அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 18

மதிப்புக்குரிய டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக்குழு ஈரோட்டில் முகாமிட்டுருந்த சமயம் ஒரு நாள் அண்ணாவின் திராவிடநாடு பத்திரிக்கை வளர்ச்சி நிதிக்காக(1944-ம் ஆண்டு) அண்ணாவே எழுதி முக்கிய வேடமேற்று நடிக்கும் சந்திரோதயம் நாடகம் ஈரோட்டில் நடத்த ஏற்பாடாகியிருந்தது. இதற்கு முன் நான் அண்ணாவைச் சந்தித்ததில்லை. சிந்தனையைத் தூண்டும் எழுத்துக்களைப் பத்திரிக்கைகளில் படித்து இலயித்திருக்கிறேன், வியந்திருக்கிறேன். அண்ணா பார்ப்பதற்கு எப்படி இருப்பார் என யூகித்துக்கொள்ள முடியாத வயது எனக்கு. சந்திரோதயம் நாடகத்தில் நடிக்கப்போகிறவர்களுக்கு மேக்கப் செய்துவிடும் பொறுப்பு நாடக நடிகர்களான எங்களுக்குத் தரப்பட்டது. எங்கள் நாடகக்குழுவில் இருந்தவர்களெல்லாம் ஆளுக்கொரு முகத்தைப் பிடித்துக்கொண்டோம். என் கையிலும் ஒரு முகம் சிக்கியது. நான் அந்த முகத்துக்கு ஒப்பனை செய்துகொண்டே பக்கத்திலிருப்பவர்களின் முகத்தையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். காரணம் நான் காணத்துடித்துக்கொண்டிருந்த அண்ணாவின் முகம் அதுவாக இருக்குமோ என்ற எண்ணம். அந்த முகத்தில் எனக்கிருந்த அக்கறையில், என் கையில் அகப்பட்டிருக்கும் முகத்தை நான் மிக அலட்சியப்போக்கோடு கவனித்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் இப்படி அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு ஆவலை அடக்கிக் கொள்ளமுடியாமல் நான் யாருக்கு மேக் அப் செய்துகொண்டிருந்தேனோ அவரிடமே பக்கத்தில் அமர்ந்திருந்தவரைக் காட்டி மெதுவாக கேட்டேன்.

ஏய்யா, அவர்தானே அண்ணா? உடனே பதில் வந்தது அவரில்லை நான்தான் அண்ணா
என் நிலை அப்போது எப்படி இருந்திருக்கும்?

. . . . சென்னை தியாகராய கல்லூரியில் அண் அவர்கள் எழுதி இராவணனாக நடித்த நீதி தேவன் மயக்கம் நடகம் நடைபெற்றது. அந்த நாடகத்தைக் காண கல்கி அவர்கள் காசு பொடுதது டிக்கட் வாங்கிவந்து அமர்ந்து முழு நாடகத்தையும் பார்த்தார். நாடகம் முடிந்ததும் கல்கி அவர்கள் மேடையேறி வந்து அண்ணா அவர்களின் அறிவாற்றலை, திறமையை எப்படி வர்ணிப்பதென்றே எனக்குப் புரியவில்லை. அண்ணாவின் அனுமதியுடன் அவரை என் காதலரே என்றழைக்கின்றேன் என்றார்.
(புரட்சி நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன்)

பாம்பைக்கண்டால் படை நடுங்கும்?
காரைக்குடி பெரியார் இராமசுப்பய்யர், ஒரு முறை சிவகெங்கையில் அவர் கூட்டம் போட்டார். அண்ணாவை அழைத்தார் அண்ணா அழகாகப் பேசிக்கொண்டிருந்தார். கூட்டத்தில் சலசலப்பு, பாம்பு, பாம்பு என்று கூச்சல். பாம்பென்றால் படையும் நடுங்குமே!

பதுறும் மக்களைப்பார்த்து அண்ணா சொன்னார்கள். தமிழன் ஒரு காலத்தில் வீரனாக இருந்தான். இப்போது அந்த வீரம் கருகிப்போய்விட்டது. எதிர்கட்சிக்காரன் பாம்பை கையில் பிடித்து இங்கே விட்டிருக்கிறான் என்றால் அது தண்ணீர் பாம்பாகத்தான் இருக்கும். நல்ல பாம்பை பிடிக்கும் வீரம் இப்போது எந்த தமிழனுக்கும் இல்லை. எனவே தண்ணீர் பாம்பை கண்டு எவரும் அஞ்சவேண்டாம் என்றார். கூட்டம் அமைதியாயிற்று.

ஆண்டு பல ஆகிவிட்டன. சந்திரோதயம் நாடகம் சென்னை ஒற்றைவாடைக் கொட்டகையில் - இசை அரசு தண்டபாணி தேசிகர், நகைச்சுவை அரசு என்.எஸ்.கிருஷ்ணன் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராசபாகவதர் மூவரும் வந்தனர் - பெரியார் ஒரு பிடி பிடித்தார் - இந்தக் கலைவாணர்கள் முருகா, முருகா என்று 3 மணிநேரம் பாடிவிட்டு, ஆயிரம் இராண்டாயிரம் என்று பணத்தைப் பறித்துக்கொண்டு போகிறார்களேத் தவிர ஒழிய, இன அபிமானம், சுயமரியாதை, இவைகளுக்காகப் பாடுபடும் நமது இயக்கத்திலே ஒரு பற்று, பாசம் தொடர்பு துளி காட்டுகிறார்களா? என்று கோபமாகவே பேசினார். என்ன வரவழைத்து உட்காரவைத்துக்கொண்டு இப்படி ஏசுகிறார்களே என்றனர் மூவரும். அவர்களுக்குச் சமாதானம் கூறினேன். பிறகு நான் பேசும்போது பெரியார் கேட்கும் காரணத்தை விளக்கி கலைவாணர்களெல்லாம் கூடிய சீக்கிரம் நமது கழகத் தொண்டிலே ஈடுபடுவார்கள் என்று உறுதியளித்தேன். அதுபோலவே கலைத்துறை விற்பன்னர்கள் இன்று நம்மிடம் உள்ளனர்.

பெரியார் சொன்ன முறைபடிதான், நான் கலைத்துறையினரைக் கழகப் பணிபுரிய அழைத்துவந்தேன். பெரியாலே ஒற்றைவாடைக் கழகப்பளியில் தாம் பேசியதற்கு வருத்தப்பட்டு, அடுத்த திங்கள் ஈரோடு சென்ற கிந்தனார் காலட்சேபம் செய்த என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு தங்கச் செயினும், கிந்தனார் என்று பெயர் பொறிக்கப்பட்ட டாலரும் பரிசளித்தார். ஈரோட்டிலே நடைபெற்ற தனி திராவிடர் கழக மாநாட்டில் காந்தியார் படத்திறப்புவிழலை நடத்த என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களை வரவழைத்தார். தமது கையாலே கடிதம் எழுதி.
(நம் நாடு - அறிஞர் அண்ணா - 03.07.1953)

நான் பொது வாழ்வில் ஈடுபட்டு 10 ஆண்டு காலம் வரை, நான் பொதுத் தொண்டு செய்ததாகவே எங்கள் வீட்டார் கருதவில்லை. என்னமோ பைத்யம்! இந்த ஈரோட்டு நாயக்கர் பேச்சைக் கேட்டுக்கொண்டு ஊரை சுற்றுகிறான் என்றுதான் என் பாட்டியார் சொல்லிக்கொண்டிருந்தார்.
(நம் நாடு - அறிஞர் அண்ணா - 16.12.1957)

எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள் நாம் யாரும் அழைத்து நமது கழகத்தில் வந்து சேர்ந்தவர் அல்ல. அவர் மக்களின் அன்மைப் பெறுவதற்கு என்ன வழி என்று பல நால் சிந்தித்து, மக்களுக்குப் பாடுபடும் கட்சி எது என்று ஆராய்ந்து கடைசீயில் நமது கழகத்தில் வந்து சேர்ந்தார்.
நம் நாடு - அறிஞர் அண்ணா - 23.02.1960)

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நான் ஒரு சமயம் சொற்பொழிவாற்ற சென்றிருந்தேன். கல்லூரியைவிட்டு ஜஸ்டிஸ் கட்சியில் ஈடுபட்டிருந்த நேரம்அப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நெடுஞ்செழியன், அன்பழகன் முதலியோர் மாணவர்கள்.

நான் அங்கு வருவதை எதிர்த்து சில மாணவர்கள் கிளர்ச்சி செய்தனர். தோழர், பாலதண்டாயுதமும் அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் மாணவர். சில மாணவர்களின் எதிர்ப்பு எனக்கு நன்றாகத் தெரியும். இரண்டு நாள் சொற்பொழிவு செய்தேன். சொற்பொழிவி நேரத்தைத் தவிர மற்ற நேரத்தில் மாணவர்தான் என்னை சூழ்ந்துகொண்டிருந்தனர். மாணவர்கள் என்னை பல கேள்விகள் கேட்டனர். ஜஸ்டிஸ் கட்சி பணக்காரர்களின் ஸதாபனமாக மாறிவிடுகிறதே சீமான்களின் பூட்ஸ் துடைக்கும் கட்சியாக ஆகிவிடுகிறதே என்று குறைப்பட்டனர். அவர்களிடம் சீக்கிரத்தில் அதை பாமர மக்களின் கட்சியாக மாற்றிவிடுகிறேன் என்று சொன்னேன். சீமான்களின் கைகளில் எப்படியோ சிக்கிக்கொண்ட கட்சியைஇ மாளிகையிலிருந்து மண்குடிகைக்கு, மைதானத்திற்கு கொண்டுவரவே முயல்வேன் என்றேன்.

சொன்னபடி திராவிடர்கழகமாக மாற்றி, சேலத்தில் அரசாங்கத்தார் தரும் சர் முதலிய பட்டங்களை கழற்றி எறியவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தேன். மிட்டா மிராசுகள் கட்சியைவிட்டு ஓடினர். ஏழை மக்களின் ஸ்தாபனமாக மாறியது கட்சி!

18.08.1944 அன்று திருவாரூரில் கருணாநிதி தியேட்டரில் அண்ணாவின் சந்திரோதயம் நாடகம். நாடகத்தின் இறுதியில் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் அண்ணாவுக்கு ஒரு தங்க மோதிரம் பரிசளிக்க, அண்ணா அவர்கள் நன்றியுடன் இராதா அவர்களிடமே அதைத் திருப்பித் தந்துவிட்டார்.

எப்படியண்ணா உங்ககிட்ட இப்படி ஒரு பழக்கம் என்றேன்.

இது நல்ல பழக்கம்தானேஇ ஒன்றும் பயமில்லை பாரு. சான் நினச்ச இடத்திலே படுப்பேன். படுத்தவுடன் தூங்கிவிடுவேன். இதையெல்லாம் போட்டுகிட்டு படுத்தா தூக்கம் வராது, பயம்தான் வரும். எவனாவது கழட்டிகிட்டு போய்டுவானேன்னு என்றார்.
(கவிஞர் கருணாநந்தம்)

நான் ராணியைத் திருமணம் செய்துகொண்ட புதிதில் தஞ்சாவூருக்கு அடிக்கடி வந்திருக்கிறேன். அப் இங்கே யாரையும் தெரியாது. ஒரு பிளாட்பார்ம் டிக்கட் வாங்கிக்கொண்டு, ரயில்வே ஸ்டேஷனுக்குள் வந்து இந்த ஹிக்கின்பாதம்ஸ் கடையிலே மணிக்கணக்கிலே நிண்ணு, புத்தகங்களை வாங்கிப் படிச்சு பொழுதை கழிப்பேன் என்றார் அண்ணா.
(கவிஞர் கருணாநந்தம்)

சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் அண்ணாவின் தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டன.
முதல் தீர்மானம்
அடிமைச் சின்னத்தின் அறிகுறியாக வெள்ளையரால் தரப்பட்ட ராவ் பகதூர், ராவ் சாகப், சர், திவான் பகதூர் போன்ற பட்டங்களை விட்டொழிக்கவேண்டும் எவரும் அதை விரும்பி பெறக்கூடாது.
இரண்டாவது தீர்மானம்
பட்டங்களைப் போலவே உள்ளாட்சி ஊராட்சி போன்ற அமைப்புகளில் பெற்றுள்ள கௌரவப் பதவிகளைவிட்டு விலகிடவேண்டும்
மூன்றாவது தீர்மானம்
தாங்கள் பெயருக்குப் பின்னே ஒட்டிக்கொண்டிருக்கும் சாதிப்பெயர்களை வெட்டி எறியவேண்டும்.
நான்காவது தீர்மானம்
இந்த அமைப்பு இனி திராவிடர் கழகம் என்றழைக்கப்படும், என்கின்ற தீர்மானங்கள் அண்ணாத்துரைத் தீர்மானம் என்கின்ற பெயரில் நிறைவேற்றப்பட்டது.

நான் சிறுவனாக இருந்தபோது நான் இருந்த வீதிக்கு எடுத்த வீதியில் ஒரு பஜனைக்கூடம் இருந்தது. அதை சோமசுந்தர முதலியார் முன்னின்ற நடத்தி வந்தார். அவர் வாரந்தோறும் சுண்டல் செய்து தருவது வழக்கம். பஜனைக்கு வரும் மக்களுக்கு அந்த சுண்டலையும், அந்த மனிதரே தயார் செய்வார். அது மட்டுமல்ல. கடலை வாங்க அவரே கடைக்குச் செல்வார். காரணம், யாரையும் நம்பமாட்டார்.

அதைக் கண்டு ஊரார் கேலியும் கிண்டலும் செய்தனர். இவ்வளவு பெரிய மனிதர், தானே கடைக்குச் சென்று, கடலை வாங்கி, அடுப்பேற்றி சுண்டல் செய்து, தானே பங்கிடுகிறானே யாரையும் நம்பாத பாவி, லோபி என்று தூற்றினர். விசம் முதலியார் காதில் விழுந்தது. மறுநாள் கடலை வாங்கி ஒரு ஆனை அனுப்பினார். வாங்கி வந்த கடலையை சுண்டல் செய்ய மற்றொருவரைக் கொண்டு செய்தார். பங்கிட பக்தர்களில் ஒருவரை நியமித்தார். பார்த்தார்கள் ஊரார். இந்தச் செய்கையைப் பாராட்டினாரா? இல்லை! உடனே பழிக்க முற்பட்டார்கள். பார்த்தீர்களா, முதலியார் ஜம்பத்தை! வாழ்வு அதிகமாகிவிட்டது, பஜனை மடத்து பணமல்லவா, அவருக்கென்ன வந்தது? என்று.

தானே செய்த வேலைகளுக்கு இப்போது தனித்தனி ஆள்வைத்துவிட்டார். இந்த வாழ்வு எத்தனை நாளுக்க பார்க்கலாம்! என்று பரிகசித்தார்கள். பரிதாபத்துக்குறிய பஜனை மடம் வேலையைப்போலத்தான் பொதுவாழ்வும்!
(புயல் நிவாரண நிதி பொதுக்கூட்டம் - 28.04.1953)

எனது நண்பர் சி.வி.இராசபோலின் தந்தையார் நிறைய சொத்து வைத்துவிட்டுப் போனார். அந்த சொத்தை இவர் அதிகமாக்க அதோ தெரிகின்ற ஆறு அடுக்கு மாடி வீடு என்னுடையது, இதோ தெரிகிறதே இவ்வளவு வயல்களும் என்னுடையது, இரும்புப்பொட்டியில் உள்ள பணமோ குறையவில்லை என்று அவர் காட்டினால் அவரை செட்டிக்காரர் என்று பாராட்டுவோம், அல்லது சொத்துக்களை நான் இழந்ததற்கு காரணம் இந்தப் பள்ளியை கட்டினேன், அந்த மருத்துவமனையை உருவாக்கினேன், நான் சம்பளம் கட்டிப் படிக்கவைத்த பய்யன் ஒருவன் துணை கலக்டராக இருக்கிறான், இன்னொருவன் போலீஸ் அதிகாரியாக இருக்கிறான், என்று அவர் சொன்னால் பாவம் ஏதோ நல்ல காரியங்களுக்கு செலவு செய்து சொத்துக்களை அழித்துவிட்டார் என்று அனுதாபப்படுவோம்.

ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு 10 ஆண்டு குதிரை பந்தயப் புத்தகங்களை நன்றாக பைண்டு செய்து வைத்துக்கொண்டு என்னுடைய அத்தனைப் பணமும் இதிலேதான் இருக்கிறது என்று காட்டினால் அவரை பைத்தியக்காரன் என்று மட்டுமல்ல சமூகத்துரோகி என்றுதான் சொல்லுவோம்.
நம் நாடு - அறிஞர் அண்ணா - 14.09.1961)

நினைவுகள் - திரு.இராமசுப்பய்யா
காரைக்குடியில் அன்று நடந்த கூட்டத்தில் அய்யா பேச ஆரம்புத்ததும், ஒரு ஆள் அய்யாவிடம் வந்து ஒரு சீட்டை பொடுத்தார் அப்போதொல்லாம் அய்யா பேசுகிற கூட்டத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி இருக்கும். வழக்கமாக அய்யா அந்தக் கேள்வியை மைக்கில் படித்துவிட்டு பதில் சொல்வார். அன்றைக்கு அந்தத் தாளைப் படித்துவிட்டு அய்யா ஒன்றும் சொல்லாமல் அந்தச் சீட்டை அண்ணாவிடம் கொடுத்துவிட்டார். அதைப் பார்த்ததும் அண்ணா லேசாக சிரித்துக்கொண்டே மைக் முன்னாலே வந்து, பொது மக்களைப்பார்த்து, இங்கு யாரோ தன்பெயரைமட்டும் எழுதிவிட்டு, கேள்வியை எழுதாமல் சீட்டை மேடைக்கு அனுப்பிவிட்டார் என்றார். ஆகையால் அந்தத் தாளை நான் நமது இரா. சுப்பய்யா அவர்களிடம் இதை அனுப்புகிறேன். கேள்வியை எழுதி அனுப்புங்கள் என்று என்னிடம் கொடுத்தார். அதில் நான் முட்டார் என்று எழுதியிருந்தது. எழுதியவன் அதை அப்படியே அய்யா மைக்கில் படிப்பார், சிரிக்கலாம் என்று எழுதியவர் நினைத்தார். யார் அதைக் கொடுத்தானோ அவனே அன்றைக்கு பெரிய முட்டாளாகிவிட்டான். அண்ணாவின் குறும்பும், புத்திசாலித்தனமும அய்யாவையே வியக்கவைத்தது.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai