அறிஞர் அண்ணா அவர்களும், இரர.செழியனும் நாம்பென் நகருக்கு பிற்பகல் 2:45 மணிக்குச் சென்றடைந்தனர்.
விமான நிலையத்தில் கம்போடிய அரசாங்கத்தின் சார்பில் ஓர் உயர் அதிகாரியும், கம்போடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவேற்றனர்; இந்தியத் தூதுவரகப் பொறுப்பாளர் திரு. டி.பி.ஐயர் அவர்களும், நீண்டகாலமாகக் கம்போடியாவில் தங்கியுள்ள தமிழர்களில் முக்கியமானவரான அப்துல் கரீம் அவர்களும் வரவற்பில் கலந்துகொண்டனர்.
மாலையில் அறிஞர் அண்ணா அவர்கள்,கம்போடிய அரசாங்கத்துச் செய்தித் துறை அமைச்சர் திரு. சிசான் (Chea san) அவர்களைச் சந்தித்தார். பின்பு, கம்போடிய நாடாளுமன்ற அவைத் தலைவர் திரு. அங் ஆங்சாத் அவர்கள் அண்ணா அவர்களை, தமது நாடாளுமன்ற அலுவலகத்தில் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார்.
கம்போடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கக் கூடிய அடையாளச் சின்னங்களை அறிஞர் அண்ணாவுக்கும் திரு. செழியனுக்கும் நாடாளுமன்றத் தலைவர் அளித்தார்.
அன்று இரவு திரு. அங் ஆங்சாத் அவர்களால் விருந்தளிக்கப்பட்டது; விருந்தில் நாடாளுமன்ற உறுபிபினர்களும் முக்கிய சில உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
ஆகஸ்டு 5 ஆம் நாள், கம்போடியாவின் வளர்ச்சியைக் காட்டும் கண்காட்சியை அண்ணா கண்டு களித்தார். காலையில் இந்தியத் தூதுவரகப் பொறுப்பாளர் திரு.ஐயர் அவர்களும், நண்பகல் திரு.அப்துல் கரீம் அவர்களும் விருந்து அளித்தனர்.
பிற்பகல், திராவிடச் சிற்பக் கலையின் கூறுகள் உள்ள ஆங்கோர் நகருக்கு அண்ணா புறப்பட்டுச் சென்றார்.