தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட காரணத்தாலும், போதிய ஓய்வு இல்லாததாலும் அண்ணா அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக இடையில் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதுபற்றி மலேசிய தி.மு.க. கழகப் பொதுச் செயலாளர் மு.க.இராமையா பத்திரிகைகளுக்குப் பின்வருமாறு அறிக்கை விடுத்திருந்தார்.
"அறிஞர் அண்ணா அவர்களின் உடல்நலக் குறைவின் காரணமாக 27.7.65 செவ்வாய்க் கிழமை ஈப்போவிலும், 28.7.65-ல் கோலாலம்பூர், ரவாங் ஆகிய இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது குறித்து மலேசிய தி.மு.கழகத் தலைமையகம் மிகவும் வருந்துகிறது. இதனால் ஏற்பட்டாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்குப் பெரிதும் வருந்துவதோடு அவர்களிடம் மன்னிப்பும் கோருகின்றோம்."