பட்டியின் பகற்கனவு!
அறிஞர் அண்ணா
மன்னா! இதோ புறப்பட்டுவிட்டேன்,
மந்திரவாளையும், எடுத்துக்கொண்டடேன, மாகாளி கோயில பிரசாதம், மறந்துவிடப்போகிறீர்!
ஏ! வேதாளம்! வேதாளம்! புறப்படு, விக்ரமாதித்ததிய
மன்னர், நாடாறு முடிந்ததால் காடாறு துவக்குகிறார், உடனவ்ரவேண்டமே,
குருக்கமரத்தின் மீது உறக்கத்திலே இராதே, புறப்படு போவோம்.
இவ்வாறாகத்தானே, மதியூக மந்தியான பட்டி கூறி,
விக்ரமாதித்திய மனனர்முன், கைகட்டி வாய்பொத்தி நிற்க, உஜ்ஜனி மாபுரத்துச்
சக்ரவர்த்தியாம் விக்ரமாதித்ய மகாராஜன், காடாறு மாதும் நாடாறு
மாதமெனனம் தனது முறைப்படி காடாறு மாதம் கழிக்கப் புறப்பட்டார்!
பேசா மடந்தை, பேசிடும் வேதாளம், கூடுவிட்டுக கூடுபாய்தல்,
கொதிக்கும் கொப்பரையில் குளித்தல், சாஜகுமாரத்திகளை மணம்பரிதல்
முதலிய பலப்பல கட்டுக்கதைகள் கொத்துககொத்தாகக் காணப்படும விக்கிரமாதித்தன்
கதை, நேயர்கட்குத் தெரியும், அந்த மன்னனுக்கு மற்திரியாம் பட்டி.
அவன் கூறுவானாம் நாம் மேலே எழுதியுள்ளபடி மன்னா மாகாளி தந்த மந்திரவாளுடன்
செல்வோம் வாரீர் என்று.
வடநாட்டிலே இருந்த வல்லரகளிளே குப்தவம்சம் என்பதொன்று.
அதிலொரு மன்னன் இரண்டாம் சந்திரகுப்தன் என்பான். அவளோர் ஆரீயதாசன்.
எனவே, அவனை விக்கிரமாதித்தன் என்ற பட்டமிட்டழைத்து, அவனுடைய புஜபல
பராக்கிரமங்களைப் புகழ்ந்து, தேவியினருள அவனுக்குண்டென்று புனைந்துரைத்து,
அவன் செய்ததாக, நம்பொணாக் கதைகளைப் புளுகினர், நாவால் வாழும் ஆரியர்.
விக்ரமாதித்த சகாப்தம், என்று வடநாடுகளிலே வழங்குமளவு, அந்த மன்னனுக்கு
ஆரியப்பிரசார எந்திரம் வேலை செய்தது. அந்தக் காலம் இன்றில்லை.
உஜ்ஜனி மாகாளி ஊர்சுற்றி தலையைக் கொய்வதுமில்லை, கூடுவிட்டுக்
கூடுபாயும் மன்னரும் இல்லை, தூதுசெல்லும் வேதாளமோ, இல்லை. ஆனால்
மதியூக மந்தியாம் பட்டிமட்டும், இருக்கிறார்! எங்கே? என்ழுர்,
பம்பாய் எனும் பட்டினத்திலே பகற்கனவு கண்டபடி இருக்கிறார், பட்டி!
விக்கிரமாதித்தியருடைய ஆட்சியைப் புகழ்கிறார்!
அந்தக்காலத்தை எண்ணிக் கண்ணீர் விடுகிறார்! அந்த வாழ்வுதான் எந்தநாள்
வரும், என்று சோதிக்கிறார். நான் அடைய விரும்பும் சுயாட்சி, விக்ரமாதித்ய
ஆட்சியாக இருக்கவேண்டுமூ. அத்தகைய ஆட்சியிலேதான் நாம் பொலிபுடன்
பண்புடன் விளங்குவோம் வருக அநத் ஆட்சி! என்று உள்ளம் குழைந்து
உருச்செபிக்கிறார், கனமாக இருந்து மெலிந்துப்போன, நாவன்மையால்
நீள்வையம் ஆளலாம் என்ற நம்பிடுமூ, ஸ்ரீஜத் கே.எம்.முன்ஷி.
ஆங்கில ஆட்சி கூடாது, சுயாட்சி வேண்டும், என்பது,
அடிமைப் பட்டுள்ள இந்த உபகண்டத்திலுள்ள அறிவுள்ளவர் ஒவ்வொருவர்
உள்ளத்திலிருந்தும் எழும் கீதம்! இந்த அடக்கொணா ஆர்வம், காங்கிரஸ்
அங்காடிக்கு ஆரம்ப முதல் தொகையாக அமைந்தது. தாய்நாட்டுக்காகத்
தலையறுபட்டுக் கீழே விட்டுவிரிந்து வெஞ்சிறைபுகாவிடினும், சுகவாழ்வினை
இழந்து கொல்லம்பு தாக்கிடினும் சோர்வுறாது, பஞ்சையாய் பராரியார்,
சட்டை செய்யாது, நாட்டுப் பணிபுரிகையில் கேடுபல சூழினும், மனங்குலையாத
மாசிலாமணிகள், உழைத்தனர் காங்கிரஸ் அங்காடியிலே, இலாபம் கொழித்தது.ஈன்ற
தாயின் சிரம் சொய்தால் ஏதேனும் இலாபம் கிடைக்குமாயின் அதற்கம்
துணியும் இயல்புடைய ஓரினம், பன்னெடு நாள்களுக்கு முன்பிருந்தே
இந்தப் பரந்த நிலத்தைப் பாழ்படுததி வந்ததை யாரறியார்! அதே இனம்,
நாட்டுப் பற்றெனம் ஆரவத்தால் ஈட்டிய பொருளை, சூறையாடும் சூதெண்ணம்பொண்டு,
அங்காடியிலே அமர்ந்துகொண்டது. பின்னரே, காங்கிரஸ் அங்காடியிலே
கலகமும எழுந்தது. காரியமும கெட்டது மனவேறுபாடு தலைகாட்டிற்று,
மாற்றுக்கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன. ஆங்கில ஆட்சிபோனால், இங்ககு
ஆரிய ஆட்சி அமைக்கப்படவேண்டுமென்று, காங்கிரஸ் கருதுகிறது, என்பதுபற்றி
நாம் பன்முறை கூறினோம். இராமராச்யம் என்ற அடைமொழியைக் காந்தியார்,
சுயராச்சியத்துக்குச் சூட்டியதன் கருத்தே இதுதான் என்பதனை விளக்கினோம்.
ஆரியருக்கு அடிபணயி வைப்பதே வார்தா வலை வீசிகளின் எண்ணம் என்பதை
எடுத்துக்காட்டினோம். இன்று வடநாட்டிலே வாழும் மாஜி மந்திரி, ஸ்ரீஜத்
முன்ஷி
எனும் முப்புரி தரித்த விப்பிரர், விக்ரமாதித்திய
விழாக் கொண்டாடினனாராம்! அதிலேதான், ஆவலாகவும் ஆர்வத்தோடும் தம்
போன்றவர்கள் விக்கிரமாதித்ய ஆட்சி மீண்டும் இந்தியாவிலே ஸ்தாபிதமாகவேண்டுமென்று
காத்துக்கொண்டிருப்பதாகவும் பேசினார். கட்டுக்கதைகளை நீக்கிவிட்டு,
வரலாற்றுப் பகுதியை மட்டும் பார்த்தால், என் ஸ்ரீஜத் முன்ஷி, விக்கிரமாதித்ய
ஆட்சியைக் காண விரும்புகிறார் என்பது விளங்கும். அது, முதல்தரமான
ஆரிய ஆட்சி, ஆகவேதான், ஆரீய ஆட்சியை அகண்ட இந்துஸ்தானிலே காணவிரும்பும்
ஆரியர் ஸ்ரீஜத் முன்ஷி, விக்ரம ஆட்சிக்குத் தவங்கிடக்கிறார்!
கி.பி.380-ல் வடநாட்டிலே வல்லரசராக இரண்டாம் சந்திரகுப்தர்
40 ஆண்டுகள் வாழ்ந்தார். அந்த ஆட்சியிலே, ஆரியர்கள் சுகபோகத்துடனும்
செல்வாக்குடனம் வாழ்ந்தனர் அதற்கு முன்பு. புத்தமார்க்கமெனும்
சுழற்காற்றக் கிளம்பி ஆரியத்தைத் தாக்கிற்று. அசோக சாம்ராஜ்யத்திலே,
அன்புநெறி வளர்க்கப்பட்டு, ஆரியப்புரட்டுகளுக்க வழி இல்லமல் செய்யப்பட்டது.
பலமன்னர்கள், சித்தார்த்தரின் சித்தார்த்தத்தைச் சிர மேற்கொண்டதால்,
ஆரியருக்குச் செல்வாக்குச் சிதைந்தது. இது கண்டு மனம் வெதும்பிக்
கிடந்த ஆரியருக்கு, குப்தவம்சம் புத்துயிர் தந்தது. அதிலே புகழ்பெற்ற
சந்திரகுப்தன், தன் படை வன்மையால், பரந்த சாம்ராஜ்யத்தைச் சமைத்தான்.
வாணபமும் வளமும் ஓங்கிற்று. சுகமும் செல்வமும் செழித்தது. வீரனின்
இரத்தமெனும் நீர் பாய்ச்சி, வளமாக்கப்பட்ட பூந்தோட்டம் போன்ற குப்த
சாம்ராஜ்யத்தை, ஆரியர் தங்கள் வேட்டைக காடாக்கிக் கொண்டனர். இங்கு,
பௌத்தம் ஒழிக்கப்பட்டுத. பௌண்டசீக யாகபரம்பரைக்குப் பரிபாலனம்
கிடைத்து. இந்த ஆரியப்பணியைத் திறம்படச் செய்து, அசோக நறுமணம்
இல்லாதொழியச் செய்தான்,விக்கிரமாதித்தன் இவனுடைய குணங் குறித்து
எழுதிய வரலாற்று ஆசிரியர்கள், தற்பெருமைக்காரன் என்பதையிம் வீரதீர
பராக்கிரமசாலி என்று தன்னைக் காட்டிக்கொள்வதற்காக வித விதமான பட்டங்கள்
சூட்டிக்கொள்வதிலே பிரியமுடையவனென்பதையும், சிங்கத்துடன் தான்
போர் புரிவதுபோன்ற உருவை, நாணயங்களிலே பொறித்திடச் செய்து பீரித்தவன்
என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளனர். இத்தகைய நற்பெருமைக்காரர்,
ஆரியரிடம் சிக்கிவிட்டால் போதாதா! வானளாவப் புகழ்ந்து, இந்திரனே,
சந்திரனே, காமா, சோமா! என்று அர்ச்சசித்து, இலாபம் பெறும் வழியை
ஆரியர் நன்கு அறிவாரன்றோ! அவர்களுடைய மாயமொழி எனும் மது வருந்திய
மன்னர். பிறகு சாம்ராஜ்யத்தையே, ஆரிய ராஜ்யமாக்கவும் இசைந்தனர்.
விக்கிரமன் அத்தகையவனே! வீணரின் வெற்றுரைக்கு மயங்கியவனே! வீரரை
விடுத்தான். இவ்வீணரை ஆதரித்தான். ஆரியருக்குப் புதுயோகம் பிறந்தது.
ஆரியக் கவிகளுக்கு ஆண்தானங்களுக்கு அரண்மனை வாசம்! ஆரியமத போதகர்கட்கு
மாடமாளிகைகளி! அசோகர், தமது ஆட்சியிலே, அந்நாட்டு மொழியாக பாலி
இருத்தல் வேண்டமென்று பணித்தார். ஆரியரின் சமஸ்கிருதம், முதலிடத்தை
இழுந்தது. குப்தமன்னனோ, சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக்கினான். காளிதாசனும்,
ஆரியப்பட்டனும், வராகமித்ரனும், பிற ஆரியப் பண்டிதர்களும் அகமழிந்து
வாழ்ந்தனர். ஆரியக் கடவுட்களுக்குச் சிறந்த ஆலயங்ககளும், ஆரிய
வழிப்போக்கர்கட்குச் சத்திரம் சாவடிகளம் கட்டப்பட்டன. ஏன்களிக்கமாட்டார்
முன்ஷி! முப்புரியன்றோ குப்த சாம்ராஜ்யத்திலே, முதல் தாம்பூலம்
பெற்றுவந்தது!! அதேபோல, மீண்டும் ஆரியருக்குச் செல்வாக்கும் சுகவாழ்வும்,
கிடைக்கும், ஆட்சி வரவேண்டும் என்று, ஆரிய இனப்பற்றுமிக்க, முன்ஷி
கூறுகிறார்.
ஆம் சாம்ராஜ்யத்திலே, மற்றவர் எக்கேடு கெடினும்,
தனது இனம் வாழவழி இருக்கவேண்டும். மனனர்கள், ஆரிய தாசராக இருக்கவேண்டும்.
சனாதனம் சாயாதிருக்கவேண்டும், எப்தே முன்ஷியின் எண்ணம் ஆரியருக்குத்
தேனும் பாலும் தந்த அதே சாம்ராஜ்யத்திலே, நாட்டுப் பழங்குடி மக்கள்
இருந்த நிலையைச் சீனநாட்டுப் பெரியார், பாகியான், கூறுகிறார்,
கேண்மின. சண்டாளர்கள், தெருவிலே நடமாடுவதனால், பிறர் கண்டு தீண்டத்
தீட்டு ஏற்படாதிருக்க, ஊர் நுழையும்போது, கோல்கொண்டு தட்டி, தங்கள்
வருகையைச் சத்தத்தின் மூலம் தெரிவிக்கவேண்டும் புத்தமார்க்கம்
புதைந்துபோய், ஆரியம் மீண்டும் தலை விரித்தாடும் காலம் பிறந்ததும்,
நாட்டுப் பழங்குடி மக்களின் நிலை என்னவாயிற்று என்பதை எண்ணிப்
பார்க்கவேண்டுகிறோம். நடமாடும் உரிமையற்று, நாட்டுப் பழங்குடிமக்கள்
நலிய, ஆரியர் அகமகிழ்வுடன் ஆஸ்தானங்களிலே அமர்ந்து, அரசருடன் அளவளாவி
வாழ்ந்தனர். இதுதான் விக்கிரமாதித்ய ஆட்சி! இதே முறையான ஆட்சி
மீண்டும் வேண்டுமென்றுதான், பம்பாயிலே உள்ள நவீன பட்டி, பகற்கனவு
காண்கிறார். நர்மதைக்கு மேலே, ஒரு வேளை நடக்கக்கூடும். திராவிடத்
திருநாட்டிலே அது இனி நடவாது என்று பகற்கனவு காணும் பட்டிக்கு
நாம் திட்டமாகக் கூறுகிறோம்.
(திராவிட நாடு - 19.12.1943)