மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
செய்திகள்
தமிழ் முரசுக்கு அண்ணா பாராட்டு!

 

'தமிழ் முரசு' நாளிதழின் இலக்கியப் பணியைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பொதுக்கூட்டத்தில் பாராட்டினார்.

"மலேசியாவில் 'தமிழ் முரசு' தரமான இலக்கியப்பணியாற்றி வருகிறது"

"தமிழகத்தைச் சேர்ந்த அ.இராகவன் அவர்கள் எழுதி வரும் 'தமிழ் நாட்டுக் காசுகள்' என்ற தொடர் கட்டுரையை இங்கு வாழ்கின்ற தமிழ் மக்கள் படித்துப் பயனுற வேண்டும்"

"வரலாற்று மாண்புகளை வனப்போடும் வண்ணத்தோடும் அது படம் பிடித்துக் காட்டுகிறது."

"இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் சொந்தமாகக் காசுகளை வெளியிட்டு அந்நிய நாடுகளோடு நடத்திய பெரும் வர்த்தகத் தொடர்புகளைக் கட்டுரைகள் தெளிவாக ஆய்ந்து விளக்குகின்றன."

"தமிழ் முரசு" நாளிதழிலேயே திரு. அ.இராகவன் அவர்கள் முன்னொரு சமயம் தமிழர்களின் 'கப்பற்கட்டும் கலை'யைப் பற்றி ஓர் அரிய கட்டுரைத் தொடர் எழுதினார். அது போன்று அரிய பெரிய தமிழ் இலக்கிய வரலாறுகளை ஓய்வு நேரங்களில் படித்து, நம் இனத்தின் சிறப்பை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இத்தகைய சிறப்பு மிக்கவர்கள் நாம் என்பதை சகோதர சீன - மலாய் மக்கள் அறிந்து போற்றுமளவுக்கு நாம் செயல்பட வேண்டும்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai