தமிழின, மொழிப் போராட்டத் தானைத் தலைவர்
(பன்மொழிப் புலவர் டாக்டர் கா.அப்பாத்துரை)

மொழியின் பழமை மனித இனத்தின் பழமையைவிட ககுறைந்ததன்று. உண்மையில் மொழியும், மொழியின் பிறப்புக்கும் மலர்ச்சி, தளர்ச்சிகளுக்கும் அடித்தளங்களான குடும்ப, குமுகாய, இனவாழ்வுகளும் உயிரின மலர்ச்சி (Evolution of living beings) தோன்றியபோதே தோறி, அதன் மலர்ச்சியுடனே தளர்ச்சிகளுடனே தாமும் மலர்ச்சி தளர்ச்சிகளமைந்து வருபவை ஆகும். கிளியின் காதலிசைக் குரலிலும் மயிலின் ஆட்டத்திலும், குரங்குக் கூட்டத்தின் கூக்குரலிலும், பாம்பின் சீறலிலும், இனங்காக்கும் யானை அணிவகுப்பின் பிளிறலிலும் நாம் மனித இன மொழியின் குழந்தைப் பருவத்தைக் காணலாம்.

எல்லையற்ற இயற்கைப் பரப்பில் இனப்போராட்டங்களும் மொழிப் போராட்டங்களும் மிகப்படுகின்ற ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையேயாகும். முன்னதில் தடமற்று அல்லது தடங்களுடன் மாண்ட உயிரின் வகைகள் எண்ணற்றவை. பின்னதிலோ, மாண்ட மனித இன நாக்ரிகங்களும் அவற்றுடன் நம்மால் அறியப்பட்டும். அறியப் படாமலும் மாண்ட மனித இன நாகரிகங்களம், அவற்றின் மாண்ட தலைமுறைகளும், மாண்ட நாகரிக இன மொழிகளும் அவற்றின் மாண்ட தலைமுறைகளும் எண்ணற்றவை. உலக மொழி வரலாறும் இந்திய மொழி வரலாறும் இதனைக் காட்டவல்லன. ஏனேனில் மனித உலகில் மாண்ட நாகரிக இளங்கள், மொழிகள், மொழித் தலைமுறைகள் எத்தனையோ, அவற்றில் குறைந்ததன்று இந்தியாவில் மாண்ட நாகரிக இனங்கள், மொழிகள், மொழித் தலைமுறைகள், இலக்கியங்கள்!

இந்த மனித உலகில், அதன் நடுவண்மை யாகிய இந்தியாவில் ஒவ்வொரு மாண்ட நாகரிக இனத்தின் வரலாற்றுப் பின் பின்னணியிலும், ஒவ்வொரு மாண்ட மொழியின், மொழித் தலை முறையின் பின்னணியிலும் ஒவ்வோர் இனப் போராட்டத்தின், மொழிப்போராட்டத்தின் வரலாறு மறைந்தே கிடக்கின்றது.

மாண்ட மனித இன நாகரிகத் தலைமுறைகள், மாண்ட மனித இன, இந்திய மொழி இலக்கியத் தலைமுறைகள் ஆகியவற்றின் சாவா மூவா சின்னமாக நம் இன்றைய மனித உலகில், இந்தியாவில் இன்னும் வாழ்ந்து வளர்ந்து வருகிற ஒரே மனித இனமொழி, ஒரே இந்திய இன மொரீ தமிழ்! அது கண்ட, கண்டு வருகிற போராட்டங்கள் பல. ஆனால் என்றோ, எப்போதோ இம்மொழி சாவா வாழ்வு, மூப்பிலாது என்றம் இளமையுடன் வாழும் வாழ்வு, பிணியிலா நலவாழ்வு ஆகியவற்றின் மறைதிறவைக் கண்டு பிடித்திருக்க வேண்டும் என்னலாம். ஏனெனில் அது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக, ஆயிரக் கணக்கான போராட்டங்களில் செத்துப் பிழைத்திருக்கிறது; வென்று இன்றம் வாழ்ந்து வளர்ந்தே வருகிறது!

பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டேஇ தொல்காப்பித்துக்கும் முற்பட்டே, 16,000 நூற்பாக்களால் முத்தமிழுக்கும் ஓர் இலக்கண வரம்பு கண்டு, மொழி காத்துத் தமிழுக்குப் புத்துயிர் ஊட்டிய அகத்தியர் என்ற குருமுனிவர் ஒருவரைப் பற்றித் தமிழ் மரபு கூறுகிறது. அதுபோல நம் நாட்கிளிலேயே, தமிழ் மொழி காக்க எழுந்த மூன்று போராட்ட தலைவராக, மும்முனைப் போராட்டத் தளபதியாக விளங்கியவர் வான்புகழ் அறிஞர் அண்ணா! மெய்யோ பொய்யோ என ஆராய்ச்சியாளர் ஐயுறுமளவுக்குத் தமிழர் கனவாகிவிட்ட முந்தைய அகத்தியரின் மெய்யான நனவுலகப் புதிய அகத்தியராக அறிர் அண்ணா தமிழின வரலாற்றில் வண்ண ஒளி வீசுகிறார்.

தமிழ் காக்கும் மூனுறு போராட்டங்கள் சொற்காப்புப் போராட்ட, இசை காப்புப் போராட்டம், மொழியாட்சிக் காப்புப் போராட்டம் ஆகியவையே. முதலது இந்நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்தே பரிதிமால் கலைஞர் தவத்திரு மறைமலையடிகளார், மொழீ ஞாயிறு தேவநேயப் பாராணர் ஆகியோரால் தமிழ் மரபு கண்டு புதுப்பித்து வளர்க்கப் பட்ட தோராட்ட இயக்கம் ஆகும்.

இரண்டாவது, அரசு வயவர் அண்ணாமலைச் செட்டியாரால் தோற்றுவிக்கப்பட்டு இராசாசி, கவிமணி, அரசு வயவர் முத்தையாச் செட்டியார் ஆகியோரால் வளர்க்கப்பட்டு வந்துள்ள இசை காப்புப் போராட்ட இயக்கம் ஆகும்.

மூன்றாவதோ நாவலர் சோம சுந்தர பாரதியார், ஆசிரியர் மறைமலையடிகளார், தமிழகத் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. ஆகியோரின் தலைமைகளில் இராசாசி அவர்களின் துணையுடனும் புதிய தமிழகத்தின் புத்தெழுச்சிக்குரியதாக இந்தி எதிர்ப்புப் போராட்ட இயக்கம் என்ற பெயருடன் தோன்றிய தாய்மொழிகளின் தன்னாட்சியுரிமைக் காப்புப் போராட்ட இயக்கம் ஆகும்.

இந்த மூன்று போராட்டங்களையும் இருங்கிண்த்து ஒரே தமிழின உரிமை இயக்கமாக்கிய மும்மைமொழிப் போராட்டத் தனிநாயகத் தளபதியாக விளங்கிய பெருமை அறிஞர் அண்ணா ஒருவருக்கே உரிய தென்னல் தகும்.

இந்தியாவின் அரசியல் விடுதலை இயக்கப் போராட்டத்தில் காந்தியடிகளுடனும் தலைவர் பெருந்தகை சுபாசு சந்திரபோசுடனும் ஒப்பிடத் தக்க தென்னகத் தலைவர் தந்தை பெரியார்.

அரசியல் விடுதலைத் தன்னுரிமையுடன் சமய சமுதாயத்தி தன்னுரிமையாகய சமதரும நெறியையும் ஒருங்கிணைத்த திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்தவர் அவர். ஆனால் அப் பேரியக்கத்தை மொழியுரிமை சிறப்பாகத் தமிழர், தமிழின, மரபுரிமை இயக்கத்தையும் இணைத்து அதனை உலகின் ஒப்பற்ற முழு தேசீய இயக்கமாக்கியவர் அறிஞர் அண்ணாவேயாவர்!

அறிஞர் அண்ணாவின் இந்த ஒருங்கிப்புப் பேராற்றல் செயல்படாமலிந் திருக்குமேயானால், தந்தை பெரியாரின் இயக்கம் வெறும் பகுத்தறிவியக்கமாக அரசியல் சமய சமுதாயப் பேரியக்கமாக மட்டுமே அமைந்திருக்கும்;இன்ற அமைந்துள்ளதுபோல, அது மொழி மரபுரிமையை அடிப்படையாகக் கொண்ட முழு மனித இன உரிமை இயக்கமாக மிளிர்ந்திருக்க முடியாது என்ற கூற இடமுண்டு.

மலையாண நாடோ, கன்னட நாடோ, தெலுங்கு நாடோ தமிழகத்திரிருந்து பிரிந்துவிடாத பழைய சென்னை மாநிலத்தில் 1939-ல் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டதின்போது பேரறிஞர் அண்ணா அதன் செயல் துறைப் பெரும்படையின் முன்னணித் தளபதியாக மட்டுமன்றி அதன் உள்ளுயிர் ஆற்றல் உருவாகவும் விளங்கினார்.

அந்நாளைய முதல்வர் சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியாருக்கு அனுப்பப்பட்ட இந்தி எதிர்ப்பாளர் அல்லது தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தாரின் திறந்த மடலை உருவாக்குவதில் தமிழ்ப் பெரியாகளுடன் தமிழகப் பெரியாரை ஒருங்கிணைத்து வைத்து அதற்கு ஒருமுகக்குரல் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்களேயாவர்.இதனை உணர்ந்த தந்தை பெரியார் 1948-ல் தொடங்கப் பெற்ற திராவிடர் கழக இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், அறிஞர் அண்ணா அவர்களையே முழுப் பொறுப்பு வாய்ந்த பொது நிலைத் தளபதியாக்கி மகிழ்ந்தார்.

மடல் உருவாக்கும் பணியில் நானும், இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத் தொண்டர் படையில் என் துணைவியாரும் இடம்பெற்று, அறிஞர் அண்ணாவின் பேரொளியை அருகுநின்று காணும் அரும்பெற்ற் பேற்றினை அடைந்திருந்தோம்.

மும்மைத் தமிழ்காப்புப் போராட்டங்களில் அடிப்படை ஒற்றுமையையும் தமிழ்மொழி ஒன்றுக்கேயன்றி தாய்மொழிகள் எல்லாவற்றுக்குமேயுரிய அதன் அகல் விரிவையும் கண்டவர், கண்டு சுட்டிக் காட்டியவர் அறிஞர் அண்ணா அவர்களே! மூன்று போராட்டங்களும் உண்மையில் தமிழ்மொழி மீது அல்லது தாய்மொழிகளின் மீது அரசியல் அல்லது சமய அல்லது சமுதாய அல்லது பொருளியல் மேலாட்சி காரணமாக அடக்குமுறைகளையும் தாக்குதல் முறைகளையும் எதிர்த்த போராட்டங்களேயாகும் என்பதை அவர் ஆய்ந்து தெளிந்து விளக்கிறார்.

செக்கோசிலவேக்கிய நாட்டின் தலைவரான டாக்டர் மசாரிக் போன்ற - உலகில் மொழிப் போராட்டப் பெருந்தலைவர்களிடையே அறிஞர் அண்ணா ஒரு தனிச் சிறப்புக்குரிய இடம் பெறத்தக்கவர் ஆவர்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai