ஆகஸ்ட் 15 கட்டுரை - 10.08.1947

அண்ணா முதல்வரானதும் மூன்று அரும்பெரும் காரியங்கள் செய்தது யாவரும் அறிந்ததே.
அவை தமிழ்நாடு என்று பெயர் வைத்தது, சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாக சட்டம் கொண்டுவந்தது, தமிழகத்தில் இருமொழி கொள்கை போதும், அது தமிழும் ஆங்கிலமும்தான் என சட்டம் இயற்றினார். மய்ய அரசு இந்தியை மூனறாவது மொழியாக வைத்திருந்தது. இந்தி வேண்டாம் என அண்ணா அறிவித்தார் துணிவுடன். இரு மொழி திட்டத்தைச் சட்டமாக்கிவிட்டு அண்ணா சொன்னார் துணிவுடன் என்னாலானதை நான் செய்துவிட்டேன், தில்லி தன்னாலானதைச் செய்து கொள்ளட்டும் என்று. இப்படி அன்றே மாநில சுய ஆட்சிக்கு வித்திட்டவர் அண்ணா!

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai