அண்ணா ஒரு சரித்திரம்
அரு.சின்னசாமி, பி.எஸ்சி.

தொடர்: பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4

9. மனிதாபிமானம்
தமிழக நலனுக்கு மேம்பாட்டுக்.கு அர்ப்பணித்துக கொண்ட அண்ணா, புதுமைகள் பூத்துக்குலுங்கம் சமதர்ம சமுதாயத்தின் சிற்பி என்ற முறையில் தமிழக மக்களுக்கு ஒரு வணமாக எதிர்பாலத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். மரியாதைக்குரிய சக்திமிகுந்த பலவித குணநலன்கள் கொண்ட மனிதராக உலவினார். எதிர்கால உலகைக் கனவில்கண்டு, அவ்வுலகில் கௌரவமாகவும் சமத்துவமாகவும் தமிழகம் வாழ விதிக்கப்பட்டிருக்கம் பணிகளை உணர்ந்து செயல்பட்டார். மனித குலத்தின் மீது ஆழ்ந்த பற்றும் பாசமும் கொண்டு திகழ்ந்தார்.ஆங்கிலப் பாராளுமன்ற முறைகளை பெரிதும் விரும்பினாலும், உள்ளத்தின் ஆழத்தில் தமிழகத்தின் பண்பாட்டில், நாகரிகத்தில், அன்பு நெறியில் அவர் முழுப்பற்றுதல் கொண்டிருந்தார்.

அண்ணா வரலாற்று உணர்வோடு தமிழகத்தையும் தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் நேசித்தார். புதிய தமிழகத்தின் தந்தையான அவர் சிறந்த மனிதாபிமான மிக்கவராகவும் விளங்கினார். தமிழகத்தின் வறுமை, கல்லாமை, பசி, பிணி, அறியாமை பிற்போக்கு, மூடநம்பிக்கைகள் ஆகியவற்றைப் பகுத்தறிவு அறிவியல் வளர்ச்சி தொழில் நுணுக்கப் புரட்சி ஆகியவற்றாலேயே தீர்க்க முடியுமென அண்ணா நம்பினார். மதங்களின் பிடிவாதங்கள் உட்பூசல்கள், பிரிவுகள் ஆகியவற்றை வெறுத்து, மனிதாபிமானமே சிறப்புடையதெனப் பிரகடனஞ்செய்தார். தன்னை "மதமற்ற ஆதிமனிதன்" எனக் குறிப்பிட்டு, "தேங்காய் உடைப்பவனுமல்ல; சிலையைத் தகர்ப்பவனுமல்ல" என்றார்.

சமூகத்தில் தனிநபர்கள் அனைவரும் முன்னேறுவதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும், அவர்களின் வாழ்வை வளப்படுத்த அறிவியல் சாதனைகள் மட்டும் முக்கியமல்ல, அறிவிய்ல மனப்பான்மையை, அறிவியல் வழியில் சிந்திக்கும் பழக்கத்தை வளர்ப்பது மிகமிக முக்கியம். வகுப்பு அறைகளில் அறிவியல் நிபுணர்களாகவும் போதகர்களாகவும் மாணவர்களாகவும் சிறப்புற்று விளங்குபவர்கள், வீட்டில் குருட்டு நம்பிக்கைகளுக்கம் மூடப்பழக்க வழக்கஙகளுக்கும் பலியாகித் தவிப்பதை அறிவோம். இது கவலையையும் வருத்தத்தையும் தரக்கூடிய நிகழ்ச்சியாகும். இது நகர்ப் புறங்களைவிட சிற்றூர்களில் அதிகமாகக் காணப்படுகின்றது. மக்களிடையே நிலவும் குருட்டு நம்பிக்கைகளையும், வரட்டுச் சம்பிரதாயங்களையும் ஒழிக்க அண்ணா முழு அளவில் முயன்றார்.

கொந்தளிக்கும் மாறுதலும் நிறைந்த உலகில் அண்ணாவின் தலைமையில் தமிழகம் தன் நடைமுறையைப் பகுத்தறிவு அடிப்படையில் மாற்றிகொண்ண முனைந்தது. இன்றைய இழிநிலையையும், கடந்த கால உயர்வையும் மக்களுக்கு நினைவூட்டி, வாழ்க்கை என்பது இருக்கும் நிலைமைக்கும் இருக்க வேண்டிய நிலைக்கும் இடையில் ஓயாது நடைபெறும் போராட்டமென்றார். அப்போராட்டத்தில் மனிதாபிமானம் மிக்கவர்கள் தங்களை அழித்துக் கொண்டு மக்களுக்கு ஒளிதந்து வழிகாட்டும மொழுவதர்த்தி போன்று செயல்படுவார்கள். மக்கள் நலனுக்காக அண்ணா தம்மைத் தேய்த்துத் தேய்த்து மாய்த்துக்கொண்டார். தமிழக நலன், மேம்பாடு தவிர அவர் உள்ளத்தில் வேறு சிந்தனைகள் கிடையாது. நாலரைக் கோடி மக்களின் சுதந்திரமான வளமான வாழ்வே அவரின் இலட்டிசயமாக அமைந்து விட்டது.

மனித இயல்பில் வளப்பத்தையும், ஒடுக்கப்பட்ட எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகிவற்றையும் அண்ணா தெளிவாக உணர்ந்ததிருந்தார். மனித சுபாவத்தைப் புரிந்துகொள்ளவும், எதிர்ப்படும் எல்லாக் கருத்துக்களையும் வரவேற்று ஆராயவும் எப்பொழுதும் தயாராக இருந்தார். அண்ணா கற்பதையும் ஆராய்வதையும் நிறுத்தி, பிரச்னைகளில் அக்கறையற்று, தன்மனதைக் குறுகிய எல்லைக்குள் உட்படுத்தி தன்னைத்தான் சிறைக்குள் அடைத்துக்கொள்ள விரும்பியதே கிடையாது. சொந்த நலன், வழக்கம் என்ற பொறியில் அவர் சிக்கிக்கொள்ளாமல், பரந்த உலகில் மக்களோடு மக்களாக இணைந்து வாழ்ந்தார். உண்மையான மனிதப் பண்பு இருந்ததால், அவர் தவறு செய்பவர்களிடமும், எதிரிகளிடமும் அனுதாபம் காட்டினார். "மன்னிப்போம்; மறப்போம்" என்றார். பழிவாங்கும் உணர்வு அவர் உள்ளத்தில் தோன்றியதே இல்லை. மனித குலத்தை ஒட்டுமொத்தமாக நேசித்த அவர் ஒவ்வொருவர் கண்ணிலும் உள்ள ஒவ்வொரு துளிக் கண்ணீரும் துடைக்கப்படவேண்டுமென்றார்.

களிப்பும் கண்ணீரும் கலந்த இவ்வுலகத்தை அண்ணா தெளிவாகக் கண்டார். உலகில் நடைபெறுங் காரியங்களில் சில மகிழ்ச்சியைத் தருகின்றன; மற்றும் சில கண்ணீரை வரவழைக்கின்றன. சம் இலக்கியங்கள் சுட்டிக் காட்டுவது போல் மலர்சூடி ஒருபுறம்; மறுபுறம் கணவனை இழந்த காரிகையின் ஓலம், குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆடிப்பாடும் மக்களும் உள்ளனர். குழந்தையைப் பறிகொடுத்த தாயின் வேதனைக் குரலையும் கேட்கிறோம். இன்னிசை ஒருபுறம்; மறுபுறம் அழுகுரல். இவ்வுலகம் அமிர்தமா, நஞ்சா என்ற கேள்வி எழுகிறது. வளமும் வனப்புமிக்க வசதிபடைத்த நாகரிக மனிதர்கள் வாழும் இடத்தின் அருகில் உருக்குலைந்த உடலோடு ஏ உழைப்பாளிகள் அவதிப்படுகின்றனர். அறிஞர்கள் உலவும் உலகில் குடித்துக் குழப்பம் செய்யும் கூட்டத்தையும் காண்கிறோம். இந்த இரட்டை உலகை, அண்ணா தெளிவாக எடுத்துக்காட்டி, காரணகாரியங்களைக் கண்டு, இவற்றின் இடைவெளி குறுக்கப்பட்டு மனிதர்கள் மனிதர்களாக, மனிதப் பண்புடன் வாழ வேண்டுமென்றார். அவதிப்படும் மக்களின் கண்ணீரைத் துடைக்கப்படவேண்டும்மென்பதை வலியுறுத்த "ஏழையின் கண்ணீரில், இறைவனை காண்கிறேன்" என்றார்.

பெண்கள் தங்கள் உள்ளக்கிடக்கையை வெளியிட வாழ்வில் தங்கள் ஆற்றலைக் காட்ட வாய்ப்பளிக்கப்படவேண்டுமென்றார். வருணாசிரமத்தின் பேரால் அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு முழுவிடுதலை அளித்து ஆண்களுடன் சரிநிகர் சமானமாக வாழ வழி வகுக்கப்பட வேண்டுமென்றார். பால்யமணம், கைமை போன்ற செயல்களை ஒழித்துப் புதுவாழ்வு பெற உழைத்தார். 'அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு' என் பழைய கோட்பாட்டைத் தூக்கி எறிந்து, பெண் கல்வியின் சிறப்பை உணர்த்தினார். சமூக மறுமலர்ச்சிக்குப் பெண்களின் கல்வியும் சேவையும் தேவையென வலியுறுத்தி, அவர்களின் கண்ணீரைத் துடைக்க முன் முயற்சி எடுத்தார். அதே போன்று குழந்தைகளையும் நேசித்தார். நாட்டின் செல்வங்களான அவர்களின் கைகயில் அரிர்காலம் உள்ளது என்பதை உணர்ந்து குழந்தைகளின் நல்வாழ்வுக்கு அயராது பாடுபட்டார்.

அண்ணாவிடன் வெளிப்பட்ட மனிதாபிமான உணர்வுகள் தமிழ் இலக்கியங்களில் - சிறப்பாகப் பக்தி இலக்கியங்கயில் இடம் பெற்றுள்ளன. திருமூலர் முதல் வள்ளலார் ஈறாக அனைவரும் வெளியிட்ட இந்த மனிதாபிமான உணர்வின் வெளியீடுகள் ஒருவிதப் பயனையும் மக்களுக்கு அளிக்கவில்லை. பக்தி மார்க்கத்தின் குரல் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று; அதற்காகப் பக்திமார்க்கம் வெட்கப்படவேண்டும். ஆனால் ஆண்ணா மனிதாபிமான உணர்வைச் செயற்படுத்தி, தமிழக வரலாற்றில் புதிய ஏடு படைத்தார். மனிதகுலத்தின்மீது கொண்ட அன்பால் மன்னர்களின் மடியில் புரண்ட திருத்தக்கதேவர், கம்பர் போன்ற கவிஞர்கள் துன்பம், வறுமை, பசி, பிணி, இல்லாமை, கல்லாமை, இல்லாத உலகத்தைக் கற்பனையில் கண்டு பாடியது உண்டு. ஆனால் வாழப்பிறந்த மக்கள், கவிஞர்கள் கற்பித்த புத்துலகம் காணாமல் துன்பச்சுழலில் சிக்கி அவதிப்பட்டார்கள். அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களும் உழைப்பாளிகளும் வருணாசிரமக் கேடுகளால், அன்பு, மனிதாபிமானம், வாழ்க்கை முதலியவற்றை ஒட்டுமொத்தமாக அனுபவிக்கவில்லை. கவிஞரிகளின் கற்பனை உலகின் சுவையை உழைப்பாளிகளும், தாழ்த்தப்பட்ட மக்களும் வாழ்க்கையில் அனுபவிக்க வழிகாட்டியவர் அண்ணாவாகும்.

தம்மைப் போன்று உலகமக்கள் அனைவரும் இன்புற வேண்டுமென உலகமெங்கணும் உள்ள மனிதாபிமான மிக்க நல்லவர்கள், அறிஞர்கள், நிபுணர்கள் விழைந்து செயல்படுகின்றனர். அண்ணாவும்!

"தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்"

என்ற குறளுக்க இலக்கணமாகத் தம் வாழ்வை அமைத்துக் கொண்ட தன் மூலம், அப்பெருமக்கள் மத்தியில் சிறப்பான இடம் பெறுகிறார்.

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai