அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
40
பெரியாரின் திருமண
ஏற்பாடு, இயற்கையாக உண்டாக்கிய நிலைமைதான், எதிர்ப்பு முன்னணி அமைந்ததற்குக்
காரணம். நான் அல்லன்.
நான், திருமண விஷயமாக
எடுத்து எழுதியதனால் அல்லவா இந்நிலைமை ஏற்பட்டது என்ற எண்ணிடத் தோன்றும்.
அதுவும் காரணமன்று. நான் அதை எழுதும்போதே, என் ஒருவனுடைய கருத்தாகவோ,
பிரசாரமாகவோ அந்த அறிக்கை உருவெடுக்கவில்லை. பெரியாரின் திருமண ஏற்பாட்டினால்,
உள்ளம் கொதித்த தோழரகள் பலரின் எண்ணத் தொகுப்பாகவே வெளிவந்தது. அதாவது
நான் அந்த அறிக்கையை வெளியிடும்போதே, எதிர்ப்பு முன்னணி அமைந்துவிட்டது.
அமைத்தது நானில்லை. அதாவது, எதிர்ப்பு முன்னணி, என் கபடம் அல்லது
கயமைத்தனம், தந்திரம் அல்லது திறமை, ஓயாத வேலை அல்லது மயக்கும் திட்டம்,
என்பவற்றால் அமைந்ததன்று, இயற்கையாகவும் ஜனநாயக முறைப்படி அமைந்தது
என்வேதான் அந்த முன்னணியிலே ஜீவசக்தி இருக்கிறது.
இதை உணர்ந்தால்தான்,
நிலைமையை உள்ளபடி கணித்துக்கொள்ளமுடியும்.
பெரியாரும் அவருடைய ஆதரவாளர்களும், இந்த இடத்திலேதான், தவறான கருததைக்
கொண்டு விடுகின்றனர். நான் விடாப்பிடியாக இருந்துகொண்டு, விஷமத்தனமான
பிரசாரம் செய்து, பலரை மயக்கிக் கெடுத்துவிட்ன், அதன் பயனாகவே ஓர்
எதிர்ப்பு முன்னணி ஏற்பட்டது என்று எண்ணுகிறார்கள். தவறு, தவறு.
பெரும் தவறு. நிலைமை இயற்கையாகவும், ஜனநாயக முறைப்படியும் வளர்ந்தது.
நான் ஓர் அறிக்கை வெளியிட்டால், எவ்வளவு தோழர்களை மயக்கிவிடமுடியும்?
அவ்வளவு ஆற்றல் இருப்பதானால் நான் ஆகஸ்டின் போது வெளியிட்ட அறிக்கையும்
ஓர் எதிர்ப்பு முன்னணியை அமைத்திருக்க வேண்டுமே! நடைபெறாது என்பது
எனக்கே தெரிந்துதானே அந்த அறிக்கையிலேயே, என் மீது ஒழுங்கு நடவடிக்கை
எடுப்பதானாலும் எடுக்கட்டும், என்று எழுதினேன். ஆகஸ்ட் அறிக்கையின்
போது, ஆசைத்தம்பியும், வள்ளிமுத்துவும், சிற்றரசும், சீனிவாசனும்
மற்றும் எண்ணற்ற பல தோழரகளும், அண்ணா எழுதிவிட்டார். ஆகவே அதுதான்
சரி, என்றா கூறினார்கள்? அவ்வளவு நெஞ்சு உரும் அற்றவர்களல்லவே, நமது
தோழர்கள்? என் கருத்தை ஒப்புக்கொள்வதற்கில்லை என்று கூளினர் கண்ணியமாக.
ஆகஸ்ட்டிலே நான் தீட்டிய அறிக்கைக்குக் கிடைக்காத ஆதரவு திருமணப்
பிரச்னையின் போது நான் வெளியிட்ட கருத்துககுக் கிடைத்ததற்கு காரணம்
என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா? இதை நன்கு சிந்தித்தால்,
தெளிவாகத் தெரிந்துவிடுமே, எதிர்ப்பு முன்னணி என்பது என் மயக்க மொழியின்
விளைவுமன்று, சுயநலத் திட்டத்தின் வெற்றியுமன்று! இயற்கையின் விளைவு,
ஜனநாயக அரும்பு என்பது விளங்கும்.
வடஆர்க்காடு மாவட்டத் திராவிடர் கழகம், திராவிட முன்னற்றக் கழகமாக
மாற்றப்பட்டது. காஞ்சிபுரத்திலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவிலுள்ள,
திருவத்திபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தின் விளைவாகத் திருவத்திபுரம்
தோழர சுப்பராயனார் இதை முன்னின்று நடத்தி வைத்தார். நான் காஞ்சிபுரத்தில்
தான் ஐந்து நாள்களாக இருநது வருகிறேன். அன்பர் சுப்பராயனும் எனக்கு
மிகவும் வேண்டியவர்தான். பன்னிரண்டு மைல் தான் இருக்கும் திருவத்திவுரம்
எனினும் நான் அவரைக் கண்டு பேசியிருக்சிறேனா? இதுபற்றி, அல்லது கடித
மூலமாவது அவருக்குக் கருததளித்தேனா? இல்லை. நண்பர், அருகிலேயே உள்ளவர்
எனினும் அவரைக் காணவுமில்லை; காரியம் இன்னவிதம் நடைபெற வேண்டும்
என்று கடிதம் அனுப்பவுமில்லை, எப்போதுமே நான் இடம் கேட்டுக் கொண்டோ,
கதவைத் தட்டியபடியோ இருந்து பழக்கப்பட்டவனல்லன். இப்போதுங்கூட, ரயிலிலே
கூட்டம் அதிகம் என்றால் போகாமல் நின்றுவிடுபவன். இடித்துககொண்டு
உள்ளே புகுந்துகொள்பவனல்லன். கழகத்தலைவர், என்னைச் சந்தேகிக்கிறார்,
துரோகி என்று எண்ணுகிறார் என்று துளிஜாடை தெரிந்திருந்தால் கூட,
நான் அவர் அதுவரை காட்டிய அன்புக்கம் ஆதரவுக்கும் நன்றி செலுத்திவிட்டு,
வெளியே வந்துவிட்டிருப்பேன். நான் பல தடவை எடுததுக கூறியிருக்கிறபடி,
இந்தப் பரந்த உலகிலே, என் போன்ற சாமான்யர்களுக்கும் இடம் இருக்கிறது.
ஆதினங்களின் ஆதரவே இல்லாத பண்டாரங்கள் இல்லையா? அதுபோல இருந்து விட்டிருப்பேன்.
ஒரு துளியும் ஜாடைகூடக் காட்டினதில்லை. என்னைச் சோம்பற்குணமுள்ளவன்
என்று கண்டித்திருக்கிறார். வாலிபர்களுடன் கூடித்திரிகிறேன் என்று
பேசியிருக்கிறார். துரோகி என்று சொன்னதுமில்லை. அப்படி ஓர் எண்ணம்
அவர் உள்ளத்திலே இருந்திருக்கக்கூடும என்று கூட நான் எண்ணிட நேரிட்டதில்லை.
என்னிடம் அவர் காட்டி வந்த அன்பும் மரியாதையும், என்னைப்பல சமயங்களிலே
வெட்கப்படும்படி செய்துவிட்டிருக்கிறது. நன்றாகக் கவனமிருக்கிறது.
ஈரோட்டுக்கு என்னை முதன்முதலாக அவர் அழைத்து பொதுவாழ்வில் ஈடுபடுவதின்
விசேஷத்தைக் கூறினது, பிறகு நான் ஊர் திருமபப் புறப்பட்ட போது, அவருடைய
வீட்டுப் பெரியவண்டியைப் பூட்டி அதிலே நான் உட்கார்ந்துகொண்டு வண்டிகிளம்ப,
அதன் பின்னோடு, பத்துவீடு வரையில் அவர் வந்தது - நான் வண்டிக்குள்ளே
கதறி நில்லுங்கள், வரவேண்டாம், நில்லுங்கள் என்று கூறினது, வெட்கப்பட்டது,
ஆகிய காட்சிகள் அன்று முதல் திருமணப் பிரச்னை பயங்கரமான உருவம் எடுத்த
நாள்வரையில், என்னிடம் அவர் நடந்துகொண்ட முறை என்னைப்ப்ற்றி அவர்
கேவலமான எண்ணமோ, கெடுதலான எண்ணமோ கொண்டிருககிறாரா, என்று யோசிக்கவேண்டிய
அவசியத்தையே உண்டாக்கியதில்லை. பல தடவை என்னிடம் கோபித்துககொண்டிருக்கிறார்.
நானும் கோபம் கொண்டிருக்கிறேன். பல ஆணடுகளுக்கு முன்பு ஈரோட்டிலிருந்து
விடுதலை வெளிவந்துகொண்டிருநதபோது, என்னைச் சமாதானப்படுததவம், என்னிடம்
தமக்கு உள்ள அன்பைக் காட்டவும், பெரியாரும், அவர் அண்ணாரும், தனித்தனியாக
எனக்கு எழுதிய கடிதங்கள், என்னிடம் உள்ளன. இன்று என்னைப் பெரியார்
துரோகிப் பட்டியலில் சேர்த்துப் பேசும்போது நான் அந்தக் கடிதத்தைக்
கவனப்படுததிக்கொண்டு, இன்று கோபமும ஏமாற்றமும் கொண்ட நிலையில், துரோகி
என்றும் சுயநலக்காரனென்றும் தூற்றினாலும், முன்பெல்லாம் பற்றும்
பாசமும் காட்டியிருக்கிறார். என்பதை எண்றம்போது, சந்தோஷமே உண்டாகிறது.
தோழர்களே!
மகிழ்ச்சிக்குரிய செய்தி திராவிடநாடு இதழுக்குச் சர்க்கார் ஜாமீன்
தொகை மூவாயிரம் ரூபாய் கட்டும்படி கேட்டிருந்ததைக் குறித்துத் தொடுதத
வழக்கிலே, தீர்ப்பு நமக்குச் சாதகமாகக் கிடைத்துவிட்டது.
திராவிடநாடு இதழிலே சர்க்கார் குறித்துக்காட்டிய கட்டுரைகள் வகுப்புத்
துவேஷத்தை மூட்டுவன அல்ல என்று தீர்ப்பளித்து, சர்க்கார் உத்தரவை
சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
இந்தத் தீர்ப்பு, நமது தோழர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியும் எழுச்சியும்
தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இதனையொட்டி சர்க்காரிடம் கட்டப்பட்டிருக்கும்
மூவாயிரம் ரூபாயும் விரைவில், திரும்பித் தரப்படும என்று அறிகிறேன்.
சர்க்காரின் அநைகூவலை ஏற்று ஜாமீன் தொகைக்காக நன்கொடையை ஆர்வத்துடன்
அளித்த தோழர்களுக்கு என் நன்யிறிதலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மேற்படி
தொகை என் கைக்கு வந்ததும், தோழரகளுக்குத் திருப்பி அனுப்பஇருக்கிறேன்.
என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஜாமீன் தொகைக்காக நன்கொடை அனுப்பியுள்ள
நண்பர்கள். எந்த முகவரிக்கு, பணம் அனுப்பப்படல் வேண்டும் என்பதைத்
திராவிடநாடு அலுவலகத்துக்குத் தெரிவிக்கக் கோருகிறேன்.
நெருக்கடியின்போது நன்கொடை உதவிய நண்பர்கள் பணம் திருப்பி அனுப்பப்படுவதைத்
தவறாகக் கருதாமல், நெருக்கடிகள் எப்போது ஏற்பட்டாலும், இதுபோன்ற
ஆதரவு காட்டும அன்பினை எனக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தீர்ப்பின் முழுவிபரம் கிடைத்தபிறகு, திராவிடநாடு இதழில வெளியிட
எண்ணியுள்ளேன்.
தன்னைப் பற்றி
நான் முகவும் சோம்பேறி, பெரியாரைப்போல் உழைக்க முடியாது என்று கூறினார்கள்.
நான் ஒப்புக்கொள்ளுகிறேன். பெரியார் போல் உழைக்க முடியாது என்று,
ஏன்? அவருக்கு உழைக்கும் அளவில் போதுமான வசதி இருக்கிறது. அவ்வளவு
வசதியும் சக்தியும் பெற்றவனல்லன் நான் என்பது மட்டுமல்லல, பெரியாரைப்
போல் உழைப்பது தவறு, கூடாது, தேவையற்றது என்ற கருததுடையவன் நான்.
அது ஜனநாயகத்திற்கு ஏற்றதன்று, முரண்பட்டது என்ற கருததுகொண்டவன்.
ஒதே மனிதர், தானே, எல்லாப் பொறுப்புகளையும் வகிப்பது தவறு, பிறர்க்கு
சந்தர்ப்பம், வசதி அளிக்க வேண்டியது கடமை என்ற போக்குக் கொண்டவன்.
சோம்பேறி என்பது எனக்குப் பொருந்துமா என்று பார். திராவிட நாடு பத்திரிகை
நடத்தி வருகிறேன். இந்தப் பத்திரிகையின் ஓரிரு பக்கங்களைத் தவிர
மற்றவை யாவும் என்னால் எழுதப்பட்டவை.
ஆரிய மாயை
. . . . . . . நான் என்ன எழுதினேன் ஆரிய மாயையில்? பார்ப்பனீயம்
பேராசை கொண்டது என்று குறிப்பிட்டிருக்கிறேன், ஆனால் அதைவிட மோசமாக
பாரதியார் கூறியிருக்கிறார்.
பேராசைக் காரனடா பார்ப்பான்
பெரியதுரை யென்னிலுடல் வேர்ப்பான்.
இப்படி கொல்கிறார்.
தேசியக் கவி பாரதியார். அவருக்கு மண்டபம் கட்டுகிறார்கள். ஏன் அவரைக்
குற்றம் சாட்டக் கூடாது? நான் என்ன அவரைவிட அதிகமாகவா எழுதிவிட்டேன்
தைரியம், திறமை, அறிவிலே நம்பிக்கையிருக்குமானால் நான் ஆரிய மாயை
என்று தீட்டினால் ஆரிய மகிமை என்று தீட்டுவது தானே? கல்கியாரில்லையா?
விகடசை விரும்பி அழைத்தால் வரமாட்டாரா, தினமணி ஆசிரியர் முடியாதென்பாரா,
மித்திரன் ஆசிரியர் வரமாட்டேன் என்று கூறுவாரா?
நான் தான் என்ன புத்தர் போல யோதிமரத்தடியில் ஞானோதயம் பெற்றவனா?
ஆண்டவன் அர்த்தராத்திரியில் வந்து அருள் கூர்ந்ததால் எழுதக் கற்றுக்கொண்டவனா?
ஆலவாயப்பர் வந்து எனக்கு அருள் கூர்ந்ததால் ஆரியமாயை தீட்டினேனா?
அல்லது ஞானசம்பத்தனுக்கு அம்யினால் ஞானப்பால் கிடைத்தததே! அதுபோல
பெற்று இந்த நூல் எழுதினேனா? இல்லையே - அப்படியிருக்கும்போது ஏன்
இவர்கள், நான் எழுதினால் மறுப்பேடு தீட்டக்கூடாது? வக்கில்லையா,
வழியில்லையா? (நுங்கம்பாக்கம் பொதுக்கூட்டம்
- 08.10.1950)
தலைவர் இதயபூர்வமான
(இதய நிலைவான) தலைவர்! இதயத்திலே குடியேறிய தலைவர்!
நமக்கெல்லாம் வழிகாட்டிய பெரியார்!
அவர் அமர்ந்த பீடத்தை தலைவர் பதவியை - நாற்காலியைக் காரியாகவே வைத்திருக்கிறோம்.
அந்தப் பீடத்திலே - நாற்காலியிலே வேறு ஆட்களை அமர்த்தவோ, அல்லது
நாங்களோ அல்லது நானோ அமரவோ விரும்பவில்லை.
(சென்னை இராபின்சன் பூங்காவில் நடைபெற்ற தி.மு.க.
தொடக்கவிழா பேச்சு - 17.09.1949)
தம்பி! நான் பதில்
கூறி காலத்தை வீணாக்கிக் கொண்வதில்லையே!
(தம்பிக்கு கடிதம் 07.04.1951)
பொறுப்புகளை ஏற்கத் தயங்குவது என் சுபாவம்.
ஆனால் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை என்னால் முடிந்தவரை சுமந்துசெல்வது
என் பழக்கம்.
(மேடைப்பேச்சு)
கப்பல் மூழ்குவதாக
இருந்தாலும கப்பலோட்டி கப்பலோடு மூழ்குவானே தவிர, இப்படியும் அப்படியும்
போக நினைக்கமாட்டான். அதைப்போல் என் பாழ்க்கையின் இறுதி நாள் வரை
நான் கொண்டுள்ள இலட்சியத்திலிருந்து இம்மியளவும் பிறழமாட்டேன். இது
உறுதி.
(மேடைப்பேச்சு)
. . . எனவேதான் பொது
அறிவு எல்லாருக்கும் கிடைக்கும்படியான பெரும்பணியைச் செய்துவருகிறோம்.
கட்டடமில்லலாக் கல்லூரிகள் நாங்கள்.
மேடைப்பேச்சு நான் கனதனவாக்ளக் கூட்டத்தைச் சேர்ந்தவனல்லன். பணத்தால்
உயர்ந்தவனல்லன். உங்களை விட செல்வத்தில் குறைந்தவன் - திறமையில்
குறைந்தவள். இவற்றையெல்லாம் விட தைரியத்தில் குறைந்தவன். இவற்றைய்லலாம்விட
தைரியத்தில் மிக மிகக்குறைந்தவன். ஆனால் என்னை சூழ்ந்திருக்கும்
தம்பிமார்களின் தைரியத்தை நம்பித்தான் பணியாற்றுகிறேன். நாம் இலட்சியப்
பயணத்தில் வெற்றி பெற்றே தீருவோம். இது உறுதி.
என் பொது வாழ்க்கையிலே, சிறைவாசம் இது முதல் முறையன்று. ஆச்சாரியார்
ஆட்சி காலத்திலே, இந்த எதிர்ப்பு நடைபெற்ற போது சென்னை சிறையில்
இருந்திருககிறேன் - நான்கு மாதங்கள் சைதாப்பேட்டை சப்ஜெயிலில் இருந்திருக்கிறேன்.
ஒரு வாரம் கவர்னர் ஜெனரலாக ஆச்சாரியார் வந்தபோதும் மனமெருகேறிய பெரியாருடன்
பழகி இருக்கிறேன். எனவே சிறை என்னைச் சிதைத்து விடாது! நான் தம்பி!
திதாவிடர் கழகமாக நாம் இருந்தபோது பொதுச் செயலாளன்தான்.
(சென்னை - முதல் தி.மு.க. மாநில மாநாட்டு
உரை - 16.12.1951)
கல்லக்குடி
கல்லக்குடி வழங்க்ப்பட்டுவிட்டது. அறப்போர் வென்றது. என் வாழ்த்தும்
வணக்கமும் தொடர்பு கொண்ட அனைவருக்கும், கல்லக்கூடி வழங்கிய மத்திய
சர்க்கார் ரயில்வே அமைச்சருக்கும், மாநிலத்தின் மனப்போக்கை எடுத்துக்காட்டி
இந்த நீதி சிடைக்கச் செய்த சென்னை சர்க்காருக்கும் என் நன்றியறிதலைத்
தெரிவித்துககொள்கிறேன்.
கல்லக்குடி வழங்கப்பட்டிருபபது, காமராசர் சர்க்கார் மக்கள் குரலுக்கு
மதிப்பளிக்கும் மாண்பு கெண்டது என்பதற்கு மற்றோர் எடுத்துக்காட்டாக
அமைந்திருக்கிறது. மகிழ்கிறேன். கல்லக்குடி கிடைக்கத் தொண்டாற்றிய
அனைவருக்கும், துணை நின்ற பல்லோருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
கல்லக்குடி கோரி நடத்தப்பட்ட கிளர்ச்சியின்போது உயிரிழந்த வீரத்தியாகிகனைள
எண்ணி உருகாமலிருக்க யாரால் இயலும்? அவர்களின் வீரத்தியாகம் வீண்போகவில்லை
என்பது கண்டு நமது மனமெலாம் எழுச்சி மயமாகிறது.
கல்லக்குடி காண அரும்பாடுபட்டு உயிர்நீத்த தோழரகளின் குடும்பத்தாருக்கு
நினைவுக் காணிக்கை செலுத்த வேண்டியது தி.மு.கழகத்தின் கடமை. ஏன்,
அறம் அறிந்த அனைவருக்கம் இந்தக் கடமை உண்டு.
கல்லக்குடி வெற்றி கண்ட தோழரகள் இனி அந்தக் காணிக்கை உருவாகச் செய்யும்
பணியை அடுத்த கட்டமாகக் கொள்ளவேண்டுகிறேன்.
நாவலர் நெடுஞ்செழியன்
தமிழ் எப்படி எப்படி பேசுவதற்குரியது, இலக்கியம் பேச்சுடன் கலந்து
வருமபோது எத்தகைய இன்பமளிக்கும் என்றெல்லாம் நான் பலமுறை எண்ணிப்
பார்ப்பதுண்டு - மனத்திலே உருவெடுத்துக் கொண்டிருந்த ஆசை நடமாடக்
கண்டேன், தோழர் நெடுஞ்செழியன், கழகமேடையில் பேசத்தோடங்கியதும்.
கருவூர் ஆற்று மணலில் - நினைவிருக்கிறது - பெயரியாரும் இருந்தார்
- தோழர் நெடுஞ்செழியன் இலக்கியத்தை இனிய முறையிலே எடுத்தளித்தார்.
நல்ல விருநது - ஆயினும் என்ன செய்வது? நாளாவட்டத்தில், தரத்தைச்
சிறதளவு தளர்த்தச் சொல்லி வற்புறுத்த வேண்டித்தான் வந்தது. தரத்தை
வளரச் செய்யும் போக்கிலா ஆளவந்தார்கள் நம்மை விட்டு வைக்கிறார்கள்!!
நடை இருக்கட்டும், நண்பரின் திறம் இருக்கிறதே, அது கண்டு நான் வியப்புற்றேன்.
என்னிடம் இல்லாத - நான் விருமபாததால் அன்று, இயலாததால் - ஒர் அருங்குணம்
அவரிடம் உண்டு - கண்டிருப்பீர்கள். ஓயாது உழைப்பது! எப்போதும் எங்கேயும்
எங்கேயும் எதையாவது, எப்படியாவது செய்து கொண்டே இருப்பது. என்னாலே
இதைக்கண்டு ரசிக்க முடியும். ஆனால் என்னை அந்நிலைக்கு மாற்றிக்கொள்ள
இயலவில்லை. நான் அடிக்கடி கனவு காண்கிறேன். சோலையில் சொகுசாக உலவுவதுபோல
அன்று - அந்தக் காலம் மலை ஏறிவிட்டது. பொதுப்பிரச்னைகளைப் பற்றி,
தோழர் நெடுஞ்செழியன் எப்போதும் காரியமாற்றிக்கொண்டே இருக்கும் இயல்பினர்,
நேரம் வீணாகிவிட்டது என்று கூறத்தக்க போக்கிலே, அவர் இருந்ததை நான்
கண்டதே இல்லை. இந்த இயல்பு, கழகத்துககுப் பெருநதுணையளிக்கும் என்பதைக்
கூறத் தேவையில்லை. வீட்டிலே என் குறும்புப் பார்வையைக் கண்டு தளருவார்,
எனினும் இயல்பு அவரை விடாது, மறுகணம், ஏதாவது வேலையைத் தொடங்கிவிடுவார்.
சிறையில் மூன்று திங்கள் இருவரும் ஒதே அறையில் தங்கி இருந்தோம்.
அங்கு என்னவென்று கருதுகிறீர்கள்? ஆச்சாரியார் ராஜினாமாச் செய்வதுபோல்,
அவசரச் சட்டம் பிறப்பிப்பது போல, பாதுகாப்புக் கைதியாக ஆக்கப்படுவதைப்போல,
பெரியார் கட்டித் தழுவிக்கொள்வதுபோல, இப்படிப் பலப்பல கனவுகள். விழித்தபடி
நான் கண்டு கொண்டிருப்பேன். அவர்? வேலை! வேலை! ஏதாவது செய்தபடி இருப்பார்.
இந்த அருங்குணத்தை நாம் நன்றாகப் பயன்படுத்தி, கழகத்தை மேன்மையுறச்
செய்துகொள்ளவேண்டும்.
|