அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
3
கேட்டது ஒன்று கிடைத்தது
வேறு
அண்ணா அவர்கள உத்தியோகத்தில் இருக்க வேண்டும் என்பது அவரது சிறிய
தாயாரின் விருப்பம். ஆனால் அண்ணாவுக்கோ ஒருவரின் கீழ்ப்படிந்து பணிபுரிவதிலே
விருப்பமில்லை. சிறிய தாயாரின் சொல்லை அண்ணா எப்பொழுதும் தட்டிப்
பேசியதில்லை. சிறிய தாயாரின் வற்புறுத்தலின்பேரில் அப்போது குமாரராஜாவாக
இருந்த திரு.முத்தையா செட்டியாரை சந்திக்க அண்ணா சென்றார். குமார
ராஜா அவர்கள் தன் அரண்மனைக்கருகே ஓடும் அடையாற்றில் படகில் அமர்ந்தபடி
அண்ணாவுடன் இரையாடிக்கொண்டே சென்றார்கள். 75 ரூபாய் சம்பளம் தரக்கூடிய
கல்லூரியில் விரிவுரையளார் (கூரவடிச) வேலை தரவேண்டுமென்று
அண்ணா கேட்டதற்கு, குமாரராஜா து வேண்டாம் நம் கட்சிக்கு நல்ல பேச்சாளர்
கிடைப்பது பின்னர் அரிதாகிவிடும், ஆதலால் எனக்கு விரதம துணையாளராக
(ஞநசளடியே; ஹளளவ.) ரூ.120 சம்பளம் தருகிறேன் என்றார். ஆனால் அண்ணா
அவர்கள் வீடு வந்ததும் கீழ்க்கண்ட முறையிலே ராஜா அவர்களுக்குக் கடிதம்
எழுதி அனுப்பி விட்டாராம்.
அன்புள்ள ஐயா, தங்கள் பணியை மேற்கொள்ள
இயலாததற்கு வருந்துகிறேன். என்பதே அவர் எழுதின ரத்தின சுருக்கமான
கடிதம். ஜட்ஜ் வேலை கேட்ட மாஜிஸ்ட்ரேட்
அண்ணா அப்போதுதான் அரசியலில் புகுந்த நேரம், ஆர்வமாக அரசியலில் ஈடுபடுவதும்
பொதுக்கூட்டங்களில் அதிகமாகப் பேசுவதுமாக இருந்தார் அவர். இந்த மாதிரி
அரசியலில் ஈடுபட்டு வேலை ஒன்றும் பார்க்காமல் காலம் கழித்து வந்தால்
அண்ணா கெட்டுவிடுவார் என்று எண்ணி, அவருக்குத் தெரிந்த சப் மாஜிஸ்ட்ரேட்
ஒருவருக்கு குமாஸ்தா வேலைக்காக சிபாரிசு கடிதம் கொடுத்து அனுப்பிவைத்தார்.
அண்ணாவும் சிபாரிசுக் கடிதத்துடன் மேற்படி சப் மாஜிஸ்ட்ரேட் வீட்டின்
உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்தார். வெளியில் இருந்த வேரைக்காரரிடம்
ஒரு பேப்பரில், சி.என்.அண்ணாதுரை, காஞ்சீபுரம் என்று எழுதிக்கொடுத்து
இதை சப் மாஜிஸ்ட்ரேட்டிடம் காண்பித்து நான் வந்திருப்பதாகச் சொல்லு
என்று அனுப்பிவிட்டு வெளியில் நின்றுகொண்டிருந்தார்.
வேலைக்காரர் கொடுத்த சீட்டைப் பார்த்த
சப் மாஜிஸ்ட்ரேட் சாப்பாட்டைக் கூடப் பாதியிலேயே வைத்துவிட்டு, வெளியில்
வந்தார். வாருங்கள்! வாருங்கள்! தாங்கள்தான் அண்ணாத்துரையா? 50 வயதாவது
இருக்கும் என்ற எண்ணினேன். இவ்வளவு இளமையாக இருக்கிறீர்களே! என்று
கூறிக்கொண்டே தாங்கள் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும். ஆற்காடு திரு.ஏ.இராமசாமி
முதலியார் அவர்களிடம் சொல்லி எனக்கு இரு ஜட்ஜ் வேலை வாங்கித்தர தாங்கள்தான்
சிபாரிசு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வேலைத் தேடிவந்த
அண்ணாவோ தனக்கு அரசியலில் நல்ல செல்வாக்கும் எதிர்காலமும் இருப்பதைக்
கண்டு வேலை கூடக் கேட்காமல் வீடு திரும்பி வந்தார். அரசியலில் ஈடுபடலானார்.
ஆற்காடு இராமசாமியின் அறிவுரை
காலஞ்சென்ற டாக்டர் சி.நடேச முதலியார் மரணப் படுக்கையில் இருந்தபோது
ஆற்காடு ஏ.ராமசாமி முதலியாரைச் சந்திக்க நேரிட்டது. அப்போது டாக்டர்
சி.நடேச முதலியார் அவர்கள். ராமசாமி முதலியாரைப் பார்த்து அப்பா,
நான் இந்த கட்சியில் உழைத்ததால் கஷ்டங்கள் பல அடைந்தேன். இன்னலுக்கும்
தொல்லைக்கும் ஆளானேன். ஆனால் அதற்காக இந்தக் கட்சியைக் கை கழுவிவிட்டுவிடவில்லை.
இந்தக் கட்சி மட்டும் இல்லாவிட்டால் ஒரு மாபெரும் சமுதாயமே அழிந்துவிடும்.
ஆகையால் நீயும் கடைசிவரையில் இந்தக் கட்சியைக் கைவிடாதே என்று கூறினாராம்.
இந்தச் சந்திப்பு நடந்து பல ஆண்டுகளுக்குப்
பிறகு ஒரு முறை அண்ணா அவர்கள் ஆற்காடு ஏ.ராமசாமி முதலியாரைச் சந்திக்க
நேரிட்டது. அப்பொழுது அண்ணா அவர்களை நோக்கி ஆற்காடு ராமசாமி முதலியார்
கூறினாராம், ஏனப்பா கட்சி, கொள்கை என்று அலைகின்றாய்! செகரட்ரியேட்டில்
ஒரு வேலை வாங்கித் தருகிறேன். போய் சுகமாக இரு என்று.
இங்கிலீசில் பேசு!
கொஞ்சம் படித்துவிட்டால் இங்கிலீசில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியல்
படித்துவிட்டால் இங்கிலீசில் பேசவேண்டும் என்ற மனப்பான்மை இருந்த
காலம் அது.
இங்கிலீசில் பேசினால் அது ஒரு கவுரவம் என்று அப்போது பலர் எண்ணியதுண்டு.
அண்ணா அப்போது சென்னை பச்சையப்பன்
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். ஆறு மாதங்கள் தொடர்ந்து படித்த
பின் விடுமுறைக்காக வீட்டுக்குச் சென்றார். அப்போது அவரது பாட்டியார்
அவரை அருகில் அழைத்து கொஞ்சம் பேசு என்று கூறினார்கள்.
நாம் இப்போது பேசிக்கொண்டுதானே
இருக்கிறோம் என்றார் அண்ணா.
இல்லை கொஞ்சம் இங்கிலீசில் பேசு
என்று அவரது பாட்டியார் கேட்டார்கள்.
இங்கிலீசில் பேசினால் உங்களுக்கு
என்ன புரியும்? என்று அண்ணா கேட்டார்.
என்ன சொல்கிறாய்? இதற்காகவா இவ்வளவு
பணம் செலவு செய்து படிக்க வைக்கிறோம் என்று அண்ணாவின் பாட்டியார்
கேட்டு சலித்துக்கொண்டார்களாம்.
காப்பி அடித்த பேச்சாளர்
கல்லூரி நண்பர் ஒருவர் அண்ணாவுடன் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக
வந்தார். மக்களை கவரும்படியாக எப்படிப் பேசுவது என்று அவர் கேட்டதற்கு,
அண்ணா எப்படிப் பேசுகிறாரோ, அப்படியே பேசிவிடுங்கள் என்று சிலர்
சொல்லிவைத்தார்கள்.
முதன் நாளன்று அந்தக் கல்லூரி நண்பன்
அண்ணா பேசிய கூட்டத்துக் வந்திருந்ததர். அன்று கூட்டம் நடந்தபோது
நள்ளிரவு நேரம், எனவே மக்கள் சோர்ந்து அமர்ந்திருப்பதைப் பார்த்து,
உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக மன்னிக்கவேண்டும். நீங்கள் அயர்ந்து
தூங்கும் நேரத்தில் தொலைலை தருவதற்காக மன்னிக்கவேண்டும்.... என்று
கூறி அண்ணா பேச்சை தொடங்கினால். மக்கள் புத்துணர்ச்சியுடன் உட்கார்ந்து
பேச்சைக் கேட்கத் தொடங்கினார்கள்.
இதைக் கவனித்துவிட்டுச் சென்ற அந்த
நண்பன் மறுநாளும் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது மாலை
6 மணி. மக்கள் எல்லோரும் சுறுசுறுப்பாக இருக்கும் நேரம். அந்த நண்பனிடம்
பேசுகிறாயா? என்று கேட்டவுடன் எழுந்து சென்று பேசத் தொடங்கினார்.
கூட்டத்தினரைப் பார்த்து அவர் நீங்கள் எல்லோரும் தூக்கத்தில் எந்திருக்கிறீர்கள்.
உங்களுக்குத் தொல்லை கொடுப்பதற்காக மன்னிக்கவேண்டும் என்று கூறினார்.
இதைக் கேட்டதும் கூட்டதினர் கை தட்டவில்லை. கொல் என்று சிரித்தார்கள்.
அண்ணா பேசினால் மட்டும் கை தட்டுகிறார்களே நான் பேசும்போது கேலியாக
சிரிக்கிறார்களே என்று அன்றிரவு அந்த நண்பர் வருத்தப்பட்டாராம்.
நேருவிடம் கொடுத்த துண்டு
அறிக்கை!
முன்பு ஒருமுறை அண்ணா கல்லூரி மாணவராக இருந்த சமயத்தில், சென்னைக்கு
சுற்றுப் பயணம் வந்த நேரு அவர்கள் பிரபாத் டாக்கீசில் ஒரு மாபெரும்
பொதுக் கூட்டத்தில் பேசிப்கொண்டிருந்தார். திலகர் நிதி பற்றி நாடு
எங்கும் பரபரப்புடன் பேரப்பட்டு வந்தசமயம் அது. அதைப்பற்றி அண்ணா
அவர்கள் ஆங்கிலத்தில் இரு அறிக்கை தயார் செய்து அந்தக் கூட்டத்தில்
அண்ணா அவர்கள் நுழைந்து மேடை அருகே சென்று நேருவின் கையிலே அந்தத்
துண்டு அறிக்கையைக் கொடுத்துவிட்டு வந்தார். திலகர் நிதி என்னும்
பேரால் காங்கிரஸ்காரார்கள் செய்த மோசடிப்பற்றி ஆங்கிலத்தில் அத்துண்
அறிக்கை அச்சடிக்கப்பட்டிருந்தது. ஒரு இளைஞன் இவ்வளகூ துணிச்சலாக
தன்னந்தனியாக நேருவின் கையிலே இதைக் கொடுத்துவிட்டானே என்று எல்லோரும்
ஆத்திரப்பட்டனர்.
செங்கல்வராயன் முயற்சி
தோற்றது!
ஆங்கிலத்திலும் அருந்தமிழிலும் போச்சாளராக விளங்ககும் காங்கிரஸ்
பிரமுகர் திரு.டி.செங்கல்வராயன் அவர்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது,
நாடு சுதந்திரம் பெறவேண்டும் என்கிற தேசிய எழுச்சி தீவிரமாக இருந்த
நேரம். அப்போது கல்லூரியில் கடித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பலர்
ஒன்றுகூடி நாடு விடுதலை பெறவேண்டும் என்று எண்ணி கல்லூரி மாணவர்
மன்றம் ஒன்று துவக்கி, அதில் மேடைப் பேச்சுக்களை பயின்றுவந்தார்கள்.
அப்போது ஒரு தோழர் திரு.செங்கல்வராயன் அவர்களிடம் அண்ணா அவர்களின்
பேச்சாற்றல் பற்றி கூறினால். நன்றாகப் பேசக்கூடியவர். அவரை நீங்கள்
அவசியம் சந்திக்கவேண்டும் என்று வலியுறுதினார். நண்பர் விருப்பப்படி
அண்ணா அவர்களை சந்தித்தார். அநத் சந்திப்பின் மூலம் பண்புள்ள இயல்பு,
அன்புமிக்க நட்பு இவைகளை அண்ணாவிடம் கண்டார். திரு. செங்கல்வராயன்
அண்ணாவைக் கண்டதும், அவரை தேச வேவையில் தன்னிடத்திலுள்ள இயக்கத்தில்
ஈடுபடுத்த சேருமாறு பெருமுயற்சி செய்தார். அண்ணா அவர்களோ செங்கல்வராயன்
விருப்பப்படி அந்தக் கல்லூரி மாணவர் மன்றத்தில் சேர்ந்தார். ஆனால்
அவர் சார்ந்துள்ள கட்சியில் மட்டும் தன்னை சேர்த்துக்கொள்ளவில்லை.
அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் ஆழமாக அமைந்துவிட்டன. திரு. செங்கல்வராயன்
தன் தலைவர் சத்தியமூர்திக்காக டெல்லி சட்டசபை தேர்தலில் கடுமையாக
உழைத்தார். அண்ணா நீதிக்கட்சியின் வேட்பாளர் ஆன உயர்திரு. இராமசாமி
முதலியார் பக்கம் நின்று ஆதரவு திரட்டினார். அதுமுதல் இருவரும் அரசியலில்
பிரிவுதான், என்றாலும் நட்பில் மட்டும் பிளவு ஏற்படவில்லை.
தேர்தல் பிரச்சாரம்!
1936-ம் ஆண்டு சென்னை நகரசபைக்கு நடந்த உறுப்பினர் பதவிக்காக அண்ணா
அவர்கள போட்டியிட்டார்கள். பெத்துநாய்க்கன் பேட்டைப் பகுதித் தொகுதிக்கு
அவர் ஜஸ்டிஸ் கட்சியின் சாரிபில் நின்றார். அண்ணா அவர்களை எதிர்த்து
காங்கிரஸ் சார்பில் தோழர் பாலசுப்பிரமணிய முதலியார் என்பவர் நிறுத்தப்பட்டார்.
அண்ணாவைப் போலவே அவரும் எம்.ஏ.
பட்டம் வெற்றவர். ஆனால் அவருக்கு கூட்டங்களில் பேச வராது. அண்ணா
அவர்கள் கூட்டங்களில் பேசும்போது, நானும் எம்.ஏ. வரை படித்தவன்.
என்னை எதிர்த்து நிற்பவரும் எம்.ஏ. வரை படித்தவர். நாங்கள் இருவரும்
செல்ல விரும்பும் இடம் உங்கள் சார்பாகக் கருத்துக்களை எடுத்துச்
சொல்லவேண்டிய நகரசபை. நான் உங்கள் முன் பேசுகிறேன். அவரையும் பேசச்
சொல்லி நீங்கள் கேளுங்கள். இருவரில் எவரை அனுப்பலாம், அனுப்பினால்
பலன் ஏற்படும் என்பதைப் பிறகு தீர்மானித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவார்.
காங்கிராஸ் தேர்தல் கூட்டம் நடக்கும்போது
பொது மக்கள் தேர்தலுக்கு நிற்கும் தோழர பாலசுப்பிரமணிய முதலியாரை
பேசும்படி வற்புறுத்துவார்கள். காங்கிரஸ் தொண்டர்களும் அவரை கொங்ச
நேரம் பேசும்படி கெஞ்சுவார்கள். நான் தேர்தலில் வேண்டுமானாலும் நிற்காமல்
நின்றுவிடுகிறேன். ஆனால் பொதுக்கூட்டங்களில் பேசமட்டும் மாட்டேன்
என்று கூறிவிடுவார். அவருக்குப் பதிலாக பேசுகிறாம் என்று தோழர்கள்
டி.செங்கல்வராயன், கோபாலரத்தினம், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்வந்து
பேசுவார்கள்.
தம்மை எதிர்த்து நின்ற தோழர பாலசுப்ரமணிய
முதலியாரைப்பற்றிப் பேசும்போது அண்ணா அவர்கள், என்னுடைய நண்பர் பாலசுப்ரமணியம்
நெய்க்கு தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா? என்ற தத்துவத்
துறையைப் பற்றி படித்தவர், நான் நெய்யும், தொன்னையும் மக்களுக்கு
கிடைக்கச் செய்வது எப்படி என்று ஆராயும் பொருளாதார துயையைப் பற்றிப்
படித்தவன். இருவரில் யார் உங்களுக்குப் பயன்படுவோம் என்பதை நீக்களே
தீர்மானித்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிடுவார்.
நந்தவனமும் நாயும்
1936-ம் ஆண்டில் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் பெத்துநாய்க்கன்பேட்டையில்
அண்ணாவை எதிர்த்து நின்ற காங்கிரஸ்காரருக்கு ஆதரவாக பலப்பல சொற்பொழிவாளர்கள்
வந்தார்கள். அவர்களில் ஒருவர் திரு.வி.கலியாணசுந்தரனார் ஆவார்
தேர்தல் கூட்டமொன்றில் திரு.வி.க.
அவர்கள் சொற்பொழிவாற்றும்பொழுது நந்தவனத்தில் நாயொன்று செத்துக்
கிடந்தால் மக்கள் நாயை அகற்றுவரோ! நந்தவனத்தை அழிப்பரோ! நாயையே அகற்றுவர்.
அதுபோல காங்கிரஸில் தீயவர் சிலர் இருந்தால், தீயவரை அகற்றுவது நன்றா?
அல்லது அதற்காக காங்கிரஸையே அழிப்பது நன்றா? கூர்ந்து பார்மின்!
தீயவரை அகற்றுவதன்றோ நல்லவரின் கடமை? நந்தவனத்தை தூய்மைப்படுத்தி
காப்பற்றுவதால் காங்கிரஸையும் காப்பாற்றவேண்டும் என்பர் என்று கூறினார்.
அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா
அவர்கள் பேசம்போது, திரு.வி.கலியாணசுந்தரனார் பேசும்போது நந்தவனத்தில்
நாய் செத்துக் கிடந்தால் நாயை அகற்றுவதா? அல்லது நந்தவனத்தை அழிப்பதா?
என்று கேட்கிறார். நல்லவர்கள் சுகம் பெறவும் நலிவடைந்தோர் குணம்
பெறவுமே நந்தவனம் அமைந்திருக்கிறது. நல்ல மனிதர்கள் நுழையவேண்டிய
நந்தவனத்தில் நாய் நுழையலாமா? நாய் நுழைந்தால் பின் அது நந்தவனமாகுமா?
நலிந்தவர்க்கும் நலம்பயக்கவேண்டிய நந்த வனம் நாயை சாகடிக்குமா? நாயும்
சாகிறதென்றால் நந்தவனத்தில் மணம் வீசவில்லை, விஷக்காற்று வீசுகிறகென்றுதானே
பொருள்படும். நாயையும் சாகடிக்கும் விஷக்காற்று வீசும் நந்தவனம்
ஊரின் நடுவே இருக்கலாம்? அதனை அழித்து புதிதாக தோற்றுவிப்பதுதானே
நல்லவர் செய்யும் கடமையாக இருக்க முடியும் என்று பதிலுரைத்தார்.
காங்கிரஸ்காரர்கள் வழக்கம்போல்
அதற்குச் சமாதானம் கூற முன்வரமுடியாமல் வேறு முறைகளில் திரும்புவார்களாம்.
கோவிலுக்கு விளக்கா?
சென்னை மாநகராட்சி மன்ற தேர்தலில் அண்ணா போட்டியிட்டபோது பெத்துநாயக்கன்பேட்டை
வட்டரத்தில் அப்பொழுது கோயில்களுக்கும், மெர்க்குரி விளக்குகள் போடப்பட்டு
வந்தன. அந்த நேரத்தில் அண்ணாபுக்கு எதிராகக் காங்கிரஸ்காரர்கள் நோட்டீசு
அடித்து வெளியிட்டார்கள். அப்பொழுது நடைபெற்ற ஜெயபாரதம் பத்திரிகையிலும்
அண்ணாதுரைக்கு ட்டுப் போட்டால் ஆலயங்களில் விளக்கு எரியாது என்று
எழுதியிருந்தார்கள்.
அதற்கு அண்ணா பதிலளிக்கையிலே, இந்த
நகரத்திலுள்ள சேரிகளெல்லாம் பன்னெடுங்காலமாக இருளில் மூழ்கி இருக்கின்றன.
அந்த சேரிகளுக்கெல்லாம் விளக்கு போட்ட பிறகு, ஏழை எளிய மக்கள் வசிக்கின்ற
பகுதிகளுக்கெல்லாம் விளக்குப்போட்ட பிறகு, பணமும், மின்சாரமும் மிச்சப்பட்டால்
கோயிலுக்கு விளக்கு எரியும். சேரிப் பகுதிகளிலே இருட்டிலே மக்கள்
வசிக்கிறார்கள். அங்கு நண்டு கடித்தாலும், நட்டுவாய்ககாலி கடித்தாலும்
அந்தத் துன்பங்களையெல்லாம் மக்கள் அனுபவிக்கவேண்டியிருக்கிறது; அவர்களுக்கு
விளக்கப் போடாமல் ஆண்டவனுக்கு விளக்குப் போட்டால் ஆண்டவன் முகம்
கருக்குமேயொழிய ஒளி பெறாது என்று சொன்னார். அப்படியானால் உனக்கு
ஓட்டு இல்லை என்றார்கள். அப்படிப்பட்ட ஓட்டு எனக்கு வேண்டாம் என்றார்
அண்ணா. அதனால் தேர்தலில் தோற்றார்
என்.வி.நடராசனை சேரியில்
சாப்பிடவைத்தார்!
சென்னையில் அண்ணா அவர்கள் நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டபோது ஓட்டுக்
கேட்பதற்காக சேரிக்கு சென்றிருந்தார்கள். அங்கே ஓட்டையும் கேட்டுவிட்டு
அவர்கள். வீட்டிலேயும் சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். வரும்போது அவர்களைப்
பார்த்து, இன்று நான் ஓட்டுக் கேட்க வந்தேன், உங்கள் வீட்டில் சாப்பிட்டேன்.
நாளை கங்கிரஸ்காரர்கள் வருவார்கள். அவர்களையும் நீங்கள் சாப்பிடச்
சொல்லுங்கள் என்று கூறிவிட்டு வந்தார். அதேபோல், மறுநாள் காங்கரிஸ்காராக்ள்
போனார்கள். அப்போது தோழர் என்.வி.நடராசன் காங்கிரசில் இருந்தார்;
அவரும் அவர்களுடன் போனார். அவர்கள் போய் ஓட்டு கேட்டதும், சாப்பிட
வாருங்கள் என்று கையைப் பிடித்துக்கொண்டனர். என்ன செய்வார்கள்? சீனுவாச
அய்யர் என்ற ஒரு காங்கரிஸ் பிரமுகர். அவரும், என்.வி.நடராசனும் முதல்
தடவையாக சேரியில் சாப்பிட்டார்கள். காங்கிரஸ்காரார்களை சேரியில்
முதல் தடவையாக சாப்பிட வைத்த பெருமை அண்ணா அவர்களையே சாரும்.
போக்கிரியை அடக்கினார்
சென்னை பெத்துநாய்க்கன்பேட்டையில் நகரசபை தேர்தலுக்கு அண்ணா போட்டியிட்டபோது
காங்கிரஸ்காரர்கள் ஒரு போக்கிரிக்குக் கூலி கொடுத்து அண்ணாவின் கூட்டத்தைக்
கலைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்; அவன் வேலை எப்படியாவது கூட்டத்தைக்
கலைக்கவேண்டுமென்பதுதான். அபனும் அங்கு ஒரு ஓரமாக நின்றுகொண்டிருப்பான்.
அண்ணாவுக்குத் தெரியும். அவன் எதற்காக வந்திருக்கிறான் என்று. அப்பொழுதெல்லாம்
ஒலி பெருக்கி இல்லாததால் எல்லோருக்கம் கேட்கவேண்டும் என்பதற்காக
ல்லாப் பக்கமும் திரும்பிப்பேசுவது வழக்கம். யார் யார் எப்படி இருக்கிறார்கள,
என்னென்ன நோக்கத்தோடு வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்தபடி தோழர்களே!
உங்களுடைய வலிவை கேவலம் எட்டணா, கத்தணாவுக்கா விற்கவேண்டும்? என்று
கேலியாகப் பேசினார். அண்ணா அப்படிப் பேசியதும் அந்த போக்கிரி ஏதும்
செய்யாத நிலையில் சும்மா இருந்து விடுவான். கூட்டத்தை அவன் கலைக்காமல்
போனதும் அவர்கள் அவனைப்பார்த்து நீயும் அண்ணாத்துரை பேச்சைக் கேட்டுக்கொண்டு
இருந்துவிட்டாயா? என்பார்கள். என்ன செய்ய? அவன், ஏதாவது வம்பு பேசினால்தானே
கலகம் செய்யலாம் என்பான். அப்படியானால் உனக்கு நாயையிலிருந்து கூலியில்லை
என்பார்கள், உடனே அவன் கூலி தராவிட்டால் நாளை முதல் உங்கள் கூட்டத்தில்
கலகம் செய்வேன் என்பான். ஆகவே தேர்தல் முடியும் வரை அவனுக்குக் கூலி
கொடுத்துக்கொண்டு வந்தார்கள்.
|