அறிஞர் அண்ணா அவர்கள் தமது மலேசிய நாட்டுச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு 1.8.65 காலை விமானம் மூலம் ஜப்பானுக்குப் பயணமானார்கள். விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கூடி நின்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
30.7.65 மாலை சிங்கப்பூர் ஜலான்புசார் விளையாட்டரங்கில் மாபெரும் வழியனுப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மலேசிய தி.மு.கழகச் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்திற்கு ம.தி.மு.க. தலைவர் சி.நடேசன் தலைமை வகித்தார். வெள்ளம் போல் தமிழ் மக்கள் கூடியிருந்தனர்.
அறிஞர் அண்ணா அவர்கள் உருக்கமுடன் உரையாற்றி விடை பெற்றுக் கொண்டார்.
அண்ணா அவர்களுக்கு ஏராளமான மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.