அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
27
திரு.
ஆர்.எம்.வீரப்பன்
கே.ஆர்.இராமசாமி அவர்கள் அண்ணா அவரிகளின் அன்பை பெற்ற நெருங்கிய
நண்பராகத் திகழ்ந்தார். அந்த வகையில் கே.ஆர்.ஆருடன் இருக்கும் நாடகக்
கலைஞர்களை, என்.எஸ்.கிருட்டினன் நாடக சபாவிலிருந்து பிரிந்தவர்களை
காப்பாற்றவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அண்ணா அவர்கள் காஞ்சீபுரத்துக்கு
வரவழைத்து அங்கே அவர்களை தன் பொறுப்பில் வைத்துப் பராமரித்து வந்தார்.
அந்தக் கலைஞர்களை
பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காக அண்ணா அவர்கள் சிவாஜி கண்ட
இந்து ராஜ்யம் என்ற நாடகத்தை எழுதினார். 1945-ம் ஆண்டு அந்த நாடகம்
சென்னையில் அரங்கேறியது.
சென்னை அரண்மனைக்காரத்
தெருவில் செயிட் மேரி மண்டபத்தில் தந்தை பெரியார் அவர்கள் தலமையில்
நடைபெற்ற சென்னை மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் அந்த நாடகம் அரங்கேறியது.
பெரியார் அவர்கள் கணேசன் நடிப்பைப் பார்த்து சிவாஜிகணேசன் என்று
பாராட்டினார். சிவாஜி கணேசன் நடித்த அந்த சிவாஜி பாத்திரத்தை எம்.ஜி.ஆர்.
அவர்கள் ஏற்று நடிப்பதாக இருந்து, ஏதோ சில காரணங்களால் அது நிறைவேறவில்லை,
திரு.டி.வி.சாராயணசாமி முயற்சியால் அதுவரை நாடகங்களில் ஸ்திரி பார்ட்
எனும் பெண் வேடம் போட்டு வந்த வி.சி.கணேசனுக்கு சிவாஜி பாத்திரத்தை
ஏற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இவ்வளவு கலைஞர்களை
காஞ்சிபுரத்தில் வைத்து பராமரிக்கும் சுமையை தாங்கமுடியாத நிலையில்
கே.ஆர்.இராமசாமியைக் கொண்டு ஒரு புதிய நாடகக் கம்பெனையைத் தொடங்குவது
என்று அண்ணா அவர்கள் முடிவு செய்தார்.
அப்படி தொடங்கப்பட்டதுதான்
கே.ஆர்.ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபா. கிருஷ்ணன் என்ற பெர் கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணனை நினைவுபடுத்தும் வகையில் வைக்கப்பட்டது. பொறுப்பேற்றிருந்தவர்
கே.ஆர்.ஆர். எனவே அந்த நாடகக் கம்பெனி கே.ஆர்.ராமசாமியனி கிருஷ்ணன்
நாடக சபா என்றே அழைக்கப்பட்டது.
நாடகக் குழுவை தஞ்சாவூரில்
தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்குச் சில காரணங்கள் உண்டு
அங்கே சுதர்ஸன் சபா என்ற கலாசார அமைப்போடு தொடர்புகொண்ட ராமநாதன்
செட்டியார் ஹால் என்ற அரங்கத்தில் நிறைய செட் பிராப்பர்ட்டீஸ் இருந்தன.
ஒரு நாடகத்திற்குத் தேவைப்படும் பல்வேறு சீன்கள், காட்சிக்கான பொதுவான
பொருட்கள் அங்கே தயாராக இருந்ததால் அதற்காகத் தனியே செலவு செய்யத்
தேவையில்லை. இதுபோன்ற சில சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு
தஞ்சையில் கே.ஆர்.ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபா பிறந்தது.
அதில்தான் ஆர்.எம்.வீரப்பன்
நிர்வாகியாகப் போய்ச் சேர்ந்தார். தஞ்சையிலேயே தங்கியிருந்தார்.
அங்கே அப்போது யதார்த்தம் பொன்னுசாமி அவர்கள் நாடக சபாவின் மூத்த
நிரிவாகியாக இருந்தார். அடிக்கடி அவர் சென்னைக்குப் போக வேண்டியிருந்தது.
எத்திராஜ் என்பவரும்
அங்கே பொறுப்பிலிருந்தார். சென்னையைச் சேர்ந்த எம்.எஸ்.முத்துகிருஷ்ணன்
என்பவர் அக்குழுவில் நடிப்பு சொல்லித் தரும் நாடக ஆசிரியராக இருந்தார்.
எம்.ஆர்.ராதா போன்றவர்களின் நடிப்பில் ஒரு புது மெருகு ஏறியதற்கு
ஆசிரியர் எம்.எஸ்.முத்துகிருஷ்ணன்தான் காரணம்.
பண விவகாரங்களைப்
பார்த்துக்கொண்டும் பொறுப்பில் ஆர்.எம்.வீ. இருந்தார். கே.ஆர்.ஆர்.
நடித்தால் ஆகும் வசூல் மற்ற சமயங்களில் இருக்காது என்றாலும் இழந்த
காதல் போன்ற பழைய நாடகங்களைப் போட்டு வந்தார்கள். வசூல் இல்லை. கே.ஆர்.ஆர்.
அவர்கள்தான் சினிமாவில் சம்பாதிப்பதை நாடகக் குழுவிற்குச் செலவிட்டு
வந்தாலும் செலவு கூடிக்கொண்டே போனது. கலைஞர்களும் கொஞ்சம் கொஞ்சமாக
நாடகக் கம்பெனியைவிட்டு விலகத் தொடங்கினார்கள்.
இதற்கிடையில் அண்ணா
அவர்கள் நடத்தும் கழக மாநாட்டுகளில் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில்
நடிக்க அவ்வப்போது நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் போய் வருவதுண்டு.
சிவாஜி அப்படி போய் நடித்துவிட்டு வருவதை நாடகக் கம்பெனியில் நிர்வாகியாக
இருந்த எத்திராஜ் விரும்பவில்லை. ஒருவித மனக்கசப்போடு சிவாஜி அங்கே
இருக்கவேண்டிய நிலை. சூழ்நிலையை உணர்ந்த அண்ணா அவர்கள் சிவாஜிஐய
ஒரு நல்ல நாடகக் கம்பெனியில் சேர்த்துவிட விரும்பினார். கரந்தை ஷண்முக
வடிவேல் என்ற தன்னுடைய நண்பர் மூலம் அப்போது திண்டுக்கல்லில் முகாமிட்டிருந்த
சக்தி நாடக சபா வில் சிவாஜியைச் சேர்த்துவிட்டார் அண்ணா.
இப்படிப்பட்ட சூழலில்
நான்கைந்து மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில்
நாடக ஆசிரியர் எம்.எஸ்.முத்துகிருஷ்ணன் அவர்கள், அப்போது தஞ்சைக்கு
அடிக்கடி வந்து நாடகக் குழுவோடு தங்கிச் சென்ற அண்ணா அவர்களிடம்
ஒரு யோசனையைத் தெரிவித்தார்.
நாடகம் எழுதிக் கொடுங்கள் அண்ணா. நிறைய செலவு பிடிக்காத தயாரிப்பாக
அது இருக்க வேண்டும். ஒரே இரவில் கதை நடப்பதுபோல அமைந்தால் நல்லது.
பளிச்சென்று சீன், செட் எல்லாம் இல்லமல் நைட் எஃபெக்டில் சிக்கனமாகச்
செய்து விடலாம்.
தன் நெருங்கிய நண்பரின்
நாடகக் குழுவைப் பொருததவரை அதைக் காப்பாற்ற வேண்டிய ஒரு தார்மீகப்
பொருப்பு இருப்பதாக் உணர்ந்து வந்த அண்ணா அவர்கள் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டு
ஒரே வாரத்தில் நாடகத்தை எழுதி முடித்தார். அதுதான் ஒர் இரவு. அதை
ஆர்.எம்.வீ.தான் காஞ்சிக்கு சென்று அண்ணாவிடமிருந்து வாங்கி வந்தார்.
மிகக் குறைந்த செலவில்
அந்தக் கதை நாடகமாக்கப்பட்டது. தஞ்சையில் தொடர்ந்து அந்த நாடகம்
இருநூற்று ஐம்பது நாட்கள் தினசரி நடைபெற்று சாதனை படைத்தது.
ஓர் இரவு நாடகம் அரங்கேறிய
பின்பும் அண்ணா அவர்கள அடிக்கடி தஞ்சாவூர் வந்து போய்க் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கும்
பெரியாருக்கும் இடையில் ஒரு மௌன யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது
என்கிறார் ஆர்.எம்.வீ.
அதனால் அதிகமாக அண்ணா
வஅர்கள பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
வழக்கத்தைவிட அதிகமாக அவருக்கு ஓய்வு கித்ததால் அடிக்கடி தஞ்சை வருவார்.
இச்சமயத்தில் ஓர்
இரவு நாடகத்தை வாங்கிப் படமாக்க விரும்பி ஜுபிடர் பிக்சர்ஸ் சோமு
அவர்களும், டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி அவர்களும் வந்து நாடகத்தைப் பார்த்தார்கள்.
பிடித்துப்போயிற்று. ஆனால் அப்போது அண்ணா அவர்கள் ஏற்கெனவே முழுமையாக
எழுதி அரங்கேற்றப்படாமல் இருந்த வேலைக்காரி என்ற நாடகத்தின் ஸ்கிரிப்ட்
தயாராக இருந்தது. அருமையான கதை அது என்றாலும், நாடகமாகத் தயாரிக்க
அதிகச் செலவாகும் என்பதால் அந்த ஸ்கிரிப்ட் அப்படியே இருந்தது.
தயாராக ஸ்கிரிப்ட்
இருப்பதை அறிந்ததும் அந்த இருவரும் அதையும் வாங்கிப் படித்தார்கள்.
ஓர் இரவு கதையைவிட வேலைக்காரி அவர்களுக்க மிகவும் பிடித்துப் போனதால்
உடனே அதை விலைக்கு வாங்கிப் படமாகத் தயாரித்து வெளியிட்டார்கள்.
தமித் திரையுலகில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அது
அமைந்தது. பின்னர் ஏவி.எம்.அவர்கள் ஓர் இரவை வாங்கிப் படமாக்கினார்.
தஞ்சாவூரில் இருந்த
காலத்தில் அண்ணா அவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஆர்.எம்.வீரப்பனுக்கு
அதிகம் கிடைத்தது.
அந்த நாடகத்தின்போதுதான்
தினமும் ஒரு புகழ்பெற்ற தலைவரையோ, கலைஞரையோ வரவழைத்துத் தலைமை தாங்கச்
செய்யும் வழக்கத்தை இவர் ஏற்படுத்தினார். அதற்காக அதிகபட்ச வளிம்பரங்களும்
செய்யப்பட்டன. பத்திரிகைகளில் அதுபற்றிய செய்திகள் வரும் முயற்கிகள்
மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் பின்னணியாக இவர் விளம்பரமின்றிச் செயல்பட்டு
வந்தார். இப்படிப் பலர் வந்துபொக ஆரம்பித்தபோது, திராவிடர் கழகத்
தொழர்களும் வரத் தொடங்கினார்கள். ஆர்.எம்.வீயின் அன்பான அணுகுமுறை
அத்தோழர்களுக்கு ஒரு குடும்ப உறவை அந்த நாடகக் குழுவுடன் ஏற்படுத்தியது.
கே.ஆர்.ஆர்.சென்னையில்
இருந்தார். தஞ்சையில் இருந்துகொண்டு நாடகக் கம்பெனியின் பணிகளை ஆர்.எம்.வீ.
செவ்வனே ஒழுங்குபடுத்தி வந்தார். கட்சி வேறுபாடு இன்றி அனைவரும்
நாடகத்துக்கு வந்து ஒவ்வோர் நாள் தலைமை ஏற்று சிறப்பித்தார்கள்.
ஓர் இரவு இருபத்தைந்தாவது நாடகத்துக்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
அவர்கள் தலைமை வகித்தார். அன்று அவர் பேசும்போது இந்த நாடகத்தை எனது
தலைவர் அறிஞர் அண்ணாதுரை எழுதியிருக்கிறார். கரும்பை நுனியிலிருந்து
கடித்துச் சாப்பிடும்போது எப்படி போகப்போக ருசி கூடி இருக்குமோ அப்படி
இந்த நாடகம் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அன்று அவர் சொன்ன
அறிஞர் அண்ணாதுரை என்ற வார்த்தைகளை ஆர்.எம்.வீ.அப்படியே உள்வாங்கிக்கொண்டு
அடுத்த வாராத்திலிருந்து ஓர் இரவு நாடக விடம்பரங்களில் கதை, வசனம்:
அறிஞர் சி.என்.அண்ணாதுரை, எம்.ஏ. என்று போடத் தொடங்கினார்.
அறிஞர் அண்ணா என்ற
பெயர் பின்னர் நிலைத்துப் போனதற்கு அதுவே ஆரம்பம் எனலாம்.
நாடகக் குழுவிற்கு
- அது முகாமிட்டிருந்த இடத்தில் நியை தி.க. தோழர்கள் வந்து போவதை
எத்திராஜ் போன்ற நிர்வாகிகள் விரும்பவில்லை. தங்கள் நாடகக் குழு
திராவிடர் கழகத்தின் கிளைக் கழகமாக மாறிக்கொண்டு வருவதுபோல உணர்ந்தார்கள்.
எனவே இந்த நிலைக்குக் காரணம் வீரப்பன்தான் என்பது போன்ற எண்ணம் உண்டாயிற்று.
இதையெல்லாம் உணர்ந்த ஆர.எம்.வீ. அந்த நாடகக் குழுவிலிருந்து விலகிவிடுவதுதான்
சரி என்று முடிவு செய்து தன் எண்ணத்தை அண்ணா அவர்களுக்கு ஒரு கடிதத்தில்
தெரிவித்தார்.
நீ சொல்வதும், உன்
எண்ணமும் எனக்குப் புரிகிறது. இருந்தாலும் நீ அங்கிருந்து போகாதே.
அங்கேயே தொடர்ந்து இரு. நான் ராமசாமியிடம் (கே.ஆர்.ஆர்) பேசிக்கொள்கிறேன்
என்று பதில் எழுதிய அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும். இது
ஒரு பெரியவரின் வாக்கு தம்பி என்ற வரிகளுடன் தன் கடிதத்தை முடித்திருந்தார்.
அண்ணா அவர்களின் புகழ்பெற்ற
வாசகமான எதையும் தாங்கும் இதயம் முதன் முதலாக எழுதப்பட்டது, ஆர்.எம்.வீ.
அவர்களுக்கு அவர் எழுதிய அந்தப் பதில் கடிதத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாவின் சொல்லை
மதிக்கவேண்டும் என்பதற்காக மேலும் சில காலம் இவர் தொடர்ந்து அந்த
நாடகக் குழுவில் தன் பணிகளை ஆற்றிக்கொண்டிருந்தார். ஆனால் மனதைப்
புண்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து மேன்மேலும் நடைபெற்று வந்த
நிலையில் கே.ஆர்.ராமசாமி அவர்களுக்கு நேரிடையாக ஒரு கடிதம் எழுதினார்.
சரி, நீ போவதாக இருந்தால்
அப்படியே செய்.... என்று பதில் எழுதிவிட்டார் கே.ஆர்.ஆர்.
அண்ணாவின் சொல்லை
மீறுகிறோம் என்ற உணர்வு இருந்தாலும் வேற வழியின்றி கே.ஆர்.ராமசாமியின்
கருஷ்ணன் நாடக சபாவிலிருந்து வீரப்பன் விலகினார். காரைக்குடிக்குப்
போக திருச்சி ஜங்ஷனிலிருந்து ரெயில் மாறவேண்டும். திருச்சிக்கு வந்த
வீரப்பனின் கண்ணில் சற்றம் எதிர்பாராமல் அந்தச் சுவரொட்டி பட்டது.
சிட்டி மெச்சூர்ஸ்
என்ற கலாச்சார அமைப்பு திருச்சியில் நடத்தும் இழந்த காதல் என்ற நாடகத்துக்கு
அண்ணா தலைமை வகிக்கிறார் என்றது சுவரொட்டி. சிட்டி அமெச்சூர்ஸ் முத்தமிழ்க்
காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் தலைமையில் நடைபெற்று வந்தது.
போஸ்டரைப் பார்த்ததும்
சரி... அண்ணாவைப் பார்க்கலாம். அதன் பிறது காரைக்குடி போகலாம் என்று
முடிவெடுத்து, அவர் தங்கியிருந்து சங்கரன் பங்களாவுக்குச் சென்று
அண்ணாவைப் பார்த்தார் ஆர்.எம்.வீ. இவரு வருகையை எதிர்பாராத அண்ணா,
என்ன திடீசென்று? என்றார்.
இல்லை அண்ணா, நான்
கம்பெனியிலிருந்து விலகிவிட்டேன்.
நான்தான் விலவேண்டாமென்று
உனக்கு எழுதினேனே...
அப்புறம் கொஞ்ச நாள்
இருந்தேன். சரிப்பட்டு வரவில்லை. கே.ஆர்.ஆர். அவர்களுக்கும் எழுதிக்
கேட்டேன். சரி... போவதாயிருந்தால் போ என்று பதில் போட்டார். வந்துவிட்டேன்
ராமசாமி அப்படியா
எழுதினார்? ஊருக்குப் போய் என்ன செய்யப்போகிறாய்?
தெரியவில்லை.... அங்கு
போய்தான் யோசிக்கனும்
சரி... நேராக ஊருக்குப்
போய் அம்மாவைப் பார்த்துவிட்டு காஞ்சிபுரம் வந்துவிடு என்றார் அண்ணா.
சரியென்று சொல்வதைத்
தவிர வேறொன்றம் சிந்திக்க வீரப்பன் அவர்களுக்கு அப்போது தோன்றவில்லை.
அதே திருச்சியில்தான்
ஈரோடுக்கு வரும்படி வீரப்பனை அழைத்தார் பெரியார் அவர்கள். அதே திருச்சியில்தான்
காஞ்சிபுரத்திற்கு வா என்று அண்ணாவும் அழைத்தார். இந்த இரண்டு தலைவர்களும்
வீரப்பனை அழைத்ததில் ஒரு வித்தியாசம் இருப்பதை கொஞ்சம் ஆராய்ந்து
பார்த்தால் நம்மால் உணர முடியும்.
பெரியார் அவர்களுக்கு
வீரப்பனை ஓரளவுக்குத் தெரியும். அவரது கணக்கு வழக்குகளை நிர்வகிக்கும்
திறமை, நேர்மை ஆகியவற்றை ஏற்கெனவே பெரியார் அவர்கள் உணர்ந்திருந்ததால்
வீரப்பன் நமக்குப் பயன்படுவார் என்ற எண்ணத்தில் அவர் அழைத்தார்.
அண்ணாவின் அழைப்பு
சற்றே வித்தியாசமானது. வீரப்பன் அவர்களால் அண்ணாவுக்கு எந்த விதமான
பயனும் அன்றைய நிலையில் இல்லை. நமக்குப் பயன்பட மாட்டார் என்பது
அண்ணாவுக்கு நன்றாக தெரியும். ஆனால் கே.ஆர்.ஆருக்கு வீரப்பன் நன்கு
பயப்டக் கூடியவர். அவரை விட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில்தான்
அண்ணா அழைத்தார்.
தன் ஊருக்குப் போய்விட்டு
அங்கிருந்து வீரப்பன் அவர்கள் காஞ்சிபுரம் சென்றார். அங்கே கிட்டத்தட்ட
பத்து மாதங்கள் அண்ணா அவர்களோடு இருந்தார்.
பெரியார் அவ்ரகளோடு
ஈரோடில் இருந்தபோது அங்கே இவருக்குப் பல வேலைகள் இருந்தன. கூடவே
இருக்கவேண்டும், பெரியார் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின்போது கணக்கு
வழக்குகளை பார்க்கவேண்டும் என்பது போன்ற பல வேலைகள்.
ஆனால் உண்மையைச் சொல்வதானால்
காஞ்சிபுரத்தில் வேலையே இல்லை. ஏதேனும் மாநாடுகள் நடந்து அங்கே நாடகங்கள்
ஏற்பாடு செய்யப்பட்டால் அவற்றில் சின்னச் சின்ன வேஷங்கள் செய்வார்.
திராவிட நாடு பத்திரிகை அச்சானதும் அந்தப் பிரதிகளை மடித்து வைப்பார்.
அப்படி சில்லறையாய்ச் சில வேலைகள் மட்டுமே. சில சமயங்களில் அண்ணாவும்
கூட வந்து உட்கார்ந்து பத்திரிகை மடிப்பார்.
அண்ணா அவர்கள் வீட்டிலேயே
சாப்படு. திராவிடநாடு அலுவலகத்தில் தங்கி அங்கேயே இரவு தூக்கம்.
அடிக்கடி அண்ணாவைப்
பார்த்துப் பழகும் வாய்ப்பு கிடைத்து வந்ததால் அவரைப் பார்க்க வரும்
பல்வேறு தலைவர்களை அருகிலிருந்து பார்க்க முடிந்தது.
முக்கியமாக அண்ணாவின்
தன்மை, பல்வேறு பிரச்னைகளில் அண்ணாவின் சிந்தனையோட்டம் எப்படி இருந்தது,
அவரது அணுகுமுறை, கொள்கை விளக்கங்களை அவர் தந்த முறை, எதிர்க்கட்சியைச்
சேர்ந்தவர்களினடம் அண்ணா பழகிய விதம் போன்றவற்றை உணர்ந்துகொள்ள அப்போது
வீரப்பன் அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பு, பின்னாளில் தனது பல்வேறு
அரசியல் பணிகளைச் செம்மையாகக் கவனித்துச் செயலாற்ற அவருக்குக் கைக்கொடுத்தது.
இதற்கிறடையில் தஞ்சையில்
இயங்கி வந்த கே.ஆர்.ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபாவின் நிர்வாகம்
சீர்குலைந்தது. பல்வேறு குழப்பங்கள்.
தஞ்சாவூரில் கிட்டத்தட்ட
ஒரு வருடம் முகாமிட்டாகிவிட்டது. ஓர் இரவு நாடகத்தை நீண்ட நாட்கள்
நடத்தியாகிவிட்டது.
கம்பெனியை இனி முறையாக
நடத்திச் செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.
தன் நாடகக் குழுவின்
நிர்வாகம் சரியான கையில் இருக்கவேண்டும் என்று கே.ஆர்.ராமசாமி அவர்கள்
விரும்பினார்.
ஆர்.எம்.வீ., அண்ணாவுடன்
இருப்பதை அறிந்த அவ்ர உடனே அண்ணா அவர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.
விரப்பனை தஞ்சைக்கு அனுப்பி வையுங்கள் என்று அதில் அவர் கேட்டுக்
கொண்டார்.
கடிதம் கிடைத்ததும்
ஆர்.எம்.வீயை அழைத்த அண்ண நீ தஞ்சாவூருக்குப் போ என்றார். தொடர்ந்து
இப்ப புரிஞ்சுதா நான் ஏன் உன்னை காஞ்சிபுரத்திற்கு வரச் சொன்னேன்னு
என்று அவர் கேட்டதும் ஆர்.எம்.வீ. நெகிழ்ந்துபோனார்.
கே.ஆர்.ஆர். அவர்களுக்கு
ஆர்.எம்.வீ. நிச்சயம் பயன்படுவார் என்பதை நண்குணர்ந்து அவரை விட்டுவிடக்கூடாது
என்று காஞ்சிபுரத்திற்கு வரவழைத்து தன்னிடம் வைத்திருந்து சரியான
சமயத்தில் அக.ஆர்.ராமசாமி அவர்களிடம் சேர்த்துவிட்டது மட்டுமல்ல,
தன் எதிர்காலம் திசை தடுமாறிப்போய்விடக் கூடாதே என்ற நல்ல எண்ணத்தில்
சரியான வாய்ப்பு வரும்வரை காத்திருந்து அண்ணா காட்டிய மனிதநேயத்தை
ஆர்.எம்.வீ. அவர்கள இன்றும் எண்ணியெண்ணி நன்றி பாராட்டுகிறார்.
ஒர் இரவு நாடகத்தை
தஞ்சாவூரில் ஆறு மாதங்களுக்கு அமல் நடத்திய பின் புதிய நாடகம் ஒன்றை
நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அறிஞர் அண்ணா ஏற்கெனவே எழுதி
வைத்திருந்த ஜுபிடர் பிக்சர்ஸ் திரைப்பட உரிமைபெற்ற வேலைக்காரி நாடகத்தை
மேடையேற்றினார்.
அந்த நாடகமும் ஓர்
இரவு நாடகத்தைப் போலவே நூற்றைம்பது நாட்களுக்கு மேல் நடைபெற்று புகழ்பெற்றது.
இதற்கிடையில் மூத்த
நிர்வாகியாக இருந்த எத்திராஜ் யதார்த்தம் பொன்னுநாமி போன்றவர்களின்
நிர்வாகத் தொடர்பும் குறையத் தொடங்கவே, கிருஷ்ணன் நாடகக் கம்பெனியின்
முழுப் பொறுப்பையும் ஆர்.எம்.வீ.யே ஏற்கவேண்டி வந்தது.
தஞ்சை முகாம் முடிந்த
நிலையில் ஓர் ஒப்பத்தத்தின் பேரில் நாடகக் கம்பெனி திருச்சிக்கு
முகாம் பெயர்ந்தது.
|