தென்கிழக்காசிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, அறிஞர் அண்ணா அவர்களும், திரு. செழியன் அவர்களும் 15.8.65 இரவு 9 மணியளவில் புது டில்லி வந்து சேர்ந்தனர்.
டில்லி விமான நிலையத்தில் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்களான கி.மனோகரன், இரா. தருமலிங்கம், க.இராசாராம், செ.கந்தப்பன், அரூர்முத்து, பி.சிவசங்கரன், டி.டி.இராமபத்திரன், சுதந்திராக் கட்சித் தோழர் எஸ்.எஸ்.மாரிசாமி, எம்.பி., முஸ்லீம் லீக் தோழர் ஆ.க.அ. அப்துல்சமது, எம்.பி., மற்றும் டில்லி வாழ் தமிழர்கள் பலரும் குழுமியிருந்து வரவேற்றார்கள்.
கழகப் பொருளாளர் கலைஞர் அவர்களுக்குத் தொலைபேசி மூலம் இத்தகவல் கிடைத்தது.