மலேசியாவில் அறிஞர் அண்ணா அவர்கள் தமது சுற்றுப் பயணத்தின்போது பங்கற்கும் நிகழ்ச்சிகள் விவரம் பின்வருமாறு:
சென்னை 'நம்நாடு' இதழில் வெளியிடப்பட்டிருந்தது:
19.07.65
காலை: பினாங்கு நகர் வரவேற்பு - சிங்கப்பூர் கோலாம்பூர் ஆகிய நகர்களின் வரவேற்பைப் போலவே மாபெரும் வரவேற்பு அளிக்கப் பினாங்கு நகர மக்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
பினாங்கு நகரில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அறிஞர் அண்ணா அவர்கள், பினாங்கு முதலமைச்சரைச் சந்தித்துப் பேசுகிறார்கள்.
அண்ணா - பினாங்கு முதலமைச்சர் சந்திப்பு முடிந்ததும் பகல் 10 மணிக்கு பினாங்கு மாநகராட்சி மன்றம் அறிஞர் அண்ணா அவர்களுக்கு வரவேற்பளித்துப் பெருமைப்படுத்துகிறது.
நகரமன்ற வரவேற்பு முடிந்ததும் பகல் 11 மணியளவில் பிரபல பத்திரிகையாளர்கள் அனைவரும் அண்ணா அவர்களைச் சந்திக்கிறார்கள்.
பிற்பகல் 2 மணி: பட்டவொர்த் நகர்ப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
மாலை 6:30 மணி: கூலிம் நகர்ப் பொதுக்கூட்டம்
இரவு 9 மணி: அலோர்ஸ்டார் நகரப் பொதுக்கூட்டம்.
20.07.65
காலை: தைப்பிங் நகர் வரவேற்பு.
பிற்பகல் 2:30 மணி: பொதுக்கூட்டம்.
மாலை 6:30 மணி: ஈப்போ நகர் வரவேற்பு - பொதுக்கூட்டம்.
இரவு: ஈப்போ மாநகராட்சி மன்ற வரவேற்பு.
21.07.65
காலை:பத்துகாஜா நகர் வரவேற்பு
பிற்பகல் 3 மணி: பொதுக்கூட்டம்.
மாலை 7 மணி: தெலிக் கான்சன் நகர் பொதுக்கூட்டம்.
22.07.65
காலை: சராங்கு வரவேற்பு
பிற்பகல் 2 மணி: செமினி நகர் வரவேற்பு - பொதுக்கூட்டம்.
இரவு 7:30 மணி: சிரம்பான் நகர் வரவேற்பு - பொதுக்கூட்டம்.
23.7.65
காலை: மலாக்கா நகர் வரவேற்பு.
பிற்பகல் 2:30 மணி: பொதுக்கூட்டம்.
மாலை 6:30 மணி: மூவார் பொதுக்கூட்டம்.
24.7.65
மணிசிகாமட் நகர் வரவேற்பு
பிற்பகல் 2 மணி: பொதுக்கூட்டம்.
மாலை 5 மணி: குளுவாய் நகர் வரவேற்பு - பொதுக்கூட்டம்.
இரவு: விமான மூலம் சிங்கப்பூர் திரும்புதல்.
25.7.65
சிங்கப்பூரின் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்த்தல்; மற்றும் முக்கியஸ்தர்கள், பத்திரிகையாளர்களைச் சந்தித்தல்.
26.7.65
பிற்பகல் 3 மணி: சிங்கப்பூர் அடுத்த புலாயி வரவேற்புப் பொதுக்கூட்டம்.
மாலை 5 மணி: ஜோகூர்பாரு நகர் வரவேற்புப் பொதுக்கூட்டம்.
மேற்குறிப்பிட்டபடி சூலை 19 முதல் 26 வரையுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறும் நகரங்கள், ஊர்கள் தோறும் அறிஞர் அண்ணா அவர்களுக்கு மாபெரும் வரவற்பளித்துச் சிறப்புச் செய்ய முனைப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக மலேசியாவிலிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு நகரும் மற்ற நகரைக் காட்டிலும் சிறப்பினைச் சேர்ப்பதற்குப் போட்டியிட்டுக் கொண்டு இருப்பதாகவும், அங்கிருக்கும் தோழர்கள் எழுதுகிறார்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள் வரும் நாள் - நேரம் - செய்யப்படும் ஏற்பாடுகள் அனைத்தையும் பெரிதும் முக்கியத்துவம் கொடுத்துப் பெருந்தலைப்புகளிட்டு அந்தந்த ஊரின் எல்லா மொழி நாளிதழ்களும் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
மலேசியத் தமிழர்களுக்கிடையில் கரைபுரண்டோடும் உற்சாகம் காணப்படுவதாகவும், தங்கள் சொந்த வாழ்வில் தோன்றும் மகிழ்ச்சி மிக்க நிகழ்ச்சியாகவே கருதி ஒவ்வொருவரும் அண்ணா அவர்களை வரவேற்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது.