அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி:: 30

ஆருயிர் அண்ணனே, வாழ்க!
ப.வாணன் (வேலாயுதம்), அண்ணாவின் நண்பர்

அண்ணாவிற்கா வயது ஐம்பது! என்றுதான் ஆச்சரியத்தோடு கேட்கத் தோன்றுகிறது. இரவும் பகலும் அவரோடு இருக்கிறோம். சென்ற பதினைந்து ஆண்டுகளாக அவரைக் காணாத, கண்டு மகிழ்ந்திடாத நாட்கள் அவர் சென்னையைவிட்டு வெளியூர்களுக்குச் சுற்றுப் பயணம் சென்றிருந்த நாக்ளாகத் தானிருக்கும். அன்றைக்கு எப்படியிருந்தாரோ அப்படியேதான் இன்றுமிருக்கிறார்!

அன்றுபோலவே, இன்னும் விடிய விடிய அரசியலைப்பற்றி அரிய கருத்துக்களை வாரி வீசுகிறார். இலக்கியத்தின் இனிமைகளை வெகு அழகாக எடுத்துரைக்கிறார். நாட்டின் நிலைமையை மனமுருகக் கூறி நமது கடமையை நம்மையறியாமலே நம் மனதில் புகுத்தி, கோழைகளையெல்லாம் வீரர்களாக்கிவிடுகிறார். பொழுது புலர்ந்தது. நாங்கள் தெளிவு பெற்றோம். புதிய தெம்பு கொண்டோம் என்நெல்லாம் நாம் சொல்லிக்கொண்டு புறப்பட நேரம் கிடையாது. அன்று போலவே, இன்றும் அலுக்காமல் இரவு பூராவும் விழித்து நண்பர்களை அறிவுக் கடலில் அமிழ்த்தி எடுத்துவிட்டு, அதே தொடர்ச்சியில் பேனாவிடித்துப் பொன்னான கருத்துக்களை நாட்டு மக்களுக்குப் பரப்பும் புதுமை இலக்கியம் எழுத அமர்ந்துவிடுவார்கள்!

இளமை குன்றாத அவருக்கு ஐம்பது வயதாகிறது என்றவுடன் ஆச்சரியம் ஏற்படுகிறது. உடனே நம் வயதை எண்ணிப் பார்க்கிறோம். நமக்குப் பதினெட்டு வயதில் அண்ணாவுக்கு அருகிலிருந்து பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. இன்றைக்கு நமக்கு முப்பத்தைந்து வயது எட்டிப் பார்க்கிறது! ஆகவே அவருக்கு ஐம்பது வயது ஆகி இருக்கலாம் என்றுதான் கூறத் தோன்றுகிறதே தவிர மற்றபடி பதினைந்து ஆண்டுகளுக்க முன் எப்படிப்பட்ட அண்ணாவைக் கண்டோமோ அதே அண்ணாதான் இன்றும் காட்சி அளிக்கிறார்! இதேபோல் என்றும் ஔனை குன்றாத, உணர்ச்சி மங்காத இழைப்பின் சின்னமாக நாட்டின் வழிகாட்டியாக வரலாற்றை உற்பத்தி செய்யும் பெரிய தலைவராக அவர் வாழவேண்டும் எப்துதான் நமது விருப்பம். அதுநிறைவேற உழைப்பதே அவருக்குப் பணி செய்து கிடப்பதே, நம் கடமை என்பதை இந்த நன்னாளில் நம் மனதில் திடப்படுத்திக் கொள்வதே அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடும் முறை!

தலைவரின் கொன்விழாக் கொண்டாடும் இந்த நேரத்தில் அவருடைய அருமை பெருமைகளை விளக்குவது அவருக்கும், நாட்டிற்கும் நாம் செய்த தொண்டாகம். அந்த நோக்கிலே சென்ற பதினைந்து ஆண்டுகளில் அவரோடு பழகி அவருக்குப் பணி புரிந்த நேரங்களில் அவருடைய மனப்போக்கையிம், பண்புகளையும் விளக்கம் சில சம்பவங்களைக் கூறுவது பொருத்தமானதாகும்.

அண்ணாவின் வாழ்க்கையை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவருடைய இளமைப் பருவம் கல்லூரிப் படிப்போடு முடிவடைகிறது. பின் நீதிக் கட்சியில் அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது. பத்தாண்டுகள் கழித்து திராவிடர் கழகச் செயலாளராகப் பெரியார் ராமசாமியின் முதல் தளபதியாக வெளிவருகிறார். நான்காவது கட்டமாக இன்னும் ஐந்து ஆண்டுகளில் தி.மு.காவின் தனித் தலைவராகிறார்.

இந்த நான்கு கட்டங்களில் முதலிரண்டு கட்டங்கள் நடைபெறும்போது நான் பள்ளி மாணவன். அண்ணா சேலம் மகாநாட்டில் (1944-ம் ஆண்டில்) பட்டதாரிகளையும் மிட்டா மிராசுகளையும் ஒழிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொடி நாட்டிவிட்டுச் சென்னை திரும்பியபோதுதான் நான் அவருடைய பல்கலைக் கழகத்திலே மாணாக்கனானேன். என் ஆருயிர் நண்பர் செழியனும் நானும் மாலை அலுவலகத்திலிருந்து வந்தவுடன் அலுப்புத் தீர களிப்போம். இரண்டாவது தடவையாக! அயர்வு நீங்கி புது உணர்வு பெற்ற நிலையில் கருப்பண்ண முதலி தெருநோக்கி வேகம், வேகமாக நடப்போம். அங்கே பசியோடு வரும் குழந்தையை அன்பாடழைத்து அன்னமளிக்கும் தாயைப்போல வீட்டிற்குள் நுழைந்ததும், இன்முகத்தோடு வரவேற்று; அறிவு விருந்து அளிக்கும் அண்ணா நிற்பார். காந்தி நேற்றுக் கூட்டத்திலே கூறியிருப்பதைப் பார்த்தீர்களா? என்று அன்றைய பத்திரிகையில் வந்து, நமது கவனத்தை ஈர்த்த சேதியொன்றைப்பற்றி பேச்சு ஆரம்பிக்கம். அவ்வளவுதான் அந்த கச்சேரி முடிய பொழுது புலரும்! காலையில் அவரவர்கள் எழுந்து அவரவர் அலுவலகங்கட்குச் சென்றுவிடுவோம். இந்த மாதிரி சேர்ந்தாற்போல் சில நாட்கள் இரவுக் கண்வித்தால் கண்கள் எரிச்சல் கொடுக்கும். உடல் சென்னபடி கேட்க மறுக்கம். இருந்தாலும் அண்ணாவைப் பார்க்காமல் இருக்க மனம் இடந்தராது. காரணம் அந்த அளவு மேலான எண்ணங்களை நகைச்சுவை கலந்து உணர்ச்சி குன்றாமல் கருதது மழை பொழியும் அறிவு ஊற்று அண்ணா அவர்கள்.

அண்ணாவோடு முதன் முதலில் பழகும்போது நாங்களெல்லாம் முழுக்க முழுக்க பெதுவுடமைவாதிகள், கட்சியில் உறுப்பினர்களில்லை! பெரியார் ராமசாமியையும் நீதிக்கட்சியின் ஒவ்வொரு செயலையும் பெருமைபடுததிக் கூறுவார் என்றுதான் நாங்கள் மிக அடக்கமாக எங்களுடைய கருத்துக்களை மெதுவாகத் தெரிவிப்போம். ஆனால் அவரோ எங்களைவிடத் தீவிரமாக நீதிக் கட்சியினர் செய்த தவறை தெளிவாக எடுத்துக் கூறுவார்.

திராவிட சமுதாயம் பல வழியிலும் விடுதலை பெற்று, அறியாமையிலும், வறுமையிலிருந்தும் மீள வேண்டுமானால் இவையெல்லாம் செயய வேண்டும் என்று அன்று கூறியவைகள் இன்றும் என் மனதில் எதிரொலிக்கிறது.

சேலம் மாநாடு முடிந்தவுடன் பழைய நீதிக்கட்சிக்காரர்களோடு வாக்குவாதங்கள், அது முடிந்து ஓரளவு நிம்மதியான சூழ்நிலை எய்திய நேரத்தில் பாராதிதாசன் நிதியளிப்பு விழா விற்கான முயற்சிகளும், அதில் குறுக்கிட்ட இடைஞ்சல்களும், என்.எஸ்கே. பாகவதர் சிறை வாயிற்பட்டதும் அவர்கள் விடுதலைக்கான முயற்சிகளும் இப்படி பலவேறு துறைகளில் முதல் ஐந்தாண்டுகள் ஓடின. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பெரியாரின் மனப்போக்கும், கட்சியிலே பலரும் இருக்கின்ற நிலைமை தெரியாமல் அவருக்குக் கொடுத்தத் தொல்லைகளம் அவைகளையெல்லாம் புன்முறுவலோடு எவ்வளவு கௌரவமாக சமாளித்தார் என்பதும் இன்றம் நம் கண்முன் நேற்று நடந்ததுபோல் தெரிகிறது. கருபபண்ண முதலி தெரு வீட்டிலே எங்களோடு அவ்வப்போது வந்து கலந்துகொள்பவர்கள் கணேசன், புலவர்.செல்வராஜ், என்.வி.என்., டி.வி.நாராயணசாமி, பின்னால் என்.எஸ்.கே. சிறைபட்டவுடன் நண்பர் கே.ஆர்.ராமசாமி முதலியார்.

சில நாட்களுக்குப் பிறகு எங்கள் முகாம் செம்புதாஸ் தெருவுக்கும், அதற்குபின் புரசையில் அன்பழகன் வீட்டிற்கும், அதற்குப்பின் தேவராசர் அகத்திற்கும் பின்னால் அறிவகத்திற்கும் அதற்குப் பிறகு இறுதியாக அண்ணாவின் அகத்திற்கும் மாறியது. முகாம் என்றால் உண்மையிலேயே போர்க்களத்தில் முகாம் போடும் தளபதிபோல்தான் நடந்துகொள்வார். ஒருவித வசதியும் தேடமாட்டார். தலையணை இல்லாமல் அவரே படுக்கம்போது நமக்கு நின்றபடியே தூங்கும் பழக்கம் கூட ஏற்படாமல் என் செய்யும்?

அண்ணாவிற்கு இருந்த வசதிக் குறைவோடு வேறெந்த எழுத்தாளனும் இந்தளவு உயர்ந்த இலக்கியங்களை உற்பத்தி செய்திருக்க முடியாது. அவர் எழுதிய பல கதைகளும் கட்டுரைகளும் பல பேர்கள் சுற் விவதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவசரம் அவசரமாக எழுதியதே ஆகும். உண்மையில் ஆகஸ்டு 15 பற்றி அவர் எழுதும்போது காகிதம் பத்தாமல் போய் ஏதேதோ காகிதங்களைக் கிழித்துக கொடுத்த ஞாபகம் இருக்கிறது. சில சமயங்களில் பேனாவிற்கு மசி ஆகிப்போய், வேறு வழியின்றி பென்சிலில் எழுதிய நாட்கள் உண்டு.
மிக முக்கியமான கருத்துக்களை வாரிக் கொட்டிய பல வானொலி சொற்பொழிவுகள், பேசுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக எழுதி எடுத்துச செல்லப்பட்டதுதான்!
அவருடைய உயர்ந்த கற்பனைக்க எடுத்துக்காட்டாக விளங்கும்

ஓர் இரவு நாடகம் ஒரே இரவில் எழுதி முடிந்தவுடன் பஸ் ஏறி சென்னை வந்தார். அன்று விடுமுறை ஆனதால் தூங்கிக் கொண்டிருந்தேன். என்னைத் தட்டி எழுப்பி இந்த நாடகத்தை படிக்கிறேன், கேள்! என்று கூறியவண்ணம் படிக்க ஆரம்பித்தார். அவர் படிக்கக் கேட்டால் அதைவிடச் சுவையானது உலகத்தில் என்ன இருக்கிறது? அந்த இன்பத்திலே லயித்துக்கொண்டிருந்த நான் என்னையும் அறியாமலே அதெப்படி அண்ணா, சுடப்பட்ட ரத்தினம் பிழைத்தான்? என்றேன். உடனே அண்ணா அவர்கள், என்னுடைய ஸஸ்பென்ஸ் நிச்சயம் வெற்றிபெறும் - வாணனே ஏமாந்துவிட்டன்! என்று சிரித்துக்கொண்டே அருகிலிருந்த ராமசாமியிடமும், செழியனிடமும் கூறினார்கள்!

சில நேரங்களில் பெரிய பிரச்னைகளைப் பற்றி விவாதம் பலமாகப் போகும். ஒரே குழப்பமாக இருக்கும், சம்பத்து, நெடுஞ்செழியன், மதியழகன், அன்பழகன், எல்லோரும் கூடிவிடுவார்கள், ஆளுக்கொரு முனையிலிருந்து விஷய விளக்கம் பெறவேண்டுமென்ற நோக்கோடு விவாதிப்பார்கள், அந்த நேரங்களிலெல்லாம் அண்ணாவின் பொறுமையும், தெளிவான அறிவுரைகளும் மறக்க முடியாதவை.

தூத்துக்குடி மாநில மாநாட்டிற்குப் போவதா, வேண்டாமா என்ற பிரச்னையின்போது எங்கள் அறையில் ஒரே வாக்குவாதம். திடீரென்று அண்ணா எழுந்தார் - சரி, நீங்கள் எல்லோரும் உங்கள் வாதங்களைக் காகிதத்தில் எழுதிப் பாருங்கள். இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் அவரவர்கள் கருத்து எழுத்து வடிவில் எனக்கு வேண்டும்! என்ற கூறிவிட்டு என்னைப் பார்த்து வாய்யா - கொஞ்சம் வெளியே போய்வருவோம்! என்றார். இந்தச் சூழ்நிலையில் வெளியே போவதா என்று எண்ணிக்கொண்டே புறப்பட்டேன். நேராக சினிமா ஒன்றிற்குப் போனோம்! சினிமாவில் இடை இடையே பிரச்னையை கிளப்பினேன். அண்ணா சிரித்துக் கொண்டே ஏதேல சமாதானம் கூறிக்கொண்டிருந்தார். பிறகு படம் முடிந்து வெளியே வரும்போது முடிவு கூறினார்.

யாருமே தூத்துக்குடி போகத் தேவையில்லை. ஆனால் நம்மில் யாராவது ஒருவர் அங்கே போயிருந்து நிலைமைகளை கவனித்துத் தேவைப்பட்டால் நாம் செய்ய வேண்டியதைத் தந்தி மூலமோ, அல்லது டிரங்போன் மூலமோ சொல்லவேண்டும்! என்றார். அறைக்கு வந்தோம். குழப்பத்திலிருந்த நண்பர்கள் தெளிவுற தான் எடுக்கும் முடிவை விளக்கினார். அங்கே குழுமியிருந்த எங்கள் எல்லோருக்கும் முழுத்திருப்தி. சினிமாவில் என்னய்யா, நடந்தது? என்றார் பெரியண்ணன் நெடுஞ்செழியன், நான் சிரித்துக்கொண்டே படம் ரொம்ப டல் தாங்க. இடை வேளையில் கூட அவர் முடிவு எடுத்ததாகத் தெரியவில்லை. வரும்போதுதான் அவர் முடிவெடுத்துவிட்டார் என்று தெரிந்தது என்று கூறினேன்.

ஆனால் யார் தூத்துக்குடி போவது என்று தெரியவில்லை. அந்த முடிவை எடுகும் பொறுப்பும் அண்ணாவிடமே இருந்தது. அவர் முடிவு என்னை அந்த வேலைக்கு அனுப்புவதாக இருக்கும் என்பது அன்றிரவு எனக்குத் தெரியாது!


அரங்கண்ணல்
அண்ணாவுக்கு இன்று 53 வயது அரும்புகிறது! 53 வயதுகள் ஓய்வெடுக்கவேண்டிய வயது 45 என்பார்கள். அண்ணா அவர்கள் அந்த வயதுக்குள் எவ்வளவு உழைக்கவேண்டுமோ, அதைவிடப் பல்நூறு மடங்கு, இந்நாட்டுக்கான சேவையைச் செய்துவிட்டார்கள். இன்னம் செய்துகொண்டும் இருக்கிறார்கள்!!

தம்பி! நான் என்ன செய்வேன்? என்னை யாராவது கூட்டத்துக் என்று அழைத்தால், உடனே அத்தோழர்கள் உண்டியல் வசூலிக்கவும், எல்லாரிடமும் போய் காசு வசூலிக்கவும், பந்தல் போடவும், என்னென்ன கஷ்டப்பட்டுவிட்டுப் பிறகு நம்மிடம் வந்து தேதி கேட்கிறார்களோ என்றே எண்ணுகிறேன். அப்படி எண்ணியதுமே, அவர்களுக்கு மறுப்புச் சொல்ல முடியவில்லை. சரி, ஆகட்டும் அப்படியே வந்துசேர்ந்துவிடுகிறேன், என்று ஒப்புக்கொண்டுவிடுகிறேன். என்னிடம் வரும் கழகத் தம்பிகளை என்னில் ஒரு உருவமாக நான் உருவகப்படுத்திக்கொள்ளுகிறேன். அதனால் இப்போதெல்லாம், என்னால் மறுத்துச் சொல்வதென்றே முடிவதில்லை என்றார்கள், சின்னாட்களுக்கு முன்பு, அண்ணா!

ஓட்டைக்கார்! கூட்டமோ, அதிராம்பட்டினத்தில்! இருப்பதோ காஞ்சியில்! ஏறிக்கொண்டு கிளம்பி, விருத்தாசலம் போனதும, தன் புத்தியைக் காட்டிவிட்டது, கார். அங்கிருந்து செல்வராசுவிடம் ஒரு கார் வாங்கிக்கொண்டு, அதிராம்பட்டினம் போச் சேரும்போது, இரவு மணி ஒன்று, ஊர், உறங்கிவிட்டது. ஒரு தோழரும் இல்லை. வழியில் நிறுத்தினால் நேரமாகிவிடுமே என்பதால் சாப்பிடவில்லை.

பசி வேறு அந்த நேரத்தில் டீயும், ரொட்டியும் கிடைக்க அதுவென்ன சென்னையா? சரி திரும்பு என்று தஞ்சைக்கு வந்து அங்கே சிற்றுண்டியை உண்டுவிட்டு, சென்னை, பயணம் ஏனெனில், மாலையில், தியாகர் கல்லூரியில் ஒரு விழாவில் கலந்துகொள்ளவேண்டும்.

விருத்தாசலத்திற்கு வந்து எடுத்துப்போன காரை ஒப்படைத்துவிட்டு, ரிப்பேரான வண்டியில், கிளம்பியாயிற்று. காமராஜர் ஆட்சி போன்ற கார்! ரிப்பேர் ஆனால் போதுமா!!! தள்ளிவிட்டுத் தாவியமர்ந்து தத்தித் தத்தளித்து சென்னை வரும்போது இரவு மணி பத்து. வண்ணையிலுள்ள அக் கல்லூரியின் வாயில் காப்போர் மட்டுமே நின்று, உள்ளே யாருமில்லீங்க! என்று சொல்ல, உடனே காஞ்சி திரும்பவேண்டும், ஏனெனில் சி.வி.எம்.அண்ணாமலையில் செல்வித் திருமணம்!

இப்படி ஏன் கூட்டங்களை ஒப்புக்கொள்ளவேண்டும்? குமரிக்கும் சென்னைக்கும் கோவைக்கும் நாகைக்கும் என்று ஒப்புக்கொள்ளலாமா? என்று நான் கேட்டேன் தளர்ந்து, சோர்ந்து, உட்கார்ந்ததைக் கண்டு. நான் அதிகம் பேசமாட்டேன், அண்ணாவிடம். அவசியமானபோது மட்டுமே, அதிலும் இரண்டொரு சொற்கள் மூலம், ஒதுங்கிவிடுவேன். உண்மையில், எனக்கு, அன்று மிகவும் வேதனையாயிருந்தது!!

வேளா வேளைக்குச் சாப்பாடு விதவிதமான மருந்து வகைகள் - ஊரார் கொடுத்த பழவகை அழகாகக் காய்ச்சி உள்ள தலைவரல்ல அண்ணா! பெட்டிகளை, அவர் குடும்பம் பெற்றிருக்கவில்லை, வளமாக, வட்டி வியாபாரம் தம்பிக்கு, வாடகை வசூல் செய்ய இருக்கிறார் சித்தப்பா, எனும் நிலை கொண்டதுமல்ல. குடும்பத்துக்கு அவர் ஒருவர்தான்! உடல் தளர்ந்த தாய் - ஒரு நிமிடமும் நிம்மதியில்லாத சிற்றன்னை - மகளையிழந்த தமக்கை எல்லோருக்கும் துணை நான எனும் அண்ணி - இத்தனை பேருக்கும் அண்ணா ஒருவர்தான்! வாரந்தோறும், தம்பிக்கு என்று எழுதவேண்டும் திராவிட நாட்டில் எழுதுவது என்றால், அதிலுள்ள சிரமம் நீங்களறியாததல்ல ஆங்கில ஏடு, ஹோம் லேண்டு; அதற்கும் முதலிலிருந்து கடைசிவரையில், அண்ணாதான், எழுதவேண்டும். அந்த ஊரிலிருந்து ஒரு தோழர் இந்த ஊரிலிருந்து இவர் என்று இடையிமையே தகவர்கள் வரும், அதனால் அந்த வேலைகளுக்கென்று பகலை ஒதுக்கிவிட்டு இரவில்தான் எழுத உட்காருகிறார! விடிய விடிய நான்கு இரவுகள் விழித்தால்தான் இரண்டு ஏட்டுக்கும் எழுதிமுடிக்க இயலும் வெளியூர்ப் பயணம் என்றால் அடுத்த வாரத்துக்கு எழுதவேண்டியதையும் முதல் வாரமே எழுதி வைத்துவிட்டுப்போக வேண்டும்! அப்படிப் பட்டசமயங்களில், சாப்பிட்டானதும் இரவில் கண் விழித்தற்கு ஈடாக பகலில் தூங்குவதும் போய்விடும்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai