அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 4

1934 ம் ஆண்டு கோவைக்கு அருகில் உள்ள திருப்பூரில் செங்குந்த இளைஞர் மாநாட்டில் இரையாற்றிய அண்ணா அங்கு தந்தை பெரியாரை சந்தித்தார்.

கல்லூரி நாட்களில் அண்ணா எழுதிய முதல் தமிழ்க் கட்டுரை மகளிர் சமத்துவம் என்பது.
அதேபோன்று ஆங்கிலத்தில் ஆடீளுஊடீறு ஆடீக்ஷ ஞஹசுஹனுநு எனும் கட்டுரை எழுதினார்.

1934-ல் இருந்து 1936 வரை அண்ணா தொழிற்சங்கவாதியாகச் செயல்பட்டார். அப்போது காங்கிரஸில் இருந்து திரு.என்வி.நடராசன் தொடர்பு எற்பட்டது. தொழிற்சங்கத்தில் பணியாற்றிய அண்ணாவுக்கு ஆல்பர்ட் ஜேசுதாசன் பொதுவுடமைவாதி திரு.பாசுதேவ் அவர்களின் தொடர்பு கிடைத்தது. சிறிது காலம் சென்னையில் உள்ள தொண்டை மண்டல துளுவ வெள்ளாளர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1936-ல் திரு.பாசுதேவ் நடத்திய பால பாரதி எனும் இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1937-ல் காஞ்சி மணிமொழியார் நடத்திய நவயுகம் எனும் இதழில் சிறிதுகாலம் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1936-ல் சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெத்துநாய்கன்பேட்டையில் நின்று தோற்றார்.

55 ஆண்டுகளுக்க முன் 1934-ல் திருச்சி தேவர் மன்றத்தில் நீதிக் கட்சி மாநாடு ஒன்றை பெரிய அனவில் நடத்திக்கொண்டிருந்தேன். மாநாட்டின் தலைவர் சர்.ஏ.இராமசாமி முதலியார் தன் பேச்சை மொழிபெயர்க்க ஒருவர் தேவை என்று கோரினார். வந்திருந்த பல வழக்கறிஞர்களை வேண்டினேன். அனைவரும் மறுத்துவிட்டனர். இவ்வளவு பெரிய மாநாட்டில் மொழிபெயர்பாளர் ஒருவரும் இல்லையே என்று வருந்தி வெட்கப்பட்டடேன்.

இந்நிலையில் ஒருவர் என்னிடம் வந்து இவர் கல்லூரி மாணவர். மொழிபெயர்பாளர் என்று கூறினார். இதை கேட்டதும் அதிக கோபம் வந்தது. பெரிய அரசியல் தலைவர்களின் பேச்சுகளைப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளைக்கொண்டு மொழிபெயர்ப்பதைவிட ஆங்கிலப்பேச்சு ஒன்றே மாநாட்டை சிறப்பிக்கும் என்று சும்மா இருந்துவிட்டேன். இந்த நிலையில் மொழிபெயர்க்க ஆள் வந்துவிட்டதா என்று முதலியாரிடமிருந்து செய்தி வந்தது. நான் வேறு வழி இல்லாமல் அதே மாணவரிடம் சென்று தம்பி உன் பெர் என்ன என்றேன். அண்ணாதுரை என்றார். ஊர் எது என்றேன் காஞ்சீபுரம் என்றார். என்ன செய்கிறாய் என்றேன். எம்.ஏ. படித்துவிடு சும்மாயிருக்கிறேன் என்றார். நன்றாக மொழிபெயர்ப்பாயா என்றேன். ஏதோ கொஞ்சம் தெரியும் என்றார்.

பேச்சுக்கு பேச்சு மொழிபெயர்ப்பு மிக சிறப்பாக நடைபெற்றது. நானே வெற்றி பெற்றதாக மகிழ்ந்தேன். வழக்கறிஞர்களிடம் சென்று மறுத்துவிட்டீர்களே, பார்தீர்களா? என்று பெருமிதத்துடன் வினவினேன். நாங்கள் மறுத்ததினால்தான் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் கிடைத்தார் என்று கூறி சிரித்தார்கள். சர்.ஏ.ராமசாமி முதலியாரிடம் மொழிபெயர்ப்பு எப்படி என்று வினவினேன். அதில் சிறிது சன்னப்பொடியும் கலந்திருந்தது எனக் கூறி புன்னகை புரிந்தார்.

. . . ஆங்கிலம் கற்றவர்களில் பலர் அம்மொழியிலேயே ஆழ்ந்துவிடுகின்றனர். இரண்டொருவர் கரையேறினனலும் அவர்கள் கரையேறியது தமிழ்நாட்டுக் கரையாக இருப்பதில்லை. ஆங்கிலக் கடல் நீந்தி தமிழ்க் கரையேறிய அறிஞர்களில் அண்ணாத்துரையும் ஒருவர்.

பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களெல்லாம், வெளியேரிக்கொண்டிருப்பது ஒரு வழக்கம். அப்போதெல்லாம் நான் பெரியாரை ஆதரித்தும், பிரிந்தவர்களை வெறுத்தும் வந்தவன். நான் நெருங்கிப் பழகியதால் என்னுடைய முறையும் வந்துவிட்டது. காலியான என் இடமும் உடனே பெரியாரால் நிரப்பப்பட்டது. என்னுடைய பதவிகளில் காரியதரிசி பதவிக்கு அண்ணாத்துரை, பொருள் வசூலிக்க பொன்னம்பலனாரும் அமர்த்தப்பட்டனர். பின்னர் அவர்கள் மூவரும் நெருங்கி பழக ஆரம்பித்ததால் வழக்கப்படி அவர்கள் வெளியேறும் முறையும் வந்துவிட்டது.

.... பேராசிரியர் ஆர்.வி.சேதுப்பிள்ளை அவர்களுடன் ஒரு முறையும், பேராசிரியர் ச.தோமசுந்தரபாரதியார் அவர்களுடன், கம்பராமயணம் பற்றிய சொற்போர் சென்னையிலும், சேலத்திலும் நடைபெற்றன. இந்த இரண்டிலும் யார் வெற்றி பெற்றனர் என்பது கேள்வியே இல்லை. இருவரும் சொற்போர் நிகழ்த்த ஒப்புக்கொண்டதே அண்ணாத்துரைக்கு ஒரு வெற்றியாக அமைந்துவிட்டது.

தமிழ்நாட்டில் படிப்பில்லாத மக்களில் பெரும்பான்மையோரைப் பேச்சின் மூலம் தட்டி எழுப்பிய பெருமையில் பெரியாருக்கும் பெரும் பங்கு உண்டு. அது போலவே படித்து முடித்த இளைஞர்களில் பெரும்பாலோரை பேச்சின் மூலம் தட்டி எழுப்பிய பெரும் பங்கு அன்பர் அண்ணாத்துரைக்கு உண்டு என உறுதியாகக் கூறலாம்.

அன்பர் அண்ணாத்துரை ஆங்கிலத்திலும் நன்றாக பேசும் ஆற்றல் படைத்தவர். இக்காலத்தில் மேடைப்பேச்சுகறில் பயனிலையை முன்வைத்து, செயல்படுபொருளை பின்னே வைத்துப் பேசப்படுகிறது. அது தூது அனுப்பினார், பதில் வந்தது என்றிராமல் அனுப்பினார் தூது, வந்தது பதில் என்றிருக்கும். இம்முறையை நம் நாட்டில் மேடைப் பேச்சுகளில் முதலில் புகுத்தியவர் அன்பர் அண்ணாத்துரையே ஆவார்.

. . . அன்பர் அண்ணாத்துரை அவர்களுடைய உள்ளம் தூய்மையானது. விருப்பு வெறுப்பற்றது. இதனாலேயே பலருடைய அன்புக்கும் இவர் பாத்திரமானார்.

. . . இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்திருந்தால். உலகத் தலைவர்களில் ஒருவராக ஆகியிருப்பார். (முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்)

சன்டே அப்ஸர்வர் பி.பாலசுப்பிரமணியம் அவர்களும், திரு.டி.ஏ.வி.நாதன் அவர்களும், அண்ணா நீதி கட்சியில் சேர்ந்து பணியாற்ற காரணமாயிருந்தவர்கள்.

அவர்கள் அண்ணாவின் சிற்றன்னை இராசாமணி அம்மையாரைச் சந்தித்து, அவர்களின் சம்மதத்தைப் பெற்று அண்ணாவை முதன் முதலில் நீதிக்கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று அண்ணாவை அறிமுகப்படுத்தினர்.

தொழிற்சங்கத்துறையில் அண்ணா!
கல்லூரப் படிப்பை முடித்த அண்ணா, முதன் முதலில் தொழிற்சங்கத் துறையில்தான் ஈடுபட்டார். தொழிறாளர்களிடையே ஒற்றுமை ஓங்கிவும் அவர்கள் உரிமை பெற்றவரிகளாக விளங்கிடவும் வேண்டுமென 1934-ம் ஆண்டிலிருந்து மூன்றாண்டுக் காலம் பாடுபட்டார்.
அப்போது தொழிற்சங்கத் துறையில் முனைந்து செயல்பட்டு வந்த தோழர்கள் பாசுதேவ், ஆல்பர்ட் ஜேசுதாஸ், என்.வி.நடராசன் போன்றவர்களோடு அண்ணாவும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கினார்.

இலட்சுமணபுரியில் நடைபெற்ற அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் மாநாட்டிற்கு தோழர ஜம்னாதாஸ் மேத்தா தலைமையில் ஒரு குழு சென்றது. அதில் அண்ணாவும் தமிழகப் பிரதிநிதிகளில் ஒருவராகச் சென்றார்.

இந்கிருந்து சென்றவர்கள் அண்ணாவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

மாநாட்டில் ஒரு தீர்மானத்தின் மீது சிறிது நேரம் பேசம் வாய்ப்பும் அண்ணாவுக்குக் கிடைத்தது. தொஞ்ச நேரப் பேச்சிலேயே மாநட்டுக்கு வந்திருந்த அனைவரையும் கவர்ந்துவிட்டார். பிறகு மாநாடு முடியும்வரை எல்லோரும் அண்ணாவையே வண்டாய் மொய்த்துக் கிடந்தார்கள்.

அந்த மாநாட்டில்தான், அண்ணா அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொழிற்சங்கத் துறையிலிருந்த அண்ணாவை நேரடியாக அரசியலில் ஈடுபடச் செய்தவர் சன்டே அப்சர்வர் பி.பாலசுப்ரமணியம் அவர்கள்தான்!

பொது வாழ்க்கை

தந்தை பெரியாருடன் 1936-ல் இருந்து இணைந்து சுற்றுப்பயணம் செய்தார். வடநாட்டில் பெரியார் சுற்றுப்பயணம் செய்தபோதுத, உடன் சென்ற அண்ணா தந்தை பெரியாரின் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். அப்போது கல்கத்தாவில் இருந்த பொது உடமை வாதி எம்.என்.ராய் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கார் அவர்களைச் சந்தித்தபோது அண்ணா உடன் இருந்து மொழி பெயர்ப்பு செய்தார். அப்போது அண்ணாவுக் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களான திரு.டி.ஏ.வி.நாதன், திரு.பாலசுப்பிரமணியம் போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது.

சென்னையில் உள்ள நூலகங்களைன பண்டிட் ஆனந்தன் நூலகம், சென்னை மாநகராட்சி நூலகம், கன்னிமாரா நூலகம் ஆகியவைகளைஇ அண்ணா கல்லூரி மாணவராக இருந்தபோதே பயன்படுத்தி தன் அறிவை வளர்த்துக்கொண்டார்.

1937-ல் இருந்து 1940 வரை அண்ணா அவர்கள் ஈரோடு சென்று, தந்தை பெரியார் அவர்களின் இதழ்களான குடியரசு, விடுதலை, பகுத்தறிவு ஆகியவற்றில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். கல்கத்தா காய்ச்சல், ரிப்பன் மண்டபத்து மகான்கள், ஓமான் கடற்கரையிலே போன்ற சிறப்பு மிக்கக் கட்டுரைகளை எழுதினார். அப்போது நக்கீரன், பரதன், வீரன் எனும் புனைப் பெயர்களில் பல கட்டுரைகளை வரைந்தார். 1938-ல் முதல் இந்தி எதிர்ப்பு போர் தந்தை பெரியார் தலமையில் தொங்ககியது. அண்ணா முதல் தளபதியாகப் பொறுப்பேற்று நான்கு மாதம் சிறை தண்டனைப் பெற்றார்.

தந்தை பெரியாருடன் பணியாற்றிய அந்த காலகட்டத்தில் அண்ணாவுக்கு கீழ்கண்டவர்களுடன் தொடர் ஏற்பட்டது. திரு.ப.ஜீவானந்தம், திரு.கி.ஆ.பெ.விசுவநாதம், பனகல். பொப்பிலி அரசர்கள், மறைமலை அடிகள், திரு.வி.கல்யாணசுந்தரனார், திரு.சிங்கரவேலர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பி.பாலசுப்பிரமணியம், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், முவாலூர் இராம மிருதம்மையார், திருமதி. தர்மாம்பாள், திருமதி. மீனாம்பாள் சிவராஜ், திரு.டி.ஏ.வி.நாதன், ராஜா.சர்.குமார முத்தையா, ஆற்காடு. இராமசாமி(முதலியார்), அ.க.தங்கவேலர்.

திரு. என்.வி.நடராசன் - 1935
நான் அண்ணா அவர்களுடன் ஏறத்தாழ 32 ஆண்டுகளாகத் தொடர்புகொண்டிருக்கிறேன். முதல் நாலைந்து ஆண்டுகள் அவரது அரசியல் கருத்துக் மாறபட்ட கட்சியைச் சார்ந்தவனாகவும், 1937 இறுதியில் அண்ணா அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றவனாகவும் (கட்சியைச் சார்ந்தவனாகவும்) இருந்து வருகிறேன். இந்தக் கட்டங்களில் ஏற்பட்ட நட்பு - பந்தபாசம் - நிதானமாக உறுதியாக வளந்ந்து, அண்ணா அவர்கள் ஓர் அரசியல் கட்சித் தலைவராக மட்டுமின்றி குடும்பத் தலைவராகவும் வளங்குசிறார்கள். இநவ்வித உறவு எனக்கு மட்டுமல்ல கழகப் பணிஅய எனது உயிரினும் மேம்பட்டது என்று யார் யார் மனமார எண்ணிப் பணியாற்றி வருகிறார்களோ அவர்கள அனைவருக்குமே அண்ணா அவர்கள் குடும்பத் தலைவர்தான்.

எனவேதான் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் கழகத்திற்கும் உள்ள அடிப்படையே சற்று மாறுபட்டதாகவும் இருந்து வருகிறது. சிலருக்கு இது ஆச்சரியமாகவும் இருக்கக் கூடும். இதன் தன்மையை நடைமுறையில் உணர்ந்து பார்த்தவர்களுக்கே தெரியும்-புரியும்.

அறிஞர் அண்ணா அவர்களை நான் முதன் முதலாகச் சந்தித்தது, மறைந்த தொழிலாளர் தலைவர் சி.பாசுதேவ் எம்.எல்.சி. அவர்கள் மூலமாகத்தார்.

1934-34-ம் ஆண்டுகளில் நான் காங்கிரசைச் சார்ந்தவனாகயிருப்பினும் தொழிலாளர் இயக்கத்தைப் பொருத்தவரையில் மற்ற கட்சியினரோடும் சேர்ந்து பணியாற்றுவேன். அதாவது தொழிலாளர் நலனே முதன்மையானது என்பது எனது குறிக்கோள். அந்த முறையில் தோழர்; சி.பாசுதேவ் அவர்களும் அறிஞர் அண்ணா அவர்களும் நீதிக் கட்சியை சார்ந்தவர்களாயினும் பொதுவாகத் தொழிலாளர் முன்னேற்றத்திற்குப் பணியாற்ற யார் முன்வந்தாலும் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எனக்கு ஆர்வம் இருந்துவந்தது.

1934-ம் ஆண்டு என்று கருதுகிறேன். ரிக்ஷா தொழிலாளர்களுக்கென்று ஒரு சங்கம் அமைக்கவேண்டும் என்று தோழர் சி.பாசுதேவ், எஸ்.நடெசனார் வி.வி.முருகேசன், என்.டி.முத்து, தில்லை ராசன் போன்ற தொழிற் சங்கத் தலைவர்கள் கலந்து பெசுவதாக முடிவு செற்திருந்தார்கள். அக்கூட்டத்திற்கு என்னையும் வருமாறு ழைத்திருந்தார்கள்.

அந்த ஆலோகனைக் கூட்டம் எங்கு நடைபெற்றது தெரியுமா? சட்டக் கல்லூரிக்கு அருகே உள்ள நடைபாதையில். இரவு 1-மணி அளவில் அந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் என்னை அண்ணா அவர்களுக்கு தோழர் பாசுதேவ் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார்.

அன்று அவருடன் ஏற்பட்ட அத்தொடர்பு பின்னர் எங்கள் தொழிற் சங்கசார்பில் அன்றைய அரசினருக்கு எழுதும் மடல்களைக்கூட அவரது உதவியைப் பெற்றே செய்துவரும் நிலைக்கு வளர்ந்தது.

தொழிற்சங்கம் அமைப்பதில் அண்ணாவின் ஒத்துழைப்பைப் பெற்றே தோழர். கி. பாசுதேவ் செய்வார்.

தொழிற்சங்கத் துறையில் அறிஞர் அண்ணா அவர்கள் அன்று என்ன கருத்து தொண்டிருந்தார்களோ அந்தக் கருத்தை இன்றும் கைவிடாமலிருப்பது போற்றுதற்குரியதாகும்.
தொழிற் சங்கங்கள் அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக இருத்தல் கூடாது. அதனால் தொழிற் சங்கத்தின் ஒன்றுபட்ட தன்மை சிதறுண்டுபோகும், ஆனால் தொழிலாளர்கள் அரசியலில் மிகவும் அக்கறைதொண்டாகவேண்டும், எனினும் அந்த அரசியலில் நோக்கங்கள் - வேறுபாடுகள் தோழிற் சங்கப் பணிகளில் குறுக்கிடக் கூடாது.

நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தபோது-சென்னை பக்கிங்காம்-கர்னாடிக் ஆலைத் தொழிலாளர்கள் மிகப் பெரிய வேலை நிறுத்தத்தை நீதிக்கட்சி அரசு அடக்க முற்பட்டது. அதுசமயம் அறிஞர் அண்ணா அவர்கள் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராய் இருந்தும், வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தந்தார்கள். தொழிலாளர் உரிமைக்காக பல கூட்டங்களில் பேசினார்கள், எனவே கட்சி கண்ணோட்டத்தை தொழிற்சங்கக் கட்டுக்கோப்பினை சிகைவுறச் செய்யும் என்று அறிஞர் அண்ணா அவர்கள் அன்றே அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, தீவிரமாகப் பேசி இறுதியாக மிகச் சாதாரண காரியங்களைச் செய்வதைக் காட்டிலும் நிதானமாகச் பெசி உருப்படியான திட்டத்தைச் செயல்படுத்துவதுதான் தொழிலாளர் சங்கப் பணியில் அடிப்படையாகக் கொள்ளவேண்டிய முறையென்பதும் அண்ணா அவர்கள் தொழிலாளர் இயக்கப் பணிபற்றி மேற்கொண்டுள்ள கருத்தாகும்.

எனவே அறிஞர் அண்ணா அவர்களின் 60-வது ஆன்று பிறந்த நாளை நாடெங்கும் கொண்டாடும் தொழிற் சங்கங்களும், தொழிலாளர் தோழர்களும் அண்ணா அவர்கள் தொழிற் சங்கத் துறையில் மேற்கொண்டுள்ள சீரிய கருத்தைச் சிந்தித்து அதன் வழி நின்று தொழிலாளர் சமுதாயம் தனது நியாயமான கோரிக்கைகளை நேர்மையான வழியில் பெற்று இதன் வாயிலாகப் பொதுவாக நாட்டுக்கே நல்வாழ்வு அமையப்பெற உறுதிதொள்ள வேண்டுகிறேன்.
தொழிற் சங்க வாதிகளுக்கு மற்ற எல்லோரைக் காட்டிலும் அரசியல் இன்றியமையாததுதான். ஆனால் அவ்வித அரசியல் தொள்கைகளை அவரவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின் வாயிலாக நினறு பணியாற்றுவதுதான் சிறந்த பண்பாடாகும்.

இந்த வேண்டுகோளை தொழிற்சங்கத் துறையில் பணியாற்றும் நண்பர்களுக்கு; தொழிலாளர் தோழர்களுக்கு எனது வேண்டுகோளாக வைத்து; முரசொலி மூலமாக எனது வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

வாழ்க அண்ணா!
வெல்க அவரது கொள்கை!

திரு. என்.வி.நடராசன்

1935ல் நான் பெத்துநாயக்கன்பேட்டை காங்கிரஸ் கமிட்டிச் செயலாளராக இருந்தேன். இந்த நேரம் சென்னை வர இருந்த நேருவுக்கு வரவேற்புக் கொடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன். அப்போது நானும் அண்ணாவும் நல்ல நண்பர்கள். நான், செங்கல்வராயன், அண்ணா மூவரும் பெத்துநாயக்கன்பேட்டையில்தான் சந்திப்போம். நான் அண்ணாவுடன் பழகுவதைப் பல காங்கிரசு நண்பர்கள் கண்டிப்பார்கள்.அண்ணா பழகுவதற்கு இனிய நண்பர். அவர் நட்பை என்னால் இழக்க இயலாது. அதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள் என்று கூறுவேன்.

ஒரு நாள் காலை அண்ணா அவர்கள் என் வீட்டிற்கு வந்து, என்ன உங்களைப் பார்க்கவே முடியவில்லை. நேருவுக்கு வரவேற்புக் கொடுக்கும் வேலையா? எங்கே வரவேற்பு? என்றார். பிராட்வே டாக்கீசில் வரவேற்பு என்றேன். கட்டணமா - இலவசமா என்றார்.

கட்டணம் என்றார்.

எனக்கு இலவசச் சீட்டு வேண்டுமே என்றார்.

எத்தனை வேண்டும் என்றேன்.

நாலைந்து என்றார். எனக்கு உள்ளூர ஓர் ஆசை. அண்ணா அவர்களே விரும்பி நேரு கூட்டம் கேட்க வருவதாகக் கூறுகிறாரே, ஒரு வேளை அவர் மனம் மாறி காங்கிரசுக்கு வரப்போகிறாரோ என்று எண்ணி நாலைந்து என்ன பத்து தருகிறேன் என்று கொடுத்தேன்.

மறுநாள் காலை ஒரு நன்பரை அனுப்பி இன்னும் பத்துப் பதினைந்து பாஸ் கேட்டிருந்தார். ஒரு கூட்டமாகவே வந்து காங்கிரசில் சேரப் போகிறார்கள் போலிருக்கிறது! என்ற மகிழ்ச்சியில் நான் இருபது பாஸ் கொடுத்தனுப்பினேன்.

பிராட்வே டாக்கீசில் நேரு பேசியபோது அண்ணா முன் வரிசையில் அமர்ந்திருந்தார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் கூட்டம் முடியும் நேரத்தில் அண்ணா அவர்கள் அச்சடித்த கேள்வித்தாள் ஒன்றை நேருவிடம் கொடுக்க முயன்றபோது மேடையிலிருந்த சத்தியமூர்த்தி அதைப் பிரித்துப் படித்துவிட்டு இதற்கெல்லாம் நேரு பதில் சொல்லமாட்டார் என்று கூறினார்.

உடனே நேரு சத்தியமூர்த்தியின் கையிலிருந்த கேள்வித்தாளை வாங்கிப் படித்துவிட்டு இதற்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்ற சத்தியமூர்த்தி சொன்னது தவறு. ஆரம்பத்தில் தந்திருந்தால் நிச்சயம் பதில் சொல்வியிருப்பேன். இப்போது நேரமாகிவிட்டதால் இக்கேள்விகளுக்கு இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் பதில் சொல்கிறேன் என்றார்.

கூட்டம் முடிந்ததும் அவர், அண்ணா கேள்விகள் எப்படியிருக்கும் என்று பேசிக்கொண்டே சென்றதால் நேருவின் கூட்டச் சிறப்பு கெட்டுவிட்டதாகக் காங்கிரசுத் தோழர்கள் ஆத்திரமடைந்தார்கள்.

எல்லோர்க்கும் என்மீது கோபம். எப்படி அண்ணாதுரைக்கு அத்தனை இலவசச் சீட்டு கொடுக்கலாம். அவரை ஏன் அழைத்தாய்? என்று கண்டித்தார்கள். நான், அவர் காங்கிரசில் சேர வரப்போகிறாரோ என்ற மகிழ்ச்சியில்தான் அண்ணாவை அழைத்தேன். இப்படி நடக்குமென்று உண்மையிலேயே எனக்குத் தெரியாது என்று அவர்களைச் சமாதானப்படுத்தினேன்.

மாலையிவ் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேரு அண்ணாவின் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறிவிட்டு, இந்த கேள்விகள் எப்படி இருந்தாலும் கேள்விகள் கேட்டவரின் சிந்தனையை - அறிவை - ஆற்றலை நான் பாராட்டுகிறேன் என்றார். இது காங்கிரசுத் தோழர்களுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்திவிட்டது. இவ்வளவுக்கும் நீர்தாம் காரணம் என்று அன்று இரவு முழுவதும் என்னைத் தூங்கவிடாமல் ஒருவர் ஒருவராக வந்து கடிந்துகொண்டார்கள்.

மறுநாள் அண்ணாவை சந்தித்து, என்ன அண்ணா இப்படிச் செய்துவிட்டீர்களே என்று கேட்டதற்கு இதுதானா - இன்னும் என்னென்ன செய்யப்போகிறேன் பார்! என்று சிரித்துக்கொண்டே பதில் கூறினார்கள்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai