மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
செய்திகள்
சிங்கப்பூரில் அண்ணா கண்ட காட்சிகள்!

 

மலேசியாவுக்கு வந்தது முதல் ஓய்வின்றி மலேயாவில் சில பகுதிகளில் மின்னல் வேகத்தில் சுற்றி, அழுகுத் தமிழை அள்ளி வீசி, மக்களை ஆனந்திக்கச் செய்து, 24.7.65 அன்று சிங்கப்பூருக்குத் திரும்பிய அறிஞர் அண்ணா அவர்கள் இரண்டு நாள் ஓய்வுக்குப்பின் (26.7.64) அன்று சிங்கப்பூரின் வளர்ச்சிகளைக் கண்டு மகிழப் புறப்பட்டார்.

காலை சரியாக, 10 மணிக்கு 'மாஸ்டர் அட்டெண்டெண்ட்' துறையினின்றும், சிங்கப்பூர் துறைமுக ஆணையின் மோட்டார் லாஞ்சில் ஏறி, சிங்கப்பூர் கடலோரத் துறைமுகப் பகுதியைக் கண்டு களித்தார்.

துறைமுக ஆணையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அண்ணா அவர்களுக்கு வழிகட்டியாக இருந்து காட்சிகளுக்கு விளக்கம் சொல்லி வந்தார். சிங்கைத் துறைமுகப் பகுதிகளைக் கண்டு பெருமிதம் கொண்டார் அண்ணா.

"சென்னைத் துறைமுகத்தின் பக்கங்களில் இங்குள்ளதுபோல் தீவுகள் இல்லாததனால், அங்கு கடல் இதைப்போல் அமைதியாக இருப்பதில்லை." என்று அண்ணா சொன்னார்.

"உடம்புக்குச் சுகமில்லை என்று நேற்று இங்கு ஏற்பாடாகி இருந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டிருந்தனவே; தங்களுக்கு இப்பொழுது எப்படி இருக்கிறது?" என்று 'தமிழ் முரசு' நிருபர் கேட்ட போது, "அதிகம் ஒன்றுமில்லை; பினாங்கில், மலையிலிருந்து கீழே கால் நடையாக இறங்கி வர வேண்டியது ஏற்பட்டதால் கால் சற்று இலேசான வலியாக இருந்தது; இப்பொழுது எல்லாம் சரியாகிவிட்டது" என்று அண்ணா சொன்னார்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai