மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
செய்திகள்
மலேசிய அமைச்சர் பாராட்டு

 

"மலேசியாவிலுள்ள இந்தியர்கள் மலேசியர்களாகவே வாழ்ந்து, அவர்களின் முழுப்பற்றையும் இந்நாட்டிற்கே அளிக்க வேண்டும்" என்று அண்ணா அவர்கள் மலையகத்துக் கூட்டங்களிலெல்லாம் பேசியதை மலேசியத் தகவல் - ஒலிபரப்புத்துறை அமைச்சர் இஞ்சே.செனு பின் அப்துல் ரகிமான் பாராட்டினார்.

தேசியமொழி மாத வைபவம் ஒன்றில் உரை நிகழ்த்த இன்று காலை ஈப்போவுக்கு வருகை தந்த இஞ்சே சென், ஈப்போ விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இப்போது மலேசியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் அறிஞர் அண்ணா அவர்கள் "மலேசியாவில் வாழும் இந்தியர்கள் மலேசியர்களாகவே, வாழ்ந்து இந்நாட்டிற்கே தங்களின் முழுப்பற்றுதலையும் காட்ட வேண்டும்" என்று பொதுக் கூட்டங்களில் அறிவுரை கூறிவருவதைப் பற்றி அமைச்சரின் கருத்தைத் 'தமிழ் முரசு' நிருபர் கேட்டபோது, அதற்குப் பதிலளித்த இஞ்சே சென், "அவர் (அண்ணா) அப்படிக் கூறுவது பாராட்டுக்குரியதே. கூட்டணி அரசாங்கமும் இதையேதான் வலியுறுத்திக் கூறுகிறது" என்று கூறினார்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai