அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
37
அண்ணாவின் வேலைக்காரி திரைப்படத்திற்கு
ஊதியமாகக் கிடைத்த ரூ.12,000-ல் 6000 ரூபாய் கொடுத்து திருக்கச்சி
நம்பித் தெருவில் இருந்த திராவிடநாடு இதழ் அலுவலகம், தொத்தா பெயரில்
வாங்கப்பட்டது. வாங்க உதவிய தங்கவேலர் சிப்பேர் என்று சொல்லி மேலும்
ரூ.4000 செலவு வைத்துவிட்டார் என்று சொல்லுவார்கள்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும்,
அண்ணாவுக்கும் இருந்த தொடர்பு யாவரும் அறிந்ததே. பகுத்தறிவு கொள்கைகளை
தாம் நடிக்கும் படங்களிலெல்லாம் புகுத்தினார். அந்தக் காலத்தில்
வாரந் தவறாமல் திராவிடநாடு படித்தவர் அவர். அவர் வீட்டு நிகழ்ச்சிகள்
எதுவாயினும் அண்ணா இல்லாமல் நடக்காது. அவர் எடுத்த நல்லதம்பி படத்துக்கு
அண்ணா கதை, வசனம் எழுதிகொடுத்தார்கள். அண்ணா முதன் முதலில் கதை வசனம்
எழுத இருந்த படம் உதயனன் அல்லது வசவதத்தா என்பதாகும். இதில் டி.வி.நாராயணசாமி
கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. கதாநாயகன் அவர் இல்லை என்று தெரிந்த
உடன் அண்ணா எழுத மறுத்துவிட்டார். நல்லதம்பிக்கு கலைவாணர் அண்ணாவுக்கு
எந்தத் தொகையும் தரவில்லை. ஆனால் கழகம் ஆரம்பிப்பதற்கு முன் ஒரு
புதிய இந்துஸ்தான் கார் - அப்போது ரூ.10,000 இருக்கும். டிரைவரோடு
பெற்றோல் நிரப்பப்பட்டு காஞ்சிபுரத்துக்கு வந்தது. டிரைவர், டிரைவர்
சம்பளம், பெட்ரோல் எல்லாவற்றையும் தான் ஏற்றுக்கொள்வதாக (என்.எஸ்.கிருஷ்ணன்)
கார் அண்ணாவுக்குச் சொந்தம் என்று சொல்லச் சொன்னார் என்று காரோட்டி
தெரிவித்தார். அண்ணா, நான், பரிமளம், இராசகோபால் அனைவரும் புதுககாரில்
ஆடிசன் பேட்டை சுவாமிஸ்கேப் அண்ணாவின் நண்பர் புட்டாசாமி(அய்யர்)
உணவு விடுதிக்குச் சொன்றோம்.
சிலருடைய தீயப் பழக்கங்க்ளைப்
பற்றி யாராவது அண்ணாவிடம் குறை கூறினால், அண்ணா அவர் என்ன முட்பொறுக்கி
ஆழ்வாரா? என்பார்.
புராணத்திலிருந்த முட்பொறுக்கி ஆழ்வார், எவருடைய காலிலும் முள் தைக்கக்கூடாது
என்கின்ற நல்லெண்ணத்தில் பாதையில் உள்ள முட்களையெல்லாம் பொறுக்கி
எடுப்பாராம். முள்ளே இல்லாத சமுதாயம் அமைக்கும் பொது நோக்கம் வேண்டும்.
அதைத்தான் நாம் செய்ய வேண்டுமே ஒழிய ஒவ்வொரு முள்ளாக, ஒவ்வொரு தனி
மனிதனாக எடுத்து திருத்துவது சாத்தியமமா? என்கின்ற விரிந்த மனோபாவம்
அண்ணாவினுடையது. அதோடு தன் எதிரே சிகரெட் பிடிப்பது, மாலை நேரப்
பழக்கத்தோடு சில நண்பர்கள் வந்து அமர்ந்துவிடுவதாலோ, தன்னுடைய அந்தஸ்துக்கு
இழைக்கப்பட்ட அவமரியாதையாக எண்ணாத ஒப்பற்ற உள்ளம் அவருடையது!
(இராம அரங்கண்ணல்)
பெரியார் திருமணம்
என்ற செய்தி கேட்டதும் அழுதவன் நான். ஆயாசங் கொண்டவன் நான். அதுமட்டுமல்ல
- நான் ஒதுங்கிவிடுகிறேன் என்ற எண்ணத்தை - நான் கொண்ட கருத்தை தெரிவித்தவன்
நான். பேதம், பிளவு மனத்தாங்கல், மோதல் கூடாது, நல்லதன்று என்று
கருதும் போக்கும் மனப்பண்பும் படைத்தவன் நான். எனவே என் வரையில்
பெருந்தன்மையாகக் கட்சிப் பணியிலிருந்து விலகுவது நல்லது என்று முடிவு
கட்டியிருந்தேன். என் போன்ற பல தோழரகள் பெரியாரை, பெரியார் போக்கை,
வேர் திருமண ஏற்பாட்டை ஏற்கவில்லை என்பதை மட்டுமல்ல கண்டித்தனர்;
கதறினர்; வேண்டாம் என்றனர், வேதனை உள்ளத்தோடு.
நான் மனதார தீமை என்று கதறிய ஒன்றை, பகுத்தறிவுக்கு புறம்பானது என்று
பாமரரும் ஒப்பும் ஒன்றை தெரிவித்தது குற்றமா?
(அண்ணா - 17.09.1949)
அண்ணா எப்போதும் ரிக்ஷா
ஏறமாட்டார். மனிதனை மனிதன் வைத்து இழுப்பதை மிக மிக வெறுத்தவர்.
செருப்பும் போடமாட்டார். பர்ஸ் இருக்காது அவரிடம். பேனா இருக்காது
வாட்ச் இருக்காது. மடியில் பொடி மட்டும் இருக்கும்.
பெரியாரின் திருமணத்தை
கண்டித்தோரின் பட்டியல் நான்கைந்து பக்கங்கள் கண்டணக் கணைகள் என்று
தலைப்பு போட்டு (அண்ணாவின் திராவிட நாடு இதழில் அப்போது, இரா. நெடுஞ்செழியன்
அதில் துணை ஆசிரியர்) வெளியாகியிருந்தது. என் நெடுஞ்செழியன், நாம்
பெரியாரைக் கண்டிக்கிற அளவுக்கா வளர்ந்துவிட்டோம்? அவருடைய முடிவு
கேட்டு திகைத்து, தடுமாறி அல்லவா, நிற்கிறோம்! அடுத்த வாரத்திலிருந்து
கண்டணக் கணைகள் என்று தலைப்பு போடாதே கண்ணீர்த் துளிகள் என்கின்ற
தலைப்பில் வரட்டுமே! என்றார் அண்ணா.
பெரியார்ன் திருமண முடிவின்போது பேறு யாராக இருந்தாலும் ஆத்திரத்தைக்
கொட்டியிருப்ர்கள். அதிலும் அவருக்கு அடுத்த இடத்தில் வாரிசு போல்
கருதப்பட்டவர் அண்ணா. அக்னி பிழம்பாகி கித்தவர்களையெல்லாம் கூட்டிக்கொண்டு
கிளர்ச்சி செய்யத் துவங்கியிருப்பார்கள்! ஆனால் அண்ணாவின் கூர்த்த
மதி பிரச்சினையை எடைபோட்டது. அந்த சமயம் அவர்களது எழுத்துககளும்,
காட்டிய போக்கும், அரசியலில் ஈடுபட்டுத் தலைவர்களாக விரும்புவோர்
அவசியம் கற்கவேண்டிய பாடமாகும்.
(பெரியாரின் திருமணத்தின்
பின் எங்கும் குழப்ப நிலை அண்ணா எந்த முடிவும் எடுக்கவில்லை. நாட்கள்
கடந்து கொண்டே இருக்கின்றன. கழகத்தோர் பெத்தாம்பாளையம் பழநிச்சாமி
காஞ்சியில் அண்ணா வீட்டில் தங்கியிருக்கிறார். அவரே) நான் ஏன் வந்து
இப்படியே உட்கார்ந்திருககிறேன் தெரியுமா? அண்ணா பேசாமல் இருக்கிறார்
பாருங்கள். அப்படியே இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ளத்தான் என்றார்.
இதை அண்ணாவிடமும் சொன்னார். அண்ணா சிரித்துககொண்டே, பெத்தாம்பாளையம்
காட்டாறு பார்த்திருக்கிறீர்களா? வேகத்தில் பெரிய மரம், செடி, கொட,
மண் எல்லாத்தையும் ஒரே அடியா அடிச்சிகிட்டுப்போகும். அதைப் பார்த்து
உங்களைப் போன்ற விவசாயிகள் சாகுபடிக்கு தயாராகிடமாட்டான். அய்யாவுடைய
திருமணம், வாரிசு இவைகளைக் கேட்டதும் காட்டாறு போல ஒரு உணர்ச்சி
- உருவெடுத்திருக்கு. இது நிரந்தரமான்னு பார்க்கனும். காட்டாறு வந்தினதும்
பிஞ்சுதே வண்டல் அதுதான் வயலுக்கு உரமாகவும் பயிர் உருபடியா வளரவும்
உதவம். இப்படியிருக்கிற உணர்ச்சியை வச்சி நாம எந்த முடிவுக்கும்
வந்துவிடக்கூடாது. இப்படியொரு சான்ஸ் வராதான்னு நான் காத்துகிட்டு
இருந்தவனல்ல. அப்படி காத்துகிட்டு இருந்தவனாட்டம் காட்டிக்கிறதும்
புத்திசாலிதனம் அல்ல. இன்னும் பார்ப்போம் என்றார்.
சென்னையில் திரு.டி.எம்.பார்த்தசாரதி
கழகத்துககாக மாலைமணி இதழ் தொடங்கினார். என்னை(அரங்கண்ணல்) அதில்
வேலை செய்யும்படி கேட்டார். திரு.நெடுஞ்செழியன் அவர்கள், என்னை நீ
காஞ்சிக்கு வந்து பணியாற்று, நான் சென்னை சென்று மாலைமணியைப் பார்த்துக்கொண்டு
குடும்பத்துடன் இருக்கிறேன் என்றார்.
தன் விருப்பத்தை அண்ணாவிடம் தெரிவித்தார். சரி என்று அண்ணா சொல்லவில்லை.
அரங்கண்ணல் இங்கே
இருக்கட்டும் என்றும் அண்ணா சொல்லவில்லை. அதுதான் அண்ணா! நீங்கள்
இருவரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றார் அண்ணா.
மறைந்துவிட்ட நடிக
நண்பர் டி.ஆர்.மகாலிங்கம் காஞ்சிபுரத்துக்கு வந்து ஒரு சவரனை அண்ணாவிடம்
கொடுத்து எனக்கு ஒரு கதை வேண்டுமென்றார். ஆனால் கழகம் வளரவேண்டிய
காலத்தில் கட்டாய நிலை அண்ணாவுக்கு.
தோழர்கள் கே.வி.கே.சாமி,
எஸ்.நீதிமாணிக்கம், எம்.எஸ்.சிவசாமி, தங்கப்பழம் முதலியோர் முன்னின்று
தூத்துக்குடி மாநாட்டு, நாடக ஏற்பாடுகளைச் செய்தன. நாடகத்துக்கு
மூவாலூர் இராமாமிருதம்மையார் தலைமை வகித்தார். அவர்கள் பேசியது இப்போதும்
எதிரொலிக்கிறது. தம்பி! எத்ததையோ ஆண்டுகளாக இருந்து வருகிறேனப்பா
இயக்கத்தில். மோசக்கார மைனர் அல்லது தாசிகளின் மோசவலை போன்ற பல நூல்களை
எழுதியவன் நான். டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியோடு சேர்ந்து, பொட்டு
கட்டும வழக்கத்தை ஒழிக்க காங்கிரஸ் சத்யமூத்தி அய்யர் எவ்வளவோ எதிர்த்தும்,
போராடினேன். பெரியாரோடு இருக்கையில், ஒரு நாள் கூட ஒரு நிகழ்ச்சிக்குத்
தலைமை தாங்கி அறியேன். நான் முதல் முதலாக நடக்கம் கழக நிகழ்ச்சிக்கு,
தலைமை தாங்க வேண்டும் என்று அண்ணா தந்தி கொடுத்ததும், திகைத்துப்போய்விட்டேன்.
காலமெல்லாம் கட்சிகட்சி என்று உழைத்து காடு வா, வா, வீடு போ போ என்கின்ற
தள்ளாத வயதிலிருக்கும் எனக்கு இப்படியொரு பெருமையா? அண்ணாவைத் தவிர
வேறு யாருக்கு இந்த மனம் வரும்.
பெரியாரைப் போல அணணாவும்
ஒரு கருமி என்பார்கள், புரியாதோர். சிக்கனம் அண்ணாவோடு பிறந்தது.
ஆனால் அவர் ஒரு கருமி அல்ல. காரணம் பணத்திற்கு அவர் என்றமே மதிப்பளித்ததில்லை.
பொருளாதார மாணவர் அவர். பணம் ஒரு சாதனம் அவ்வளவுதான் என்ற கருத்தை
கொண்டவர். கட்சிக்கு நிதி தேவை பட்டதா? அதற்கு அவர் கையாண்ட வழிகள்,
இந்திய அரசியலில் இன்றும் எண்ணிப்பார்க்க வேண்டியதாகும். கூட்டத்திற்கு
டிக்கெட் போட்டு வசூலித்தன. வெளியூர் கிளைகள் உறுப்பினர் கட்டணத்தில்
கிளைக்கு இவ்வளவு பங்கு மாவட்டத்துககு இவ்வளவு பங்கு தலைமை நிலையத்துககு
இவ்வளவு பங்கு என்று நிர்ணயிக்கப்பட்டது. நாடகங்கள், மாநாடுகள் மூலம்
நிதி பெறப்பட்டது. பல துளி பெருவெள்ளம். பணக்காரர்களை நம்பும் கட்சியாக
இருக்கக்கூடாது என்பதில் மிகுந்த அக்கரை காட்டினார். . . . ஒருவனின்
தேவைக்கு, ஒரு கட்சி ஆயிற்று என்றால், அக்கட்சி ஒருப்படாது என்று
கருதினார் அண்ணா.
திருவெற்றியூர், சண்முகம்
பிள்ளை ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம் பிறகு திராவிடர் கழகம்,
பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் என்று தன்னை பிணைத்துக்கொண்டவர்.
அவருக்குச் சொந்தமான பவளக்காரத் தெருவிலிருந்த ஓர் கட்டிடத்தை கழகம்
தொடங்கக் கொடுத்தார். பிறகு அண்ணா 208, தங்கசாலை தெருவிலுள்ள கூட்டை
வாடகைக்கு எடுத்து தி.மு.க. தலைமை நிலையத்தை அங்கு மாற்றினார். அதற்கு
அவர் சொன்ன காரணம், என்னதான் திருவெற்றியூர் சண்முகம் நமக்கு வேண்டியவரானாலும்,
என் வீட்டில் தான் கழகம் இருக்கிறது என்று வாய்த் தவறி ஒரு நாள்
அவர் கேட்டுவிட்டால் இவ்வளவு பேர் பட்டபாடு வீணாகிவிடும். நமக்கென்று
குச்சோ, குடிசையோ நம்முடையதாக இருக்கவேண்டும் என்பதாகும். அண்ணாவிடம்
பணக்காரர்கள் எல்லாம் வருவார்கள். ஒதுங்கிப்போவாரே தவிர, அவர்களைத்தான்
ஒதுககியதாக காட்டிக்கொள்ளமாட்டார். நாம் சொன்னால் அண்ணா எல்லாம்
செய்வார் என்று அவர்கள் கருதலாம். ஆனால் அவர் விட்டு கொடுக்காத நிகழ்ச்சிகள்
ஏராளம் உண்டு.
திராவிடநாடு இதழ்
மூலம் எவ்வளவு வருகிறது. எவ்வளவு செலவாகிறது என்பது கூட அவருக்குத்தெரியாது.
அண்ணாவுக்கு வங்கியில் கணக்கு இருந்ததில்லை.....
. . . . சினிமா மூலம்
பேசப்பட்ட முழுத்தொகையைக் கூட காண்பது, கலைஞரின் ரங்கோன் ராதா, ஓர்
இரவு மூலம்தான். மொத்தமாக அவர் சம்பாதித்தது ஒரு லட்சம் தேறும்.
அதையும் அவ்வப்போது தொத்தாவிடம் கொடுத்துவிடுவார். திராவிடநாடு அலுவலகம்
இருந்த வீடு பழுதுபார்க்கப்பட்டது. எதிரே புதிதாக வீடு வாங்கப்பட்டது.
எல்லாம் தொத்தாதான் - இது கூட அண்ணாவுக்குப் பிடிக்கவில்லை.
நான் ஒரு ஏத்தாளன்,
எழுதி சம்பாதித்து வாழ்க்கை நடத்துகிறேன் என்று சொல்லிக்கொள்வதில்
பெருமைப்பட்டுக்கொண்டார். தான் முதலமைச்சரான பிறகு கூட இந்த எழுத்துத்
தொழில் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்.
திராவிடநாடு ஏட்டுக்கு
3000 ரூபாய் ஜாமின் கேட்டு காங்கிரஸ் சர்க்கார் உத்தரவிட்டிருந்தது.
இதற்காகப் பலர் நன்கொடை அனுப்பியிருந்தனர். அப்படி அரசாங்கம் கேட்டது
தவறு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட, கட்டப்பட்ட 3000-த்தையும்
அரசாங்கம் திருபபிக் கொடுத்தது. உடனே திராவிடநாடு இதழ் மூலம், நன்கொடை
அளித்தவர்களுக்கெல்லாம் அந்தப் பணத்தை அண்ணா திருப்பி அனுப்பினார்.
அண்ணா என்.எஸ்.கிருஷ்ணன்
அவர்கள் அனுப்பிய காரை திடீரென்று திருப்பியனுப்பிவிட்டார். காரணம்
ஈ.வெ.கி.சம்பத் அவர்கள் அண்ணாவிடம், என்.எஸ்.கிருஷ்ணன் தங்களைத்
தகாத வார்த்தைகளில் திட்டினார் என்று சொல்ல, அண்ணாவும் மனம் வருந்தி
அவர் கொடுத்த காரை அவருக்கே திருபபியனுப்பிவிட்டார்.
நான் சென்னை சென்று திரு. என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களிடம் நீங்கள்
செய்தது சரியா என்று கேட்க அதற்கு அவர் தம்பி, நான் அண்ணாவை போவிச்சுக்கிட்டது
உண்மை. திட்டினதும் உண்மை. ஆனால் சீங்க சொல்ற படியெல்லாம் திட்டினேனா
என்று கேட்காதீர்கள். என்ன சம்பத்து வந்தப்போ நான், நானாக இல்லை
அவர் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது.
கோவை மாவட்டத்து சுற்றுப்பயணம்
சென்ற அண்ணா திரும்பி வரும்போது ஒரு புதிய இந்துஸ்தான் காரில் வந்திறங்கினார்.
எல்லா செய்திகளையும் கேள்விப்பட்ட, ஜுபிட்ர் பிக்சர்ஸ் சோமுவும்,
திரு. முகைதீனும் கோவையில் ஓர் புதிய இந்துஸ்தான் காரை வாங்கி அண்ணாவிடம்
கொடுத்து அனுப்பிவைத்தார்கள். அதன் எண் எம்.டி.எல். 4758. அண்ணாவின்
தூரத்து உறவினரான சுந்தர்ராசன் என்கின்ற சுந்தா அபர் மறைகிற வரையில்
அதன் ஒட்டுநராக இருந்தார்.
கழகம் துவக்கப்பட்ட
நேரத்தில் ஓரு புது காரும் இருந்ததால், அவர் நடத்திய சுற்றுப்பயணம்
கொஞ்ச நஞ்சமில்லை. காவியணியாத சந்நியாசி என்ற தன்னைப் பற்றி அவர்
கூறிக்கொண்டதும் பொய்யல்ல. திராவிடநாடு இதழை நானும், அண்ணாவின் குடும்பத்தை
ஈழத்தடிகளும் பாத்துக்கொண்டோம். ஒரே வேட்டி சட்டையை பல நாட்களுக்குப்
போட்டுக்கொண்டார் அண்ணா. கழகத் தோழரகள் வீட்டில் போய்த் தங்குவாரே
தவிர டிராவலர்ஸ் பங்களா, ஓட்டல்கள் அவருக்கு ஒத்து வந்ததில்லை. தோழரகளோடு
அளவளாவுவார். எளிமை! பாசம்! இதோடு அவர் வீசிய ஒரு சொல் நாம் எல்லாம்
ஒரு குடும்பம் என்பது. இந்தச் சொல் எவ்வளவு நெருக்கமாக்கியது எங்களை.
ஜீவாநந்தம் போனார்,
சாமி சிதம்பரனார் போனார் கோவை அய்யா முத்து விட்டுவிட்டுப் போனார்.
பொன்னம்பலனாரும் ஓடிவிட்டார். கே.எம்.பாலசுப்பிரமணியம் என்ன ஆனார்?
இராமநாதன் போனாரே என்னை விட்டுவிட்டு, ஒவ்வொருவரும் ஓடியதால் நான்
என்ன ஒழிந்தா போய்விட்டேன்? இநத அண்ணாத்துரை போனால் போகட்டுமே! என்று
அய்யா விடுதலையில் எழுதியிருந்தார். நானும் அண்ணாவும், அண்ணா கூட்டில்
சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம்.
ஏன் அரங்கண்ணல்? இப்படி
ஒவ்வொருத்தனும் போனான், போனான் என்று பெருமையாக எழுதியிருக்கிறாரே!
இருக்கிறவனையெல்லாம் போகச் சொல்லிக்கொண்டே இருப்பதில் என்ன பெருமையிருக்கிறது?
வைத்திருப்பதல்லவா, ஒரு தலைவர் செய்யவேண்டிய காரியம்! நீ மறுபுறம்
யோசி! இப்படிப் போனார்கள் எல்லபாம் போகமல் அய்யாவோடு இருந்திருந்தால்
இயக்கம் இந்நேரம் எப்படி இருந்திருக்கும் என்றார்.
ஒரு நாள் காஞ்சிபுரம்
திராவிடநாடு இதழ் மொட்டை மாடியில் அமர்ந்து நான் திரு.கே.டி.எஸ்.
மணி, திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு.இரா.செழியன், திரு.பா.வாணன் ஆகியோர்
அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அண்ணா ஏன் இப்படி அமைதியாய் இருக்கிறார்,
எந்த முடிவும் எடுக்காமல் (பெரியாரின் திருமணத்துக்குப்பிறகு) என்பது
பற்றி. அண்ணா மொட்டை மாடிக்கு வந்து நாங்கள் பேசுவதை ஓரமாக நின்று
கவனித்துக்கொண்டிருக்கிறார், எங்களுக்குத் தெரியாமல். அவரைப்பற்றி
விவாதிக்கும் நாங்கள் அவர் முது எவ்வளவு ஆழமான அன்பு வைத்திருக்கிறோம்
என்ற, அவருக்கு நன்றாகத் தெரியும். திடீரென்று அண்ணா எங்கள் மத்தியில்
நுழைந்து
அப்போ ஒரு கட்சி ஆரம்பிக்க
சூழ்நிலை வந்தாச்சி அதுதானே உங்கள் எண்ணம். அரங்கண்ணல், பேடைக் கொண்டுவா.
சொல்லுங்கப்பா கட்சிக்கு பெயரை
ஆளுக்கொரு பெயர் சொன்னோம்.
அண்ணா கேட்டார், இந்தப்
பெயர் எப்படியிருக்கு?
எந்தப் பெயர் அண்ணா
திராவிட முன்னேற்றக்
கழகம், னுசயஎனையை ஞசடிபசநளளஎந குநனநசயவடி ரொம்ப நல்லாயிருக்கு எல்லோரும்
ஒரே குரலில் சொன்னோம்.
அதிலும் கொஞ்சம் யோசியுங்க.
திராவிடர் என்பதா திராவிட என்பதா?
ஆமண்ணா! திராவிடர்
என்றால் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடங்கிவிடுவது அதிலும் நாம்
எல்லாம் ரேஷனலிஸ்டுகள். பகுத்தறிவு கொள்கையை யார் ஒத்துகிட்டாலும்
நம்ம கட்சியில் இருக்கலாம். அய்யாவுக்கும், நமக்கும் இந்த விஷயத்தில்
நிச்சயம் டிபரன்ஸ் தெரிஞ்சே ஆகனும். அதனாலே திராவிட என்று நிலப்பகுதியை
குறிக்கிறதுதான் ரொம்ப பொருத்தம் என்று மதியழகன் அந்த யோசனைக்கு
விடையிருத்தார்.
1949-ம் ஆண்டு அண்ணா
கட்சி தொடங்கியதும் திரு.பொன்னப்பர் அந்தக் குடும்பத்தை விட்டு விலகினார்.
அனால் இளங்கோவன், கௌதமன், இராசேந்திரன் என்கின்ற குழந்தைகளையும்
அண்ணாவே ஏற்றுக்கொண்டார். இந்த வகையில் அண்ணாவின் துணைவியார் இராணி
அம்மையாரின் உள்ளம் புடம் போட்டத் தங்கம்.
(இராம. அரங்கண்ணல்)
|