அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி: 31

1937-ல் அருணகிரிநாதர் அவர்கள் சொன்னபடி நான் வலிபனாக இருந்தேன். என்னோடு இன்றைய தினம் வாலிபர்களாக உள்ளவர்களில் பல வேர் அன்று தத்தி இன்றைய தினம், 1937-லே கிடைத்திராத ஆதரவு நமக்குக் கிடைத்திருக்கிறது. 37-லே கிடைத்திராத பெருந் துணைகள் 57-ல் கிடைத்திருக்கின்றன. 37-ல் வாலிபனாக இருந்த அண்ணாதுரை 57-ல் நடுத்தர வயதினனாக ஆகியிருக்கின்றான். அன்று பிள்ளையாயிருந்தவர்கள் இன்று வாலிபர்களாகியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட அளபுக்கு தனிப்பட்ட ஆட்கள் வளர்ந்திருப்பது மாத்திரம் அல்ல; தமிழருடைய உணர்ச்சியும் அந்த அளவுக்கு நன்றாக வளர்ந்திருக்கின்றது. தமிழர் வளர்ந்திருப்பது தெரிந்தும் வடநாட்டார் இன்னையத்தினம் வம்புக்கு வருகிறார்கள் என்றால் உங்களையும் என்னையும் நம்மைப் படைத்த தமிழ்நாட்டையும், தமிழ் நாட்டுக்கு உயிர் நாடியாக இருக்கின்ற தமிழ் மொழியையும் துச்சமென்று அவர்கள் கருதுகின்றார்கள். நீங்கள் எவ்வளவு வளர்ந்தாலென்ன? கவலையில்லை; 2 லட்சம் உறுப்பினர்களா? இருக்கட்டுமே; நாள் தவறாமல் பொதுக் கூட்டங்களா? கேள்விப்படுகிறோம்; உங்களுடைய இயக்கத்திலே பத்திரிகைகள் பல இருக்கின்றனவா? இருக்கட்டும - இருக்கட்டும்; உங்கள் இயக்கத்திலே அழகாக பலர் பேசுகின்றார்களா? பேசட்டும் பேசட்டும்; ஆனால் எங்கள் ஆதிக்கம் நிறைவேறும் என்று அங்கே உள்ளவர்கள் சொல்லுகிறார்கள்.

இங்கே நாம் ஆயிரமாயிரமாகக் கூடியிருக்கிறோம். நாம் வளர்ச்சியடைந்திருக்கிற இந்த நேரத்திலும் நம்மை உண்மையிலேயே அடக்கி ஆளவேண்டுமென்று கருதுகின்றவர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடியர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் இருக்கின்ற திக்குநோக்கி நீங்கள் தமிழ்ப்பார்வைக் காட்டவேண்டும். தமிழ்ப்பார்வையிலே குளிர்ச்சியும் உண்டு. கோபக்கனலும் உண்டு. தமிழன் தன்னுடைய நாட்டையே அர்ப்பணிப்பான், தோழன் என்று வருபவனுக்குத் தமிழன், தன்னுடைய தாளை மதித்தவனை அவனுடைய தலைதாளிலே படுகின்ற வரை ஓயமாட்டான் என்பதை நம்முடைய இலக்கியங்களெல்லாம் எடுத்துச் சொல்லுகின்றன.

எந்த இந்தி மொழியைத் தமிழகத்திலே இன்றையத் தினம் புகுத்தவேண்டும் - திணிக்க வேண்டும் - புகுத்தலாம் - திணிக்கலாம்; புகுத்திவிட்டோம் - திணித்துவிட்டோம் என்று எண்ணத்தக்க அளவுக்கு இன்றைய தினம் வடக்கேயுள்ளவர்கள் இறுமாந்து இருக்கின்றார்களோ, அவர்களெல்லாம் காடுகளிலே சுற்றிக் கொண்டும், குகைகளிலே வாழ்ந்துகொண்டும் மொழியறியாத காரணத்தாலே வாழ்க்கை வழி தெரியாமல் வழுகிக் வீழ்ந்து கொண்டும் இருந்த நேரத்தில், இங்கே அகத்தையும் புறத்தையும் நம்முடைய பெரும் புலவர்கள் இயற்றினார்கள். முடியுடை வேந்தர்கள் இருந்த காலமும், அவர்கள் காலத்திலே இயற்றப்பட்ட பெரும் இலக்கியங்களும், அந்த நாளிலே வடநாட்டிலே வங்காளமானாலும் சரி, பாஞ்சாலமானாலும் சரி, பண்டித ஜவஹர்லால் நேருவினுடைய தாயகமாகப் போற்றப்படுகின்ற காஷ்மீர் ஆனாலும் சரி நான் வடக்கே இருக்கின்ற வரலாற்று ஆசிரியர்களைக் கேட்கின்றேன் - அந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே உங்களுக்கு ஏது மொழி? உங்களுக்கு ஏது இலக்கணம்? உங்களுக்கு ஏது இலக்கியம்? உங்களுடைய மொழி எந்த நாட்டிலே பேசப்பட்டது? ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே தமிழ் வணிபன் - தமிழ் வணிகன், நோம் நாட்டுக் கடை வீதியிலே பேசினானே! ஈராயிரம் ஆண்டுக்காலத்துக்கு முன்னால் யவனத்திலல்லவா சென்று வியாபாரம் செய்தான்! ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கு எங்கள் தமிழ்மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்ததே.

இன்றைய மாநாட்டிலே காலை முதற்கொண்டு நடைபெற்று வருகின்ற நிகழ்ச்சிகளை நீங்களெல்லாரும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தீர்கள். 1937-ம் ஆண்டிலே - அந்த நாட்களிலே இந்தி எதிர்ப்பு இயக்கத்திலே ஈடுபட்டிருந்த என் போன்றவர்களுடைய மனமெல்லாம் 1937-ம் ஆண்டு காலத்திற்க இழுத்துச் செல்லப்பட்டது; எங்களுடைய மனக்கண் முன்னாலே தொண்டை மண்டலம் பள்ளிக்கூடம் காட்சியளித்தது. இந்து தியலாஜிகல் பள்ளிக்கூடம் காட்சியளித்தது; சிறிச்சாலைகளிலே தரப்பட்ட மண் கலயங்களும் காட்சியளித்தன; எங்களுடைய மனக்கண் முன்னாலே அந்த நேரத்தில் மூன்ற துறவுகள், தி.மு.கழகம் துவக்கப்படாத காலத்திலேயே - இந்தி எதிர்ப்பு இயக்கத்தைத் திறம்பட நடத்துவதற்கு பக்கத்தில் நின்றார்கள். அவர்களிலே தலைசிறந்தவராக நம்முடைய நண்பர் அருணகிரி அடிகள் அந்த நேரத்தில் நின்றார்கள். அவர்களுடைய வெண்கலக் குரல் முதுமையின் காரணமாக இன்றையதினம் கொஞ்சம் தட்டுப்பட்டிருக்கின்றது. அவருடைய வீர உணர்ச்சி முதுமையின் காரணமாகக் குறைந்துவிடவுமில்லை; குலைந்துவிடவுமில்லை.

அவருடைய சொல்லையும், அந்தச் சொல்லோடு கலந்து வந்த வீர முழக்கத்தையும், வீர முழக்கத்துக்குத் துணை நின்ற வீரப் பாடல்களையும் சென்னை நகரத்திலே எல்லா மூலை முடுக்குகளிலேயும் கேட்டிருக்கிறார்கள். என்ன மடமை, இந்த இராசகோபாலாச்சாரிக்கு என்று இந்த தெருக்கோடியிலே இவர் பாடல்களைக் கிளப்பினால் மற தெருக்கோடியிலே உள்ளவர்கள் வருவார்கள். அப்பொழுதுதெல்லாம் ஒலிபெருக்கிகள் இல்லாத காலம்.

ஒலிபெருக்கிகள் அபூர்வமாக வைக்கப்பட்ட காலத்தில், தெருத்தெருவாக அந்தக் கூட்டங்களை நடத்துவதற்கு அரணகிரி அடிகள் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்ட நேரத்தில், அவர்கள் ஒரு மடத்திலே மிக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த மடத்திலே அவர்களுக்கு ஒரு குறையுமில்லை. அவரை அண்டிப் பிழைப்பவர்களும், அவரை அடிவருடக்கூடியவர்களும், அவரை அடிகளே என்று அன்புடன் அழைக்கக் கூடியவர்களும், அவருடைய மதவுரைகளைக் கேட்டு மடத்திற்கு வெளிப்புறத்திலே இருந்தும் தமிழுக்க ஒரு ஊறு நேரிடுகிறது - தமிழ் மொழிக்கு இழுக்கு வருகின்றது என்று கேள்வுப்பட்டவுடன் மடத்திலே இருக்கின்ற காரியத்தைப் பற்றியும் கவலைப்படாமல் காவி உடையோடு, நம்மோடு கைகோர்த்துக் கொண்டு, தமிழகத்திலே இந்தி எதிர்ப்பு இயக்கத்தை மிகத் திறம்பட நடத்தியவர்கள் அருணகிரி அடிகள் ஆவார்கள். அவர்கள் இந்த மாநாட்டுக்குத் தலைமை வகிக்க வேண்டுமென்று நண்பர் நடராசன் மூலம் மெத்த விரும்பு கேட்டுக்கொண்டேன். இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்த வேண்டுமென்று நண்பர்கள் விரும்பிய நேரத்தில், அதற்குத் தலைமை வகிப்பதற்கு யாரை அழைக்கலாம்; யாராவது தமிழ்ப் புலவர்களை அழைக்கலாமா? என்று முதலிலே எண்ணினோம்.

அதற்குப் பிறகு தமிழ்ப் பெரும்புலவர்கள் தமிழிலேதான் திறமை பெற்றிருக்கக் கூடுமே தவிர, தாய் திருநாட்டு விடுதலைக்கு ஏற்ற ஆற்றல் அவர்களுக்கிருந்தாலும், அவர்கள் ஈடுபட்டிருக்கும் அலுவர்கள் அவர்களுக்கு அச்சத்தையூட்டும் என்ற காரணத்தினாலே, அவர்களைத் தேடாமல் இருந்தோம். அப்படியானால், பெரிய அரசியல் தலைவர்கள், நம் இயக்கத்தோடு இரண்டறக் கலந்து இல்லவிட்டாலும் கொஞ்சம் நெருங்கி வரக்கூடியர்கள். ஓரத்திலே இருந்தாலும் நம்மிடத்திலே கொஞ்சம் உள்ளம்பு படைத்தவர்கள்; அப்படிப்பட்டவர்கள் யாரையாவது அழைத்து தலைமை வகிக்கச் சொல்லலாமா என்று நண்பர்கள் என்னிடத்தில் சொன்னார்கள். எனக்கு ஒரே ஒரு பெயர்தான் நினைவுக்கு வந்தது; அந்தப் பெயரை நண்பர்களிடத்தில் சொன்னேன். நான் சொன்னதாக நீங்கள் போய் சுவாமி அருணகிரிநாதரை அழையுங்கள்; அவர்தான் இந்த நேரத்திற்கு தலைமை வகிக்க மிகக் கொருத்தமானவர் என்று நான் சொன்னேன்.

அலங்காரமான உடை ஆனால் ஆபாசமான கருத்து

காலையில் நான் ரயிலில் வரும்பொழுது, நான் வந்த கம்பார்ட்மெண்டில் ஒரு கல்லூரிமாணவர், திருச்சி, செயிண்ட் ஜோசப்பில் வேதாந்தம் படிக்கிறவர்; இருபார்ப்பனப் பண்டிதர்களிடம் தர்க்கம் பணிணிக்கொண்டு வந்தார். மாணவர், அந்த ஐயர்களைப் பார்த்து, வினை என்கிறார்களே, அதைப்பற்றி விதண்டா வாதக்காரர்கள் சில சமயங்களிலே கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை; அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள் என்றார். உடனே பண்டிதர்கள் கேட்பதற்குப் பதில் செல்லாமல், நீங்கள் கல்லூரியிலே படிக்கிறேன் என்கிறீர்களே, சாப்பாடு எங்கேயோ? என்று மாணவரைக் கேட்டார்கள். மாணவர், அதற்கு, பிராமணர்களுக்கெல்லாம் நம் ஹாஸ்டலிலே இனி இடம் உண்டு. அங்கேதான் சாப்பாடு என்றார். நெற்றியிவேல ஒன்றும் இல்லாவிட்டாலும், உடனே மாணவன் பிராமணன் என்ற தெரிந்து கொள்கிறார்கள். மாணவன் நெற்றியிலே நீறில்லை. கல்லூரியிலே படிக்கிறவர்; அதுவும் வேதாந்தப் படிப்புப் படிக்கிறார்; இங்கிலீஷ்காரனும் பார்த்துப் புதுமாதிரி என்று

அலங்காரமான உடைதான்; ஆனால் ஆபாசமான கருத்துக்கள். மாணவன் பிராமணன் என்று தெரிந்துகொண்ட பிறகுதான் அந்தப் பண்டிதர்கள் சரி, விவாதிக்கலாம் என்கிறார்கள்.
விவாதம் ஆரம்பமாயிற்று. மாணவன் கேட்டான் ஒருவன் கஷ்டப்படவும் இன்னொருவன் சுகப்படவும் காரணம் என்ன? என்று, அதற்கு அவனவன் செய்த பாவபுண்ணியம் என்று பதில் அளித்துவிட்டு மாணவனைப் பார்த்து, சரி தம்மி, ஒருவன் 60-ம், இன்னொருவன் 40-ம் மற்றொருவன் 20-ம் மார்க்குகள் வாங்கக் காரணம் என்ன? என்றார்கள். அவன் பண்டிதர்கள் மொழியிலேயே அவாளவாள் படித்த படிப்புக்குத் தக்கவாறு என்றான். பண்டிதர்கள் இதைப்போலத்தான் சுகத்தையும் கஷ்டத்தையும் அவாளவாள் செய்த பாவ புண்ணியத்திற்குத் தக்கவாறு அடைகிறார்கள் என்று எடுத்க காட்டினார்கள். அவர்கள் விவாதிக்கத் தர்க்கசாத்திரம் தேவையில்லை; வேதாந்தங்களே உதாரணம்; கதைகள் மூலம்தான் விளக்குவார்கள். சரி அதிருக்கட்டும என்று சற்று நேரம் கழித்து மாணவன், இந்த ஜெனம்த்தில் அனுபவிப்பது, போன ஜென்மத்தில் செய்த பாவம்; போன ஜென்மத்தில் கஷ்டத்தை அனுபவிப்பதற்கு, அதற்கு முந்திய ஜென்மம், அதற்கு முன் ஜெனம்ம் என்று போய்க்கொண்டே இருந்தால் முதல் ஜெனமம், அதாவது ஆண்டவன் உயிரை உடலிலே முதன் முதல் புகுத்திய ஜென்மம் - அந்த ஜென்மத்திலே செய்த பாவத்திலே கொண்டு போய்விடும். அந்த ஜென்மத்தில் பாவம் செய்ததற்கு யார் குற்றவாளி? படைக்கும்பொழுதே பாவத்தைச் செய்யாதபடியல்லவா ஆண்டவன் படைத்திருககவேண்டும்? அது இல்லாமல், பாவம் செய்யும்படியே படைத்துவிட்டு, பாவம் ஏன் செய்தாய்? என்று கண்டிப்பது ஒரு குற்றம்; பாவம் செய்யாமல் படைக்கதது இன்னொரு குற்றம்; ஆகவே, நாம் செய்கிற பாவத்திற்குக் குற்றவாளி பரமன்தான் என்று சொல்கிறீர்களா? ஜென்மம் என்பது உண்டா? அப்படியிருந்தால் முதல் ஜென்மத்திற்கு முன் என்ன நடந்தது என்று யாராவது கேட்டால் என்ன பதிலளிப்பது என்றான்.
பண்டிதற்கள் கொஞ்சம் விரைத்துப் பார்த்தார்கள். ஜென்மம் என்று ஒன்று உண்டா என்று கூடவா கேட்கிறீர்கள். நம்பிக்கையிலிருந்துதான் வாதமே எதுவும் தொடங்க வேண்டும். முதல் ஜென்மம் இருந்தது என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு முந்திய விவரங்கள் சொன்னால் புரியாது. அதிருக்கட்டும. இந்தப் பிரச்சினையெல்லாம் யார் கிளப்பிவிட்டது? ஈரோட்டு நாயக்கராகத்தானிருக்கும். இவர்களெல்லாம் பெரியார்களாம். ஒரு கட்சியின் தலைவர்களாம் என்று பேச ஆரம்பித்து, விவாதத்திலிருந்து தப்பித்துக்கொண்டார்கள். இது நான் காலையில் ரயிலில் கண்ட காட்சி.
(அண்ணா - 1943)

இதுவரையும் இனிமேலும ஒரு தலைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில் என்னைவிட வேறுயாரும் உண்டா என்று!

உதாரணத்திற்கு நான் ஒன்று கூறுவேன். வடநாட்டில் நான் அவரோடு சுற்றுப்பயணம் செய்தேன்! லக்னோ பல்கலைக்கழகத்தில் பெரியார் இராமசாமி அவர்கள் தமிழில் பேசினார்; நன் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். மொழிபெயர்த்தான பிறகு, அந்த மாணவர் கூட்டத்தின் தலைவராக இருந்தவர் நான் ஒரு எம்.ஏ.படித்தவன் என்பதை அறிந்து, என்னையும் சிறிது நேரம் ஆங்கிலத்திலேயே பேசுமாறு கூறினார்.

நான் பெரியார் இராமசாமியைத் திரும்பிப் பார்த்தேன்; பேசாதே என்றார்; பேசவில்லை என்றேன்; மறுபடியும் அவர்கள் வற்வுறுத்தினார்கள் - இவரைக் கேட்டேன். இல்லை பேசாதே என்றார். மூன்றாம் முறையாக வலியுறுத்தினர். பெரியார் என்னிடம் சொன்னார், நான் பேசுவதாக வரவில்லை; பெரியாரின் பேச்சை மொழிபெயர்க்கத்தான் வந்திருக்க்கிறேன் என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லு என்றார்; நான் எடுத்துச் சொன்னேன். எதனால்? அவ்வளவு அடக்க ஒடுக்கமாகப் பெரியாரிடம் நடந்துகொண்டேன். நான்தான் கடைசி ஆள் - அவ்வளவு அடக்க ஒடுக்கமானவன் - அவருக்குக் கிடைத்தவன்!

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai