அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 49

1944க்குப் பிறகு சென்னையில், எங்கள் அறையில் அண்ணா அவர்கள் தங்குவதாக அல்லது அவர் இருக்கும் இடங்களில் நான் தங்குவதாக பெரும்பாலும் இருந்த காலத்தில், சினிமா பார்ப்பதில் அவருக்கு இருந்த அர்வத்தை நாங்களும் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டு, ஒரு நாளைக்கு 3 அல்லது 4 படங்கள் பார்க்கம் அளவில் அவருடன் சுற்றி வருவோம்.

ஒரு முறை சென்னையில் மீரான் சாயபு தெருவில் பெரியார் தங்கியிருந்தபொழுது அண்ணா, நான், வாணன் மூவரும் காசினோ தியேட்டரில் படம் பார்த்த பிறகு, அருகிலிருந்த அமீன் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பெரியாரைப் பார்க்கப் போனோம். அண்ணாவைப் பார்த்ததும், பெரியார் கேட்டார்: எவ்வளவு நாழியாயிற்று?

அண்ணா: இப்பொழுதான் சாப்பிட்டுவிட்டு வருகிறோம்!

பெரியார்: இல்லை, சினிமா கொட்டகையில் எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்தீர்கள்?

அண்ணா: இங்கிலீஷ் படம்தான் - இரண்டரை மணிநேரத்தில் முடிந்துவிட்டது!

பெரியார்: ஒரு டிக்கட்டுக்கு என்ன பணம்?

அண்ணா: ஒன்றரை ரூபாய்

பெரியார்: தியேட்டரில் நானூறுபேர்கள் இருந்தால்கூட, 1000 மணிநேரம், 600 ரூபாய் வீண்!

அண்ணா அவர்கள் சிரித்துக்கொண்டு வேறு திசையில் பேச்சைத் திருப்பினார். பிறகு நாங்கள் திரும்பினோம்.

(இரா. செழியன், சங்கொலி)

அண்ணாவுக்கு இப்போது வயது 53. அண்ணா அவர்கள் அந்த வயதுக்குள் எவ்வளவு உழைக்க வேண்டுமோ, அதைவிட பல்நூறு மடங்கு இந்நாட்டுக்கானச் சேவையைச் செய்துவிட்டார்கள் - இன்னும் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

தம்பி, நான் என்ன செய்வேன்! என்னை யாராவது கூட்டத்துக்கு அழைத்தால், உடனே அத்தோழர்கள் உண்டியல் வசூலிக்கவும். . . எல்லோரிடமும் போய் காசு வசூலிக்கவும், பந்தல் போடவும். என்னென்ன கஷ்டப்பட்டுவிட்டு பிறகு நம்மிடம் வந்து தேதி கேட்கிறார்களோ என்றே எண்ணுகிறேன். . . . என்னிடம் வரும் கழகத் தம்பிகளை என்னில் ஒரு உருவமாக நான் உருவகப்படுத்திக் கொள்கிறேன். அதனால் இப்போதெல்லாம் என்னால் மறுத்துச் சொல்வதென்றே முடிவதில்லை என்றார்கள். சின்னாட்களுக்கு முன்னால், அண்ணா.

. . . . வேளை வேளைக்குச் சாப்பிடுவது - விதவிதமான மருந்து வகைகள் - ஊரார் கொடுத்த பழவகை - அழகாகக் காய்ச்சி எடுத்த படியால், இப்படி உண்டு உறங்கும் பெறுமானம் உள்ளத் தலைவரல்ல அண்ணா பெட்டிகளை அவர் குடும்பம் பெற்றிருக்கவில்லை. வளமாக, வட்டி வியாபாரம் தம்பிக்கு, வாடகை வசூல் செய்ய இருக்கிறார் சித்தப்பா, எனும் நிலை கொண்டதுமல்ல. குடுமபத்துக்கு அவர் ஒருவர்தான்! உடல் தளர்ந்த தாய் - ஒரு நிமிடமும் நிம்மதியல்லாத சிற்றன்னை - மகளையிழந்த தமக்கை. எல்லோருககம் துணை நான் எனும் அண்ணி - இத்தனை பேருக்கும் அண்ணா ஒருவர்தான். வாரந்தோறும் தம்பிக்கு எழுதவேண்டும் திராவிடநாடு ஏட்டில் எழுதுவதென்றால், அதிலுள்ள சிரமம் நீங்களறியாததல்ல. ஆங்கில ஏடு, ஹோம் லேண்டு அதற்கு முதலில் இருந்து கடைசீ வரை அண்ணாதான் எழுதவேண்டும். அந்த ஊரிலிருநது ஒரு தோழர, இந்த ஊரிலிருந்து, இவர் என்று இடையிடையே தகவல்வரும். அதனால் இந்த, வேலைகளுக்கென்றே பகலை ஒதுக்கிவிட்டு, இரவில்தான் எழுத உட்காருவார். விடிய விடிய நான்கு இரவுகள் விழித்தால்தான், இரண்டு ஏட்டுக்கும் எழுதி முடிக்க இயலும. வெளியூர் பயணம் என்றால், அடுத்த வாரத்துக்கு எழுதவேண்டியதையும் முதல் வாரமே எழுதி வைத்துவிட்டுப் போகவேண்டும் அப்படிப்பட்ட சமயங்களில் சாப்பிட்டானதும், இரவில் கண் விழித்ததற்கு ஈடாக பகலில் தூங்குவதும் போய்விடும்.
(இராம. அரங்கண்ணல்)

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai