மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
நிகழ்வுகள்
அண்ணாவுக்கு ஜோகூர் அமைச்சர் புகழ்மாலை

 

ஜோகூர்பாரு ஸ்டேடியத்தில் 26.7.65 மாலை அறிஞர் அண்ணாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்புப் பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ஜோகூர் அமைச்சர் புசார் டத்தோ ஹாஜி ஹசன்பின் ஹாஜி யூனுஸ், தமிழகத்திலிருந்து இங்கு வந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களை, சொந்த நாட்டிற்கு வந்தவரைப் போலத் தாம் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகப் பலத்த கரவொலிக்கிடையே கூறினார்.

அண்ணா அவர்களை, 'தமிழ் நாட்டின் பேரறிஞர்' என வர்ணித்தார் டத்தோ ஹாஜி ஹசன்; "அறிஞர் அண்ணா அவர்கள் தமிழுக்காகப் பாடுபட்ட பெருந் தலைவர்" எனக் குறிப்பிட்டார்.

"அவரது வருகையால் தமிழகத்திற்கும், மலேசியா நாட்டிற்கும் நீண்ட காலமாக இருந்து வரும் நட்புறவும், நல்லெண்ணமும் மேலும் வலுவடையும் என நம்புகிறேன்" எனக் கூறினார்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai