அறிஞர் அண்ணா, அவர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பில் பங்கு கொண்டு, தக்க வரவேற்பு அளிக்குமாறு மலேசிய ஆந்திர சங்கத் தலைமை அலுவலகம் மலேசியா முழுவதிலுமுள்ள தனது கிளைகளுக்குக் கடிதங்கள் அனுப்பியிருந்தது. வரவேற்புக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புக்குமாறும் ஆந்திர மக்கள் அனைவரையும் தலைமை அலுவலகம் கேட்டுக் கொண்டது.
மலேசிய ஆந்திர சங்கத் தலைமை அலுவலகம் தெலுக்கான்சன் அண்ணா வரவற்புக் குழுவிலும் அங்கம் வகித்தது.
தெலுக்கான்சனில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, மலேசிய ஆந்திர சங்கத்தின் சார்பாக வரவேற்புப் பத்திரம் ஒன்றும் வாசித்தளித்தனர்.
இங்கு தெலுக்கான்சன் மாவட்ட அதிகாரியுடம் தேசியத் தற்காப்பு நிதிக்கு, தெலுக்கான்சன் அண்ணா வரவேற்புக் குழுவினர் சார்பாக அறிஞர் அண்ணா அவர்கள் 180 வெள்ளி வழங்கினார்.
வைசரக் கல் பதித்த கணையாழி அண்ணாவுக்கு அன்பளிப்பு
தெலுக்கான்சனில் நடைபெற்ற மாபெரும் வரவேற்பில், அறிஞர் அண்ணா அவர்கட்கு நகர வரவேற்புக் குழுவின் சார்பில் 600 வெள்ளி மதிப்புள்ள ஒரு வைர மோதிரம் அன்பளிப்பாக அணிவிக்கப்பட்டது.