அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி: 5

அண்ணாவைப் பற்றிய ஒரு சில நினைவுகளை இந்தக் கட்டுரையில் தரலாம் என்றெண்ணி, எந்தெந்த நிகழ்ச்சிகளை சொல்லலாம் என்று தீர்மானிக் முடியாமல் திக்குமுக்காடிவிட்டேன் எனென்றால் அண்ணா அவர்கள் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளால் மட்டும் மற்றவர்களை மலைக்க வைக்கவில்லை. அவரது அசைவுகள் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லும்.

மொத்தத்தில் அண்ணா என்ற ஒரு வார்த்தைக்குள் இநத அகிலமே அடக்கம். அந்த ஒரு வார்த்தைக்குள் எத்தனை எத்தனைக் கவிதைகள் . . .! அப்பப்பா . . . சொல்லி மாளாத அளவிற்கு அவர் ஒரு சுரங்கப் பெட்டகம்! அண்ணா அவர்கள பிறந்ததால் இருபதாம் நூற்றாண்டுக்குப் பெருமை; தமிழ்மொழிக்குப் பெருமை; தமிழ் சமுதாயத்திற்குப் பெருமை. ஏன் . . . தமிழ்நாடு என்று சொல்லுக்கேகூட பெருமை!

அவர் ஒரு உயிராக பிறக்கவில்லை. உலகமாகவே விறைந்தார். அவர் ஒரு குழந்தையாகப் பிறக்கவில்லை. தமிழ்நாட்டில் குடிகொண்டிருந்த மூடநம்பிக்கைகளை குழிதோண்டிப் புதைக்கும் விடவெள்ளியாகப் பிறந்தார்.

அண்ணாவின் பெருமைகளில் தலையாயது, அவர் என்னைப் பொன்ற தன்னிலும் மூத்தவர்களைக் கூட அண்ணா என்று விளிக்க வைத்தாலே அதுதான் என்று உறுதியாகக் கூறுவேன். அள்ளாதுரை! அண்ணாதுரை. . .! என்று வாய் மணக்க அழைத்து வந்த தந்தை பெரியார் அவர்கள் கூட அண்ணா அவர்ககளின் இரங்கல் செய்தியில் - அண்ணா நாலரைக் கோடி தமிழ் மக்களுக்கும் பேரிழப்பைத் தந்துவிட்டு போய்விட்டார் என்று சொன்னாரே - அதைவிட அண்ணா அவர்களின் பெருமையை வேறு எப்படி சொல்லிட இயலும்? வரலாற்றை சிலர் படிக்கிறார்கள். சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள். அண்ணாவோ வரலாறாகவே வாழ்ந்தவர்க என்பது மிகையல்ல! 1933-ல் கோவை மாவட்டம் (இப்போதைய பெரியார் மாவட்டம்) காங்கேயத்தில் முதலாவது செங்குந்தார் இளைஞர் மாநாடு நடைபெற்றது. தந்தை பெரியார் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்து அண்ணா அந்த மாநாட்டில் சிறப்புரையாற்றினார். ஏறத்தாழ 2 மணி நேரம் பேசினார். அவரது பேச்சில் மூடநம்பிக்கையைப் பற்றிய சாடல்களும் ஜாதிக் தொடுமைகளைப் பற்றிய கண்டிப்புகளும் அதிகமாக காணப்பட்டது.
மேடையில் அமர்ந்திருந்த தந்தை பெரியார் அண்ணாவின் பேச்சை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாவுக்கு தந்தை பெரியாரோடு பழக்கம் இல்லாத நேரம். எனவே அண்ணா தனது பேச்சை முடித்ததும் மேடையைவிட்டு இறங்கி வெளியே போய்விட்டார். பெரியார் கூடடம் முடிந்ததும் அண்ணாவை ழைத்து வரச் சொல்லி, இந்த இளம் வயதில் இவ்வளவு அருமையாகப் பேசுகிறாயே; உனக்குக் கண்டிப்பாக ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது! என்று பாராட்டிவிட்டு,

நீங்க என்ன படிச்சிருக்கீங்க? என்று கேட்டார்.

எம்.ஏ. எழுதியிருக்கிறேன் என்றார் அண்ணா. பாஸ் பண்ணினதும் என்ன செய்யப் போகிறீங்க? என்றார் தந்தை பெரியார். ஏன் நீங்களும் என்னோடு சேர்ந்து அரசியல் பணி செய்யக்கூடாது என்று கேட்ட பெரியார் மேற்கொண்டு அரசியல் பணிகள் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது பற்றியும் சில அறிவுரைகளை ஆலோசனைகளாக நல்கினார்.

அண்ணா, தந்தை பெரியாரின் பேச்சை மீற இயலவில்லை.

பெரியாரின் விருப்பப்படியே, அண்ணா நீதிக்கட்சியில் சேர்ந்து பணியாள்ள முடிவு செய்தார். அப்போதே - இரு வாரத்திற்கொரு முறை வந்து கொண்டிருந்த விடுதலை ஏட்டில் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று தனது அண்ணங்களுக்கு எழுத்து வடிவம் தரச் தொடங்கினார்.

படித்து முடித்து பட்டம் பெற்றதும் எங்கோ ஒரு வேலைக்குச் சென்று, ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்க வேண்டிய அண்ணாவை-அகிலம் புகழும் தலைவராக மாற்றி, பேச்சாலும் எழுத்தாலும் கோடானு கோடி மக்களைக்
கவர்ந்தவராக ஆக்கி, மாட மாளிகைகளிலும் கூட கோபுரங்களிலும் மட்டுமே நிரந்தரக் குத்தகை எடுத்துக் கொண்டு தங்கியிருந்த அரசியலை, மரத்தடிக்கும், மண்குடிசைக்கும் கொண்டு வந்த பெருமைக்குரியவராக்கி - சாமன்யர்களும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திட முடியும் என்ற நிலையை ஒருவாக்கிக் காட்டிட வழி வகுத்துக் கொடுத்தது அண்ணாவின் இந்த செங்குந்தர் இளைஞர் மாநாட்டுப் பேச்சுதான்!

த் 1936-ம் ஆண்டு, சென்னை மாநகராட்சித் தேர்தலில் தங்கசாலை அருகேயுள்ள பெத்துநாயக்கன் பேட்டை வட்டத்தில் நீதிக்கட்சி சார்பில் அண்ணா பேட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாலசுப்பிரமணியம் என்பர் போட்டியிட்டார். அவரும் அண்ணாவைப் போலவே எம்.ஏ. படித்தவர்.

அப்போது அண்ணாவை எதிர்த்து, அப்போதைய காங்கிரஸ் முன்னணித் தலைவர்களான எஸ்.சர்தியமூர்த்தி, பி.சி.கோபாலரத்தினம் மற்றம், டி.செங்கல்வராயன், என்.வி.நடராஜன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்தார்க்.ள

ஆனால் அண்ணா தன்னந்தனியாக - ஒரு மெக்காப்போனை கையில் எடுத்துக்கொண்டு தெருத்தெருவாகச் சென்று ஒவ்வொரு தெரு முனையிலும் நின்று பிரச்சாரம் செய்தார்.

என்னையும் நான் சார்ந்திருக்கிய கட்சியையும் தாறுமாறாக விமர்சிக்கம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் என்னை ஒரே மேடையில் சந்தித்து என்னோடு விவாதிக்கத் தயாரா? என்று அறைகூவல் விடுத்தார்.

ஆனால் வேட்பாளர் பாலசுப்பிரமணியம் உட்பட காங்கிரஸ் தலைவர்க யாருமே அண்ணாவின் அறைகூவலை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.

இருந்தும் தேர்தலில் அண்ணா தோற்றுவிட்டார். ஆனால் அண்ணாவைத் தேடிய அவரது நண்பர்களுக்கு அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஒரு வேளை தேர்தல் முடிவு கண்டு தயரம் தாங்காமல் எங்காவது ஓடிவிட்டாரா? என்றுகூட நண்பர்கள் நினைத்தார்க்ள்.

ஆனால் அண்ணா அவர்கள் பட்டினத்தார் படம் பார்த்துவிட்டு சிரித்த முகத்தோடு திரையயரங்கைவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தார்.

நண்பர்கள் அவரிடம் ஓடி, என்ன அண்ணா! தேர்தலில் நீங்கள் தேற்றுவிட்டீர்கள்; இருந்தும் படம் பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக வருகிறீர்களே! என்று கேட்டார்கள். அதற்கு அண்ணா அவர்கள், தேர்தலில் போட்டியிடுவது நமது உரிமை; பிரச்சாரம் செய்வதும் நமது உரிமை; மக்களை அணுகி எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதுகூட நமது உரிமைதான். ஆனால் ஏன் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்ற கேட்கக்கூடிய உரிமை நமக்கேது? வெற்றியோ தோல்வியோ நம் கையில் இல்லை; மக்கள் கையில்தான் இருக்கிறது என்கிறபோது அதைக் கண்டு நாம் ஏன் வருத்தப்படவேண்டும்; துயரம் கொள்ள வேண்டும்? என்று சொன்னார்கள்.
தேல்வியைக் கண்டு துவளாது உள்ளம் - எதையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிற சுபாவம் அண்ணாவுக்கு அப்போதே இருந்திருக்கிறது.

தஞ்கை மாவட்டம் திருவாரூரில் திராவிடர் கழக மாநாடு கிபும் சீரும் சிறப்புமான முறையில் - காலை முதல் மாலை வரை நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா அவர்கள், திராவிடநாடு பிரச்சியை வலியுறுத்தி தக்க சான்றுகளோடு, வரலாற்று நிகழ்ச்சிகளிலிருந்து உதாரணங்களைக் காட்டி தந்தை பெரியார் அவர்களே வியக்கும் வண்ணம், சுமார் மூன்று மணி நேரம் உரை நிகழ்த்தினார்கள். அந்தத் திறமையான பேச்சுக்கு அன்றைய மாலையே - அதுவரையிலும் சரி . . அல்லது அதற்குப் பிறதும் சரி . . . யாருக்குமே கிடைத்திராத ஒரு மாபெரும் பரிசு கிடைத்தது. அன்று மாலை மாயவரம் ஆற்றங்கரையில் திராவிடர் கழகத்தினர் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்க்.ள வழங்கறிஞர் சிவசுப்பிரமணியம்என்பவரது தலைமையில் நடைபெற இருந்த அந்தக் கூட்டத்திற்கு, ஏறாளமான வழக்கறிஞர்களும், பட்டதாரிகளும் வருகை தந்திருந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கதான் சிறப்புரை நல்குவதாக இருந்தது. அண்ணா அவர்கள் கூட அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தார்.

ஆனால், கூட்டம் ஆரம்பிக்கத் தொடங்கியதும் தந்தை பெரியார் அவர்கள் அண்ணாவை அழைத்து இந்தக் கூட்டத்தில் நான் பேசப்போவதில்லை. காரணம் இங்கே ஏராளமான வழக்கறிஞர்களும், பட்டதாரிகளும் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புரிகிற விதத்திலும் அவர்களை வசப்படுத்துகிற விதத்திலும் உன்னால்தான் ஆணித்தரமான கருத்துக்களை எடுத்து வைக்க முடியும்; எனவே நீதான் இன்று சிறப்புரை ஆற்றவேண்டும் என்று கூறி மேடையைவிட்டு கீழே இறங்கி மக்களோடு அமர்ந்துவிட்டார்கள்.

இந்த பெருமை வேறு யாருக்குக் கிடைத்திருக்கிறது? தந்தை பெரியார் அவர்கள், தான் கீசூ அமர்ந்துகொண்டு இன்னொருவரைப் பேசச் சொல்லிக்கேட்டு மகிழ்ந்தார்க்ள என்று சொன்னால் - அது அகிலமே பாராட்டிய பேரறிஞர் அண்ணா ஒருவர்தான்!

அந்தக் கூட்டத்தில் - காலையில் நடைபெற்ற மாநாட்டுப் பேச்சைக் காட்டிலும் இன்னும் பல சீரிய கருத்துக்களை எடுத்துக்கூறி 3 மஒ நேரம் பேசி தந்தை பெரியார் அவர்கள் உட்பட எல்லோரது கவனத்தையும் தன்பால் ஈர்த்துக்கொண்டவர் அண்ணா.

அண்ணாவின் பேச்சை வென்றிடக்கூடிய பேச்சு அண்ணாவின் இன்னொரு பேச்சாகத்தான் இருந்திட இயலும் என்பதை அன்றைய நிகழ்ச்சி மெய்ப்பித்துக் காட்டியது.

த் 1945-ம் ஆண்டு! அண்ணா ஈரோட்டில் விடுதலையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொட்டிருந்த நேரம்.

விஞ்ஞான மேதை கோவை ஜி.டி. நாயுடுவும் சாமி கைவல்யம் சாமியாரும் அண்ணாவைப் பார்க்க ஈரோடு வந்தார்கள்.

சாமி கைவல்யம் சாமியார் அண்ணாவைத் தனியாக அழைத்துச் சென்று நாயுடு உங்க்ளை அவரது செயலாளராக வைத்துக் கொள்ள விரும்புகிறார்; உங்களுக்கு தனி பங்களா, கார் கோன்ற வசதிகளையும் செய்து தருகிறான் என்ற சொல்கிறார். நீங்கள் மறுக்காமல் ஒப்புக் கொள்ளவேண்டும் என்று சொன்னார்.

அண்ணா, கைவர்யம் சொன்னதைக் கேட்டு அப்படியா என்று வாய் பிளக்கவில்லை.

அரசியலில் தனக்கென்று ஒரு சாதனையை பிற்காலத்தில் ஊற்படுத்திக் காட்டுவதற்காக பிறந்த அண்ணா, அதை எப்படி ஒப்புக் கொள்வார்?

நான் தந்தை பெரியாருடன் இருந்து அரசியல் பணியாற்றுவதையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்; எனவே என்னை நீங்கள் வற்புறுத்திப் பயனில்லை என்ற தெளிந்த நீரோடை பேல - சிறிதும் சபலமின்றி பதில் தந்தார்.

வசதியைத் தேடியே ரேசியலுக்கு வரும் பல்லோர் மத்தியில் - வசதியை உதறித்தள்ளிவிட்டு உத்தமாராக அரசியல் வாழ்க்கையைத் தெடர்ந்தவர் அண்ணா!

த் காஞ்சியில் ரேறிஞர் அண்ணா 07.03.1942-ல் திராவிட நாடு இதழைத் தொடங்கி காங்சியிலுள்ள குமரன் அச்சகத்தில் அச்சடித்து வெளியிட்டு வந்தார்.

இன்னொருவருடைய அச்சகத்தில் அச்சடிப்பதால் பத்திரிகையில் வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருந்தது. இதனால் ஏராளமான சிரமங்களுக்கிடையே பத்திரிகை வந்து கொண்டிருந்ததது. இந்த சமயத்தில் தந்தை பெரியார் காங்சிக்கு வந்து திராவிட நாடு பத்திரிகையின் வரவு செலவுகளைப் பார்த்து, பத்திரிகை நஷ்டத்தில் வெளிவந்துககொள்டிருப்பதை அறிந்தார்.
சொந்தத்தில் அச்சகம் தொடங்கினால், இந்த நஷ்டம் ஏற்படாது என்று எண்ணினார்.

அதானால் அண்ணாவை அழைத்து, சொந்தமாக இரு அச்சகம் தொடங்கும்படி கூறினார்.

அண்ணாவுக்கோ சொந்தமாக அச்சகம் தொடங்குகிற அளவுக்கு வசதியில். அப்படி வசதியிருந்தால் அவர்க ஏன் இன்னொருவர்க அச்சகத்தில் அடித்துக்கொண்டிருப்பார்?

தந்தை பெரியாரிடம் சொந்தமாக அச்சகம் தொடங்க வசதியின்மையை அண்ணா சொன்னார்.
தந்தை பெரியார் எதுபும் பதில் சொல்லாமல் ஊருக்குத் திரும்பிவிட்டார். இரண்டொரு நாட்களில் விடுதலை யில் ஒரு அறிக்கை வருகிறது.

அண்ணாதுரை திராவிடநாடு பத்திரிகை நஷ்டத்தில் நடத்திக்கொண்டிருக்கிறார். எனவே கழகத் தோழர்கள் அனைவரும் மனமுவந்து அண்ணாதுரை சொந்தமாக ஒரு அச்சகம் தொடங்கிட தாராளமாக நிதி உதவி அளித்திட முன்வரவேண்டும்.

நான் அந்த அச்சகத்திற்கு தேவையான எழுத்துக்களையெல்லாம் தருவதெனவும் - எஞ்சிய இயந்திரச் செலவுகளை கழகத் தோழர்கள் பகிர்ந்துகொண்ணவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். எனவே இப்பொழுதிலிருந்தே அண்ணாதுரை அச்சக நிதி உதவி என்று கழகத் தோழர்கள் நிதி அனுப்பவேண்டுகிறேன். என்ற அந்த அறிக்கையை தனது பெயரிலேயே விடுத்திருந்தார்.

அந்த அறிக்கையில் இன்னொரு விபரத்தையும் குறிப்பிட்டிருந்தார். அண்ணாதுரை எம்.ஏ. படித்தவர். சிறந்த எழுத்தாளர்; பேச்சாள்ர். அவர் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் ஒரு பெரிய அரசாங்க வேலைக்குச் சென்று எந்தவிட கஷ்டமுமின்றி நிம்மதியாக இருந்திட முடியும். இருந்தாலும் அவர் அது கோன்ற வேலைகள் எதுபும் வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர். எனவே அவரது அரசியல் சிரமங்களை நாம்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

நிதி குவியத் தொடங்கியது. தேவைக்கு மேலும் நிதி வருவது நின்றபாடில்லை.

இனிதொடர்ந்து யாரும் நிதி அனுப்ப வேண்டாம்; அச்சகத்திற்கு கோதுமான நிதி வாந்தாகிவிட்டது என்று அண்ணா திராவிடநாடு இதழில் அறிக்கை வெளியிட்டு மேற்படியும் நிதி வராமல் செய்தார்.

வந்துகொண்டிருக்கும் நிதி உதவியை இனி தேவையில், நிறுத்துங்கள் போதும் என்று சொன்ன ஒப்பற்ற தலைவர் அண்ணா!

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் புதுமனை புகுவிழா அன்று மாலை, இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் இசை விருந்து நடைபெற்றது.

இசைச் சித்தரின் பாடல்கள் மக்களை ஆனந்த வெள்ளத்தில் குளிப்பட்டிக் கொண்டிருந்தது, ஒரு சில பாடல்களைப் பாடிய பின்னர் இசைச் சித்தர் ஜெயராமன் அவர்கள் வரவுக்கு மேல் செலவு செய்யாதே; வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே என்னும் பாடலைப் பாடத் தொடங்கினார்.

இதைப் பக்கத்தில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த அண்ணா, உடனே இசைச் சித்தரைப் பார்த்து, பாடலைக் கொஞ்ச நேரம் நிறுத்துங்கள் என்ற சொல்லிவிட்டு வெளியே ஒருவரை அனுப்பி வெளியே நின்றுகொண்டிருந்த கே.ஆர்.ராமசாமியை உள்ளே அழைத்துவரச்சொல்லி - இசைச் சித்தருக்கும் பக்கத்தில் அமர வைத்து, இப்போது பாடலைத் தொடருங்கள் என்று இசைச் சித்தரைப் பார்த்து சொன்னார்கள்.

பாடல் தொடர்ந்தது; பந்தலே அதிரும்படியான கரவொலி அதனுடைய எதிரொலியாக இருந்தது.

கே.ஆர்.ராமசாமி தனது வரவுக்கு மிஞ்சிய செலவினைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அண்ணா சொல்லாமல் சொன்னதைப் புரிந்துகொண்ட மக்கன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தன்னுடைய நண்பர்கள், தன்னைச் சார்ந்தவர்கள் எப்போதுமே நன்றாக இருக்கவேண்டும்; அவர்கள் துயரத்தில் மூழ்கக் கூடாது; துன்பத்தில் உழலக் கூடாது என்பதில் அண்ணா எந்த அளபுக் கு கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

1952-ம் ஆண்டு கோவையில் ஒரு நண்பரின் வீட்டு நிகழ்ச்சிக்கு அண்ணா அவர்கள் வந்திருந்தார்கள். அப்போது கம்யூனிஸ்டு தோழர்களுக்கு, ஏனோ அண்ணா அவர்களின்பால் இனம் புரியாத இரு வெறுப்பு!

கோவைக்கு வருகை தந்த அவரைத் தாக்க வந்தார்கள்; அவரை பொதுவுடமை விரோதி என்று விமர்சித்தார்கள். சரமாரியாக பல கேள்விக்கணைகளைத் தொடுத்தார்க்.ள அண்ணா அவர்கள் கொஞ்சம் கூட அஞ்சவில்லை - அயரவில்லை.

எதிரிகளுடைய கணைகளுக்கு, பதில் கணைகளை பன்மடங்கு வலிவுள்ளதாக ஏவினார். வந்தவர்களுக்கு கோபம் வந்துவிட்டது. தங்களை இவன் மடக்குவதா என்று தீப்பிழம்புகளாக அநாவசியமாக மேலும் கோபம் கொண்டார்கள். அண்ணா அவர்களைப் பார்த்து இவ்வளவு தூரம் பேசுகிறீர்களே கார்ல் மார்க்ஸ் எழுதிய கேப்பிடல் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள்.

அதற்கு அண்ணா அவர்கள் மிகவும் சாந்தமாகவும், அலட்சியமாகவும் - நான் திருக்குறள் படித்திருக்கிறேன். என்று பதில் சொன்னார்கள்.

நாங்கள் கேட்டது கேப்பிடல் படித்திருக்கிறீர்களா என்பதுதான் - இது கம்யூனிஸ்ட் தோழர்கள்.

நான் திருக்குறளையே படித்து முடித்துவிட்டேன் என்கிறபோது கேப்பிடலை ஏன் தனியாகப் படிக்கவேண்டும்? கேப்பிடலில் தொழில் துறைகளைப் பற்றியும், ஆலைகளைப் பற்றியும் இருக்கிறது. ஆனால் திருக்குறளில் நீங்கள் சொல்கிற தொழில் துறைகளும் ஆலைகளும் மட்டுமில்லாது - மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்தும் இருக்கிறது - இது பேரறிஞர் அண்ணா.

வந்தவர்கள் வாயடைத்துப்போய்விட்டார்கள்.

அண்ணா அத்தோடு விடுவதாக இல்லை. கேப்பிடலைப் பற்றி படித்திருக்கிறீர்களா என்றா கேட்டீர்கள்; நான் படித்திருப்பது என்ன தெரியுமா? எம்.ஏ.பொருளாதாரம். எப்படி - கண், மூக்கு, காது என்றால் அவைக்ள எல்லம் முகத்திற்குள் அடக்கமோ அப்படித்தான் நீங்கள் சொல்கிற கேப்பிடலும் பொருளாதாரத்திற்குள் அடக்கம். பொருளாதாரம் படித்தவனைப் போய் கேப்பிடலைப் பற்றித் தெரியுமா என்று கேட்கிறீர்களே. . . பரிதாபமாக இருக்கிறது உங்களை நினைத்தால்! என்று சரியான சாட்டையடி கொடுத்தார்.

இதைக் கேட்டதும் - வந்திருந்த கம்யூனிஸ்ட் தோழர்களில் ஒருவரான கோடீஸ்வரராவ் என்பவர், அண்ணாவின் கரங்களைப் பிடித்து, அண்ணா! நான் இனி உங்களோடு சேர்ந்துவிடுகிறேன்; உங்கள் பேச்சுத் திறமையும், வாதத் திறமையும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது; மறுத்துவிடாதீர்கள்; என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி தன்னை அண்ணாவோடு பிணைத்துக்கொண்டார்.
மாற்றாரையும் தன் வயப்படுத்தும் திறமை அண்ணாவின் கைவந்த கலை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

த் பேரறிஞர் அண்ணா விடுதலைப் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த நேரம்! அவரது கட்டுரைகளுக்கும், தலையங்கங்களுக்கும் மக்களிடையே ஏகப்பட்ட வரவேற்பு.
இப்போதுள்ள ஒரு சில எழுத்தாளர்கள் சொல்வதுபோல - எனக்கு மூடு இல்லை, இப்போது எழுத வராது; எனக்கு இந்த இடம் ஒத்து வராது; காஜ்மீர் போனால்தான் எழுத வரும்; குற்றாலம் அருவியோரம் உட்கார்ந்து எழுதினால்தான் எழுத்துக்கள் ஊறும் என்றெல்லாம் அண்ணா அலட்டிக்கொண்டதேயில்லை.

பெரும்பாலும் நள்ளிரவுக்குப் பின்தான் தனது எழுத்துக்களை வெளிக்கொணர்வார். அதுவும் நண்பர்கள் யாராவது சந்திக்க வந்துவிட்டால் - நள்ளிரவுகூட இன்னும் கொஞ்சம் நகர்ந்து அதிகாலை என்றாகிவிடும்.

அதுவும் எழுதுவதற்கு வசதியான இடங்களை அவர் நாடிப் போனதே கிடையாது. ஈரோடு புகைவண்டி நிலையத்தில் ஒரு ஒளிமயமான விளக்கு எரிந்துகொண்டிருக்கும். பெரும்பாலும் அங்கு உட்கார்ந்துகொண்டிருந்துதான் அண்ணா அவர்கள் தனது உயிரோட்டமான எழுத்துக்களை உலவ விடுவார்.

ஒரு முறை சென்னையில் சனாதனிகளி மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் பெரியாரையும், சுயமரியாதை இயக்கத்தையும் கண்டித்துத் தீர்மானம் போட்டார்கள்.

இதைக் கேள்விப்பட்ட அண்ணா அந்த மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்திய டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரியையும் அந்த மாநாட்டுத் தீர்மானங்களையும் வன்மையாகக் கண்டித்து விடுதலை பத்திரிகையில் உணர்ச்சி பொங்க ஒரு நீண்ட கட்டுரை எழுதினார்.

இது தந்தை பெரியார் அவர்களுக்குத் தெரியாது. மறு நாள் காலையில் அவர் அண்ணாவை அழைத்து, அவர்கள் ஏதோ மாநாடு போட்டார்களாமே, அதைக் கண்டித்து ஏதாவது எழுதினால் தேவலாமே என்று சொன்னார்.

அதற்கு அண்ணா நான் நேற்றே அது பற்றி எழுதிவிட்டேனே என்று கூறி தான் எழுதியதைக் கொண்டு வந்து காட்டினார்.

தந்தை பெரியாருக்கு கொஞ்ச நேரம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு அவருள்ளே பூரிப்பு - பெருமிதம்!

நான் என்ன நினைத்தேனோ, எப்படி எழுதவேண்டும் என்று எண்ணினேனேளா அதை எப்படியே நீ சொய்திருக்கிறாய் என்று அண்ணாவை வெகுவாகப் பாராட்டினார்.

தந்தை பெரியார் ஒன்றை நினைப்பதற்குள்ளாகவே அதை நிறைவேற்றி முடித்துவிட வல்லவர் அண்ணா!

(அ. சங்கரய்யா)

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai