அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 6

பெரியார் அவர்களோடு சயமரியாதை இயக்கத்தில் பணியாயற்றிக் கொண்டிருந்தபொழுது, சென்னையில் நான் பேசுகிற கூட்டங்களுக்கெல்லாம் தவறாமல் இரு குள்ளமான உருவம் வந்து செல்வதைக் கண்டேன். நான் வண்ணாரப்போட்டையில் பேசினாலும் வடபழனியில் பேசினாலும், மைலாப்பூரில் பேசினாலும், மாம்பலத்தில் பேசினாலும் அடையாற்றில் பேசினாலும் சரியே, சென்னையிலும், சென்னையைச் சார்ந்த சுற்றுப்புறங்களிலும என எங்கு நான் பேசினாலும் பேசுகிற அக்கூட்டங்கள் அனைத்திலும், நான் அந்த உருவத்தைக் கண்டபடி இருந்தேன்.

முதலில் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரப் பற்றுள்ள ஒரு இளைஞர்போலும் அவர் என்று எண்ணினேன். எனினும் அவ்வுருவமே நான் செல்லும் கூட்டங்களிதோறும் வர ஆரம்பித்ததால் எனக்கென்று ஒரு சந்தேகம் கிளம்ப, அருகில் இருந்த கூட்டம் நடத்துகிற பலலை மிகமிகக் குள்ளமாக, கறுப்பாக, குறுகுறுப்பான கண்களோடு காணப்படும் இந்த இளைஞர் யார்? என்று கேட்டேன். ஒருவராலும்சரியான கதிலை அளிக்க முடியவில்லை. ஆனால்; அவ்வுருவம் மட்டும் நான் செல்லும் கூட்டங்கட்குத் தொடர்ந்து வந்தபடியேயிருந்தது.

இந்நிலையில் என்னாலும் அவரை அறிய முடியவில்லை; பிறராலும் அறிந்து கூற முடியவில்லை. எனவே எனக்கென்று நான் கற்பித்துக்கொண்ட, அப்போதைய சூழ்நிலைக்கேற்ற விடையையே என்னுடைய யார் இந்த இளைஞர்? என்ற வினாவிற்கு விடையாக அமைத்துக்கொண்டேன்.

இந்த இளைஞர் வேறு யாருமல்ல, இவர்தான் அரசினாரால் நமக்கென்றே அனுப்பப்பட்டிருக்கிற சி.ஐ.டி. இல்லாவிட்டால் இப்படி நாம் செல்லும் கூட்டங்கள்தோறம் இநத இளைஞர் வரத் தேவையில்லை என்பதே அப்போது எனது முடிவாக இருந்தது.

இந்த முடிவிற்கு வந்ததற்குப் பிறகு வேறு யாரிடமும் யார் அந்த இளைஞர்? என்று கேட்பதில்லை. சென்னையில் நடைபெறும்பொழுது மட்டும் என் கண்கள் என்னையறியாமலே அந்த இளைஞரைத் தேடும். நான் தேடுகிற இடத்திலேயே அவரும் காட்சியளிப்பார்.

ஆனால், என்னுடைய முயற்சி பலன் பாணாமல்போன சில காலம் கழித்து எனக்கு அந்த ஒருவத்தைக் கொண்டிருந்த அந்த இளைஞர் யான் என்பது தெரிய வந்தது. அந்த இளைஞர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்க என்றும், அவருடைய கல்லூரிப் பருவத்தில் என் கூட்டங்களை விடாமல் தொடர்ந்து கேட்கவேண்டும் என்ற ஆர்வத்தினாலும் அமைதியாக இருந்து அரசியலை அறியவேண்டிய பருவமே மாணவப் பருவம் என்ற அழுத்தமான எண்ணத்தினாலும் அவ்வாறு கூட்டங்கட்கு வந்துகொண்டிருந்தார் என்றும் தெரியவந்தது.

நான் என்னைப் பின்பற்றிவரும் அந்த உருவம் சி.ஐ.டி. யே என்று தீர்மானமாக முடிவு கட்டுகிற அளவுக்கு, அன்னைப் பின்பற்றி வந்த அந்த சி.ஐ.டி. யார்? என்று அகட்கத் தோன்றும். அவர் வேறு யாருமல்ல. இன்று தனது எண்ணத்தாலும், எழுத்தாலும், பெச்சாலும் எங்கள் இதயத்தையெல்லாம் ஈர்த்துவிடடிருக்கிற; இதோ இந்த மேடையிலே உங்கள் முன்னே அமர்ந்திருக்கிற, நீங்கள் எல்லாம் அண்ணா..., அண்ணா என்று அழைத்து அகம் மகிழ்கிற தேழர் அண்ணாதுரை அவர்கள்தான்.

நான் இதை எதற்காக எடுத்துக்காட்டுகிறேன் என்றால்; மாணவர்களுக்கும் அரசியலுக்கும் உண்ண தொடர்பு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்ற சர்ச்சைக்குரிய நீண்டகாலப் பிரச்னைக்கு அவரின் மாணவப் பருவமே சிறந்த தீர்வாக இருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டுவதற்காகத்தான்,

அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி மேற்கண்டவாறு கூறியவர் மறைந்த பொதுவுடைமைத் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்கள். தகவல்: கரந்தை கணேசன்.

பெரியார் அவர்களின் சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளிலே மிகுந்த பற்றுடையவன் நான். அதன் காரணமாக 1934-ம் ஆண்டு முதலே பெரியார் அவர்களோடு நாங்கள் நெருங்கிப் பழகி வந்தோம். அந்த நாளில் தமிழ்மொழியை அழகாகவும், திறமையாகவும்
எழுதுபவர்களிடத்திலே எங்களுக்குத் தனி மதிப்புண்டு.

அப்போது நாங்கள் ஈரோட்டில் நாடகங்கள் நடித்துக்கொண்டிருந்தோம். 1937-ம் ஆண்டு என நினைக்கிறேன். அறிஞர் அண்ணா அவர்கள் ஈ.வெ.ரா. பெரியார் அவர்களின் விடுதலை இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். அறிஞர் அண்ணா அவர்களின் உணர்ச்சி மிகுந்த தலையங்கள்களை நாங்கள் தவறாமல் படிப்பது உண்டு.

காங்கிரஸ் தலைவர் பட்டாபி சீத்தாராமையாவோடு பொட்டியிட்டுத் தலைவர் தேர்தலில் வெற்றியடைந்தார் சுபாஷ் சந்திரபோஸ். அந்த வெற்றியினைப் பாராட்டி விடுதலை இதழில் ஒரு அருமையான தலையங்கம் வெளி வந்தது. மிக உணர்ச்சிகரமான தலையங்கம் அது. அறிஞர் அண்ணா அவர்கள் தாம் எழுதியிருந்தார் எங்கள் குழுவில் அப்போது அரசியல் உணர்வுடையவர்கள் அதிகம். அனைவரும் அறிஞர் அண்ணா அவர்களின் உணர்ச்சி நிறைந்த, ஆற்றல் வாய்ந்த தலையங்கங்களைப் படித்து அவருடைய தமிழ் நடையில் சொக்கிக் கிடந்தோம் ன்றே சொல்லவேண்டும்.

அண்ணா அவர்கள் ஈரோட்டில் எங்கள் நாடகங்களைத் தவறாமல் வந்து பார்ப்பார். பம்பாய் மெயில், வித்தியாசாகரர், தேச பக்தி, மேனகா, குமாஸ்தாவின் பென் முதலிய நாடகங்களிலே அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. இராமாயணம், கந்த லீலா, கிருஷ்ணலீலா முதலிய புராண நாடகங்களையும் அவர் பார்க்கத் தவறியதில்லை. நாடகத்துறையிலே அறிஞர் அண்ணா அவர்களுக்கிருந்த ஆர்வத்தையும், சுவைணுர்வையும் கண்டு நாங்கள் வியப்படைந்தோம். அதுபற்றி அவரோடு அடிக்கடி வாதிப்பது உண்டு. பொதுவாக அறிஞர் அண்ணா அவர்களை நாடகாசிரியராகவும், நடிகராகவும் நாம் காண்பதற்குரிய ஆர்வத்தைத் தூண்டியதே எங்கள் நாடகக் குழுதான் என்பதை நாம் பெருமையோடு சொல்கி கொளுவேன்.

அந்த நாளில் எங்கள் குமாஸ்தாவின் பெண் நாடகத்திற்கு அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய விமரிசனம் ஒன்றை நான் பொனேபோல் போற்றி வைத்திருந்தேன். சென்ற ஆண்டு சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டபோது அந்த நீண்ட விமரிசனத்தையும் வெளியிட்டிருந்தேன். அதைப்படித்து வியப்படைந்த சில நண்பர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். 27 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு திறமையாக நாடகத்திற்கு விமரிசனம் எழுதும் ஆற்றல் வாய்ந்த ஒருவர் இருந்தார் என்பதை இந்த விமரிசன் இல்லாவிட்டால் எங்க்ளால் நம்பியிருக்கவே முடியாது, என ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அவ்வளவு அழகாக, சின்னங்சிறு வாக்கியங்களால் அமைந்துள்ள ஒரு சிறந்த நாடக விமரிசனம் அது. நான் அறிந்த பத்திரிகையிலே விமரிசனம் வந்ததும், நாடக விமரிசனம் என்று நான் முதன் முதலாகப் படித்தும் அந்த குமாஸ்தாவின் பெண் விமரிசனம்தான்! குமாஸ்தாவின் பெண் நாடகம் அண்ணா அவர்களை மிகவும் கவர்ந்தது. தாமும் நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. நாடகங்களின் மூலம் மகத்தான சாதனைகளைச் செய்யலாமென்ற நம்பிக்கையும் உருவாக்கியது.

ஈரோடு முடிந்ததும் நாங்கள் வெளியூருக்கப் பயணமானோம். வழக்கம்போல் பெரியார் அவர்களைக் கண்டு விடைபெற்றோம். அப்போது அண்ணா அவர்களும் எங்களோடிருந்தார். மாதக் கணக்கில் நெருங்கிப் பழகியதால் அண்ணாவின் கண்கள் கலங்கின. பெரியார் அவர்கள் சிரித்துக்கொண்டே,

என்ன, அண்ணாதுரைக்கும் நாடகப் பைத்தியத்தை உண்டாக்கிவிட்டீர்களே! அவரும் உங்களோடு வந்துவிடுவார் போலிருக்கிறதே! என்றார். ஆம்; உண்மை; நிலைமை அப்படித்தான் இருந்தது. அண்ணா அவர்கள் ஈதோடு ரயில் நிலையத்தில் எங்களை அழியனுப்ப வந்திருந்ததோது கலங்கிய கண்களோடுதான் நாங்கள் விடைபெற்றோம். பற்றும், பாசமும் விவரித்துச் சொல்லமுடியாத அளபுக்கு எங்களிடையே வளர்ந்திருந்தன.

அதன் பிறகு எங்களிடையே இருந்த நட்பைக் கடிதங்கள் மூலம் பரிமாறிக்கொண்டடோம்.

1934-ல் நாங்கள் ஈரோட்டில் நடித்துக் கொண்டிருந்தபோது அண்ணா அவர்களின் பிரசித்தி பெற்ற சந்திரோதயம் என்னும் முதல் நாடகம் எங்கள் மேடையில் நடிக்கப் பெற்றது. அறிஞர் அண்ணா அவர்கள அந்நாடகத்தின் ஆசிரியராக மட்டுமல்லாமல் முக்கிய நடிகராகவும் காட்சி அளித்தார். எங்கள் நடிகருக்கெல்லாம் ஒரே குதூகலம். அண்ணா அன்ற பிரமாதமாக நடித்தார். பொஹரியார் அவர்கள் தலைமைதாங்கிப் பாராட்டியபோது, நானும் சில வார்த்தைகள் பேசியது எனக்கு நினைவிருக்கிறது.

இப்படியே தொடர்ந்தது சில நாடகங்களில் நடித்துவிட்டால் பரம்பரை நடிகர்களான நாங்களேல்லாம் இந்தத் தொழிலை விட்டுவிடும்படியாக இருக்கும் பொல் தோன்றுகிறது என்று கூறினேன். அவ்வளவு அற்புதமாக நடித்தார் அண்ணா.

ஒரு கட்டம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சந்திரோதயத்தில் அண்ணா ஜமீன்தாராக வருகிறார். ஜமீன்தாரிசத்தின் ஆணவம், சோம்பேறித்தனம் முழுவதையும் அப்படியே அப்பட்டமாகக் காட்டினார். உட்கார்ந்த நிலையிலேயே சாய்ந்துகொண்டு எதிரே நின்ற வேலையாளிடம் என் காலைத் தூக்கி மேலேவை என்று சொல்லி காலைத் தூக்குவதற்குக் கூட பணமூட்டைகளுக்கு பணியாட்கள் வேண்டுமென்ற உண்மையை அழகாக நடித்துக் காட்டினார்.

சந்திரோதயம் நாடகம் முடிந்த மறுனாள் உரையாடிக் கொண்டிருந்தபோது நான் கூறினேன்.
சந்திரோதயம் போன்ற நாடகங்களை நாங்கள் நடிக்க இயலாது, எங்களைப் போன்றவர்கள் நடிக்க முடியாத சில கருத்துக்கள் இந நாடகத்தில் இருக்கின்றன. பொதுவான சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களின் அடிப்படையில் ஒரு நாடகம் எழுதிக் கொடுங்கள்; நடிக்கிறோம். என்று கூறினேன். ஆண்ணா எழுதுகிறேன் என்றார். ஆனால் அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிட்டவில் நடிப்பிசைப்புலவர் நண்பர் கே.ஆர்.இராமசாமிக்குக் கிடைத்தது.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் கைது செய்யப்பெற்று வழக்கு நடந்து கொண்டிருந்தகாலம், நாங்கள் திருச்சிராப்பிள்ளியில் நடித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் தஞ்சையில் நண்பர் கே.ஆர்.ஆர். அவர்கள் கிருஷ்ணன் நாடகசபை என்னும் பெரால் ஒரு குழுதொடங்குவதாகத் தகவல் கிடைத்தது. அரிஞர் அண்ணா அவர்களின் ஓர் இரவு என்னும் புதிய நாடகம் அரங்கேறுவதாக அறிந்தபோது பெரிதும் மகிழ்ந்தோம். ஆர்வத்தோடு தஞ்சை சென்று நாடகத்தையும் பார்த்து வந்தோம். அதைத் தொடர்ந்து அண்ணாவின் வேலைக்காரி நாடகமும் அரங்கேறியது. பொதுவாக அந்த ஆண்டினை நாடக மறுமலர்ச்சி ஆண்டு எனக் குறிப்பிடுவது முற்றிலும் பொருந்தும் திருச்சியில் எங்கள் அந்தமான் கைதி, முள்ளில் ரோஜா நாடகங்களும் தஞ்சையில் நண்பர் கே.ஆர்.இராமசாமி அவர்களின் ஓர் இரவு, வேலைக்காரி நாடகங்களும் நாடகசபையின் கவியின் கனவு, விதி ஆகிய நாடகங்களும், சென்னையில் என்.எஸ்.கே. நாடக சபையின் நாம் இருவர் நாடகமும் அந்த ஆண்டிலேதான் நடைபெற்றன.

ஓர் இரவு, வேலைக்காரி ஆகிய இரு நாடகங்களிலும் அறிஞர் அண்ணா அவர்கள் கையாண்டுள்ள உரைநடை புதுமையானது, எழுச்சிதரக் கூடியது உணர்ச்சி நிறைந்தது, மற்றவர்கள் விரும்பிப் பின்பற்றக் கூடியது. அறிஞர் அண்ணா அவர்களின் அந்த அற்புதமான உரை நடையினைப் பின்பற்றி இன்று ஒரு எழுத்தாளர் பரம்பரையே தோன்றியிருக்கிறது என்று சொன்னால் அது முற்றிலும் உண்மை. . . காலஞ்சென்ற கல்கி திரு.ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந நாடகங்களுக்கு எழுதிய விமரிசனத்தில் அறிஞர் அண்ணா அவர்களை தமிழ்நாட்டின் பெர்னாட் ஷா என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. 1946-ல் திருச்சி வானொலியில் நாடக வசனங்களைப் பற்றிப் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அறிஞர் அணணா அவர்களின் நாடக உரை நடைச் சிறப்பினைப் பற்றி நான் போற்றிப் பாராட்டினேன்.

அறிஞர் அண்ணா அவர்களின் சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம் ஆகிய இருநாடகங்களையும் 1948-ல் தான் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சந்திரமோகன் நாடகத்தில் அவர் கங்கு பட்டராக வந்து ஆசனத்தில் அமர்ந்துகொண்டு மன்னனோடு வாதிடும் கட்டம் மறக்க முடியாத ஒன்று. அந்தக் கட்டத்தில் அண்ணா அவர்களின் உள்ளத்திலே தோற்றுவித்தன என்று சொல்லவேண்டும்.

நீதிதேவன் மயக்கம் நாடகத்தில் அண்ணா இராவணனாகத் தோன்றி குற்றவாளிக் கூட்டிலே நின்றுகொண்டு வாதிடும் கட்டம் மிக அற்புதமானது. நாடகத்தின் பயனை நன்கு உணர்ந்தவர்; நாடகத்துறைக்கு ஒரு பெருமையைத் தேடித் தந்தவர்; ஒரு மிகச்சிறந்த நடிகர் என்ற முறையிலே அறிஞர் அண்ணா அவர்களைக் கலைஞர்காளாகிய நாங்கள் என்றும் போற்றக் கடமைப்பட்டிருக்கிறோம்.

1940-ல் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரியன் குறிப்புக்கள் என்னும் முதல் நாவலுக்கு முன்னுரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, அதில் அன்றே நான் குறிப்பிட்டேன்; தோழர அண்ணாதுரை அவர்கள் வருங்காலத் தமிழர் தலைவர் என்று, அன்ற அறிஞர் அண்ணா அவர்களுக்கு அறிஞர் என்ற சிறப்புப் பட்டம் இல்லை. தொடர்ந்து நாடகங்கள் எழுதிய பிறகே அந்தப் பட்டம் பொது மக்களால் அவருக்குத் தரப்பெற்றது.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் தோழர் அண்ணாதுரையாக எங்கள் உள்ளத்தை கவர்ந்தவர் அறிஞர் அண்ணாவாக, தமிழர் தலைவராக மலர்ந்து இன்று மூன்றரைக் கோடி தமிழ் மக்களின் இதயங்களில் இடம் பிடித்து, இந்திய துணைக் கண்டத்தின் ஏனையப் பகுதியினரையும் ஈர்த்து, பிற நாட்டினரும் கண்டு பெருமை பே.சும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருப்பதைப் பார்க்கும்போது எங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அறுபதாவது ஆண்டினைத் தொடங்கும் நாடகக் கலைச்செல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் உடல் வலிமையோடும், உளத்திண்மையோடும் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழுலகை வாழ்விக்குமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
(முத்தமிழ் கலா வித்வ ரத்ன டி.கே.சண்முகம்)

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai