அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 57

அண்ணா பட்ஜெட்டிலா புதுமை இல்லை?
(லிங்க் ஆங்கில வார ஏடு(குன் 25) 1967

சென்ற வாரம் முதலமைச்சர் அண்ணாதுரையால் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட தி.மு.க. அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் புதுமுறை வகுத்திருக்கிறது.

முதலாவதாக, ஆங்கில வடிவில் 53-அச்சடிக்கப்பட்ட பக்கங்களைக் கொண்டதாகவுள்ள அண்ணாதுரையின் நாத்திறம் படைத்த சொற்பொழிவு பட்ஜெட் சமர்ப்பண வரலாற்றில் இந்தியாவில் வேறு எங்குமே இல்லாத அளவு நீளமானது ஆகும்!

அடுத்து, ஒரு அரசியல் அமைப்பு என்கிற முறையில் தி.மு.கு. எவை மீதெல்லாம் தனிக்கருத்து கொண்டிருக்கிறதோ அவற்றில் ஒன்றைக்கூட உள்ளடக்கத் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பணக்காரர்களிடமிருந்து கறப்பது, ஏழைகளைத் தட்டிக்கொடுப்பது (Tapping the Rich; Patting the poor) என்கிற, அண்ணாதுரையின் புகழ்பெற்ற சொல்லோவியம் அவரது முதல் பட்ஜெட்டில் செயல் வடிவம் பெற்றிருக்கிறது!


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai