மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
நிகழ்வுகள்
செங்குத்தான மலை உச்சியிலிருந்து இறங்கினார் அண்ணா!

 

அறிஞர் அண்ணா அவர்கள் 19.7.65 காலை இங்குள்ள கொடி மலையிலிருந்து 1800 அடி உயரமுள்ள மலைப்பிரதேசத்தில், கால்கடுக்க களைப்போடு நடந்து அடிவாரத்துக்கு வந்து சேர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்.

முந்தியநாள் 7 மணிக்கு, பினாங்கு ஸ்டேடியத்தில் நடந்த ஒரு பொது வரவேற்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபின், இரவு தங்குவதற்காகக் குளிர்ச்சி மிகுந்த பினாங்கு கொடிமலைக்கு அண்ணா அவர்கள் மலேசியத் தி.மு.க. பிரதிநிதிகளுடன் சென்றார்.

நள்ளிரவு பெய்த பலத்த மழையின் காரணமாகப் பெரிய மரங்களும், செடிகளும், மணற்பகுதியும் இரயில் பாதையில் சரிந்தபடியால், அண்ணா அவர்கள் குறிப்பிட்ட நேரப்படி இறங்கிவர முடியவில்லை.

அதன் பின்னர் வேறு வழியில்லாததால், செங்குத்தான மலைப்பகுதியிலிருந்து தமது குழுவினருடன் 1800 அடி உயரத்திலிருந்து மிகவும் அல்லல் பட்டு நடந்தார். அவருடைய கால்களுக்குச் சுடு நீரில் ஒத்தடம் கொடுக்கப் பட்டது.

'தமிழ்முரசு' - சிங்கப்பூர்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai