அண்ணாவின்
எழுத்துரிமைப் போராட்டம்
அண்ணா தன்னுடைய 'திராவிடநாடு'
இதழில் 04.04.1948 மற்றும் 18.04.1948 ஆகிய தேதிகளில் வெளியிட்ட
இரு கட்டுரைகள் ((1) காந்தி இராமசாமியும் பெரியார் ராமசாமியும்
(2) வெள்ளி முளைக்க 8 ஆண்டுகள்) பிராமணர்கள் மீது
வெறுப்பை உருவாக்குகின்றன என்று குற்றம் சாட்டி சென்னை ராஜதானி அரசாங்கம்
25.05.1949-ல் திராவிடநாடு ஆசிரியர் ரூ.3000/- ஜாமீன் தொகை
கட்டவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை Indian
Press (Emergency Powers) Act சட்டப்படி பிறப்பித்தது. இந்த உத்தரவை
நிக்கரவு செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் அண்ணா வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு O.P.No.293/1949. இந்த வழக்கை தலைமை நீதிபதி ராஜமன்னார்,
நீதிபதிகள் பஞ்சாபகேச சாஸ்திரி, சந்திரா ரெட்டி ஆகிய மூவரும் விசாரித்து
04.11.1949 அன்று அரசு உத்தரவு செல்லாது என்று ரத்து செய்து தீர்ப்பு
வழங்கினர்.
அந்தக்
கட்டுரைகளும், அந்தத் தீர்ப்பும் இங்கே தரப்படுகின்றன.
Page
1
|
Page
2
|
Page
3
|
Page
4
|
Page
5
|
Page
6
|
|