அறிஞர் அண்ணா அவர்கள் 20.7.65 அன்று அலோர்ஸ்டாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில், இந்தோனேசிய அதிபர் சுகர்ணோவின் கொக்கரிப்புப் பற்றி குறிப்பிட்டார்.
"குரைக்கின்ற நாய் கடிக்காது; அதுபோலவே அதிபர் சுகர்ணோ 'மலேசியாவை நசுக்குவேன்' எனக் கொக்கரிக்கத்தான் முடியும்; ஆனால் அவர் உண்மையில் அவ்வாறு செய்யத் துணிய மாட்டார்"
அலோர்ஸ்டார் தாருலமான ஸ்டேடியத்தில் நடைபெற்ற வரவேற்புப் பொதுக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா பேசினார்.
அறிஞர் அண்ணாவை நேரில் காணவும், அவரது உரையைக் கேட்கவும் நாலாயிரத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்தனர்.
அண்ணா அவர்கள் தொடர்ந்து பேசுகையில் மலேசியாவில் நிலவும் இன ஒற்றுமையை வெகுவாகப் பாராட்டினார். தலைமையமைச்சர் துங்குவை ஒரு 'முன்னணி அரசியல்வாதி' என்று வர்ணித்தார்.