அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
13
நான் எழுதி நடித்த
பழனியப்பன் நாடகத்தை நூறு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டவர் திராவிட
நடிகர் கழகம் என்ற பெயரால் ஒரு கலை மன்றத்தைத் துவக்கி, கழகப் பிரசார
நாடகங்களை நடிப்பது என்ற தீர்மானத்துடன் என்னை அணுகினார். நானும்
அதற்கு ஒப்புதல் அளித்து, முதல் முதலாக நாடகக் குழு விழுப்புரத்தில்
முகாமிட்டது. என்னையும் அந்த மன்றத்தில் இணைந்து நடிக்க வேண்டுமென்று
கேட்டுக் கொண்டார்கள். நான் எழுதும் நாடகத்தில் மட்டுமே நடிப்பது
என்ற நிபந்தனையிடன் அதற்கு ஒப்புக்கொண்டேன்.
கருணா போய்
வருகிறேன்
ஒரு நாள் நாடகத்திற்குத் தலைமை வகிக்கப் பெரியார் வந்திருந்தார்.
இன்னொரு நாள் அண்ணா வந்திருந்தார். அவரிடத்திலேயே நாடக மன்ற உரிமையாளர்
பத்து ரூபாய் கடன் கேட்டு வாங்கிய நிகழ்ச்சியையும், அண்ணா புன்னகையோடு
அந்தப் பத்து ரூவாயைக் கொடுத்த நிகழ்ச்சியையும், நாடகம் முடிந்து
ஊருக்குப் போகுமுன், அண்ணா அவர்கள் என் முதுகில் தட்டி, கருணா, போய்
வருகிறேன் என்று அன்பொழுகக் கூறியதையும் என்னால் மறக்கவே முடியாது.
திராவிடம் திராவிடர் என்ற உத்வேகத்தை நாட்டில் எழுப்புவதற்காக திராவிட
நாடு என்கிற கிழமை இதழை அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் துவக்கினார்கள்.
அதனையொட்டித் திராவிடர்க் கழகம் என்ற பெயரால் ஒரு துணை மன்றம் போன்ற
அமைப்பினை அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் உருவாக்கினால். அந்தத்
துளை அமைப்பு எதிர்காலத்தில் நாடு தழுவிய இயக்கமாக ஆகுமென்று அன்று
யாரும் எதிர்பார்த்திட்டதில்லை.
நீதிக் கட்சியின்
பொதுச் செயலாளராக அண்ணா அவர்கள் இருந்ததால் கட்சி வளர்ந்திடவும்,
புதிய வேகம் கொண்டிடவும், புதிய குறிகோள் பெற்றிடவும், வழிமுறை காணவேண்டுமென்று
அண்ணா அவர்கள் துடித்தார்கள். நீதிக் கட்சியில் இருந்த பெரும் தலைவர்கள்
மாட மாளிகை, மல்லிகை மஞ்சம், கூட கோபுரம் கொட்டு முழக்கு என்றெல்லாம்
ஆடம்பரப் பிரியர்களாக இருந்தார்கள். குடிசைகளும், அங்கேயெழும் குரல்களும்
அவர்கள் காதில் விழ வாய்ப்பில்லை. அத்தகையோர் பிடியிலிருந்த நீதிக்
கட்சியை அண்ணா விடுவிக்க முயன்றார்.
1944-ஆம் ஆண்டில்
---------தில் நீதிக் கட்சி மாநாடு ந---------- அந்த மாநாட்டில்
கட்சித் ------- பொறுப்பிலிருந்து பெரிய----- விட நீதிக்கட்சிச்
--------------- கோமான்களும் முயன்றார். -------------- நடைபெற்று
விடாமல் ------------- தலைமையைக் காப்பாற்ற --------- நாடெங்கும்
சூறாவளிப் பயணம் செய்து, கட்சித் தொண்டர்கள் ஆதரவைப் பெருக்கினார்.
எதிர்ப்புகளை முறியடிக்கவும் ----- கட்சியை ஏழைகளின் இல்லத் -------
கொண்டுவர வேண்டுபென்ற -------- னுடைய எண்ணத்தை நிறை----------- கொள்ளவிடம,
இந்திய விடுத -------- தனக்கிருந்த அழிக்க முடியாத -------றினை வெளிப்படுத்திக்
கொள் -------- அண்ணா அவர்கள் சேலம் மாநா ---------- ஒரு தீர்மானத்தைக்
கொண்டு ----- தார்கள். சரித்திரப்புகழ் படைத் --------- அந்தத் தீர்மானத்திற்கு
அண்ணாதுரை --- தீர்மானம் என்று பெயர்.
அண்ணா ஏற்படுத்திய
புதிய திருப்பம் நீதிக் கட்சி என்ற பெயரை மாற்றித் திராவிடர் கழகம்
என்று பெயரிடப்படவேண்டுமென்றும், வெள்ளையன் ஆட்சியால் தரப்பட்ட சர்,
ராவ் பகதூர், திவான்பகதூர் போன்ற பட்டங்கள் துறக்கப்படவேண்டுமென்றும்,
கௌரவ நீதிபதி மற்றும் நியமனப் பதவி கொண்டவர்கள் அவைகளை இராஜினாமாச்
செய்யவேண்டுமென்றும், தங்களுடைய பெயருக்குப் பின்னால் உள்ள சாதிப்
பெயரை விட்டொழிக்க வேண்டுமென்றம் அண்ணாவின் தீர்மானம் முழக்கமிட்டது.
35-மணி நேர விவாதத்திற்கு
அந்தத் தீர்மானம் உள்ளாகியது. கட்சியின் ஆய்புக் குழு அண்ணாவின்
தீர்மானத்தை வன்மையாக அதிர்த்தது. பின்னர் பொது மாநாட்டினில் அண்ணாவின்
தீர்மானத்தை ஆதரித்தும், அதிர்த்தும் கருத்ரைகள் வழங்கப்பட்டுப்
பிறது இறுதியில் அண்ணா விளக்கவுரை வழங்கினார். அதனைக் கட்சித் தோழர்களும்,
பொதுமக்களும் தங்கள் ஆர்வமிகுந்த கையொலிகளால் வரவேற்றவாறு இருந்தனர்.
»
காங்கிரஸ் கூட்டத்தில் பேசி முடிந்ததும் தலைவர்கள் காரில் பறந்துவிடுவார்கள்.
ரியால்டோ (திருவாரூரில் இருந்த சினிமா அரங்கம் ஆண்டு 1943) கூட்டம்
முடிந்ததும் அண்ணா பார்வையாளராகிய நாங்கள் இருந்த பகுதிக்கு வந்தார்.
கூட்டம் என்றால் அதிகபட்சம் 300 வேர் இருந்திருப்பர். எங்களோடு அண்ணா
உட்கார்ந்ததும் எளிமையான தோற்றத்துடன் அளவாளாவியதும், கருணாநிதியைப்
பார்த்து நன்றாகப் படி என்று சொன்னதும், ஏதோ ஒரு நெருக்கத்தைக் காட்டியது.
அண்ணாவை அருகே பார்க்க பார்க்க ஏதோ ஒரு மாவிரனை பார்க்கிற மன எழுச்சி
உருவாயிற்று.
(இராம. அரங்கண்ணல் - நினைவுகள்)
»அய்யா
அவர்கள் சூத்திரப் பட்டம் பற்றி பேசிக் கொண்டிருந்தது ஒரு பக்கம்
இருக்க, இங்கர்சால் யார்? மாஜினி இத்தாலியில் எப்படி பாடுபட்டார்
- அவரது சீடர் கரிபால்டி, எப்படி சீரழிந்த இத்தாலியைச் செப்பனிட்டார்,
பிரெஞ்சு புரட்சி என்றால் என்ன? அதற்கு தித்திட்ட வால்டேரும், ரூசோவும்
வழங்கிய ஜனநாயக சிந்தனை என்ன? இப்படி ஒரு அறிவுப் புரட்சியை தமிழ்நாடு
பெரிய அளவில் பெற்றது. இதற்கு அண்ணாவே மூலுகாரணமாவார்.
(இராம.அரங்கண்ணல்)
»திரு.டி.பி.எஸ்.
பொன்னப்ப அண்ணாவை வற்புறத்தி ஒரு நாடகம் எழுதச் சொல்லி, அந்த சந்திரோதயம்
நாடகத்தை திராவிடநாடு குழுவினருடன் பல ஊர்களில் நடத்தவும் இவரே காரணமாயிருந்தார்.
அண்ணாவின் அரசியலில் ஆரம்ப காலத்தில் உற்ற துணையாக இருந்த பொன்னப்பா
அண்ணாவுக்கு உறவினருமானார். அண்ணாவின் தாயாருக்கு உடன் விறந்த சகோதரிகள்
இருவர். கழகத்தவர் எல்லோருக்கும் தொத்தா என்கிற இராசாமணி அம்மையார்.
இன்னொருவர் பட்டம்மாள். அவருக்கு இரண்டு பிள்ளைகள் இராசகோபால், இராசதுரை.
இராசகோபால் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். இராசதுரை தன்னுடைய நாற்பதாவது
வயதிலேயே இறந்துவிட்டார். அவருடைய ஒரே மகள் நாகரத்தினம். மச்சி என்று
எல்லோராலும் அழைக்கப்பட்டவர். அதே போல் அண்ணாவின் சிற்றன்னை இராசாமணி
அம்மையாருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து சிறுவயதிலேயே இறந்துவிட்டன.
அண்ணாவின் தாயார் பங்காரு அம்மையாருக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர்
அண்ணா, மற்றொருவர் குட்டி. அவரும் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்.
அண்ணாவின் ஒன்றுவிட்ட மூத்தசகோதரி நாகரத்தினம் அம்மையாருக்கு ஒரே
மகள், பெயர் சௌந்தரி. அண்ணாவுக்கு முறைப் பெண் அவர்களை டி.பி.எஸ்.
பொன்னப்பா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நான்கு
ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை சிறு வயதில் இறந்து விட்டது, பெயர்
மணிமேகலை. பிள்ளைகள் பரிமளம், இளங்கோவன் கௌதமன், இஅராசேந்திரன்.
1930-ம் ஆண்டு அண்ணா இராணி அம்மையாரை மணந்தார். அண்ணாவுக்கு குழந்தை
இல்லை. 1940-ம் ஆண்டு பரிமளம் பிறந்ததும் அந்தப் பிள்ளையை தங்கள்
பிள்ளையாக அண்ணாவும் இராணி அம்மையாரும் எடுத்து வளர்த்துக் கொண்டனர்.
1940-ம் திராவிட இயக்கத் தலைவர் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மறைந்தார்.
அவர் நினைவாக, அண்ணா தன் பிள்ளைக்கு பரிமளச் செல்வன் என்று பெயர்
சூட்டி வளர்த்தார்.
»எங்களுடைய
திராவிட மாணவர் கழகத்தை கும்பகோணத்தில் 01.12.1943 அன்று அண்ணா துவக்கி
வைத்தார். 05.12.1943. திராவிடநாடு இதழில் திராவிடர் கழகம் என்ற
தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதினார். நீதிக்கட்சியின் பெயரை திராவிடர்
கழகம் என்று மாற்றியமைக்க வேண்டும் என அண்ணா அப்போதே முனைந்துவிட்டார்.
இரண்டு நாள் இரவும் பகலும் - 1943 பிப்ரவரி 19, 20 குடந்தை வாணி
விலாஸ் தியேட்டரில் மாநாடு தவமணி இராசனும், நானும் (கவிஞர் கருணாநந்தம்)
அலைந்து திரிந்து வசூலித்தது 200 ரூபாள். அண்ணா 3 நாட்களும் எங்களோடு
தங்கியிருந்தார்.
கும்பகோணம் அரசினர்
கல்லூரியில் அண்ணா கூழநு ஆநுறு டுஐகுநு என்கின்ற தலைப்பில் 01.12.1943
மாலை 5 மணிக்குப் பேசினார். மாலை திராவிட மாணவர் கழக விழா தொடங்குவதற்கு
முன் நாங்களெல்லாம் அண்ணாவுடன் சேர்ந்து புகைப் படம் எடுத்துக் கொள்ளத்
தயாரானோம்.
அண்ணா என்னை அழைத்து
தொலைவில் தெருவில் போய்க் கொண்டிருந்த இருவரை அழைத்து வரச்சொல்லி
படம் எடுக்கச் செய்தார். அவர்கள் திருப்பூர் மொய்தீனும், மூவாலூர்
இராமாமிருதம்மையாரும் ஆகும்.
(இராம.அரங்கண்ணல்)
»அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்தில் வழக்கம் போல காங்கிரஸ் மாணவர்களுக்கம் கழக மாணவர்களுக்கும்
எற்பட்ட தகராறு இந்த முறை வரம்பு மீறிப்போய்விட்டது. பட்டமளிப்பு
விழா நாளன்று கழக மாணவர்கள் கழகக் கொடியைப் பறக்கவிட்டிருக்கிறார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் மாணவர்கள் சிதம்பரம் காங்கிரஸ் பிரமுகர்கள்
ஒத்துழைப்புடன் மாணவர் விடுதிக்குள் நுழைந்து கழக மாணவர் அறைகளுக்கெல்லாம்
போய், உதை, உதையென்று உதைக்கிறார்கள். இதில் அதிகமான காயங்களுக்கு
ஆளாகி உயிர் பிழைத்தால் போதும் என்கிற நிலைக்கு ஆளானவர் மறைந்த உத்தமர்
நண்பர் கே.ஏ.மதியழகன் அவர்கள். கழக வரவாற்றில் இது ஒரு தியாகக்கூட்டம்
என்றால் மிகையல்ல. அப்போது திரு அவிநாசிலிங்கம் செட்டியார் கல்வி
அமைச்சராயிருந்தார். அவர் பச்சைக் கொடி காட்டியதின் பேரில் அடிபட்டு
உதைப்பட்டு காங்களுக்கு ஆளான கழு மாணவர் மீது அதுவும் முக்கியமாக
மதியழகன் மீது தூண்டினார் என வழக்கும் போட்டுவிட்டார்கள். இது பற்றி
பேச பெரியார் அவர்களிடம் அழைத்துப்போனேன். அய்யாவுக்கு என்ன கோபமோ!
ஒரு கோவணத்துணி போல உள்ள ஒன்றுக்காக இவ்வளவு பெரிய ரகளைச் செய்வது?
என்று பொரிந்து தள்ளிவிட்டார். சோர்ந்து போன மதியழகனை அன்று மாலை
பிரசிடென்சி கல்லூரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்துக்கும் அழைத்துக்
கொண்டு போனேன். பிறகு ஐகோர்ட் நீதிபதியான நண்பர் மோகன் அவர்கள்,
மாணவராயிருந்து ஏற்பாடு செய்த கூட்டம் அது. அச்சம் என்கின்ற தலைப்பில்
அண்ணா அவர்கள் பேசினார்கள். கூடடம் முடிந்து மதியைப் பார்த்த அண்ணா
என்னோடு வா என்று கோவிந்தப்ப நாய்க்கன் தெருவிலுள்ள று.மு. தேவராசமுதலியார்
வீட்டுக்கு ழைத்துகொண்டு போனார்கள். மாணவர்கள் வழக்கு நிதி எனும்
பெயரில் திராவிடநாடு இதழ் மூலம் தானே கையொப்பமிட்டு வசூல் செய்து
உதவினார்கள்.
(இராம.அரங்கண்ணல்)
»1944-ல்
கல்வியமைச்சராயிருந்த திரு.அவினாசிலிங்கம்(செட்டியார்) தலமையில்
ஓர் எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது சென்னையில். அதில் அண்ணாவும் அழைக்கப்பட்டடு
எழுத்தாளர்களைப் பற்றி, ஓர் அருமையான சொற்பொழிவு ஆற்றப்பட்டு, அதை
எல்லோரும் பாராட்டினர். அந்த மாநாட்டில் அண்ணா பேசி முடித்ததும்,
திரு.அவினாசிலிங்கம்(செட்டியார்) தான் ஒரு காங்கிரஸ்காரர் என்பதையும்
மறந்து கட்டி அணைத்துக்கொண்டார்.
புதுக்கோட்டையில் அச்சாகி வெளிவந்த திருமகள் என்கின்ற வார ஏட்டின்
பிரதிநிதியாக, முதல் முறையாக முத்தய்யா என்கின்ற இளைஞர் வந்து கலந்து
கொண்டு அண்ணாவின் பேச்சை அப்படியே வரிவிடாமல் எழுதி வெளியிட்டார்.
அவர்தான் பிற்காலத்தில் பெயர் பெற்ற கவிஞர் கண்ணதாசன்.
(இராம.அரங்கண்ணல்)
சேதுப்பிள்ளை
பட்ட பாடு
கம்பராமாயணம் ஆக்கநெறிக்கு ஆகும் நூலா - ஆகாத நூலா என்பது பற்றிய
விவாதங்கள், தமிழ்நாடெங்களும் தலை தூக்கி நிற்கும் நிலை, 194244-ம்
ஆண்டுகளில் ஏற்பட்டது.
கம்பராமாயணம் பொன்னேபோல்
போற்றப்பட்டடுப் புவியுள்ள அளவும் காப்பாற்றப்படவேண்டிய நூலாகும்
என்னும் கருத்துப்படத் தோழர்கள் ஆர்.பி.சேதுப்பிள்ளை, பண்டிதமணி
கதிரேசச் செட்டியார், ச.சோமசுந்தர பாரதியார், டி.கே.சிதம்பரநாதனார்
ஆகியோர் பேசிவந்தனர்.
கம்பராமயணம் ஆரிய
மக்கள் தேவர்களெனவும், ராமன் முதலியோர் கடவுள்களாக வழிபடவேண்டியவர்களெனவும்,
அவர்களது செயலே சிறந்த செயலெனவும் தமிழர்களை எண்ணச் செய்ததோடல்லாமல்,
அதற்கு தூபதீப நைவேத்தியங்காட்டி வந்தனை வழிபாடு செய்தால் போகிற
கதிக்கு நல்லகதி எற்படும் என்று நம்பச் செய்ததால், அதன் நோக்கத்தையும்,
விளைவையும் கண்டித்துப் பெரியார் ராமசாமியும், அறிஞர் அண்ணாவிம்
நாடெங்கும் எடுத்துரைத்து வந்தனர்.
கம்பராமயணத்தைப்பற்றி
அறிஞர் அண்ணா அவர்களுக்கு என்ன தெரியும், சிறந்த தமிழ்ப் புலவரோடு
அவரை விவாதத்துக்கு விட்டால், அவர் உறுதியாத் தோற்றுப்போய்விடுவார்.
அப்படித் தோற்றுப் போய்விட்டால் கம்பராமாயண எதிப்புக் கிளர்ச்சி
வீழ்ச்சியுற்றுப் போய்விடும் என்று கருதிக்கொண்டு சென்னைச் சட்டக்
கல்லூரித் தமிழ்மன்றத்தினர் கம்பராமாயண விவாதக் கூட்டம் ஒன்றிற்கு
ஏற்பாடு செய்தனர். கூட்டம் 09.02.1943 செவ்வாயன்று மாலை 4,30 மணிக்குச்
சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. போராசிரியர்
ஆர்.பி.சேதுப்பிள்ளையோடு விவாதம் நடத்தும்படி அறிஞர் அண்ணா அழைக்கப்பட்டிருந்தார்.
விவாதக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும்படி இந்து அறநிலையப் பாதுகாப்புக்
குழுத் தலைவர் தோழர் சி.எம்.இராசந்திரஞ் செட்டியார் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்.
மண்டபம் முழுவதும்
மாணவர்களும், பொதுமக்களும் ஏராளமாகக் குழுமியிருந்தனர். தலைவர் கூட்டத்தைத்
துவக்கி முதலில் அண்ணா அவர்களைப் பேசுவதற்கு அழைத்தார். அறிஞர் அண்ணா
அவர்கள் கம்பனின் புலமைத் திறனைத் தாம் மறுக்கவில்லை, கம்பராமயணத்தின்
சொல்லாழம், பொருள் செறிவு உவமை அழகு, அணி அழகு ஆகியவற்றை தாம் வெறுக்கவில்லை
என்றும், ஆனால் கம்பராமாயணத்தின் நோக்கத்தையும், விளைவையும் வன்மையாத்
தாம் எதிர்ப்பதாகவும் கூறி சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார்கள்.
பிறது பேராசிரியார்
ஆர்.பி.சேதுப்பிள்ளை அவர்கள் எழுந்து, அறிஞர் அண்ணாவின் ஆணித்தரமான
வாதங்களுக்கு நேருக்கு நேர் விடையிறுக்கமாட்டாமல், பத்து நிமிடநேரம்
ஏதோ சில பொருத்தமற்றவைகளைக் கூறி மற்றோர் முறை இவ்விஷயமாக அண்ணா
அவர்கள் அழைப்பின், காஞ்சிபுரம் சென்று இது குறித்துப் பேசுவேன்
என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார். தலைவர் அவர்கள் முடிவுரையில்
விவாதம் மேலான முறையில் இருந்ததற்காக மகிழ்வதாகக் கூறித் தாம் ஏதொன்றும்
கூறுவதற்கில்லை என்று சொல்வித் தம்பித்துக்கொண்டார்.
அதற்குப் பிறகு காஞ்சிபுர்ம்
வரத் தயாரா என்று திராவிட நாடு இதழ் மூலம் கேட்டும், தோழர் சேதுப்பிள்ளை
அவர்கள் விட்டால் போதும் என்ற முறையில் வாய்திறவாமல் வாளாயிருந்துவிட்டார்.
முதல் விவாத்தில் பட்டபாடு அவருக்கு போதுமென்றாகிவிட்டது போலும்.
(மன்றம், நாள் 01.09.1954)
|