மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
செய்திகள்
தாயகத்தில் தம்பிமார்களின் வழியனுப்பு

 

அறிஞர் அண்ணா அவர்கள் தோழர் இரா.செழியன் அவர்களுடன் 17.07.65 அன்று விமான மூலம் மலேசியாவுக்குப் பயணமானார்கள்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கழக முன்னணித் தோழர்களும், தொண்டர்களும் ஏராளமாகக் குழுமியிருந்து மலர்மாலை, கைத்தறி ஆடைகள் அணிவித்து, வாழ்த்து முழங்கி வழியனுப்பி வைத்தனர். அண்ணா அவர்களும், செழியன் அவர்களும் அனைவருக்கும் கரங்கூப்பி நன்றி தெரிவித்து விடைபெற்ற வண்ணம் விமானத்தில் ஏறினார்கள்.

விமானம் புறப்பட்டு மேலே எழும்போது கூடியிருந்த அனைவரும் கரங்கூப்பியும், கையசைத்தும் வாழ்த்தொலி எழுப்பி வழியனுப்பி வைத்தனர்.

அறிஞர் அண்ணா அவர்கள் தோழர் செழியனுடனும், தோழர்களுடனும் இன்று காலை 7:30 மணிக்கே விமானக் கூடம் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு வழியனுப்புவதற்காகக் குழுமியிருந்த அனைவரும் வாழ்த்தொலி எழுப்பி வரவேற்று, மாலையணிவித்து மகிழ்ந்தார்கள்.

காலை 8:30 மணியளவில் புறப்பட்டிருக்க வேண்டிய விமானம் இன்று காலதாமதமாக, பகல் 12:30 மணியளவில்தான் புறப்பட்டது.

வழியனுப்பி வைக்க வந்தோர்:-

கழக அவைத் தலைவர் நாவலர் இரா.நெடுஞ்செழியன், எம்.எல்.ஏ., பொருளாளர் கலைஞர் கருணாநிதி, எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன், எம்.எல்.சி., தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.மதியழகன், எம்.எல்.ஏ., வெளியீட்டுச் செயலாளர் சி.பி. சிற்றரசு, எம்.எல்.சி., தொழிற்சங்கச் செயலாளர் ஏ.கோவிந்தசாமி, பேராசிரியர் க.அன்பழகன், எம்.எல்.சி., கி.மனோகரன், எம்.ஏ., எம்.பி., டி.கே.சீனிவாசன், ஏ.பி.சனார்த்தனம், எம்.ஏ., க.இராசாராம், பி.ஏ., எம்.பி.தில்லைவில்லாளன், எம்.ஏ., பி.எல்., இராம.அரங்கண்ணல், எம்.எல்.ஏ., அரூர்முத்து, எம்.பி.; இரா.தருமலிங்கம், எம்.பி., பி.சிவசங்கரன், எம்.பி., மேயர் சிட்டிபாபு, துணை மேயர் டாக்டர் அபிபுல்லா பேக், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி, எம்.எல்.சி., புரட்சி நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரன், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராசேந்திரன், எம்.எல்.ஏ., நடிகமணி நாராயணசாமி, கே.நாராயணசாமி (முதலியார்), பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், நா.கணபதி, கா.வேழவேந்தன், காஞ்சி நகராட்சித் தலைவர் அ.க.தங்கவேலர், எம்.எல்.சி., சிதம்பரம் நகராட்சித் தலைவர் வி.வி.சாமிநாதன், சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் நீலநாராயணன், மதுரை மாவட்டச் செயலாளர் எஸ்.முத்து, முகவை மாவட்டச் செயலாளர் இரா.சாம்பசிவம், செங்கற்பட்டு மாவட்டச் செயலாளர் சி.வி.எம்.அண்ணாமலை, திருச்சி மாவட்ட செயலாளர் அன்பில். தருமலிங்கம், எம்.எல்.ஏ., செ.கோ.விசுவநாதன், எம்.எல்.ஏ., வி.ஆர்.பெரியண்ணன், எம்.எல்.ஏ., எஸ்.முத்துலிங்கம், எம்.எல்.ஏ., கோ.சி.மணி, எம்.எல்.ஏ., கோவை இராசமாணிக்கம், எம்.சி., காட்டூர் கோபால், திருப்பூர் சு.துரைசாமி, உ.பில்லப்பன், எம்.ஏ., டி.எம்.பார்த்தசாரதி, டி.கே.பொன்னுவேலு, பி.ஏ., வி.வெங்கா, கே.பி.சுந்தரம், மா.கி.தசரதன், எம்.ஏ., தமிழ் முரசு இராதாகிருஷ்ணன், தஞ்சை நடராசன், திருவாரூர் தென்னன், வாலாஜாபாத் திரு.மாசிலாமணி (முதலியார்) காஞ்சி கே.டி.எஸ். மணி, எம்.சி., வி.என். மார்க், பட்டுக்கோட்டை சௌரிராசன், நாகர்கோவில் சுப்பிரமணியம், திருச்சி காமாட்சி, ஆர்.எம்.வீரப்பன், க.அறிவழகன், எம்.ஏ., குன்றத்தூர் தி.ந.சம்பந்தம், பூவிருந்தவல்லி டி.இராசரத்தினம், டி.கே.சிவகுமாரன், சோழவந்தான் ஆவுடையப்பன், முன்னாள் மேயர்கள் அ.பொ.அரசு, எம்.எஸ்.அப்துல்காதர், வி.முனுசாமி. எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் துணை மேயர்களான மு.வேதாசலம், அ.செல்வராசன், கபாலமூர்த்தி, மற்றும் முன்னாள் இந்நாள் மாநகராட்சி உறுப்பினர்கள், பகுதி, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களும், தோழர்களும் ஏராளமாக வந்திருந்து மாலையணிவித்து வழியனுப்பினர்.

- நம்நாடு (சென்னை 16.7.65)


 

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai