மாற்றான்
தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
( டாக்டர் அண்ணா பரிமளம் )
»
பேராசிரியர் சேதுப்(பிள்ளை)
அவர்கள் செந்தமிழின் சுவையினை நாட்டு மக்களக்கு விருந்தாக அளித்திடும்
நல்லவர். பொன்னாடைப் போர்த்தி அப்புலவரை பெருமைப் படுத்தினர். நான்
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொன்டேனில்லை. எனினும் இருக்குமிடத்திலிருந்தே
அவர் பெற்ற ஏற்றம் கண்டு இறும்பூதெய்துகிறேன். அவர் அறியார் என்று
எண்ணுகிறேன். அவரிடம் தொடர்புகொண்ட குழாத்தினரில் கூட அவர் மீது
பெருமதிப்புக்கொண்டோர் என் போன்றோர் இரார் . . . திரு.தேவநேயப் பாவாணர்
தமிழ் மொழிக்கும் நாட்டுக்கும் இடைவிடாத நற்றொண்டாற்றி நம் அனைவரின்
நிலையினையும் உயர்த்தியவர். அவருடைய புலமை, தெளிவும், துணிவும் மிக்கது.
- வாழ்த்துச் செய்தி, 07.10.1967
»
தமிழ்நாட்டிலே நல்ல தமிழிலே மேடையில் பேச முடியும் என்பதை முதன்
முதலில் பேசிக் காட்டியவர் திரு.வி.க.(திரு.வி.கல்யாணசுந்தரனார்)
அழகிய தமிழிலே அரசியலைப் பற்றியும் எழுத முடியும் என்பதை முதலாவதாக
எழுத்தில் காட்டியவர் திரு.வி.க. அரசியலில் புயலாகவும், தமிழில்
தென்றலாகவும் இருப்பவர் நம் திரு.வி.க. நூல்களிலே நுண்ணிய உரையைத்
தீட்டியவர் நம் திரு.வி.க. எதிர்கால உலகத்துக்குக்காக சிறந்த ஏடுகளைத்
தாயரிப்பவர் நம் திரு.வி.க.
-அண்ணாவின் சொற்செல்வம் நூல்.
»
அவர் வ.ரா.(வ.ராமசாமி ஐயங்கார்) 1917-ல் பிறந்தவர். சுயமரியாதை இயக்கம்
தமிழகத்தில் தவழ்வதற்கு தொடங்கிய நாட்கள் அவை என்று கூறலாம். அந்த
நாளில் வெளிவந்த சுந்தரியில் (வ.ரா.எழுதிய நாவல்) காணப்படும் கருத்துக்கள்
எப்படிப் பட்டவை என்பதைக் காணும்போதுதான் வ.ரா.வை அக்கிரகாரத்து
அதிசய பிறவி என்று நாம் கூற முடிகிறது.
- திராவிட நாடு இதழ்-18.05.1947
»
மக்கள் கவிஞராக மாறுவது எளிதான செயலல்ல. மிகவும் கடினமான இந்தச்
சாதனையில் முயன்று வெற்றி பெற்றிருக்கிறார் சி.சுப்பிரமணிய பாரதி.
. . .
. . . . சுற்றி வேலி கட்டிக் கொண்டு,
அந்த எல்லைக்குள் அடங்கி ஒடுங்கி விடுபவை அல்ல பாரதியாரின் பாக்கள்
வேதாந்த - தேசிய சிமிழ்களில் அவற்றை அடக்க முடியாது புராதன சம்பிரதாயங்களின்
புராண கற்பனைகளின் ஊழல்களை அம்பலப் படுத்த அவர் அஞ்சவில்லை . . .
. . . . பாரதி வெறும் தேசியக் கவிஞர்
அல்லர். சீர்திருத்த வானில் மின்னிய விடி வெள்ளி அவர்.
- அண்ணாவின் வானொலி பொழிவு, ஞநடியீடநள யீடிநவ.
1948.
»
தேசியக் கவிஞர் இராமலிங்கம், தமது கவிதை ஆற்றலினால் தமிழ்நாட்டிற்கும்
- தமிழ்நாட்டின் மூலம் கவிதை உலகிற்கும் பெருமைத் தேடித்தந்தவர்.
கவிதையாப்பதோடு விடுதப் போரிலும் பங்கு பெற்றவர் தேசியத் தொண்டும்
புரிந்தவர்.
அத்தகைய சிறப்பினாலும் தமது இனிய இயல்புகளினாலும் பல்லாயிரம் மக்களின்
உள்ளங்களில் இடம் பெற்றவர் நாமக்கல்லார்.
- சட்டமன்ற மேலவை உரை, 02.04.1968
பல்கலைக்கழகப் புலவர் தோழர். கா.சுப்பிரமணியப்(பிள்ளை)
ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளையும் துறை போகக்கற்று இரு மொழிகளிலும்
எம்.ஏ. பட்டம் பெற்றவர் . . . . . . சைவமாம் கடலில் நீந்திச் செல்லும்
போது, எதிரே வந்த சில சீர்திருத்தமாம் பொற்றுரும்புகளை எம்மிடத்தில்
வீசி எறிந்து விட்டு, மீண்டும் அச் சைவக்கடலிலேயே நீந்திச் சென்றவரை
- சைவ உலகம் கைவிட்டது என்றால், அது பெரிதும் வருந்தக் கூடிய நிகழ்ச்சியாகும்.
- திராவிடநாடு இதழ், 20.05.1946
வ.உ.சிதம்பரனார்.
வெள்ளையன் இந்த நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டுமானால் அவனுடைய ஆதிக்கதின்
ஆணிவேரான வியாபாரத் துறையைத்தான் முதலில் கைப்பற்ற வேண்டும் என்ற
ஒரு சிறந்த திட்டத்தை முதலில் வகுத்த பெருமை சிதம்பரனாருக்கே உரியதாகும்.
- தமிழரசு, அரசு ஏடு-16.10.1968
ஓமந்தூர் இராமசாமி
ஓமந்தூர் இராமசாமி அவர்கள் கள்ளங்கபடமற்ற கிராமவாசி. அரசியல் சூதாட்டத்திற்கு
அப்பாற்பட்டவர். தியாக முத்திரையை அரசியல் சந்தையிலே விற்கத் துணியும்
வியாபாரியாக இருக்க மறுப்பவர். சொந்த வாழ்க்கையையும், சுகத்தையும்
மிக மிகக் குறைந்த அளவினதாக்கிக்கொண்ட துறவு மனப்போக்கினர்.
- திராவிட நாடு இதழ் - 04.04. 1948.
காமராசர் காமராசர் கல்லூரியில்
படிக்கவில்லையே தவிர - வாழ்க்கைப் பாடத்தை நன்றாகப் படித்தவர்! மக்களின்
புன்னகையை - பெருமூச்சை - கண்ணீரைப் படித்து அவர் பாடம் பெற்றார்!
முப்பது ஆண்டு - நாற்பது ஆண்டு - என்று மக்களிடம் தோண்டாற்றினால்தான்
இந்தப் பாடத்தைப் பெறமுடியும்! . . . வைரம் என்பது நீண்ட நெடுங்காலத்திற்கு
முன்பு பூமியின் அழுத்தத்தால் கீழே அடகி நடுங்கிக் கிடந்த கரித்துண்டுதான்!
அதுபோல, நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து
தோன்றிய வைரமணிகளிலே ஒருவரே காமராசர்!
- உரை- சிபா.ஆதித்தனார் விழா.
இராஜாஜி அவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும்
மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார். திருக்குறளுக்கு அவர் உரை
எழுதியிருக்கிறார். அவரது உரை தனித்தன்மை வாய்ந்தது. அந்த தனித்தன்மைக்கு
காரணம் அவருடைய கூர்ந்த மதிதான்.
- பொழிவு, 14.12.1968
பசும்பொன் முத்து இராமலிங்கத்
(தேவர்)
நான் ஒரு முறை சட்டமன்னறத்தில் அவரைப் பாராட்டிப் பேசினேன்.
உங்களைத் திட்டிப் பேசும் தேவரையே நீங்கள் பாராட்டிப் பேசலாமா? என்று
கேட்டார்.
முத்து இராமலிங்கனார் புரிந்துள்ள நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால்
- என் மனச் சான்றுக்கு துரோகம் செய்தவன் ஆவேன் அதனால்தான் பாராட்டுகிறேன்.
என்று பதில் கூறினேன்.
- 30.10.1963
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்
திரு.ம.பொ.சி. அவர்கள் அந்த காலத்திலேலே சுதந்திரத்திற்காக அரும்பாடு
பட்டவர். தியாகத் தழும்புகளை ஏற்றுக் கொண்டவர். சிலம்புச் செல்வர்
ம.பொ.சிவஞானம் அவர்கள் தமது தியாகத்தை அரசியல் சந்தையில் விலை பேசாத
உத்தமர். . . - விடுதலை நாள் விழா உரை, 15.08.1967
ஆர். வெங்கட் இராமன்
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் - பொளாதார அமைப்பு
இவ்வளவு பெரிய மாறுதல் அடைந்ததற்கு முழு பொறுப்பு - திரு.ஆர்.வெங்கட்ராமன்
அவர்களையேச் சாரும் என்பதைத் தயக்கமின்றி ஒப்புக் கொள்கிறேன்.
வெங்கட்ராமன் திறமை மிக்கவர். இனிய பண்புகள் படைத்தவர்.
தமிழகத் தொழில் வளர்ச்சியின் கர்த்தாவாக அவர் இருந்தார்.
- பொழிவு, 01.08.1967.
தியாகி சங்கரலிங்கனார்
பல கோடி மாந்தரில் ஒருவருக்கு மட்டுமே கிட்டக்கூடியது அந்த வீரர்
தியாக உள்ளம்!
விருதுநகர் சங்கரலிங்கனார் அதனைப் பெற்றிருந்தார். . . . . . வீரத்தியாகி
சங்கரலிங்கனாருக்கு நாம் அனைவரும் நமது நெஞ்சு நெக்குருக வணக்கம்
கூறுகிறோம் . . .
கவிஞர் கண்ணதாசன்
இந்த நேரத்தில் கண்ணதாசனின் கவிதைத் திறனைப் பாராட்ட மறந்தால் -
நான் தமிழ் பொழியையே அறியாதவன் ஆகிவிடுவேன்.
(சென்னையில் 1962-ல் நடைபெற்ற கவிஞர்.கா.வேழ
வேந்தன் கவிதை நூல் வெளியீட்டு விழவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை)
சுயமரியாதை இயக்கக் கருத்துக்களைப்
பரப்பியவர்களிலே முன் வரிகையில் சிறப்பிடம் பெற்றவராகப் பணியாற்றிய
தோழர் ஜீவானந்தம் அவர்கள் தொடர்ந்து முற்போக்கு கருத்துக்ளை மக்களிடம்
செலுத்தி அவர்தம் வாழ்க்கை செம்மையுறப் பாடுபட்டு வந்தார்.
பொதுவுடமை இயக்கத்திற்கு அவர் ஆற்றிய அரும்பணியின் காரணமாக, மக்கள்
பெற்ற தெளிவும், ஆதிக்கக்காரர்கள் கொண்ட மருட்சியும் கொஞ்சம் இல்லை
. . . அவருடைய சம்மட்டி அடிகளைப் பெற்று சரிந்த சூதுக்கோட்டைகள்
பலப்பல!
அவருடைய ஓயா உழைப்பினால் மக்கள் மன்றம் பெற்ற உயர் தனிக் கருத்துக்கள்
பலப்பல!
- இரங்கல் செய்தி
1967-ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 21-ம்
நான், திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் நெல்லை நகர் மன்ற கண்டிப்பேரி
மருத்துவமனையில், சொல்லின் செல்வர் டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை பெயரால்
உள்ள மகப்பேறு மருத்துவ விடுதிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட
அவ்வமயம் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா அவர்கள் வந்திருந்தார்கள்.
அவருடன் அப்போது மருத்துவத் துறை அமைச்சராக இருந்த எஸ்.ஜே.சாதிக்
பாட்சா அவர்களும் வந்திருந்ததார்.
விழாவில் அந்த மருத்துவ மனையை உருவாக்கிய நெல்லை நகர் மன்றத் தலைவர்
தியாகி ப.இராமசாமி அவர்களுக்கு அண்ணா அவர்கள் பொன்னாடை போர்த்திப்
பாராட்டினார்.
தியாகி இராமசாமி அவர்கள், வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பல முறை
சிறை சென்றிருக்கிறார். அவர் பதவிக்காலத்தில்தான் முதன் முறையாகப்
பொருட்காட்சி தொடங்கப்பட்டது. அவர் ஒரு சிறந்த ஆசிரியரும் ஆவார்.
அத்தகையை உயர்ந்த மனிதருக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பொன்னாடைப் போர்த்தி
சிறப்பித்துப் பேசுகையில் இப்படி ஒரு தலைவருக்கு பொன்னாடைப் போர்த்துவதில்
பெருமைக் கொள்கிறேன் என்றார்.
அவர் ஒரு காங்கிரஸ் காரராக இருந்தும் அண்ணா அவர்கள் இவ்வாறு வழங்கிய
பாராட்டுரை அங்குள்ளோர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
அறிஞர் அண்ணாவின் உயர்ந்த உள்ளத்தை நான் அன்று கண்டேன்! மாற்றான்
தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற கூற்றுக்கேற்ப வாழ்ந்த
- அந்த எதையும் தாங்கும் இதயத்தை நினைக்கிறேன் - நெக்குருகுகிறேன்.
- ஆர்.இரவீந்தரன், திருநெல்வேலி-26.08.76,
கழகக்குரல் இதழ்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திராவிட
முன்னேற்றக் கழகத் தொடர்பை அறுத்துக் கொண்டு காங்கிரசில் சேர்ந்தார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சிவாஜி அவர்களின் கட்டபொம்மன் நாடகத்திற்குத்
தலைமை வகித்த அண்ணா சிவாஜி கணேசன் அவர்களின் திறமையைப் புகழ்ந்துவிட்டு
கணேசன் நீ எங்கிருந்தாலும் வாழ்க எனப் பாராட்டினார்.
- சென்னையில், 15.12.1968
tsU«.
. . |