பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் 15.09.1909

அன்பார்ந்த அண்ணா பற்றாளர்களுக்கு,
இனிய
அண்ணா பிறந்தநாள்
வாழ்த்துக்கள்01
பாலைவனம் சோலைவனம் ஆக வேண்டும். அங்கு பசுங்கிளிகள் பாடிடவும் வேண்டும் - இது வெறும் கவிதையாகவே என்றென்றும் இருந்திடக் கூறப்பட்டதல்ல. செயல்படுத்திக் காட்ட முடியும் என்ற உறுதியை நான் அனைவரும் பெற்றிடத் தரப்பட்டதே இதுபோன்ற கவிதைகள்.

02
ஆய்ந்தறிதல் வேண்டும்; அதற்கேற்ற அஞ்சாமை வேண்டும்; சிந்தனையைச் சிறயிலிட்டுக் கொடுமையைக் கோலோச்ச் செய்வதற்கு உடந்தை ஆகாமல், எவருக்கும் கட்டுப்படாமல், இழுப்பார் பக்கம் சாய்ந்து விடாமல், அச்சமற்று றிந்போரை அறிப்பதற்கே பல்கலைக்கழகம்!

03
சொல்லுகிறபடி செய்யவேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கும், சொன்னபடி செய்யக் காணோமே, ஏன்? என்று கேட்கும் விழிப்புணர்ச்சி மக்களுக்கும் ஏற்படி வேண்டும்.

04
இருந்ததை இழந்தவர்களுக்கு எரிச்சல் வரத்தான் செய்யும்; அதேபோல் இல்லாததைப் பெற்றவர்களுக்குப் பெருமை இருக்கத்தான் செய்யும், ஆனாலும் பொறுமையாக இருக்கிறோம்.

05
வியர்வை பணமாகிறது - வரியாகப் பெறப்படுகிறது. கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றிதரக்கூடிய இலட்சியங்கள் நம்முன் நிற்கின்றன. ஆனால் அதே வரிசையில், வசீகரப் பூச்சிகளுடன், மயக்க மூட்டத்தக்க பேச்சுக்களையும், குறிக்கோள் என்ற பெயரால் நிற்க விடுகின்றனர். தெளிந்து அறிதல் வேண்டும்.

06
நாட்டுப் பொதுச் செல்வம் நாளும் வளர வேண்டும்; அதற்கான முறையில் அனைவரும் உழைத்திட வேண்டும். இஃது எல்லாரும் ஒப்புக் கொள்ளத்தக்க இலட்சியம் - நாட்டுச் செல்வம் பெருகட்டும், அது நாலாறு பேர்களிடம் சென்று சிக்கிக் கிடப்பினும் கவலை வேண்டாம் என்றுரைப்பது, இலட்சியமாகாது. அதனைக் கேலிக் கூத்தாக்குவதாகும்.

07
நத்தையின் கழுத்தில் பூட்டிடவோ, கத்தும் கடல் மூழ்கி முத்து எடுப்பர்? தனக்கென வந்துள்ள தையல் அன்றோ அதற்கு உரியள்? அரைத்தெடுத்துப் பூசி மகிழ்தற்கன்றோ சந்தனம், அடுப்பு எரிப்பதற்கோ? பட்டம் பெறுவதும் பயிற்சி பெறுவதும் நாட்டினருக்கு நல்வாழ்வு தந்திட.

08
அவர் கூறியுள்ளார், ஆகவே அஃது அறிவுடையதாகவே இருந்திடுதல் வேண்டும் என்று எண்ணி இருந்திடாமல் அவர் உரைத்தது இஃது என்பதற்கு முதலிடம் தராமல் உரைத்துள்ளது யாது என்பதற்கே முதலிடம் தந்து, உண்மையெனில், உயிர் கொடுத்தேனும் காத்திடுவோம், அன்று எனில் உயிர் போவதெனினும் எதிர்த்து நீக்கிடுவேம்.

09
இந் நாட்டுத் தேள் எனின், கொட்டிடின் குளிர்ச்சியோ காண்போம்? பிற நாட்டுத் தேன் எனின் பருகிடிற் கசப்போ இருந்திடும்? எங்கிருந்து கிடைத்திடினும் ஏற்புடையதெனின் எமதாக்கிக் கொள்வோம் என்ற நோக்கம் தேவை.

10
பட்டம் பெற்றிடுவோர் குறிக்கொளற்றுக் கிடந்திடின் நாடு நிலைகுலையும்; எதிர்காலம் எழில் உள்ளதாக அமையாது. குறிக்கொளற்ற நிலையே மனக்குழப்பம், கொதிப்பு, அதிர்ச்சி, ஆர்ப்பரிப்பு, ஒழுங்கற்ற செயல்கள், ஊறுவிளைவிக்கும் போக்கு, கலாம் விளைவித்தல், கட்டுக் உட்பட மறுத்தல் ஆகியவை எழக் காரணமாகிறது.

11
இன்று நம் வேலைகள், நாட்டிலே இன உணர்ச்சியைத் தட்டி எழுப்புவது, இன இழிவைப் போக்குவது, புதுமை காண்பது, பூசல்களை ஒழிப்பது, புத்துலகம் அமைப்பது, இன்ன பிற.

12ஆரிய நாகரிகத்திற்கும் திராவிட நாகரிகத்திற்கும் வேற்றுமை - எதிலும் வேற்றுமை, எல்லாவற்றிலும் வேற்றுமை, எதற்கெடுத்தாலும் வேற்றுமை! கலையில், இனப்ண்பில், நடைமுறையில், வாழ்வில், வாழ்க்கை முறையில் உழைப்பில், உண்டுகளிப்பதில் வேற்றுமை.

13
மேடைகளிலே ஏறித் தாயின் மணிக்கொடி பாரீர் போன்ற தேச பக்திப் பாடல்களை மட்டுமே பாடிப் பயனில்லை. தாயின் மணிக்கெடி பார்க்கிறோம், இங்கே காயும் வயிற்றையும் காண்பீர் என்று மக்கள் முழக்கமிடுவர்.

14.
கொடடியேற்றுவதிலும் கோலாகமாக விழாக் கொண்டாடுவதிலும் தேசப் பற்றி இல்லை; உழைப்பை நாட்டுக்குக் கொடுப்பதில்தான் உண்மையான தேசப்பற்று இருக்கிறது.

15.
வீரத்தோடு வாழ்ந்தோம்! வஞ்சகத்தை அறியாமல் வீழ்ந்தோம்! வாள் ஏந்தி எவரும் நம்மை அவர் தான் பணியச் செய்ததில்லை - புல்லேந்திகளிடம் புத்தையைப் பறி கொடுத்த சிலரால் சீரழிவு கண்டோம் - இன்று விழித்துக் கொண்டேர்ம் வீறு கொண்டோம்!

16.
காந்தியடிகள் ஒரு தனிமனிதர் என்ற முறையிலே மட்டும் கவனிக்க வேண்டியவர் அல்லர்; அவர் காலத்தின் சின்னம், ஓர் எழுச்சியின் அடையாளம், ஒரு மறுமலர்ச்சியின் உருவம். அவர் ஒரு நாட்டின் காலம்! ஒரே ஒரு துறைக்கு அல்ல, எல்லாத் துறைகளுக்கும் ஒரு திருப்பத்தை, ஒரு புதிய பொலிவை, வலிவைக் கொடுத்தவர்!

17
யாருக்காக திருநாள் நடத்துகிறோமோ, எவருடைய திருநாமத்தைப் பூஜிக்கிறோமோ, எவருடைய ஆற்றல் பற்றிப் புகழ்ந்து பேசுகிறோமோ, அவர்கள் காட்டிய நெறியிலே நடக்கின்றோமா என்றால், இல்லை என்ற பதிலையே ஏக்கத்துடன் பெற முடிகிறது.

18
ஆகாயத் தாமரையைப் பறித்துக் கொடுத்திடும் அற்புதம் காந்தியடிகள் செய்து காட்டினாரில்லை; ஆனால் ஊமையாய் இருந்து வந்த மக்களைப் பேச வைத்தால் - உரிமை முழக்கமிடச் செய்தார்; படைபல வந்திடினும், தடை பல நேரிடினும், அஞ்சாதீர் என்றுரைத்தார்.

19
கொலையும் களவும், சூதும், குடியும் நிரம்பிய இடம், நாடு அல்ல, காடு, காடு கூட அல்ல, அங்கு மது விற்பதற்காக ஓர் ஏற்பாடும் இல்லை. கொடுமையை மறைத்திடப் பட்டாடை இல்லை; பாதகத்தைச் செய்தும் தப்பித்துக் கொள்ளப் பணம் எனும் ஆயுதம் இல்லை.

20
போர் மனிதகுலத்துக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதிலே ஐயமில்லை. போர்ச்சூழ்நிலை ஏற்பட்ட பிறகு, மக்களிடம் விரும்பத்தகாத வெறுப்புணர்ச்சிகள் கிளம்பி விடுவதைத் தடுக்க இயலுவதில்லை! போரற்ற, புகைச்சலள்ள ஓர் உலகு கொன்னுலகாகும் - ஐயமில்லை.

 

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai