அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி: 36


(1967-ல் அறிஞர் அண்ணா அவர்களின் அன்னையாரைக்
காஞ்சிபுரத்தில் பேட்டி கண்ட போது கூறிய செய்தி)

அண்ணாவுக்கு ரவா உப்புமாப் பிடிக்கும்; உளுத்தம் பருப்பு வடையைவிருப்பமாச் சாபிடும்!
வெந்நீரில்தான் குளிக்கம்; எண்ணெய் தேய்த்து குளிக்கிறதுன்னா ஒரே அடந்தான்!

சின்ன வயசிலே பள்ளிக்கூடம் போறப்போ, நெத்தியிலே நாமம் போட்டுக்கிட்டுத்தான் போகும்!
சில சமயம், முஸ்லிம் போல தொப்பியெல்லாம் வச்சு டிரஸ் பண்ணி அனுப்புவோம்; முஸ்லிம் பெரியவங்கல்லாம் அதைப் பார்த்து, வழியிலே தூக்கி வச்சுக்கிட்டு பொஞ்சுவாங்க!

அஞ்சு ஆறு வயசு நடக்கிறப்போ, அதுக்குப் பெண் குழந்தை வேஷம் போட்டு அழுகு பார்ப்போம்!

படுக்கப் போறப்போ, பாட்டு வேணும்; இல்லேன்னா அதுக்கு தூக்கம வராது!

சினிமாவுக்கு அவ்வளவாகப் போகாது; தெருக்கூத்துன்னா அதுக்கு அவ்வளவு இஷ்டம்; ஒரு நாள் கூத்துப் பாத்திட்டு வந்து, இரணியன் வேஷம் போட்டுக்கிட்டு, அண்ட ரெண்டம் கதி கலங்க வந்தேன்னு பாடி, ஆடிச்சு பாருங்க. வேஷம் கட்டுறவுங்களே ஆச்சரியப்படணும். அப்படி ஆடிச்சு!

அவுங்க தொத்தா, அண்ணா மாஜிஸ்திரேட்டா வரணும் - கலெக்டரா வரணும்னு சொல்லிக்கிட்டே இருக்கும்! இது போயி, அரசியலிலே நுழையும்னு யாரு கண்டா?

அண்ணா பேரைச் சொன்னா இன்னக்கி எவ்வளவு கூட்டம் வருது? சின்னப் பிள்ளையிலே அதுக்குக் கூட்டத்தைக் கண்டா பயம்! 12 வயசிலே, காலு நோவுதுன்னு சொல்லிச்சு; திருத்தணி முருகனுக்குப் பிரார்த்தனை பணிணிக்கிட்டேன்; கோலிலுக்குக் கூட்டிக்கினு போனா, கூட்டத்தைக் கண்டு, உள்ளே வரமாட்டேன்னு சொல்லி வெளியே உட்காந்திருச்சி!

அண்ணாவை அஞ்சு வயசிலே பள்ளிக்கூடத்திலே சேர்த்தோம்; அப்போல்லாம் பள்ளிக்கூடத்திலே சேர்க்கிறது பெரிய வைபவம் மாதிரி நடக்கும்; அண்ணாவுக்குக் கடுக்கன் போட்டு பொட்டு வச்சு சிங்காரிச்சு டபுள் குதிரை பூட்டிய சாரட்லே வாத்தியாரையும் உட்காரவச்சு மேளதாளத்தோட ஊர்பலமா கூட்டிக்கிணு போய்ச் சேர்த்தோம்!

முதல்லே, நெல்லு மேலதான் எழுதணும்; அப்ப அவ்வளவு அமக்களம்; பச்சையப்பா பள்ளிக்கூடத்திலேதான் சேர்த்தோம். பள்ளிக்கூடத்துக்கு, வண்டியிலேயும் போகும் சைக்கிளும் ஓட்டும்.

பள்ளிக்கூடம் போறப்போ, வேட்டி கட்டவே தெரியாது தொத்தாதான் கட்டிவிடும்.

மருந்து சாப்பிடுறதுன்னா பிடிவாதம் செய்யும்; மருந்து குடிக்கவே மாட்டாது!

அண்ணாவுக்குக் கோபம் வந்திச்சின்னா, ஒண்ணும் பேசாது - பெஞ்சுக்குக் கீழே போய் பூந்துக்கும்; கூப்பிட்டா வராது; அப்படியே தூங்கிடும்; அவ்வளவுதான் அதோட கோபம்!

ஆனா, வீட்டிலே சும்மா இருக்காது - எதையாவது படிச்சிக்கிட்டே இருக்கும்; பகோடா, ஓமப்போடி வாங்கிவந்த பேப்பரைக் கீழே போட்டா அதைக் கூட எடுத்துப் படிக்கும்!

எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணினதுக்கு அப்புறம், இது நால்லாப் படிக்குதே, இன்னும் படிக்கடடுமேன்னு அவுங்க தொத்தா கூட்டிக்கிணு போயி, சென்னையிலே காலேஜிலே படிக்க வச்சாங்க! அண்ணா இங்கிலீஷ் படிச்சுக்கிட்டு இருக்கும்; டேய், சரியாய்ப் படின்னு தொத்தா சும்மாவாவது அதட்டுவாங்க; தொத்தாவுக்கு இங்கிலீஷ் தெரியாது; அதுக்காக, தொத்தா வார்த்தையை அலட்சியப் படுத்தாம, நிதானமாய்ப் படிக்கும்; இது, அண்ணாவுடன் கூடப் பிறந்த பண்பு!

அண்ணாவுக்கு 23 வயதிலே திருமணம் நடந்திச்சு; கல்யாணத்துக்குமுன், அண்ணா, பெண்ணைப் பார்க்கலே; நாங்க பாத்திட்டு வந்து, அழகா இருக்குன்னு சொன்னோம், ஒத்துக்கிடுச்சு! இந்தக் காலம் மாதிரி அப்பெல்லாம் பெண்ணை சுலபமாப் பாத்திர முடியாது!

அண்ணா ரொம்ப நாளா சைவமா இருந்திச்சு; பெரியார் கூடக் கூட்டங்களுக்குப் போறப்பத்தான் சைவத்தை விட்டிருச்சி; பெரியார் கூட நாகூருக்குப் போயிருந்தப்போ, சாப்பாட்டுக்குப் பதிலா மீனை மட்டும் கொண்டு வந்து வச்சாங்களாம்; இது வேண்டா மின்னிருக்கு; பெரியாரு, சாப்பிடு, சாப்பிடுன்னு வம்பு பண்ணினாராம்; வேறு வழியில்லாமே சாப்பிட்டிருக்கு; சாப்பிட்டுட்டு, சைவமா இருந்தவன் இப்போ அசைவமா மாறிட்டேன் அப்படின்னு லெட்டர் எழுதிச்சு!

அண்ணா எழுதின நாடகங்களைப் பார்த்திருக்கேன்; அதிலே வேலைக்காரி நாடகம்தான் எனக்குப் பிடிக்கும்! வீட்டுக்கு வந்தா, எங்களோட பேசறதுக்கு எங்கே நேரமிருந்துச்சு? எப்பவாவது ரொம்ப முக்கிய விஷயம்ன்னு சொல்லும்!

ஒரு சமயம் தீக்குளிச்ச சின்னசாமியைப் பத்தி சொல்லிக் கண் கலங்கிச்சு!

இன்னொரு சமயம், வார்னிஷ் குடிச்சிட்டுச் செத்தவங்களைப் பார்த்துடடு வந்து, யாரு கூடவும் பேசல்லே! ஒரு நாளு முழுதும் சாப்பிடாமே வருததமா இருந்திச்சு! அதுக்கு ஒரு கஷ்டமின்னா யாரு கூடவும் பேசாது!

அண்ணா மந்திரியானதுக்கு மறு நாளு சாயங்காலம் வந்து, உனக்கு சேதி தெரியுமாம்மான்னு சொல்லிவிட்டு என் கால்லே விருந்து கும்பிட்டிச்சு! தொத்தா இல்லாததுதான் குறை; இருந்தா, ரொம்ப சந்தோஷப்பட்டிருக்கும்!

மந்திரியானதுக்குப் பின்னாலே, அண்ணா, வீட்டுக்கு வர்றது ரொம்ப அரிதாப் போச்சு!
அது மந்திரியானதுக்குப் பிறகு ஒரு மாற்றம் தெரிஞ்சுது; தினசரி சேவ் பண்ணிக்கிட்டது, குளிச்சது, உடுப்பு மாத்திக்கிட்டது!
(19.09.1976 - கழகக்குரல்)

சத்தியம் செய்து கொடுத்துவிட்டு 21 ஆண்டுகள் சைவமாக இருந்தேன்.
- அறிஞர் அண்ணா
நான் இரண்டாவது பாரம் (ஏழாவது) ஒரு பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். அவ்வகுப்பில் நானும் ஒரு நண்பரும் தாள் பிராமணரல்லாதார். ஏனையோல் பிராமணர்கள். எனக்கு அப்பொழுது ஆங்கில ஆசிரியராயிருந்தவர் வெந்கட்ராமய்யர். அவர் எங்களுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கும்போது சுயஅ. ழுடியவ என்ற பதங்களுக்குப் பொருள் சொல்லுவார். சுயஅ என்றால் செம்மறியாடு, ழுடியவ என்றால் வெள்ளாடு என்பதோடு நிற்கமாட்டார். சுயஅ என்னும் என்னை ஒரு முறை பார்ப்பார். மாணவர்களும் இதைக் கண்டு எங்களைத் திரும்பிப் பார்ப்பார்கள்.

நான் இதைக் கூறவந்ததிலிருந்து அவரைக் குற்றம் கூறும் நோக்கமுடையவன் என்று நினைக்கவேண்டாம். சீடன் ஆசானுக்கு அளிக்கவேண்டிய மரியாதை முதலியவற்றினின்றும் தவறிவிட்டதாக நினைக்கவேண்டாம். இதைச் சொல்வதின் கருத்து அந்த நிலையில்கூட அந்த ஆசிரியர் மனதில் சாதியின் உயர்வு தாழ்வு உணர்ச்சி எவ்வளவு தூரம் ஊறி இருந்தது என்பதைக் குறிக்கவே.

நிற்க Ram என்ற என்னைப் பார்ப்பார். நாங்கள் செம்மறி ஆடகள் போல் இருக்கிறோம் என்பதற்காகவல்ல. Ram, Goat சாப்பிடுவார்கள் இந்தக் கிளாசில் யாராவது இருக்கிறார்களா என்று கேட்பார். நானும் எனது நண்பரும் எழுந்து நிற்போம். பையன்கள் எங்களை நோக்கிச் சிரிப்பார்கள். ஆடடுக்கறி சாப்பிடுவது நமக்குத்தான் வழக்கம். அவ்வளவு ஆபாசமானது என்று அவர்கள் கருதினார்கள் என்றுதானே தெரிகிறது.

3-ஆம் பாரம் வந்தபோது இனி மாமிசமே உண்பதில்லை என்று என் ஆசிரியரிடம் சத்தியம் செய்துகொடுத்தேன். அதன்படி 21 ஆண்டுகளாக நான் மாமிசம் உண்ணாமலிருந்தேன். ஆனால் மூன்ற வருடங்களக்கு முன்பு நான் டில்லிக்குச் சென்றுகொண்டிருந்த வழியின் ஒரு ஊரில் சாயி நிலையத்தில் உள்ள க்ஷரககநவ மாமிச உணவைத் தவிர வேறு நல்ல உணவு இல்லை என்பதைக் கண்டு அதை சாப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கண்டு அதையே தின்றேன். அதிலிருந்து 21 ஆண்டுகள் சாப்பிடாமலிருந்ததை வட்டியும் முதலுமாகச் சேர்த்துத் தின்றுவிட்டேன்.
(இளந்தமிழன்)

தூக்கமிலா இரவுகள்! அடிக்கடி சளித்தொல்லை! காய்ச்சல்! என் சங்கடங்களைப் புரிந்துகொண்ட அண்ணா ஒரு நாள் என்னைக் கேட்டார்கள். ஏன் அரங்கண்ணல்! யாரையாவது துணைக்கு வைத்துக்கொள்ளேன்? அவசியம் எனக்கு ஒரு துணை வேண்டும் எகிற நிலைமை அப்போது. எழுத்தாள நண்பர் கே.ஜி.இராதாமணாளன் அவர்களைத்தான் திராவிட நாட்டுககுக் கொண்டு வர அண்ணா விரும்பினார்கள். மணமாகி நிரந்தரமான ஒரு பணியில் அவர் இருப்பதாகக் கேள்விப்பட்டு அந்த யோசனையைக் கைவிட்டார்கள். திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகயிருந்த பி.சி.கணேசன் எப்படிப்பா! நல் ஆங்கிலமும் எழுதறான், என்றார்கள், ஒரு நாள். எனக்கு அவரைத் தெரியாதே! என்றேன். அப்போது எனக்குத் தெரியாது அவரை! இப்படி ஆள் தேடிக்கொண்டிருககும் கட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த மாணவர் போராட்டம் தொடர்பாக - அப்போது அங்கு துணை வேந்தராயிருந்த மணவாள இராமானுஜம் அவர்களைப் போய்ப் பார்த்துவிட்டு வரச்சொன்னார்கள். அந்த மாணவப் போராட்டத்தில் நமது மாணவர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தார்க.ள. சிதம்பரம் போனேன்! தோழர தில்லை வில்லாளன்தான் துணை! அவரிடம் திராவிடநாடு அழைக்கிறது என்றேன். என் விருப்பத்தை அவருடைய அப்பா அம்மாவிடம் சொன்னேன். காஞ்சி திரும்பியதும் அண்ணாவிடம் சொன்னேன். கடிதம் போடு, என்றார். எனக்கு ஒரு நல்ல துணையாகத் தாழர் தில்லைவில்லாளன் வந்து சேர்ந்தார். காஞ்சிக்கு.

என்னையும் வில்லாளனையும் இரட்டையர் என்று கழகத் தோழர்கள் அழைக்குமளவுக்கு இருவரும காஞ்சியிலிருந்தோம். என்னுடைய காஞ்சிபுரம் வாசம் எட்டரை ஆண்டுகள் என்றால் அவர் இருந்தது சுமார் மூன்று ஆண்டுகள் தான்! அவர் வந்த பிறகு எனக்கு மூச்சு விட நேரம் கிடைத்தது. அண்ணாவின் கடிதங்களைப் பார்த்தல், பதில் எழுதுதல், அவருடனேயே இருத்தல், எங்கே போனாலும் வெளியூர் உட்பட கூடவே போதல், மணிப்பர்ஸ் ஆக இருத்தல், நேரம் கிடைக்கும்போது எழுதுதல் என்று தன்னுடைய வேலை முறையை அமைத்துக் கொண்டார். நல்ல கற்பனைமிக்க அழுத்தாளராதலால் அவர் முழு நேரத்தையும் எழுத்துக்குப் பயன்படுத்துவார் என்று எதிர்பார்த்தேன். என்னென் வேலைகளை அண்ணன் பூவாளூர் பொன்னம்பலனால் தலையில் தூக்கிப் போட்டுககொண்டு செய்வாரோ அப்படியானால் வில்லாளன்! அண்ணாவுடன் 24 மணி நேரமும் இருப்பதைவிட வேறென்ன வேண்டும் என்கிற பேரார்வம் என்றாலும் என்னப் போல அவருக்கும் திராவிடநாடு ஆஃபீஸ்தான் தங்குமிடம். வந்த சில தினங்களுக்கெல்லாம், ஏன நாம் இங்கேயே காவல் காத்துக்கொண்டிருக்க வேண்டும். தனியாக ஒரு ரூம் எடுத்துககொண்டு ஈருந்தால் என்ன? என்றால். எனக்கும் சரி என்று பட்டது. இரண்டு பேரும் அண்ணாவிடம் சொன்னோம். அவரும், நாங்கள் பார்த்த ரூம்களுக்கெல்லாம் வந்தார். நாலைந்து நாட்கள் அலைந்த பிறகு அந்த யோசனை கைவிடப்பட்டது. திராவிட நாடு கூட்டுக்குள் வில்லாளன் வந்த கொஞ்ச நாள்களுக்கெல்லாம் கொண்டுவந்து சேர்க்கப்பட்டவர் மதிப்பிற்குரிய என். வேதரத்னம் அவர்களாவார். சர்.ஏ.இராமசாமி முதலியார், சர்.ஏ.இலட்சுமணசாமி முதலியார் ஆகியோரின் ஆதரவில் டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் வெறியோடு நடத்தி மூடிவிட்ட லிபரேட்டர் என்கிற ஆங்கிலத் தினசரியில் பொறுப்பாசிரியராக இருந்தவர். ஆங்கிலத்தில் நன்றாக எழுதக் கூடியவர். இரண்டாவது உலகயுத்தம் முடிந்ததும வென்ற நாடுகள் அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோவில் கூனி. அந்தக் கூட்டத்தில்தான் உலக சமாதானத்துக்கான கபையாக ஐ.நா.சபை உருவெடுத்தது. இந்தியாவுக்கு அப்போது சுதந்திரம் கிக்காததால் இந்தியாவின் பிரதிநிதியாக பிரிஸ்கோ மாநாட்டுக்கு சர்.ஏ.இராமசாமி முதலியார் அனுப்பப்பட்டார். அங்கே அவர் ஆற்றிய உரை கண்டு ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தலைவர்களே வியந்தனர்! அந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர் வேதரத்னம். அதனால் எல்லோருக்கும் அவரிடம் மரியாதை உண்டு. ஆங்கிலத்தில் கழகத்தைப் பற்றி ஒரு நூல் வெளியிடவேண்டும் என்பது அண்ணாவின் ஆசை! அந்தப் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. எழுதுவார், கசக்கிப் போடுவார், எழுதுவார், கசக்கிப்போடுவார். எதற்கும் வில்லாளனையே நாடுவார். இப்படியே ஓராண்டு இருந்துவிடடடு ஒரே ஒரு ஆங்கில நூல் ஹ யீடநய கயீச ருனேநசளவயனேபே தயாரித்து அளித்துவிட்டுப் போய்விட்டார். இப்படியொரு நூலை ஒரே நாளில் அண்ணா எழுதியிருக்க முடியும் என்றாலும் பல நல்லறிர்கள் பெரியார் இல்லத்தில் கூடியிருந்து கொள்கை வளர்த்தது போல திராவிட நாட்டிலும் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்த நல்லறிஞர்களில் ஒருவராக ஓரிரு மாதம் எங்களோடிருந்த தோழர் ஈ.வெ.கி.சம்பத்தும் எழுத்தாளராக முயன்றதுண்டு. வேலைக்காரி படம் எடுத்த, 4758 காரை அண்ணாவுக்கு அளித்த ஜுபிட்டர் பிக்சர்சார் அண்ணாவைக் கொண்டு எப்படியும் ஒரு படம் தயாரித்துககொண்டு வரவேண்டும் என்று முயற்சித்தார்கள். ஏ.வி.எம்.செட்டியார் அவர்களுக்கு ஓர் இரவு படம் கிடைத்தது ஷுட்டிங் நடந்து கொண்டிருநததால் அவர்கள் ஆர்வம் இன்னம் பெருகிற்று. அண்ணா விஞ்ஞானி என்கிற பெயரில் ஒரு கதை சொன்னார். இரண்டு அண்ணன் தம்பிகள். ஒருவன் அரசியல் மூலம் பெயர் பெற்று நாட்டை ஆளத்துடிப்பவன்; இன்னொருவன் அறிவாராய்ச்சி மூலம் கொஞ்ச நிலத்தில் எவ்வளவு விளைவிக்கலாம், எவ்வளவு பூக்களை பூக்க வைக்கலாம் என்கிற ஆர்வம் கொண்ட விஞ்ஙானி. அணுவைக் கொண்டு குண்டு கண்டு பிடிக்கச் சொல்லி அரசியல்வாதி விஞ்ஞனியைப் பயன்படுத்த அடக்குமளைகள் மூலம் மயற்சிக்கிறான். இடையில் காதல்! இப்படிப் போதும் அந்தக் கதை! தமிழில் மட்டுமில்லையண்ணா; இந்தக் கதையை இங்கிலீஷிலும் எடுககபோகிறோம் என்றார் ஜுவிட்டர் சோமு. அதற்கான அண்ணாவின் தமி வசனங்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்காகப் பெருங்கவிஞர் ஹரீந்திர நாத் சட்டோபாத்யாயா அவர்களை ரூ.5000 மாதச் சம்பளத்திலும் அமர்த்திவிட்டார்கள். பேர் பெற்ற கவியரசியும், காங்கிரஸ் பெருந்தலைவரிகளில் ஒருவராக கருதப் பட்டவருமான கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்களின் தம்பி, இவர். ஆங்கிலத்தில் இவர் எழுதிய கவிதைகள் நெஞ்சையள்ளும்! முத்துக்களே உங்களைப் பார்க்கிறேன். உங்கள் அழுகு எனக்குத் தென்படவில்லை. எங்களை எடுக்கப்டு பட்டானே அந்தத் தொழிலாளித் தோழனின் வியர்வை முத்துதான் என் கண்களில் படுகிறது. இரத்தினங்களே! உங்களைப் பார்க்கும்போது என் பாட்டாளித் தோழன் பாடுபடும போது வடிக்கும் இரத்தத்தின் வர்ணம் தான் நினைவுக்கு வருகிறது என் மனதில் என்று நாம் நடத்திய மே தின விழாவில் கலந்துகொண்டு சென்னையில் அவர் பேசியதையும் அந்த அழுகு கொஞ்சமும் குன்றாமல் குறையாமல் தோழர் ஈ.வெ.கி. சம்பத் தமிழில் கம்பீரமாக பொழிபெயர்த்த சேர்த்தியும் இப்போதும் நினைவுக்கு அவருகிறது. கவிஞர் ஹரீந்திரநாத்துக்கம் அண்ணாவுக்கும் பாலமாயிருந்து அந்தப் படத்தின் உதவியாளர் போலக் கொஞ்ச காலம் இருந்தார், தோழர் சம்பத். காஞ்சிவுரத்தில் தங்கியிருந்த அந்த நாட்களில் எங்களோடு சேர்ந்து எழுதவும் முயன்றார். அவர் ஆரம்பித்து நடத்திய புதுவாழ்வு ஏடு, சில மாதங்கள் நடந்து பிறகு மூடப்பட்டுவிட்டது. தோழர் வேதரத்னம் போல எழுதுவார், கசக்குவார், எறிவார்! எப்படிய்யா நீங்கள் எல்லாம் எழுதுறீங்க என்பார். இந்தச் சமயம் என்னை, ஒரு நூல் எழுதித் தரச்சொல்லித் திருச்சி திராவிடப் பண்ணை முத்துக்கிருஷ்ணன் காஞ்சிக்கு வந்து காம்ப் போட்டிருந்தார். இரஷியாவில் மாபெரும் புரட்சிக்கு ஒரு காரணமான மதகுரு ரஸ்புடீன் பற்றி ஒரே நாளில் ஒரு நூல் எழுதிக் கொடுத்தேன். எனக்கு மட்டும் இப்படி ஏன் எழுத வரமாட்டேங்குது? என்பதுதான் சம்பத்தின் கேள்வியாக இருந்தது. இளம்பிராயத்தில் ஏற்பட்டுவிட்ட வடு, மனிதன் வளர்ந்த பிறகும், அதைக் கொஞ்சம் சிராய்ததால் இரத்தம் சொட்டுவதாக இருக்கும் என்று பிரபல மராத்திய எழுத்தாளர் காண்டேகரின் உவமை கவனத்திற்கு வருகிறது. என்மீது, கலைஞர் மீது இப்படிப்பட்டவர்கள் மீது பிற்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட ஆழமான அதிருபதிக்கு இதுவும் ஒரு காரணமோ என்னவோ? விஞ்ஞானி முயற்சி முளையிலேயே கருகிற்று. சொர்க்க வாசல் தயாரிக்கம் கட்டம் மலர்ந்தது. இப்போது. மு.க. சேலத்தை விட்டு, சென்னை வந்து பராசக்தி, மணமகள், மனோகரா போன்ற படங்களுக்குத் திசைக்கதை வசனம் எழுதலானார். தோழர் சம்பத்தும் சினிமாத் துறையில் ஈடுபட ஆசைப்பட்டு, சொர்க்கவாசல் பட டைரக்டர் நண்பர். ஏ.காசிலிங்கம் அவர்களுக்க உதவியாளராகப் போய்க் கொஞ்சகாலம் நின்று பார்த்தார். காஞ்சிபுரத்தில் வில்லாளன் அவர்களுக்குப் பிறகு கொண்டு வரப்பட்டவர் 1957 திருச்சியைச் சார்ந்த தோழர் எம்.எஸ்.வெங்கடாசலம் என்பவராவார். ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ.பட்டம் பெற்ற நல்ல ஆங்கில எழுத்தாளர். அண்ணா தொடங்கிய ழடிஅநடயனே என்கிற ஆங்கில வார ஏட்டின் துணை ஆசிரியர். ரொம்பச்சாது. என்னுடனேயே இருப்பார். இந்த ஆங்கில வார ஏடும துதன் முதலில் திராவிடநாடு அச்சகத்தில்தான் அச்சடிக்கப்பட்டது. அண்ணா சட்டமன்ற உறுப்பினரானதும் இந்த ஏடு, சென்னைக்கு மாற்றப்பட்டது. அப்போது உதவியாளராகக் காஞ்சி வீட்டுக்கு வந்து கொஞ்ச காலம் இருந்தவர் தோழர் கிள்ளிவளவன் (டி.எஸ்.திருவேங்கடம்) ஆவார். பழைய தோழர், இவர்! தோழர் ஏ.எஸ். வேணுவைப் போன்றவர்! நீதிக்கட்சியின் தலைவரான தலைவணங்காச் சிங்கம் பி.பாலசுப்ரிமணியம் அவர்களிடம் நீங்காப் பற்றும் அன்பும் பொண்ட தோழர் - சீடர்! தி.மு.க.விலிருந்து பிறகு நெடுமாறன் ஆரம்பித்த தமிழ்நாடு காந்தி காமராஜ் தேசீய காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் உழைத்தவர். சிறந்த பண்பாளர். இப்படி வந்தவர்களோடு எல்லாம் காஞ்சியில் நானிருந்தேன்.
(இராம. அரங்கண்ணல் - நினைவுகள்.)

1944ம் ஆண்டில்தான் சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து பெரியாரை இறக்கிவிட நீதிக்கட்சி சீமான்களும், கோமான்களும் முன்றார்கள். அப்படி நடைபெற்றுவிடாமல் பெரியாரின் தலைமையைக் காப்பாற்ற அண்ணா நாடெங்கும் சூராவளி பிரயாணம் செய்து கட்சித் தொண்டர்களின் ஆதரவைப் பெருக்கினார் . . .

.. . . . 35 மணிநேர விவாதத்திற்கு அந்தத் தீர்மானம் (நீதிக்கட்சியை திராவிடர்கழகம் என்று மாற்றும் தீர்மானம் - அண்ணாதுரை தீர்மானம்) உள்ளாகியது. ஆய்வுக்குழு அண்ணாவின் தீர்மானத்தை வன்மையாக எதிர்த்து, பின்னர் பொதுமாநாட்டினில் அண்ணாவின் தீர்மானத்தை ஆதரித்தும, எதிர்த்தும் கருத்துரைகள் வழங்கப்பட்டு, பிறகு இறுதியில் அண்ணா விளக்கவுரை வழங்கினார். அதனைக் கட்சித் தோழர்களும், பொதுமக்களும் தங்கள் ஆர்வம் மிகுந்த கையொலிகளால் வரவேற்றவாறு இருந்தனர். இதனைக் கண்ட நீதிக்கட்சி பெரிய மனிதர்கள் ஒவ்வொருவராக மாநாட்டை விட்டு வெளியேறினார்கள். இறுதியில் அண்ணா தீர்மானம், இடி முழக்கமென கையொலிகளுக்கிடையே நிறைவேறியது. பெரியார் தலமையை அண்ணா காப்பாற்றியது மட்டுமல்ல. நீதிக்கட்சிக்கு ஒரு புதிய திருப்பத்தையும் தந்தார்.
(கலைஞர் கருணாநிதி)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai