அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் - 9

அண்ணா நாற்பது
கவியரசு கண்ணதாசன்

உண்ணத்தால் பொய்த உயர்வுநிலை ஒன்று
ஊர்வாழத் தான்தேயும் உணர்ச்சியதி ரண்டு
வெள்ளத்தோ டுறவாடும் அன்புமன் மூன்று
வெறும்வார்த்தை இல்லாத சொற்செட்டு நான்கு
கள்ளத்தாற் றளர்வோர்க்கு அறிவூட்டல் ஐந்து
கலைக்கூடம் எழில்கான வளந்தேக்கல் ஆறு
அள்ளத்தான் குறையாத கருத்தோட்டம் ஏழு
அறிழரகோர் வழின்னும் மெய்வாழ்விம் எட்டு

ஒழுக்கத்தால் பிறர்போற்றம் உயர்வாழ்வே ஒன்பது
உள்ளன்பிற் குலஞ்சேர்க்கும் நற்பண்பு பத்து
பழக்கத்திற் கினதான தன்மைபதி னொன்று
பணிவுக்கோர் நாணலெனும் நிலைமைபனி ரெண்டு
கலக்கச்சோர் வறியாத ஆண்மைபதின் மூன்று
கண்மறைந்த பின்பேசாப் பெருந்தன்மை யோடு
விக்கத்தால் பலர்நெஞ்சை வெற்றிபெறு செம்மல்
வீரத்தின் இடமென்று கூட்டுபதி னாறு

அங்கத்தின் அசைவுக்குள் அரசியலின் தேக்கம்
அணுவிக்குள் அணுத்தேடும் ஆராய்ச்சிப் பார்ககும்
சிங்கத்தைக் கொல்லாமை நோன்புபெறச் செய்து
திருநாட்டின் வாழ்வுக்குப் புதுப்பாடம் கண்டு
தங்கத்தில் வைரத்தின் நீரோட்டம் பார்க்கும்
தன்மைத்தாய் தமிழ்கற்ற பேராளன் எங்கள் அங்கத்தால் தலையான அண்ணாவின் பெருமை
அறிவுக்கோர் வீடாக இருபத்தி னான்கு

வைவாரின் முன்தோன்றி வாழ்த்துக்கள் பெற்றும்
வாலாட்டும் பலபேரைத் தலையாட்ட வைத்தும்
வைவாரின் வறுமைக்கும் நமனாக நின்றும்
நடிப்பாரை உலகோடு சமமாகச் செய்தும்
மைவாங்கும் விழியாரை மாதாவென் றழைக்கும்
மாண்புக்கு வழிகோலிப் பண்பாடு காத்தும்
தைவார்க்கும் பொங்கற்குத் தனித்தன்மை தந்தும்
தமிழ்காக்கும் செயலோடு முப்பத்தி ரண்டு

முகம்பார்த்தே அகங்காணும் மூடாத விழிகள் முதலாளி கண்டஞ்சும் நிறங்கொண்ட இதழ்கள்
செகங்கண்டு சிலிப்பெறும் சீரான கைகள்
தென்னாட்டின் அன்பெல்லாம் துயில்கொள்ளும் நெற்றி
அகம்பற்றி உரைத்தற்கோர் அழகான வார்த்தை
அய்யய்யோ உலகத்தில் இனும்தோன்ற வில்லை!
யுகம்தேய்ந்து போனாலும் பெயர்நிற்கு மென்றால்
ஒருவர்க்கே அண்ணாவென் றுரைநாற்ப தன்ப!

(தென்றல் வார ஏட்டில் வெளியானது - 1956)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai