அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி: 20

பாடுவதில் தேறவில்லை
அறிஞர் அண்ணா அவர்கள் பாட்டுப் பாடினார்கள் - அதுவும் பொதுமக்கள் முன்னிலையில் மேடையில் பாடினார்கள் என்றால், பலரும் வியப்படையவே செய்வர். ஏனெனில், அறிஞர் அண்ணா அவர்களுக்கு இசைபாட எவ்வளவு இனிமையாக வராது என்பதைப் பலரும் நன்கு அறிவர். அப்படியிருந்தும் அண்ணா அவர்கள் மூன்று தடைவைகள் துணிவோடு பாட்டுப் பாடிக் காண்பித்திருக்கிறார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் 1943-ஆம் ஆண்டில் சந்திரோதயம் நாடகம் எழுதி, முதல் முயற்சியாக அவலே நடித்துப் பார்ப்பதற்கு, வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திருவத்திபுரம் என்ற பேரூரைத் தேர்ந்தெடுத்தார்கள். அங்கு முயற்சி வெற்றிகரமாக முடியவே பிறகு பிற ஊர்களிலும் அவ்ரகள் நடிக்க ஆரம்பித்தார்கள். வழக்கமான நடித்து நடிப்புக்கலையில் தேர்ந்த மிகச் சிறந்த நடிகரைப்போல் நடிக்கும் ஆற்றல், அறிஞர் அண்ணா அவர்களிடம் உண்டு என்பதைப் பலரும் அறிவர். அண்ணா அவர்கள் நடிப்பில் தேறினார்கள், ஆனால் பாட்டுப் பாடுவதில் தேறவில்லை.

அண்ணா அவர்கள் சந்திரோதயம் நாடகத்தில் பலரோடு சேர்ந்தும், தனியாகவும் மூன்று ஊர்களில் பாடிப்பார்த்தார்கள். அவர்கயே உணர்ந்தார்களோ அல்லது அவரது இசை இனிமையைக் கேட்டவர்கள் விரும்பிக்கேட்டுக்கொண்டார்களோ, தெரியவில்லை, பாடுவதை பிறகு நிறுத்திவிட்டார்கள்.

அண்ணா அவர்கள் பாட்டுப் பாடும் அரிய காட்சியைக் கண்ட ஊர்கள் திருவத்திபுரம், சென்னை, திருச்சி ஆகிய மூன்று ஊர்கள்தாம்.
(மன்றம், நாள்: 15.09.1955)


அழைப்பு
அடுத்த மாதத்திலே தீவிர இளைஞர் மாநாடு காஞ்சியில் நடைபெற இருக்கிறது. காஞ்சீபுரம் தேழர் முனுசாமி பி.ஏ. அவர்கள வரவேற்புக் கழகத் தலைவர். தோழர் சி.டி.நடராஜன் எம்.ஏ.பி.எல்., திறப்பு விழாவாற்றவும், நெடும்பலம் தோழர் என்.ஆர்.எஸ்.ராமலிங்கம், பி.ஏ., தலைமை தாங்கவும் குறிப்பிட்டுள்ளனர். திராவிட நாட்டுப் பிரிவினையை வலியுறுத்த இம்மாநாட்டில் வேலைத் திட்டம் வகுக்கப்படும். என்னைக் கலந்தாலோசித்தனர். நான் சில யோசனைகள் கூறினேன். மாநாட்டிலே திருவாரூர் தோழர் டி.வி.நமசிவாயம், பாரதிதாசனின் திராவிட நாட்டுப் பண்ணைப் பாடவும், லெனின், பெரியார் படத் திறப்புவிழக்களை முறையே தோழர்கள் டி.பி.எஸ்.பொன்னப்பன், ஏ.கே.டி.சாம்பசிவம் ஆகியோர் நடத்தவேண்டும் என்றும் கூறினேன். மாநாட்டு வேலைகள் பூர்த்தியானதும் அழைப்பு அனுப்புவர். நானும் ஓர் அழைப்பு விடுத்துவிடுகிறேன். மாநாட்டுக்கல்ல, திருமணத்துக்கு. தோழர் ஏ.கே.டி.சாம்பசிவம் (தோழர் ஏ.கே.தங்வேலரின் திருமகனால்) அடுத்த மாதம், தமிழ் முறையில் திருமணம் நடத்திக்கொள்ளப்போகிறார். பெரியாரும், பாரதியாரும் வர ஏற்பாடு நடத்கிறது. பாகவதர் நமச்சிவாயம், தண்டபாணி தேசிகர் இசைவுருந்து. தங்கவேலர் ஆதிலட்சுமி அம்மையார் தம்பதிகளின் உபசாரம். இவ்வளவுக்கும் உங்களை அழைக்கிறேன் வருக!
- சி.என்.அண்ணாதுரை - திராவிட நாடு - 12.07.1942.


தோழர் எஸ்.வி.லிங்கம் தெரியும் உங்களுக்கு, காலமும் கட்சிப் பணியாற்றியதால் உண்டான கஷ்டமும் சேர்ந்து கரியநிறத்தையும், கவலை உள்ளத்தையும் காலில் சக்கரத்தையும், தரப்பெற்று, தமிழகத்தில் மாநாடு, விழா நாள் அறிக்கை வெளியிடுதல் முதலியவற்றைச் செய்வதிலே தனிருசியுடன் விளங்கும் தோழர். அவர் சொன்னார் தீட்சிதர் வீட்டிலே ஆதித்திராவிடருக்குக் கலியாணம் என்று!

தோழர் லிங்கம் பேச்சு அலாதியானது! சரளமான ஹாஸ்யம், சமத்திலே வீரம், சுருக்கென்று தைக்கும் சொல்லம்பு, இவற்றுடன் அபூர்வமான வியாக்யானங்களைச் சிலசமயம் கூறுவார் தோழர் லிங்கம். அவருடைய ஹாஸ்யம், சிரிப்பை மூட்டவேண்டுமென்பதற்காகச் சிலர் சொற்றொடர்களை வைத்தடுக்கிக் காட்டுகிறார்கயே, அது போன்றதல்ல! திரும்பத் திரும்ப ஒரே விஷயத்த்க்கூறி, அதிலே உள்ள ஹாஸ்யத்தைப் பொதுமக்கள் கண்டுகொள்ளவில்லையே என்று கவலைப்படும் பேச்சல்ல. சிரக்கவைக்கவேண்டும் என்பதற்காகவே, சிரமப்பட்டு சிலகூற முற்படுபவலல்லர் லிங்கம். சகசமாக, இயற்கையாக வரும் அந்த ஹாஸ்யம், சினிமாவிலே தோழர் என்.எஸ். கிருஷ்ணன் எங்ஙனம் ஹாஸ்யத்தை அரியமுறையில் வெளிப்படுத்தக் காண்கிறோமோ, அதுபோல் தோழர லிங்கம், அவரது பேச்சின் ருசி வரவரக் குறைகிறதோ என்று அஞ்சவேண்டிவருகிறது. அதற்குக் காரணம் அவரல்லவே. இக்ம் அவரைச் சரியாகப் பயன்படுத்தாததுதானே என்பதை எண்ணும்போது வருத்தமும் பிறக்கிறது. நமக்கோ, அஞ்சவும் வருந்தவும் முடிகிறதே தவிர, ஆறுதல் கூறவோ, குறைகளையவோ, சக்தியில்லை. மனம் இருக்கிறது மார்க்கம் இல்லை! சிதம்பரத்தில் 11, 12ஆம் தேதிகளில் ஜஸ்டிஸ் சுயமரியாதை மாநாடுகள் மிக விமரிசையாக நடைபெற்றன. வந்தனம் கூற வந்தார் லிங்கம். மாநாட்டின் அருமை பெருமைகளைச் சீர்சிறப்புகளை, முக்கியத்துவத்தை விளக்க அவர் முக்கால்மணி பேச முற்படவில்லை. மூதுரை, சிறுகதை ஓதவில்லை. நாலே வார்த்தையில் நகைச்சுவையும் பொருட்சுவையும் அடைத்து வீசினார், மாநாட்டிலே.

சிதம்பரத்திலே, ஜஸ்டிஸ் சுயமரியாதை மாநாடு நடப்பதென்றால் அது தீட்சிதர் வீட்டிலே ஆதித்திராவிடருக்குக் கலியாணம் நடப்பது போன்றது என்றார். ஆனந்தமும் ஹாஸ்யமும் அழகிய கருத்தும் அந்த ஒரு டசன் பதங்களிலே எவ்வளவு சமணீயமாகப் பொதிந்துள்ளன பாருங்கள்! ஐந்தாறு நிமிடங்களாயின் கரகோஷம் அடங்கா!

இத்தகைய முடிவுரையின், முன்னுரை, இலேசானதல்ல!

இரண்டாண்டுகளுக்கு முன்பு, வடாற்காட்டிலே வடசேரியிலே, வாலிபவீரர் தோழர் சபாரத்தினம் நடாத்திய ஜஸ்டிஸ் மாநாட்டிலே தலைமை வகித்துவிட்டுப்பிறகு, வெளிக்கிளம்பாமல் இருந்து வந்த தொழர் று.ஞ.ய.சொந்தரபாண்டியன் அவர்களின் தலைமையிலே ஜஸ்டிஸ் மாநாடு சடைபெற்றது, என்றால் அதில் சரி.கிரிப்சிடம் பேசிவிட்டு வந்த நமது இயக்கத் தூது கோஷ்டியில் ஒருவரான பாண்டியனாரின் தலைமையில், வைதிகக் கோட்டையிலே மேற்படி மாநாடு நடப்பதென்றால், இலேசான காரியமென்று கூற முடியுமா!

தில்லை மூவாயிரவர் தலத்திலே திராவிடர் ஐயாயிரவருக்கு மேலாகவே கூடி, ஆரியவேதமோதிடும் வீதிகளிலே தமிழ் வீரமுழக்கம் செய்துகொண்டு, நடராசர் நடனமாடும் பதியிலே நாட்டுத் தலைவர்கள் பாட்டு மொழியிலே பரணியுரைத்தனரெனில் அஃது இலேசானதாகுமா!

சிதம்பரம் மாநாடு கூடும் அத்தினம் காலைவரையிலே காங்கிரஸ் உலகமே களிப்பெனுடம் கடலிலே மூழ்கிக்கிடந்தது. பிற்பகலில்தான், அக்கடலிலே செய்திச்சுறா கிளம்பி, அவர்களைச் சிதைத்தது பத்திரிகைகளிலே முழுப்பக்க முந்திரிக்கொட்டை எழுத்தலங்காரங்களென்ன, முறுவலும் கண்சிமிட்டலுமென்ன, முகமனும் முரசுமெவ்வளவு. அடடா, ஆனந்தத் தாண்டவமாடினர் காங்கிரசார். . . மானாட, மழுவாட, மங்கை சிவகாமியாட என்று பாடுவார்களே அதுபோல் டில்லி நிருபர்க்கூற மித்திரன் இந்து எடுத்தோத அக்கிரகாலம், ஒலிபரப்ப, அடியார்கூட்டம் தமுக்கடிக்க அற்புதமான சுயராச்யம் வந்துவிட்டது கிரிப்ஸ், நாம் கோரிய வரத்தைக் கொடுத்தேவிட்டார் என்று மங்களம் பாடினால் காங்கிரசால் ஜவகர் ராணுவமந்திலி ஆச்சாரியார் அடுத்த மந்திரி! மாகாணங்களிலே மந்திரி சபைகள்! இனி ஆட்சி காங்கிரசாரிடத்தான் என்று கூறினால். ஆடினர் இனிமேல் வீரும் ஜஸ்டிசுடம என்னசெய்யும் என்று இரங்கினவர் போல் கேட்டனர். தலையங்கக்கள் கூட ளிவந்துவிட்டன.
(அண்ணா - 1944)

இவை போன்ற இன்னலும் இழுக்கும் இனியும் நமக்கில்லாமற்போக அவடுமாயின், சிதம்பர மாநாட்டிலும், அதுபோன்ற மாநாடுகளிலும், நாம் கூடுவதும் பேசுவதும், பிரிவதுமாக இருக்கும் முறைமாறி, கட்டுப்பாடுண்டாக்கி, கருமமே கண்ணாகி, கோட்டைகள் கட்டும் பணியில் இறங்கியாகவேண்டும். இல்லையேல் வாழ்வு இல்லை. தோழர்கள் கே.கே.நீலமேகம், ஏ.கே.தங்கவேலர், கே.ஆர்.ஜி.பால், நீடாமங்கலம் ஆறுமுகம், மன்னால்குடி பாபு செட்டியார், வேலூர் சின்னராஜி? திருப்பூர் மொய்தீன் மற்றும் பலப்பலர், பேசினர் மாநாட்டில், தீப்பொறி பறந்தன! தேன்மொழி வழிந்தது பயன் என்ன? தென்னாற்காட்டில் இந்த ஆண்டு முடிவதற்குள் எத்தனை ஆயிரம் அங்கத்தினார்கள் ஜஸ்டிஸ் கட்சியில் சேருகின்றனர் என்பதைப் பொறுத்திருக்கிறது. பயன் வரவேற்புக் கழகத்தலைவர் கோபாலகிருஷ்ணப்பிள்ளை, கடலூர் தய்வசிகாமணி, நெசனூர் ராமசாமி செட்டியார், குச்சிப்பாளையம் துரைசாமி ரெட்டியார், விழுப்புரம் கோவிந்தராஜலு நாயுடு, விருத்தாசலம் முனுசாமி, புவனகிரி நமசிவாயம் , ராமலிங்கம், சிதம்பரம் கலியாணசுந்தரம், அன்பழகம், மற்றம் பலப்பல வீரர்கள், மாநாட்டுக்காகப் பலநாள் உழைத்து, வெற்றிகரமாக நடத்தினர். இவர்களில் உழைப்பு கட்சியின் உருப்படியான வேலைகளுக்காகவும் இருப்பின், நமதுநிலை எவ்வளவு உயரும் என்பதை எண்ணிப் பாருங்கள். திராவடிர், தீர மற்றவர்களா, திரறமற்றவர்களா! கூனிய உள்ளமும் குனிந்த வாழ்வும் கொண்டவர்களா! தனமற்றவர்களா, வகையறியாதவர்களா! எல்லாம் உண்டு. ஒன்றுமில்லை. தொடர்ந்து பணியாற்றுவதில்லை. அது இருப்பின், நம்மை வெல்பவர் யாருமில்லை. ஜஸ்டிஸ் மாநாட்டிலும், மறுதினம் நடந்த சுயமரியாதை, யுத்த ஆதரவு மாநாடுகளிலும், எவ்வளவு உத்சேகம்! காட்டு வெள்ளம் கரை புரண்டோடுகிறதே, அனைகோலி அமைப்பு ஏற்படுத்துவாரைத் தானே காணோம். அது தோன, ஆரியருக்கும் இன்னமும இடந்தர ஏதுவாகிறது. என்று தணியுமிந்தச் சோகம்! எவர் கோக்குவார் இந்தப் பரிதாபத்தை! சுயமரியாதை மாநாட்டிலே தேழல் அழகிரிசாமி தலைமை தாங்கி இரண்டு மணிநேரத்துக்குமேல் ஆற்றிய ஆவேச உரையை, என்னென்பது! உவமையும் கதையும், மேற்கோளும் மூதுரையும், கம்பன் கவிதையும் வள்ளுவன் குறளும் துள்ளிட, தோழர அழகிரிசாமி, வறுமை, வாட்டம், வாழ்க்கையில் சுமை ஆகிய பட்டம் பதவிகள் மட்டுமே பெற்ற அழகிரி, அன்று பேசியதையோ, வியாபார உலகிற்கானும் நுணுக்கமான கருத்துடன், வாழ்க்கைக் கல்லூரி தரும் பாடங்களுடன், சேர்த்துரைத்த தொழர தங்கவேலரின் உரையாடலையோ, இறந்தது என் மனைவி, கட்சிப் பற்றல்ல, என்று மார்தட்டி நின்ற குடந்தைத் தோழர் கே.கே.நீலமேகத்தின் முழக்கத்ததையோ, கேட்டவர் தில்லைத் தீட்சிதரின் திருப்பாதந்தாங்கிகளாத் தமிழர் கூட்டம் இருப்பதை இனிக் காணவே சகியார்! தமிழரின் கோட்டை எழச்செய்வர் என்பது திண்ணம்.

மூடச் சடங்குகளை ஒழி! கோயில் வருவாயைப் பொதுப்பணிக்கெனச் செலவிடு! ஆரீயத்தை அழிக்க முற்படு! இவைகள் சுயமரியாதை மாநாட்டுத் துர்மானங்கள்! இவை நாட்டு நடப்பிலே காணப்பட்டுவிட்டால். இடரும் இழிவும், நமக்கேன் இருக்கும் தமிழர் அதைக் கவனித்து ஆவன செய்தல் வேண்டும். இன்றே செய்யத் தொடங்குதல் நன்று என்பேன்.
தீட்சிதர் வீட்டுக்குள் ஆதிதிராவிடருக்குக் கலியாணம் நடப்பதுபோல், வைதீகக் கோட்டையில் நமது மாநாடுகள் நடைபெற்றுவிட்டன. ஆனால் மாநாடு, முதல் அத்தியாயமே தவிர, முடிவுரையல்ல என்பது தென்னாற்காட்டுத் தோழர்களுக்கும், தமிழர் யாவருக்கும் நினைவிலிருக்கவேண்டும்.
(1942)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai