அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி: 39


ஆகஸ்ட் 15
பல வருட காலமாகவே அந்நிய ஆட்சி நீங்கத்தான் வேண்டும், அதுதான் எமது விருப்பம் எனச் சொல்லி வந்தவர்கள் தான் நாம். ஆனால் ஆங்கில ஆட்சியை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் ஆரிய ஆட்சியை ஏற்படுத்தவே காங்கிரஸ் முயலுகிறது. அதற்காகவே நாங்கள் காங்கிரசை எதிர்க்கிறோம். காங்கிரஸ் கையாளும் முறைகள் சரியானவை அல்ல என்று படுவதால், நாங்கள் அம்முறைகளை ஆதரிக்கவில்லை. நாங்கள் காங்கிரசை எதிர்த்தாலேயே சுயராஜ்யத்துக்கு விரோதிகளல்லர் - அந்நிய ஆட்சியை விரும்புவர்களல்லர், என்பதை ஆயிரமாயிரம் மேடைகளில் பேசி இருக்கிறோம். வெள்ளைக்காரனை நாளைக்குப் போ என்று நீ சொன்னால், நாங்கள் இன்றே போ என்று கூறுகிறோம் - என்று பேசி இருக்கிறோம்.

. . . ஆகஸ்டு 15 ஆம் தேதியை மகிழ்ச்சி தரக் கூடிய நாளாகவே கருத வேண்டும், அதுவே இதுவரை நாம்கொண்ட போக்குக்கும் நமது கொள்கைக்கும் ஏற்றது . . . .

. . . ஆகஸ்டு 15 ஆம் தேதி அந்நிய ஆட்சி ஒழிந்த நாள். நம்மை நலிய வைத்த வெள்ளையர் ஆட்சி நீங்கிய நாள். ஆகாதிபத்தியப் பிடி ஒழிந்த நாள், இரு எதிரிகளில் ஓர் எதிரி ஒழிந்த நாள் (மிச்சமிருப்பது பனியா ஏகாதிபத்தியம்) என்பதிலே நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ளக் காரமும் இருக்கிறது.

. . . உலகம் முழுவதும் கூர்ந்து கவனிக்கம், ஒரு மகத்தான சம்பவத்தை நமது கொள்கையை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு அளந்து பார்ப்பதோ, உதாசீனம் செய்வதோ சரியாகாது.

. . . . . . . காங்கிரசார் பழி சுமத்தியது போல நாம் பிரிட்டிஷாரின் அடிமைகளல்லர் என்பதை விளக்க நமக்கிருக்கும் ஒரு நாள் கடைசிநாள் ஆகஸ்டு 15. நாம் ஏன் அந்தச் சந்தர்ப்பத்தை இழந்து இழிவான பழிச்சொல்லைத் தேடிக்கொள்ள வேண்டும் . . . . . . ஆகவே ஆகஸ்டு 15 ஆம் தேதிபற்றி திராவிடர் கழகம் தன் கருத்தை இந்த நேரத்திலும் மாற்றிக்கொள்ள முடியும் - மாற்றிக்கொள்ளலம் - முடியுங் கூடத்தான்; அதற்கு முன் மாதிரியாக சேலம் சம்பவம் இருக்கிறது.

ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். சேலத்திலே கம்பராமாயணத்தைக் கடைசி நேரத்தில் ஒரே தந்தியின் மூலம் கொளுத்த வேண்டாமென்று கூறியவர் ஒருவர். நான் ஒரு சாமான்யன், அவர் கட்சிக்காக ஓய்வு நேரத்திலும் உழைத்ததில்லை, நான் உழைத்து அலுத்தவன், அவர் இன்று இந்திய சர்க்காரிலே மந்திரி!

நானோ இந்த அறிக்கையின் விளைவாகவே கூட, உங்களில் பலராலே கூட, சந்தேகத்துக்கும், நித்தனைக்கும் ஆளாகக் கூடிய நிலையில் உள்ளவன். ஆனால் நான் கூறுவது உள்ளத்திலிருந்து வருபவை . . . . . . இது கட்சிக் கட்டுப்பாட்டையும் தலைவரின் அறிக்கையையும் மீறுவதாகும் என்ற கருதப்பட்டு என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன் வருவதானாலும் என் வாழ்நாளில் பிரிட்டிஷ் ஆட்சி கூடாது என்ற கொள்கையைக் கொண்டவன் நான் என்பதை மக்களுக்குக் கூற எனக்கிருக்கும் ஒரே நாளான ஆகஸ்டு 15 ஆம் தேதியின் முக்கியத்துவத்துக்காக வேண்டி, கட்சியின் கடுமையான நடவடிக்கைக்கும் சம்மதிக்க வேண்டியவனாகிறேன். தலைவரும் கட்சியும் என் போக்கு தவறு என்று கருதி என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும், நான் சமூக சீர்திருத்தம், பொருளாதார சமத்துவம், திராவிடத் தனி அரசு எனும் அடிப்படைக் கொள்கைகளை, கட்சிக்கு வெளியே இருந்தாகிலும் செய்து வருவேன் என்பதைக் கூறி இந்த அறிக்கையை முடிக்கிறேன். வணக்கம்
(திராவிடநாடு - 10.08.1947)

பொறுப்பிலே ஈடுபாடு கொள்ளாதவரிகள் எதை எம்முறையில் கூறிடினும், நாம் அது குறித்துக் கவலை கொள்ளக் கூடாது என்ற திடமனம் கொண்டிடவேண்டும். நமது தோழர்கள் அத்தகைய திடமனம் கொண்டோராக இருந்திடுவதாலேயே, பல ஆண்டுகளாக தனித் திறமை காட்டிக் கட்டிவிட்ட வதந்திகள், மூட்டிவிடப்பட்ட கோள்கள், நமது கழகத்தை ஏதும் செய்திட இயலாது. வீழ்ந்து பொடிப் பொடியாகிவிட்டன.

இந்தியாவுக்குக் கிடைத்திடும் சுயராஜ்யம் துக்கராஜ்யம் என்ற பெரியார் கருதி, ஆகஸ்ட் பதினைந்தாம் நாளைத் துக்க நாள் என்று நடத்திட அறிக்கை விடுத்ததை நான் மறுத்ததனை அறிந்திருப்பாய்.

தம்பி! அப்போது என்னைப்பற்றிக் கட்டிவிடப்பட்ட வதந்திகள் கணக்கில் அடங்கா!

இப்போது எண்ணிக் கொண்டாலும் எனக்குச் சிரிப்பு வருகிறது. ஒரு வெடிச் சிரிப்புக் கிளப்பிவிட்டுக் கேட்பார் ஒருவர், என்ன விலை கெஜம்! நேர்த்தியாக இருக்கிறதே சட்டைத் துணி! கதர்தானே!

கதர் அல்ல ஐயா வழக்கமாக நான் போடும் கைத்தறித் துணிதான்

கதர் என்று பார்த்தேன். கைத்தறித் துணியா?

தம்பி! கேலி, புரிகிறதல்லவா? ஆகஸ்ட் பதினைந்து துக்க நாள் அல்ல என்று நான் எழுதினால், நான் காங்கிரசாகிவிட்டேன் என்று பொருள் கொண்டு பலப்பல வதந்திகளைக் கிளப்பினர்.

நான் மட்டு வதந்திகளின் தன்மையையும், அவற்றினைக் கிளப்பிவிடுவோரின் போக்கினையும் ஓரளவு தெளிவாகத் தெரிந்து கொண்ட நிலையினனாக இல்லாதிருப்பின், என்னென்ன நேரிட்டிருக்கக்கூடும் என்பதை எண்ணும்போது நடக்கமே எடுக்கிறது.

வதந்திகளைக் கிளப்புகின்றவர்கள், பொறுப்பான பதவியினராக இருந்திடினாவது, அவர்களைக் கேட்கலாம், இது சரியா, முறையா என்று.
(தம்பிக்கு கடிதம் - அண்ணா, 12.06.1966)

அறப்போர்:
ஆகஸ்ட் 10ஆம் தேதி (10.08.1948) ஆரம்பமாகிறது. ஆற்றல் மிக்க திராவிடத் தோழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அழைப்பு கிடைத்துவிட்டது. . . . . . தொடக்கமும், முதல் படைத் தலைவனாக (சர்வாதிகாரியாக) இருக்கும் சிறப்பிடமும் வாய்ப்பும், எனக்களித்த பெயரியாருக்கு, என் நன்றி. கமிட்டியாருக்கும் கழகத்தாருக்கும் என் நன்றி அறப்போர் நடத்த உங்கள் பேராதரவை நம்பி, ஒப்புக்கொண்டு விட்டேன். படை வரிசையில் வந்து நில்லுங்கள் என்று உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
(அண்ணாதுரை, 08.08.1948 - 1-வது சர்வாரிகாரி வேண்டுகோள்)

அன்புடையீர்,
வணக்கம். சென்ற ஏழு ஆண்டுகளாகத் திராவிடப் பெருங்குடி மக்களின் நலன் கருதி நடத்தப்பட்டு வரும் திராவிடநாடு இதழின் மீது சென்னை அரசியலாம் தம் அடக்குமுறை பாணத்தை இப்போது ஏவியுள்ளவர்கள். 25.06.1949 ஆம் நாளுக்குள் ரூ.3000, ஜாமின் தொகை கட்டித்தீரவேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளார்கள். திராவிடநாடு திராவிட மக்களின் னலனுக்காகப் பாடுபடுகிறது என்பதை அறிவிக்கயும், திராவிட மக்களின் ஆதரவு அதற்கு உண்டு என்பதைக் காட்டவும், இவ்வாய்ப்பை எற்று தங்களாலான நன்கொடையை இந்நெருக்கடி தீரும் வகையில் அளித்தருளக் கோருகிறேன். (திராவிடநாடு - 09.06.1949)

நன்கொடை தந்துதவிய அன்பர்கள்:
லாலாஜழபாத் டபிள்யு.கே.தேவராசன் 100.00
காஞ்சிபுரம் வி.புட்டாசாமி 100.00
காஞ்சிபுரம் ஏ.கே.தங்கவேல் 100.00
காஞ்சிபுரம் என்.கே.கணபதி 100.00
காஞ்சிபுரம் என்.கே.அரங்கநாதன் 100.00
காஞ்சிபுரம் ஏ.பாலகிருஷ்ணன் 100.00
காஞ்சிபுரம் கே.எஸ்.முனுசாமி 100.00

குறிப்பு: மேலும் நன்கொடையை விரையில் எதிர்பார்க்கிறேன். வணக்கம்.

(திராவிடநாடு - 12.06.1949)

எனது நன்றி
அரசியலார் திராவிடநாடு இதழின் மீது தங்கள் அடக்குமுறை பாணத்தை ஏவி, ரூபாய் மூவாயிரம் ஜாமீன் கட்டுமாறு கட்டளை பிறப்பித்தது, இது திராவிடநாடு இதழின் மீது மட்டும் ஏவப்பட்ட பாணமன்று. திராவிடப் பெருங்குடி மக்கள் அனைவரும் மீதுமே ஏவப்பட்ட பாணம் என்பதை எடுத்துக்காட்டும முறையில் அரசாங்கத்தின் அடக்குமுறைக் காணிக்கையாக அவர்களால் அரசாங்கத்தின் அடக்கு முறைக் காணிக்கையாக அவர்களால் கோரப்பட்ட ரூபாய் 3000 யும் அன்பர்கள் தந்துதவியுள்ளார்கள். ஜழமின் தொகை கட்ட ரூபாய் மூவாயிரம் தேவையென்று வேண்டுகோள் விடுத்த, ஒரு வாரத்துக்குள்ளாகவே குறிப்பிட்ட தொகை சேர்ந்துவிட்டது.

அரசியலாரின் அறைகூவலை ஏற்று அன்புடன் உதவி செய்து ஆதரித்த அனைவருக்கும் எனது நன்றியறிதலையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(திராவிடநாடு - 19.06.1949)

புயல்
. . . பெரியாரின் உடற் பாதுகாப்புக்கான பணிபுரிய நான், நீயென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றக் கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு. அவர்கள் யாரும் தேவைப் படவில்லை மணியம்மை வர நேரிட்டது. புயல் நுழைகிறது என்று கருதியவன் நான் புல்லன் என்று தூற்றப்பட்டேன். . . .
(திராவிடநாடு - 07.09.1949)

உத்தமர் காந்தி
. . . உத்தமர் காந்தியார் வெறி கொண்ட ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார் எனும் செய்தியை ரேடியோ மூலமாக கேள்விப்பட்டேன். பதறினேன் அப்போது சென்னை வானொலி நிலையத்தார் அழைத்தார்கள். காந்தியடிகளைக் கொன்றவன் மராட்டியப் பார்ப்பனன் கோட்சே என்பவன். அதனால் மக்களின் ஆத்திரவெறி, அக்குலத்தார் மீது பாய்ந்துவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் என்னை அழைத்துப் பேசச் சொன்னார்கள். கயவனாய் இருந்தால் கட்சிவெறி கொண்டவனாயிருந்தால் அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு நாட்டில் விபரீதங்கள் பல ஏற்படுவதைக் கண்டிருக்க முடியும். அப்படிப்பட்ட விபரிதங்களைக் கண்டு கைகொட்டும், கருத்தற்றவனல்லன் நான்.

உத்தமரை ஒருவரின் வெறி கொன்று விட்டது. அதற்கு பார்ப்பன மக்கள் மீது பழி சுமத்தக் கூடாது என்று எடுத்துரைத்தேன். உத்தமரின் சேவைகளை எடுத்துரைத்தேன் . . . (சொற்பொழிவு - காந்தி சிலை திறப்பு - வேலூர் நகராட்சி - 1951)

பெரியார் திருமணம் - தன்னிலை விளக்கம்
பல நண்பர்கள் கொள்கையில் ஆரவமுள்ளவர்கள், இதுபோலக் கூறினர். நேரிலும், கடித மூலமாகவும், இக்கருத்து ஒருபுறம் வந்து குவிந்த வண்ணம் இருநதது அதேபோது . . .
பெருவாரியாக நாம் இருக்கும்போது ஏன் நாம் விலகவேண்டும்? கழகத்தை நாம் நடத்திச் செல்வோம் என்ற கருத்தை, ஆரவத்துடன் வழங்கி, அந்தக் காரியத்துக்கான ஆற்றலையும் சுட்டிக்காட்டிப் பலர் கடிதமூலம் நேரிலும் தெரிவித்தனர், வேறு சிலரோ . . .

இது அண்ணாத்துரையின் சூழ்ச்சி. அவன் மிக மிக முன்ற்றபாட்டுடன் திட்டம்த தயாரித்திருக்கிறான். பா முறை ஒத்திகை நடத்திப்பார்த்து, இப்போது படை எடுக்கிறான். பெரியார் மீது, கழகத்தைக் கைப்பற்றி அதற்கெ உள்ள சொத்தைக் கைப்பற்றி, ஆதிக்கம் லெருத்த விரும்புகிறான். அரசியல் சூதாடிகளுடன் கூடிக்கொள்ள எண்ணுகிறான் - கொடியவன் - கபடன். கயவன் - சுயநலக்காரன் - சூழ்ச்சிக்காரன் - அவன் திட்டம் பெரியாரை ஒழிப்பது என்பதுதான். அதற்குக் காரணம் பொறாமை என்று தீட்டினார் ஏடுகளல், திண்ணைப் பிரசார மூலமும் பரப்பி வந்தனர். இது மட்டுமன்று.

திராவிடர் கழகத்திலே ஒரு திடீர்க் குழப்பம் ஏற்பட்டுவிட்டது - பிளவு அகன்ற வாய் திறந்து கொண்டிருக்கிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அழிநது போய்விடுவார்கள். திராவிடர் கழகத்தின் மூலம் சாட்டிலே பரப்பப்பட்டு வந்த கொள்கைகள் இனிப்பரவ இடமில்லை. எனவே நமது ஆதிக்கம் ஆடடம் கொடுக்காது, புத்துயிர் கிடைக்கும் என்னு வைதீக வட்டாரமும், காங்கிரஸ் முகாமும்; பேசிக்கொண்டிருந்தனர். அமைதியையும் தனிப் போக்கையும் விரும்பும் என்போன்ற சிலர் உனகேன் பாரம் - பிரச்னை - தனியாக ஒதுங்கிவிடு - அந்த நிலையிலிருந்து முடிந்ததைச் செய்பவர்களைக் கண்டு மகிழ்ந்திரு என்றும் கூறினர்.

இப்படிப் பல கருததலைகள் தாக்கும் நிலையில் இருந்த நான், பல நாள்கள், இந்தப் பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கவும், கலந்தாலோசிக்கவும் வேண்டியவனானேன்.

1935ஆம் ஆண்டு என் வாழ்க்கையில், முதல் முடிவு எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதாவது, பட்டம் பெற்றதும் உத்தியோகத்துக்குப் போவதில்லை. பொதுவாழ்வுத் துறையில் பணியாற்றுவது என்ற நான் துணிந்து மேற்கொண்ட முடிவு. அந்த ஆண்டிலிருந்து 1949 வரையில், எனக்கு மீண்டுமோர் முடிவு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. பாதை தெரிந்துவிட்டது. போய்ச் சேரவேண்டிய இடமும் தெரிகிறது. எனவே பயணம் செய்ய வேண்டியதுதானே? அம்முறையில், இந்தப் பதினான்காண்டுகளும், எனக்கு அமைந்திருந்தன. இடைய சங்கடங்களும் சஞ்சலங்களும் ஏற்படாமலில்லை. ஆனால் அவை, என் முதல் முடிவை மாற்ற வேண்டிய அளவும் அல்ல, அந்த வகையும் அல்ல. எனவே சங்கடம் ஏற்பட்ட போதும், சஞ்சலம் உண்டானபோதும், எதையும் தாங்க இந்த இதயம் உண்டு என்ற கவிதா வாக்கியத்தின்படி, இருந்துவந்தேன். இயக்கத்திலேயும் பெரியாரிடமும் எனக்கு இருந்து வந்த தொடர்பு சாதாரணமானதாக இருந்திருந்தால், சஞ்சலம் சிறிதளவு ஏற்பட்டபோதே மிரண்டோடி விட்டிருப்பேன். ஆனால் பதினான்காண்டுத் தொடர்பு, ஏற்படுத்திவிட்ட பற்றும் பாசமும் இலேசானதன்று. என் மனம் சுலபத்திலே சபலமடையக் கூடியதாக இருந்திருந்தால், கட்சி பதவியின் மீது மோகமோ, இல்லாதவனாக இருந்தால்தான், எவ்வளவு இடிபாட்டாலும், முடியாத சமயங்களில் வேலி ஓரத்திலும இருந்துகொண்டு வந்திருக்கிறேன். பலமுறை, என்போக்கு எப்படி ஆகிவிடுமோ என்று பயந்தவர்களும், அவசர ஆரூடம் கூறியவர்களும் உண்டு. ஏதேனும் மாறுபாடு காரணமாக நான் ஒதுங்கியிருப்பேன் சில சமயங்களில் - உடனே, என்னைக் காங்கிரசார் விலைக்கு வாங்கிவிட்டனர் என்றனர், நான் மந்திரியாகிவிட, மனப்பால் குடிக்கிறேன், என்றனர்.

திராவிடர் கழகத்திலே, தலைவருக்கும் என்போன்ற பணியாளர்களுக்கும் உள்ள தொடர்பு, மற்ற கட்சிகளிலே ஒரு தலைவருக்கும் பணியாளர்களுக்கும் உள்ள தொடர்பு போன்ற தன்று! இங்கு, ஒருவகைப் பாசம் சுயமரியாதைக் கொள்கைப்படி தவறுதான் என்ற போதிலும், ஏதோ ஒரு வகையான, பக்தி ஏற்பட்டிருந்தது. இதை யாரும் மறுக்கமாட்டார்கள் - பெருமையுடன் ஒப்புக்கொள்ளத்தான் செய்வார்கள். எனவே, மற்றக் கட்சிகளிலே; தலைவருக்கும், அவர் உடனிருப்போருக்கும் தகராறு ஏற்பட்டால், தொடர்பு உடனே அறுபட்டுப்போய், தாக்குதல் தொடங்கிவிடுவது போலன்றி, இங்க, கண்ணீர் தான் சிந்தப்பட்டது. ஆச்சாரியாருக்கும் காமராஜருக்கும், காங்கிரசிலே போர் மூண்டு, இருதரப்பும் படைதிரட்டிக்கொண்டு பவனி வந்தபோது இருவரில் யாரும் அழுதிருக்க முடியாது. ஆனால் நாம் அழுதோம், வாத்த்தை அளவிலன்று - உண்மையாகவே, இந்த விதமான தொடர்பு வேறு கட்சிகளில் இல்லை. எனவேதான், நான் இந்த நெருக்கடியான கட்டத்திலே ஒரு முடிவுக்கு வருவதற்கு, காலம் தேவைப்பட்டது. பலருடைய பொறுமையைச் சோதிக்கம் அளவுக்குக் காலம் தேவைப்பட்டது.
துற்றிவிட்டுப் போய்விடுவது என்ற துடுக்குத் தனமான திட்டம் என் மனத்திலிருந்திருந்தால், இவ்வளவு கண்ணீர் சிந்தி இருக்கத் தேவையில்லை, காலத்தை வ்வளவு கடத்தவும் தேவையில்லை.

துரோக சிந்தனை இருந்திருந்தால், இதையே கசாக்காகக் காட்டிவிட்டு, வேறு கட்சிக்கு ஓடிவிட்டிருப்பேன்.

துடுக்குத் தனம் துரோகச் சிந்தனை என்பவை இல்லாததால்தான் இடர் மிகுந்த நிலையிலே, மூன்று நாக்ளுக்கு மேலாக இருந்திட நேரிட்டது.

இந்த நேரத்திலே, நான் என்ன முடிவுக்கு வர இருக்கிறேன் என்பதை அறிய முயற்சி செய்யாமல், இயக்க அன்பர்கள் சிலர், தத்தமக்குத் தோன்றிய விதமாகவெல்லாம் ஆருடம் கணிக்கலாயினர். வாய்ப்பதரிது என்ற போக்கிலே, அவர்கள்ன் பிரசார முறை பழைய பணி இக்காலத்துக்குத் தேவைப்படுவதன்று - எனினும் அதுதான் அவர்கள் அறிந்தது.
பெரியார் மீது படை எடுத்துத் தலைமைப் பீடத்தைப் பறித்துக்கொள்ள மிகப் மிகப் பலமான, முயற்சி திட்டப்படி நடைபெறுவதாகப் பிரசாரம் செய்யலாயினர்.

நானோ, நண்பர்களோ எவ்விதமான முடிவுக்கும் வராமல் ஏக்கத்துடன் இருந்துகொண்டு, எம்மை இக்கதிக்கு ஆளாக்கிவிட்டது ஏன் என்று தலைவரிடம் முறையிட்டுக்கொண்ருந்த சமயத்திலே, அந்தப் பிரசாரம் நடைபெற்றது - ஏடுகள் மூலம் துண்டு வெளியீடுகள் மூலம் - தூது மூலம்.

திருமணத்தை நிறுத்தாவிட்டால், அவருடைய தலைமையின் கீழிருந்து பணியாற்ற முடியாது என்ற மட்டுமே அப்போது நானும் நண்பர்களம் முடிவு செய்து, கருத்து வெளியிட்டிருந்தோம், தீர்மான உருவிலும், அறிக்கை வடிவிலும்.

யாரும், இந்த நிலையைப் பற்றிக் கலந்துபேசி, சிக்கலைப் போக்க முயற்சி செய்யவில்லை.
அப்பாவி என்ற உங்களையும், துரோகி என்று என்னையும் இப்போது அவர் தூற்றுகிறார். ரத்தினங்கள் என்று உங்களையும், பெட்டிச் சாவியைத் தருகிறேன் என்று என்னைக் குறித்தும், புகழ்ந்திருக்கிறார். ஆயிரம் மேடைகளில் கூறியிருக்கிறார். எம்.ஏ. படித்துவிட்டு இந்த அண்ணாதுரை என்னோடு சுற்றுவதற்குப் பதிலாக, காங்கிரசில் இருந்தால், இந்நேரம் ஒரு மந்திரியாக இருக்கமாட்டாரா? என்ன இலாபம் என்னோடு இருப்பதால்? என்று! ஊராரின் தூற்றலையும் உற்றார் உறவினரின் விரோதத்தையும் ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்றிம் தோழர்கள் என்று உங்களை எல்லம் பாராடடியிருக்கிறார், பன்முறை. இப்போது நீங்களும் நானும், தலையாட்டிகளாக மறுக்கிறோம். கோபத்தால், ஏதேதோ கூறுகிறார். நஷ்டம் என்ன நமக்கு அதனால்! அவருடைய பாராட்டுதலை நிரம்பப் பெற்றிருக்கிறோம். அதை எண்ணி ஆறுதல் பெறுவோம்.

இப்போது அது போதாதென்று, கழகத்தோழர்களிலேயே சிலரும் என்னைத் தூற்றுகின்றனர். இவ்வளவுதான். பெரியாருடன் பணிபுரிந்தபோது, மற்றகட்சியினர் தூற்றினபோது சகித்துக்கொள்ள முடிந்திருக்கிறதே, அந்தப் பண்பு எனக்குப் பட்டுப்போகவில்லை சற்று வளர்ந்திருக்கிறது. பட்ட கஷ்டத்தால், அவரிடம் பெற்ற பாடத்தால், ஆகவே, துரோகி என்று என்னை ஆத்திரம் காரணமாக அவரே தூற்றும்போதும் சரி, அவரை மகிழ்விக்கும் வழி என்னைத் தூற்றுவதுதான் என்ற எண்ணிக்கொண்டு பேசும், ஒருசிலர் என்னைத் துரோகி என்று தூற்றும்போதும் சரி, நேர்மைக்காக, நீதிக்காக திராவிட மக்களின் உரிமைக்காகப் பாடுபடும் பெரியாரை, ஆதிக்கக்காரர்கள் அரசியல் சூதாடிகள், வைதீக வக்கிரங்கள், ஆகியோர், தேசத்துரோகி, மதத் துரோகி என்று தூற்றுகிறார்களல்லவா - அந்தத் தூற்றல், எப்படி ஏமாற்றத்தால் ஏற்படும் ஆத்திரத்தின் விளைவோ, அதுபோன்றதே தான் என்னைத் துரோகி என்று தூற்றுவதும் என்று எண்ணி, மனத்தைச் சமாதானப்படுத்திக்கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின்மூலம், அரசியல் சூதாட நான் விரும்பவில்லை. அப்படி அந்தச் சூதாட நான் விரும்புவனானால், பல வருஷம் பணியாற்றிய கழகத்தை அதற்கப் பயன்படுத்த முயன்றிருப்பேன் - முடியாது என்று ஏற்பட்டால்தானே புதுமுயற்சியில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்படும்? அதுபோன்ற முயற்சி நான் எப்போதாவது செய்து பெரியார், என்னைத் தடுத்தாரா, கழகத்தவருக்குச் சொன்னாரா? சேலம் மாநாட்டுக்குப் பிறகு தேர்தல் விவகாரத்திலே, அக்கறையே அற்றுப்போயிருப்பவன் நான். திருசசி மாவட்டத்திலே சில திங்களுக்கு முன்பு ஓர் இடைக்காலத் தேர்தல் வந்தபோது, கரூர் தோழர இரத்தினம் அபேட்சராக நிற்க விரும்பியபோது, அவரைக் கழகத்திலிருந்து ராஜினாமாச் செய்யும்படி வலியுறத்தி, கடிதம் எழுதி வாங்கியிருக்கிறேன். சேலம் மாநாட்டுக்குப் பிறகு இன்றுவரை, எந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் நான் கலந்து கொண்டவனல்லன். பெரியாராவது சில இடங்களிலே பேசியிருக்கிறார். இவ்விதமாக நான் இருந்து வருகிறேன் - இருந்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உள் எண்ணம் பதவி தேடுவது தேர்தலை நாடுவது என்ற பழிசுமத்துவது சரியில்லை - என்பது பழிகமத்திப் பேசுபவர்களுக்கே தெரியும் - ஆயினும் பாவம். அவர்கள் என்ன செய்வார்கள்! நமது முயற்சியைக் குலைக்க, அவர்கள் என்ன செய்வார்கள்! நமது முயற்சியைக் குலைக்க, எதையாவது சொல்ல வேண்டுமே, என்பதற்காக, பொருளும் பொருத்தமும் அற்ற பழி சுமத்திப் பார்க்கிறார்கள், இது பலனற்ற வேலை. எனவே இதைக் குறித்துக் கவலைப்பட வேண்டாமென்று திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

ஏதோ நானும் சில நண்பர்களும், பொதுவாழ்வில் புகுந்திருப்பதே, வயிற்றுப் பிழைப்புக்காகத் தான், என்று கூறுகிறார்கள். இதைவிடக் கேவலமாக ஏச முடியாது; சகித்துககொள்கிறேன். பொதுமக்கள், கப்பரையும் கையுமாகக் கஞ்சிக்கலையும் நிலையில் நான் இருந்ததைக் கண்டதில்லை. பெரியாருடன் கூடி நான் பொன் ஓடு பெற்றதையும் காணவில்லை! என்வே அவர்களின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

பொது வாழ்க்கையிலே இப்பப்பட்ட இழி மொழியைப் பெறுவது நிலாச்சோறு - உண்மை நஞ்சு அல்ல! எத்தனை ஆயிரம் பேர் கூற நான் கேட்டிருக்கிறேன் என் பாழும் காதால், பெரியார் காரனிடம் பணம் வாங்கிக் கொண்டுபேசுகிறார், காங்கிரசில் பணம் எடுத்துக்கொண்டு போய்விட்டார், என்ற பழிமொழிகளைப் பலர் கூறுவமதைக் கேட்டிருக்கிறேன். அதனால் எனக்கு அவரிடம் பற்றோ மதிப்போ, போயிற்றா? அதுபோலத்தான் இப்போது நான் தூற்றப்படுகிறேன் - இதிலே வருத்தப்பட என்ன காரணம் இருக்கும்? அலசிப்பார்த்தால் சந்தேஷம் கூட வரும், ஓஹோ! நம்மை இப்படி எல்லாம் பழிபேசித்தான் ஒழிக்க முடியும் என்று நிலைமை வளர்ந்திருக்கிறது போலும் என்று எண்ணத் தோன்றும். நான் அந்த அற்ப சந்தோஷம் கூடப்படவில்லை. நான் என்னை, பெரியார் பரம்பரை என்றால், வீண் பழியையும் இழி மொழியையும் தாங்கிக் கொள்ளும் பண்பு என்று நான் பொருள் கொள்கிறேன். நண்பர்களே! என்னைத் தூற்றுவதுபோலத்தான், உங்களையும் தூற்றி வருகிறார்கள் - கவலையும் வருத்தமும் கொள்ளவேண்டாம் கழகத்தை ஆங்காங்கு அமைக்கும் அரும்பணியைத் திறம்படச் செய்து வாருங்கள் - பிறகு பாருங்கள், தூற்றினவர்கள் தோழமை கொண்டாட வரும் காட்சியை.

திருமணப் பிரச்னையைச் சாக்காகக் கொண்ட நாம், திராவிடர் கழகத்தைக் கைப்பற்ற முயற்சி செய்வோம். அந்தப் பேச்சை வைத்துக்கொண்டு நம்மை ஒத்துக்கட்டலாம், என்ற எண்ணினார்; ஏமாற்றமடைந்தனர் - நாம் வேறுபாதை வகுத்துக் கொண்டோம் - திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்துக் கொண்டோம். தாக்குதல் இருக்கும் - போர்கள் நடைபெறும் - படையெடுப்புகள் இருக்கும் - என்றெல்லம் எண்ணமிட்டுக் கொண்டிருந்தனர் - பாதை புதிது, போகிறேன் பராபரமே! என்று நாம் கூறிவிட்டோம். தீட்டிய வாள் வீணாகிறதே, திரட்டிய படைக்கு வேலை இல்லையே, என்று திகைப்பு ஏற்படுகிறது - சரி, இனி, வலியச் சென்று சண்டைக்கிழுக்கலாம் என்று தோன்றுகிறது - உங்களை அப்பாவி என்ற என்னைத் துரோகி என்றும் தூற்றுவது அந்த ரகமான பேச்சுத்தான்! ஆனால் நாம் திகப்பது இல்லை - தெளிவாக இருக்கிறோம் - எனவே, தூற்றல் கேட்டுத் துடித்திட மறுக்கிறோம்.
(திராவிடநாடு - 09.10.1949)

நான் துரோக சிந்தனையுடன உங்களைத் தூண்டிவிட்டதாகவும், நீங்கள் ஏமாந்து போனதாவும் எண்ணிக்கொண்டே, மேலால், கருத்துக் கோட்டை கட்டுகிறார். உண்மையில், நடந்தது வேறு, நீங்கள் தெளிவுடனும் தீரத்துடனும், தெரிவித்த எண்ணங்கள், என் மனத்தில் கருததை உருவாக்கிற்று. அதை அவர் அறியமாட்டார். அடிப்படையிலே அவர் தவறு செய்வதால்தான், மேலால் கிளம்பும் ஒவ்வொன்றும், நிலைக்க முடியாமல் கனவாகின்றது. எனக்குப் பொது வாழ்விலே சலிப்பு ஏற்பட்டதுண்டு பலமுறை - எப்போதும் அதிலிருந்துகொண்டு பொற்கோட்டை கட்ட வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததில்லை. நன்றாக நினைவிலிருக்கிறது - ஒரு மோட்டாரில், பெரியாருடன், நானும் பொன்னம்பலனாரும், ஜோலார்ப்பேட்டைப் பக்கமாகப் போய்க்கொண்டிருக்கிறோம். பத்தாண்டுகளுக்கு மேலிருக்கும், நான் சொன்னேன், பொதுவாழ்க்கைக்கு நாற்பதுக்கு மேல் தான் வரவேண்டும், ஏனெனில் நாற்பது வயது வரை, குடும்ப வாழ்பில் ஈடுபட்டு, குதுகலமாக இருந்துவிட்டு அனுபவிக்க வேண்டியதை அனுபவித்து விட்டுப் புறகு புதுவாழ்வில், புகுந்தால், உங்களைப் போல மும்முரமாக, தீவிரமாக வேலை செய்ய முடியும் என்றேன். முதுகைத் தட்டியபடி பெரியார் சொன்னார், முகமலர்ச்சியுடன் நீ, பைத்தியக்காரன்! பொதுவாழ்வில் இருந்தபடி, வாழ்வின்பத்தை அனுபவிக்க முடியாதா என்ன! உனக்கு அது தெரியவில்லை என்றார். அன்றிலிருந்து இன்று வரை பொதுவாழ்வைச் சொந்தத்துககாகப் பயன்படுத்தும போக்கு என்னிடம் என்ன கண்டார்? கண்டிக்கும் உரிமை உண்டே அவருக்கு, எப்போதாவது என்னைக் கண்டிக்கவேண்டிய சந்தர்ப்பம் வந்ததா? இப்போது அவரும் அவர் ஆதரவாளர்களும் கூறுகிறார்கள்ளே, கறுப்பு சட்டை போடாதது, தூத்துக்குடி போகாதது, வேலைக்காரி, நல்லதம்பி எனும் கதைகள் தீட்டியது என்று ஒரு பட்டியல் இவற்றுக்கெல்லாம் பிறகு தானே, ஈரோட்டில், பெட்டிச்சாவியைத் தந்தது? எப்படி முடிந்தது? இந்தத் துரோகி ஈரோடு மாநட்டிலே, பெட்டிசச் சாவியைப் பெற்றனே! ஒரு தோழராவது, அப்போது இன்று பேசும், துரோகம் பற்றி, எண்ணினார்களா? பெரியார்க்குத் தான் அப்படி எண்ணம் இருந்ததா? இருந்தால் அவர் கூறுவாரா, பெட்டிச்சாவியை ஒப்படைக்கிறேன் என்று.

ஒரு பெரிய தவறான கருத்தைக் கொண்டுவிட்டு, அதன் பயனாக மிகுந்த கஷ்டப்படுகிறார் பெரியார். அதாவது, நான் ஏதோ, மிக மிகப் பிரயாசை எடுத்துக்கொண்டு, தந்திரமாகத் திட்டமிட்டு, ஊரெடங்கும் அன்பர்களைத் தூதனுப்பு, ஓர் எதிர்ப்பு முன்னணியை அமைத்து வைத்திருப்பதாகக் கருதுகிறார். எதிர்ப்பு முன்னணி அமைந்திருப்பதும் உண்மை. அது இன்று, தனி இமைப்பகத் தழைத்திருப்பதும் உண்மை; ஆனால் இந்த நிலைமையை உண்டாக்க நான் ஏதோ இரவு பகலாக, சாமர்த்தியத்தை எல்லாம் செலவிட்டு வந்திருக்கிறேன் என்று எண்ணுகிறாரே, அதுதான் தவறு. இந்தத் தவறான கருத்திலிருந்து மற்றும் பலப்பல தவறுகள் முளைக்கின்றன - சகஜமாகவே.

நிலைமை என்னை உண்டாக்கிற்று - நிந்தனை என்னை வளர்க்கிறது.
நிலைமையை நான் உண்டாக்கவில்லை - நிந்தனை எனக்குப் பழக்கமற்ற காரியம்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai