அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி: 22

நெஞ்சம் மறப்பதில்லை
ஏ.எஸ்.ஏ. சாமி, திரைப்பட இயக்குநர்.

மாமேதை பேரறிஞர் அண்ணா அவர்களோடு பழக வாய்த்த அந்தத் தேனான காலத்தைஇ அந்தப் பழக்கத்தின் இணைப்பிலே பொங்கி வழிந்த பாசத்தின் உயிர்ப்பினை நினைக்கின்றபோதெல்லாம், அவர்களைப் பற்றிப் பேச வேண்டியபோதெல்லாம்; எடுத்த எடுப்பிலேயே அண்ணா என்ற சொல்தான் பீறிட்டு வருகிறது உள்ளத்திலிருந்து.

1944-ம் ஆண்டு!
எனது வாழ்க்கையின் பயனை - அதாவது எனது பிறப்பின் பயனை நான் அடைந்த ஆண்டு. ஆம் . அந்த ஆண்டுதான் பெறுதற்கரிய அந்த மாமேதையின் நட்பு நிழல் என் மீது கவியத் தொடங்கியது. பேரறிஞர் அவ்ரகளை முதன்முதலில் நான் சந்தித்தது ஈரோடு நகரத்தில் தந்தை பெரியாரை இந்நாட்டுக்கு அளித்து உவந்த ஈரோடு, பேரறிஞர் அவர்களைச் சந்திக்கும் பொன்னான வாய்ப்பினை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

நான் எழுதிய பில்ஹணன் எனும் நாடகம் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவினரால் அரங்கேற்றப்பட்டு வெற்றிப் பாதையில் வாகை சூடிப் பயணம் செய்துகொண்டிருந்த நேரம். ஈரோட்டில் அந்த நாடகம் மக்களின் அமோக வரவேற்புடன் நடைபெற்றக்கொண்டிருந்தது. எனதருமை நண்பர் திரு.அவ்வை சண்முகம் அவர்களின் விருப்பத்தை ஏற்று பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடகத்தைக் காண வருகை தந்திருந்தார்கள். நாடகம் முடிந்த பின்பு அவர்களும் நானும் இரவு ஒரே இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது.

நான் தயக்கத்தோடு இருந்தேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசினார்கள். என்னைப் பேச வைத்தார்கள். நான் என்னை மறந்து பேசினேன். கருத்துக் குவியலாம் பேரறிஞர் அண்ணாவின் தமிழ் மழையில் நனைந்து, மாந்தித் திளைத்தேன். பில்ஹணன் நாடகம் அவர்களை மிகவும் கவர்ந்துவிட்டது. திறமைக் கதிரோனாகிய அவர்கள், பிறர் திறமைகளை மறப்பதில்லை பிறரிடம் உள்ள திறமைகளைக் கண்டு மகிழ்ந்து போவார்கள். அதை ஒளிவிடச் செய்ய வழிவகையும் சொல்லி உதவுவார்கள்.

புதுமையான நடை; நல்ல நல்ல வசனங்கள்; கட்டுக்கோப்பான காட்சிகள்; தெளிவான ஆற்றொழுக்கான அமைப்பு . . . என்றெல்லாம் பாராட்டிப் பேசினார்கள்.

நாடகத்தைப் பற்றி ஒரு தெம்பு பிறந்தது. என்னில் எனக்கே ஒரு நம்பிக் விறந்தது . . . நாடகம் எனது முதல் படைப்பாயிற்றே . . . !

ஆனால் . . .! பாராட்டைத் தொடர்ந்து அண்ணா அவர்களிடமிருந்து வந்த இந்த வார்த்தை என்னைக் குழப்பியது. தெம்பு திகைப்பாக மாறியது. நம்பிக்கை நாணத் தொடங்கியது. என்ன சொல்லப் போகிறார்கள்? நான் தடுமாறினேன்.

ஒரு காதல் நாடகத்தை எழுதியதற்குப் பதில் அல்லது அப்படி ஒரு நாடகத்தி எழுதுவதோடு மக்களுக்குப் பயனான கருத்துகள் சொல்வதற்கும் உன் திறமைகளைச் செலுத்தியிருந்தால் நாட்டிற்கு அது எவ்வளவு நலம் பயப்பதாக இருக்கும்? நீ படித்துப் பட்டம் பெற்றவன்; அரசியல் பின்னணியும் இருக்கிறது; உனது திறமையும், கலை ஆர்வமும் நாடகத்தில் பளிச்சிடுகிறது. இவ்வளவு தகுதிகளையும் உன் போன்ற இளைஞர்கள், மக்களின் எண்ணங்களை, சிந்தனைகளை, செயல்களைச் சரியான வழியில் செலுத்தத் தட்டி எழுப்பப் பயன்படுத்தலாமே . . . உள்ளத்திற்கு உற்சாகம் தரும் காட்சிகளோடு நல்லறிவையும் சீரிய சிந்தனையையும் தூண்டுகின்ற கருத்துக்களைக் கூறலாமே . . ! இப்படியெல்லாம் ஒரு உண்மையான சமுதாயச் சிந்தனை உள்ள படைப்பாளியின் கடமை எவை எவை என்று பேரறிஞர் அவர்கள் எனக்கு உணர்தினார்கள்.

பேரறிஞர் அவர்கள் எனக்குச் சொன்ன முதல் அறிவுரை அது.

தவறு - அறிவுரை என்ற சொல்லை அண்ணா அவர்களே ஆமோதிக்க மாட்டார்கள். அறநெறியினை கடமைக்காக அள்ளித் தருகின்ற ஒரு சில ஆசானைப் போல என்றுமே அவர்கள் வழங்கியதில்லை. சொல்ல நினைப்பதை அன்போடு, அரவணைப்போடு, புன்னகை ஒன்று மெல்லியதாக மலர்ந்தின மென்மையாகத்தான் கூறுவார்கள்.

என்னைப் பற்றிக் கேட்டார்கள். நான் சொன்னேன். இலங்கையில் பிறந்து வளர்ந்ததை, அங்கேயே லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியானதை, ஓராண்டுக் காலம் அங்கேயே ஆசிரியனாகப் பணிபுரிந்ததைக் கூறினேன். அதே மக்கள்தம் நலம் உரிமைகளுக்காகப் போராட இலங்கை இந்திய காங்கிரஸ் நிறுவனத்தை உருவாக்கியர்களில் ஒருவனாக இருந்ததை, அதன் முதல் செயலராகப் பணியாற்றியதைச் சொன்னேன். (ஆம்! இப்பொழுது இலங்கையில் திரு.சௌமிய மூர்த்தி தொட்டைமான் அவர்கள் தலைவராக இருக்கிறார்களே, அதே இலங்கை இந்திய காங்கிரஸ் நிறுவனம்தான்) 1942-ம் ஆண்டு பெற்றோர்களுடன் தாயகமாம் தமிழகத்திற்குத் திரும்பியது - அனைத்தையும் பேரறிஞர் அண்ணா அவர்கள் கவனமாகக் கேட்டார்கள்.

அண்ணா அவர்களையும் என்னையும் இணைத்துப் பேசுகின்றவர்கள் அனேகமாக வேலைக்காரி திரைப்படத்தைப் பற்றித்தான் பேசுவார்கள்.

வேலைக்காரி படத்தை நான் இயக்குதற்கும் அதன்பின் அண்ணா அவர்கள் தனது தம்பியரில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டதற்கும், அதன் விளைவாக எனது குடும்பத்தில் ஒருவராக எங்களோடு அவர்கள் இணைந்து கொண்டதற்கும், நாடறிந்த ஒருவனாக நான் உருவாகியதற்கும் மேலே நான் கூறிய அந்த முதல் சந்திப்புதான் விதை.
வேலைக்காரி படப்பிடிப்பின்போது நடந்த அறிவைத் தீட்டிய நிகழ்ச்சிகள் எத்தனை எத்தனையோ . . . இதோ அவற்றில் ஒன்று . . .

கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் வேலைக்காரி படப்பிடிப்பு நடந்தபோது அண்ணா அவர்கள் அடிக்கடி அங்கு வருவார்கள். உயர்தர ஓட்டல்கள், ஒயின், ஒய்யாரம் ஆகியன அவர்களுக்கு எட்டிக்காய். ஜூபிடர் நிறுவனத்தினர் ஓட்டல்களில் அறை ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். அண்ணா அவர்கள் அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டு எங்கள் வீட்டில் தங்கும்போதெல்லாம் நானும் எனது மனைவியும் அவர்களுக்கு பணிவிடை செய்திடும் வாய்ப்புக் கித்ததை கிடைத்தற்கரிய பெரும் பாக்கியமாகக் கருதினோம்.

ஒரு முறை . . . !
ஈ.வெ.கி.சம்பத் அண்ணா அவர்களுடன் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். திடீரென ஈ.வெ.கி சம்பத் அவர்களுக்கு சென்னைக்கு வரவேண்டும் என்று ஒரு தந்தி வரவே, அவர்களை அந்றைய விமானம் மூலம் அனுப்பி வைக்க முடிவு செய்து, அவ்விதமே அனுப்பிவிட்டு வீடு திரும்பினோம்.

குறுக்குப் பாதை ஒன்று தென்பட்டது. அதன் வழியாக காரை ஓட்டினேன். அப்போதுதான் விமானம் மேலே கிளம்புவதற்காக விமான தளத்தின் ஒரு கோடிக்கு விரைவாக ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது.

வேகம் அதிகரித்து விண்ணில் விமானம் பாய்ந்து பறப்பதைப் பார்க்கலாமே என்று நான் காரை நிறுத்தினேன். விமானம் திரும்புயது. நாங்கள் இருந்த பக்கமாக வேகமாக முன்னேறியது. வேகம் அதிகரித்து விண்ணிலே பாய்ந்தது. விமானம் காற்றைப் பிளந்து திரும்புகின்றபோது காற்றின் வேகம் காரின் முகப்புப் பகுதியைப் (சூடிநேவ) பிடுங்கியேவிட்டது. அதனைச் சரிசெய்துகொண்டு புறப்பட்டோம்.

சற்று தொலைவு சென்றதும் விமான நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், அலுவலர்களும் எங்களை வழிமறித்தனர்.

விமான ஓட்டி வயர்லெஸ் (றுசைநடநளள) கருவி மூலம் யாரோ விமானத்திற்கு நேர் எதிலே காலை நிறுத்தியிருந்தார்கள். விமானம் திரும்பும்போது அதன் இறக்கை கார் மீது மோதி பேராபத்தோன்று நிகழவிருந்தது. அவர்களை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைத்து வேண்டியன செய்யவும் என்று எங்களுக்குக் கூறிப் போயிருக்கிறார். எனவே, காவல் நிலையத்துக்கு வாருங்கள் . . . என்று அவர்கள் எதிர்பாராத ஓர் அதிர்ச்சியினைத் தந்தார்கள்.
வேண்டும் என்ற செய்யவில்லை. தெரியாமல் நடந்துவிட்டது என்று நயந்து சொன்னேன்.

விமான ஓட்டி சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அதை நாங்கள் மீறுவதற்கில்லை என்று அதிகாரிகளும் அலுவலர்கள் பிடிவாதம் பிடித்தார்கள். நான் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் காவல் நிலையத்துக்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்று சாதித்தார்கள்.

இவ்வளவு போராட்டங்களுக்கம் இடையே அண்ணா அவர்கள் வாயே திறக்கவில்லை. ஆனால் நிலைமை கடுமையாகிக்கொண்டிருப்பதைக் கவனித்தும் நிதானமாக ஆனால் ஆணித்தரமாக, இது பொதுவழி அல்ல என்று ஏதாவது அறிவிப்பு (சூடிவஉந க்ஷடிசயன) இங்கே வைக்கப்பட்டிருக்கிறதா என்று அவர்களைக் கேள் என்று காதோடு என்னிடம் சொன்னார்கள்.

அவர்கள் எடுத்துக் கொடுத்த அம்பை எய்தினேன்.

அவ்வளவுதான் . . . ! அதுவரை உரத்தக் குரலில் அடித்துத் பேசியவர்கள் ஒடுங்கிப்போய்விட்டார்கள். பேசத் திணறினார்கள். மிரண்டு விதுதார்கள். ஒருவர் முகத்தி ஒருவர் இரக்கமாகப் பார்த்துக்கொண்டார்கள். காரணம், அப்படி ஓர் அறிவிப்பு பலகை அங்கே இல்லை.

அடுத்து எதுவுமே பேசாமல் அதிகாரிகள் எங்களை அனுப்பிவிட்டது மட்டுமல்ல, மறுதினமே பொது வழி அல்ல (சூடி.ஹனனஅளைளடி) என்ற அறிவுப்புப் பலகையையும் மாட்டிவைத்தார்கள்.

வீடு திரும்பும்போது அண்ணா அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அப்படி ஓர் அறிவிப்புப் பலகை அங்கே இருந்திருந்தால் காரை அவ்வழியே ஓட்டிச் சென்றிருப்பாயா?

நிச்சயமாக மாட்டேன் ஆகவே குற்றம் உன்னுடையதல்ல. குற்றம் உன்னுடையதாக இல்லாதபோது நீ தளர்ந்ததேன்? நயந்து பயந்து தாழ்ந்து போக அவசியமென்ன? தெரியாமல் நடந்துவிட்டது என்று கண்ணியமாக மன்னிப்புக் கோருகின்ற தன்மையில் சொல்கிறாய். தவறு அவர்கள் பக்கம் இருந்த போதிலும் அவர்கள் கேட்கவில்லை. அந்தக் கட்டத்தில் தவறு அவர்கள் மீதுதான் என்று அழுத்தந்திருத்தமாக கூறி நீ நிமிர்ந்தல்லவா நிற்கவேண்டும்

சிறிது சிந்தித்த நான், ஆமாம் அண்ணா புத்தியைத் தீட்டத் தவறிவிட்டேன் என்றேன்.
அண்ணா அவர்கள் சிரித்துவிட்டார்கள். காரணம் அதற்கு முன்தினம்தான் வேலைக்காரி படத்தின் மிகப் புகழ்பெற்ற வசனங்களில் ஒன்றாகிய கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு என்ற வசனம் படமாக்கப்பட்டிருந்தது.

வேலைக்காரி படப்பிடிப்பிற்குப் பின்பு நடந்த ஒரு நிகழ்ச்சி.
அண்ணா அவர்கள் எங்கள் குடும்பத்துடன் ஒன்றிப் பழகிய காலம் அது. கோவை நகர்ப் பக்கமாக எங்கு வந்தாலும் வீட்டிற்கு வந்து தவறாது நலம் விசாரித்துப் போவார்கள்.
இடையிலே, ஒன்று சொல்லிவிடவேண்டும் இங்கே - ஜூபிடருக்காக நான் படைத்த எல்லா கலைப் படைப்புகளும் ஒன்றன் பின் உன்றாக வெற்றி பெற்றுக்கொண்டிருந்த நேரம். அதிலும் வேலைக்காரி மாபெரும் வெற்றி. எனவே ஒரு சிலரை சில சமயங்களில் திரையுலகின் பகட்டும் படாடோபமும் பிடித்தாட்டுவதுபோல் என்னையும் தீண்டத் தொடங்கியிருந்தன. சட்ட்ப் பித்தான்கள், கடிகார கைச் சங்கிலி . . இன்னம் என்னவெல்லாமோ ஒரே தங்க மயம். அண்ணா அவர்களின் மனது இதைக் கண்டு கசந்திருக்கவேண்டும். தடுத்து நிருத்தத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தார்கள் போலும்.

அன்று அண்ணா அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது நான் இல்லை. படப்பிடிப்பிற்குச் சென்றிருந்தேன். என் மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டிருக்கிறார்கள்; சாமி நிறையச் சம்பாதிக்கிறானே சேமிப்பு உண்டா? என்று.

வருகின்ற பணத்தையெல்லாம் செலவு செய்துவிடுகிறார்கள் - இது பதில்.

உனக்கேதும் நகைநட்டுச் செய்துபோடுவதுண்டா? இது அண்ணா அவர்களின் அடுத்த கேள்வி.

பதில். . .! எனது மனைவியின் மௌனம். அண்ணா அவர்கள் அந்த மௌனத்தின் பொருளினைப் புரிந்துகொண்டுவிட்டார்கள்.

நான் மாலையில் வீடு திரும்பியதும், எதுவுமே கூறாது எங்கள் இருவரையும் கடைத்தெருவுக்கு அழைத்துச் சென்றார்கள். கார் மு/சு/சு/ ளுடீசூளு நகைக் கடை முன்பு நின்றது. நாங்கள் உள்ளே சென்றோம்.

உனக்குப் பிடித்தமான நகையைப் பார் என்றார்கள் என் மமைவியிடம்.
ஏற்கனவே குழம்பிப் போயிருந்த எனக்கு இது மேலும் புதிராக இருந்தது. அண்ணா அவர்களைக் கேள்விக் குறியோடு பார்த்தேன்.

தாயம்மாளுக்கு நகை வாங்குகிறோம் என்றார்கள்.
அப்பொழுதும் எனக்குப் புரியவில்லை. அவர்களின் காதில் ரகசியமாக வார்த்தை இழைத்தேன். திடீரென்று . . . இப்படி . . . என்னிடம் அவ்வளவு பணம் . . . இப்போதைக்கு உன் தங்கப் பொத்தான்களை, கடிகார தங்கச் சங்கிலியைக் கொடுத்துவிடு. உனக்குப் பின்னால் புது மாதிரியாக வாங்கிக் கொள்ளலாம் என்றார்கள்.

அண்ணா அவர்கள் சொல்லி விட்டார்களே! அடுத்த வார்த்தை நான் சொல்ல முடியுமா? அவர்கள் விரும்பிய வண்ணமே செய்தேன். என் மனைவிக்குப் புது நகை ஒன்று கிடைத்தது.

சற்றும் எதிர்பாராத அந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்துவிட்டது. நெஞ்சு கனத்தது, முகம் சோர்ந்துபோயிற்று.

அவர்களுக்கே உரித்தான தனிமோகப் புன்முறுவலுடன் அண்ணா அவர்கள் சொன்னார்கள்.
உன் நகைகளை ஏன் கொணடத்துவிடச் சொன்னேன் தெரியுமா? அவையெல்லாம் உனக்குத் தேவை இல்லை. கூடவும் கூடாது. வேண்டவும் வேண்டாம். மக்களிடம் நிறையச் செல்வாக்குப் பெற்றிருக்கிறாய். அதுதான் உனக்கு இனி அணி அலங்காரம். நீ உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறாய். ளுடி வாந பைநச லடிர சளைந, வாந ளஅயீடநச லடிர ளாடிரடன ரஅடெந னடிற
எனக்குக் கண் திறந்தது.
அன்று முதல் இது நாள் வரை அந்த அடக்கத்தைக் கடைப்பிடித்து வருவதே, அண்ணா அவர்களக்கு நான் செய்யும் அஞ்சலி; செலுத்தும் நன்றிக் கடன் என்று அணுவளவும் பிசகாது நடந்து வருகிறேன்.

அண்ணா அவர்களின் சீரிய தொடர்பு கித்தமையால் நான் அடைந்த பெருமைகள் பற்பல. அனுபவங்கள் ஏராளம்; பெற்றுக் கொண்ட பாடங்கள் கணக்கில்லாதவை.

இன்று நான் நானாக இருப்பதற்கு அவை அத்தனையுமே - காரணங்கள்
ஓங்குக அண்ணாவின் புகழ்!

அவர் ஒரு இசை மேதை
இசைச் சித்தர் - சி.எஸ்.ஜெயராமன்


அண்ணா அவர்கள் முறையாகவும், சரியாகவும் அடிப்படை இசையைப் பயின்றுகொண்டவர்கள். அண்ணா அவர்கள் இசையரங்கில் அரங்கேற்றம் நடக்கும் பருவத்தில் இருந்தவராவார்கள். இயற்கை சூழ்நிலை காரணமாக அரசியலில் நுழைந்துவிட்டார்கள்.

சரளி, அலங்காரம், கீதம், வர்ணம் வரையிலும் பாடி செயலாற்றும் திறமை கொண்டவர்கள்.

எங்கு பேசினாலும், எதைப் பேசினாலும் இசையை உவமை கூறி, வர்ணம் வரையிலும் பாடி செயலாற்றும் இசை நடையாகவே சொற்பொழிவாற்றுவார்கள். பல மேடைகள்ல அவர்கள் பேசி நான் கேட்டுள்ளேன்.

அண்ணா அவர்கள் தம் ஓய்வு நேரங்களில் தனது இல்லத்திற்கு என்னை அழைத்துப் பாடச் செய்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு நாள் ஒரு பாடலை பாடிக்கொண்டிருந்தேன். அப்பாடல் வரகவி கே.பி.காமாட்சி சுந்தரன் என்பவரால் புனையப்பட்டது. அது பின்வரமாறு:- இராகம்:- மேச கல்யாணி தாளம்- ஆதி
பல்லவி
சிங்கார கலை தரும் சங்கீதம்தான் உலகெங்குமே
இன்பமே / சிங்/

அனுபல்லவி
மங்காத எழுசுரம் தன் கார்வையில் பிறந்து
மாறி மாறி வெகு ராகங்களாய் சிறந்த
/சிங்கார/

சரணம்
மக்களின் மழலை தன்னிலே :இளம்:
மாதர்தம் நகையொலியிலே
கற்ற தக்கவர் வாய் மொழியிலே
தினம் தரங்கம் அசைக்கும் அசையிலே தென்றல் வசந்தம் ஒலிக்கும் உலியிலே வரும் /சிங்கார/

மேற்கூறிய பாடலைப் பாடிவருகையில் அநுபல்லவியாகிய மாறி மாறி வெகு ராகங்களாய் சிறந்த என்ற சொல்லை எப்படிப் பாடுகிறாய்? என்று அண்ணா அவர்கள் கேட்டார்கள்.
நான் அதனுள் இருக்கும் நுணுக்கத்தை அறியாது யதார்த்தமாகவே, சரியாகத்தான் பாடுகிறேன் என கூறினேன்.

அதற்கு அவர்கள் அறிவீனமாய் பாடுகிறாய் என்று கூறாது, சற்று சிந்தித்துக் கூறு; என்று சொன்னார்கள்.

அப்போதும் நான் கவனிக்காது, சரியாகத்தான் பாடுகிறேன் எனத் திமிராகக் கூறினேன். அதற்கு அவர்கள் நீ அறியாது பாடுகிறாய் என்பதை உணர்ந்துகொண்டேன்; யீகவே கண்டுபிடித்துப் பாடுகிறாயே? நான் விளக்கம் கூறட்டுமா? என்று கேட்டார்கள்.

கூறுங்கள் என்று சொன்னேன். உடன் அவர்கள் மாறி மாறி வெகு ராகங்களாய் என்று பாடுகிறாய்; மாறி என்ற வெகு இராகத்தை மாற்றிக்கொள்ள வேண்டாமா? என்று கேட்டார். திகைத்துப்போன நான், அண்ணா மன்னித்து விடுங்கள் என்று கூறினேன்.

அதற்கு அண்ணா அவர்கள் நீயாகிலும் இராகத்தை மாற்றமல் பாடினாய்; அதை மன்னிக்கலாம். கருத்துச் சிதைவு, பொருட் சீதைவுடன் தமிழன் என்று கூறி ஒரு சிலர் பாடுகிறார்களே, அவர்களைத் திருத்த என் போன்றோர்களால் முடியாது. காரணம் அடிப்படைப் பயிற்சியிலிருந்தே அவர்கள் தவறாகவே பயிற்சி பெற்று வந்து விடுகிறார்கள் எனக் கூறி எனக்கு ஆசி கூறினார்.

எதைப் பேசினாலும் அண்ணா அவர்கள் தலைப்பை வீட்டு மாறவே மாட்டார்கள். எடுத்துக்கொண்டப் பொருளை விட்டு வேறு வங்கும் செல்லமாட்டார்கள். அவரைப் பேரறிஞர் அண்ணா என்று சொல்வதைவிட மூதறிஞர் அண்ணா என்றுதான் நான் கூறுவேன்.

அண்ணா அவர்கள் 1968 - 71-ல் நாடு அரசு இசைக்கல்லூரியில் கௌரவ இயக்குநராக நியமித்தார்கள். அதனை சட்டசமையில் உறுப்பினர் ஒருவர் பல வித்வான்கள் இருக்கையில் திரு.சிதம்பரம். எஸ்.ஜெயராமன் அவர்களை அரசு இசைக்கல்லூரியில் கௌரவ இயக்குநராக பணி நியமனம் செய்ததன் காரணம் என்ன? எ.ன்று கேட்டார்.

அதற்கு அண்ணா அவர்கள் கூறிய ஒரே பதில் அவருக்கு இணையான ஒருவரை கூறினால், இப்போதே அவரை ராஜிநாமா செய்துவிடச் செய்கிறேன். எந்தவிதமான பதிலையும் சொல்லவில்லை.

இதனை என் வாழ்நாள் முபவதும் மறக்கவே முடியாது. என்னை கௌரவிப்பதற்காக எனது முதல் பெண்ணின் திருமளத்தை தலைமை வகித்து நடத்தித் தந்தார்கள்.

மறக்க முடியுது; மறுக்க முடியாது; அவர்தான் பேரறிஞர்; : மூதறிஞர்!

வாழ்க அண்ணாவின் புகழ்!!
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!!


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai