பினாங்கு வரவேற்புக் கூட்டத்திற்குக் கோலாம்பூரிலிருந்து விமான மூலம் அறிஞர் அண்ணா செல்லும்போது, 19.7.65 அன்று ஈப்போ விமான நிலையத்தில் சிறிது நிற்க வேண்டியதாயிற்று.
இச்செய்தியறிந்த ஈப்போ அண்ணா வரவேற்புக் குழுவினர்களும், பொதுமக்களும் விமான நிலையத்திற்கு விரைந்து அங்கே காத்திருந்த அண்ணா அவர்களுக்கு மாலைகள் அணிவித்தனர்.
'அண்ணா', 'அண்ணா' என்ற பாசக் கதறலுடனும், 'அண்ணா வாழ்க!' என்ற முழக்கத்துடன் அன்பர்கள் வரவேற்ற காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது.