சிறப்புக் கட்டுரை

மதக் கல்வியும் மாணவர்களும்
அறிஞர் அண்ணா

மதம் பற்றிய செய்திகளில், ஐயங்கள் ஏற்பட்டு, அவைகளை ஆராய்ந்து தெரிந்துகொள்ள அவாவுறும் குழந்தைகளின் விருப்பமானது, அடக்கப்பட்டும், தடுக்கப்பட்டும், அடியோடு ஒழிக்கப்பட்டும் வந்திருக்கின்றது. குழநதைகள் யாவருமே, பெரும்பாலும், கண்மூடித்தனமாகவும், முன்பின் சிந்தனையில்லாமலும, பல செயல்களையும் செய்வதற்குப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கின்றனர். மதத் தொடர்புள்ள செய்கைகளின் உண்மையான கருத்துக்களை, அக்குழந்தைகளுக்கு விளங்கவைப்பதே கிடையாது. அநேகமாகப் பயிற்றுவிப்பவர்களுக்கும் அவைகள் பற்றி ஏதுந் தெரியாது.

எடுத்துக்காட்டாக, பிரார்த்தனைகள் என்பனவைகளை எடுத்துக்கொண்டால், இந்தப் பிரார்த்தனைகளும், ஜபங்களும் தங்களுடைய தாய்மொழியிலிருந்த போதிலுங்கூட, இந்தியாவிலும் சரி, அல்லது உலகில் வேறெந்தப் பகுதியிலுஞ் சரி, இவைகள் பெரும்பாலும தாய் மொழிகளிலில்லை. அவைகளின் வாசகப் போக்கு - அதாவது நடைப்போக்குகள், எளிதில் அறிந்து கொள்ளமுடியாத விதத்தில்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. அகையால் அவைகளை செய்து சொல்லுப்படியாக நாம் குழந்தைகளுக்குக் கட்டளையிட்டால், அவ்விபரீதச் சொற்களின் பொருளை அறிந்துகொள்ள முடியாத குழந்தைகள் யாவரும், தங்கள் மனப் போக்கின்படி, தங்களுக்குத் தோன்றிய ஏதாவது ஒரு பொருளை அவைகளுக்கு ஏற்படுததி வைத்துக்கொள்டோ, அல்லது பொருளில் கவலையில்லாமலோதான் அவைகளை மனப்பாடஞ் செய்தபடியே ஒப்பிக்கிறார்கள். இதனால் குழந்தைகளின் மனதில் எதிர்பார்த்திருந்ததற்கு நேர் மாறுபாடான மனப்பான்மை உண்டாவதைத்தால் காணலாம்.

மதத்தினால்தான் மக்களின் உள்ளம் தூய்மை பெறும் என்பதாக, எவ்வளவுதான் விரித்து, விரித்து, அழகாகச் சொல்லப்பட்ட போதிலுங்கூட, மதமானது பொதுவாகவே, போதுமான அறிவும், உணர்வும் இல்லாமல், ஆண்களையும், பெண்களையும் கண்மூடித்தனமாக அவரவர்களுடைய சமூகப் பழக்க வழக்கங்களுக்கும், ஆச்சாரங்களுக்கும் அடிமையாகி நடந்து தீரவேண்டியதான ஒரு நெருக்கடியான நிலைமையை உண்டாக்கியே தீருகின்றது. ஆகையினால் மதக்கட்டளைப்படி, ஒரு குழந்தை நடக்கவேண்டும் என்று கருதி, அதற்கு மதக்கற்பனைகளைக் கற்பித்தோமானால், அது இம்மாதிரியான குருட்டுப் பழக்க வழக்கங்களும், மூட நம்பிக்கையான ஆசாரங்களுக்கும் கட்டுப்பட்டுத்தான் தீரும். இதன் பயனாக, அக்குழந்தை தனது பிற்காலவாழ்வில் எது முக்கியம்? எது முதன்மையானது? எச்சமயங்களில் எது கூடாது என்பதைக் கூட அறிய முடியாமல் போய்விடுகிறது மேலும் மற்றுஞ்சில பொழுதில் தங்களுடைய மதக்கட்டுப்பாட்டின்படி அவர்கள் நடந்துகொள்ள ஆரம்பிக்கும்போது அச்செய்கையானது மற்றவர்களுக்கு எந்தவிதமான கெடுதியை விளைவித்த போதிலும் கூட, அது இவர்கள் மனதுககு நன்மையாகவே காணப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் மாலை நேரங்களில் நடைபெறக் கூடிய ஒரு சாப்பாட்டு விருந்துககோ அல்லது சிற்றுண்டிக்கோ, ஒருவன் சடங்குகளைவிட்டு வந்து அந்தக் கூட்டதில் கலந்துகொள்ள வெட்கப்படுவான்.

அதுபோலவே, இந்நாட்டில் கிராமங்களில் வாழும் ஓர் இந்துவானவன் தன்னுடைய தகப்பனால் இறந்துவிட்டால், தன் கனவனுடைய மீசையை உடனே சிரைத்துவிட வேண்டுமென்றம், அப்படிச் சிரைக்காவிட்டால் அது, ஒரு பெரிய பாவமெனவுங் கருதப்பட்டு வந்தது; இன்றுங் கருதப்பட்டு வருகிறது ஓரளவுக்கு ஆனால் ஒரு மகன் தன்னுடைய தந்தையுடன் நாள்தோறும் சண்டைகளும், சச்சரவுகளும் செய்துகொண்டும், அவருக்கு வேண்டிய வசதி செய்யாமலும, தகப்பனாருடைய வாழ்நாள் முழுவதும், அவர் எப்பொழுதும் துக்கத்திலேயே ஆழ்ந்திருக்கும்படியாகச் செய்துவந்தவனாகவும் இருந்தபோதிலுங் கூட, அக்கொடுமைகளெல்லாம் அவ்வளவாகப் பொருட்படுத்தப்படுவதில்லை; ஆனால் தகப்பன் இறந்தவுடன் மகன் தன் மீசையைச் சிரைக்காதிருந்ததே பெரிய தப்பிதமாகவும், பாவமாகவும் பொது மக்களால் கருதப்பட்டு வந்தன. இத்தகைய நிகழ்ச்சிகளால் சூழப்பட்டு, இவைகளுக்கு இடையில் பிறந்து வளருமபடியான ஒரு குழந்தையானது இம்மாதிரியான கொள்கைகளையும், எண்ணங்களையுந் தாம் இயல்பாக ஏற்றுக் கொள்ளுமே தவிர, அறிவு பெறுவது என்பது கடினமாகிவிடும். ஆகையால் குழந்தைகளின் அறிவு விரிவுப்படுவதற்கான வழிகளில், நடத்திக்கொண்டு செல்லத் தூண்டுகோலாயிருக்கும்படியான முறைகளிலேயே அவர்கள் பழக்கப்படவேண்டும்.

மதத்தைப்பற்றிய கல்வியும், அறிவும், மாணவர்களுக்கு அவசியம் போதிக்கப்பட்டுத்தான் தீரவேண்டுமெனப் பிடிவாதம் செய்யும் மதப் பிரசாரகர்கள் - மதப் பக்திகாரர்களெல்லாம் ஒரு சமயம் தங்கள் பிடிவாதங்களில் வெற்றிபெற்று விடுவார்களேயானால், அவர்கள், அநாகரிகமானதும், மூடநம்பிக்கையுள்ளதுமான கொகைகளிலிருந்து மக்கள் விடுதலையடைந்து சுயமரியாதை பெற வேண்டும் என நினைத்துப் போராடிக் கொண்டுவரும் சீர்திருத்தக்காரர்களின் முயற்சிக்கு, முட்டுக்கட்டை போட்டதில் வெற்றிபெற்றவர்கள் என்று மகிழ முடியுமேயொழிய, மற்றப்படி அவர்களால் மனித சமூகத்திற்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை என்பது எண்ணம்.

எல்லாமதங்களிலும கூறப்படும முதன்மையான தத்துவம் என்னவென்றால், அவைகள் ஒவ்வொன்றும் எல்லாச் செய்திகளையும் பற்றி ஆராய்ந்தெடுத்த தூய்மையான உண்மைகளையே தாம் கூறுவதாகவும், அவ்வுண்மைகள் தங்களுக்கு மட்டுமே சொந்தமென்பதாகவும் வாதமிடுவதேயாகும். இவ்வாறு சில கோட்பாடுகளைத் தங்களுடைய மதத் தமக்குத்தான் சொந்தமெனப் போராடும தன்மையானது, மற்ற மதங்களின் மீது வெறுப்பை வளர்ப்பதற்கு ஓர் அறிகுறியாகவும, தூண்டுகோலாகவுமிருந்து கொண்டு வருகிறது. இதனால் குழந்தைகள், தங்களுடைய சமூக சம்பந்தமான கட்டுதிட்டங்களுக்குட்படாத ஏனைய மதத்தவர்களைக் கேவலமாகவும், இழிவாகவும் நினைக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.

இந்நாட்டில், குழந்தைகள் பெருமபாலும் தங்கள் சொந்தச் சாதி மக்களுடன் மாத்திரம் என் நட்புறவு வைத்துக்கொள்வதால், ஏனைய சாதியினரின் மிது கொண்டு, அவர்களை வெறுப்பதற்குரிய சாதனங்களை ஏற்படுவதற்கு, மிக்க வசதியாயிருக்கின்றன. இம்மாதிரியான தப்பெண்ணங்களால் ஏற்படக்கூடிய அருவருப்பையும், வெறுப்பையும் மதத்திற்குட்பட்ட ஒழுக்க முறைகளெனக் கூறி, அக்குழநதைகளின் மனதில் பதியும்படி செய்வோமேயானால், அப்பொழுது இத்தப்பெண்ணங்களும், வெறுப்புணர்ச்சியும் அவர்களுடைய மனதில் இன்பம் பதின்மடங்கு அழுத்தந்திருத்தமாகப் பதிக்கப்பட்டு நிலை பெறுகின்றன.
மதத்தின் பேரால் மக்களுக்குப் பொதுவாகப் போதிக்கப்பட்டுவரும் செய்திகளில், அவர்கள் பொதுவாழ்க்கையில் யதொரு பயனும் அடைய முடியவில்லையெனக் கூறப்படுவது முற்றும் உண்மையேயாகும். ஏனெனில், இம்மாதிரி வளர்க்கப்பட்ட குழந்தைகள், உணர்ந்து பெயரியவர்களாசி, பொதுவாழிவிலீடுபடும்போது, தங்களுடைய மத சம்பந்தமான உண்மைகளைத் தங்களைப்போல் மற்றவர்களும் நம்பி, அவைகளைப் பின்பற்றாதபோதிலும்கூட, மரியாதையும் நாணயமும், ஒழுக்கமுள்ள ஆடவர்களும் பெண்களும், உலகத்திலிருப்பதை அவர்கள் கண்டு அறிந்து கொள்ளுகின்றார்கள் என்றாலும, அறியாமையின் பயனாக அவர்களையுமறியாமல் அவர்களுடைய மனதில் பதியவைக்கப்பட்டிருந்த கருத்துக்களின் பலாபலன்கள், அவர்களுடைய உள்ளத்தைவிட்டு அகலாமல் அங்கேயேதான், அவர்களுடைய உள்ளத்தைவிட்டு அகலாமல் அங்கேயேதான் இருந்து வருகின்றன. ஆகையால் மக்களைப் பரந்த நோக்கத்துடன் சமமாகக் கருதுவதற்கு, மத சம்பந்தமான கல்வியானது இவர்களுக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாயிருந்து வருகிறது என்றேற்படுகின்றது.

மதக் கோட்டின்படி ஒரு சக்கிலியைத் தீண்டினால் அதனால், தான் தீட்டுப்பட்டு விடுவதாகவும், அத்தீட்டை நீக்க வேண்டுமானால், கண்டிப்பாய்த் தலைமுழுகித்தான் நீக்கவேண்டுமெனவும், உயர்ந்து சாதி குழந்தைக்கு இளமையிலேயே கற்றுக் கொடுத்துவிட்டோமேயானால் அக்குழந்தையானது, தன்னுடைய பிற்கால வாழ்க்கையில், ஒரு சக்கிலியும் தன்னைப்போலுள்ள மனித இனந்தானெனக் கருதுவதற்கு, அதற்கு அளவற்ற மனவுறுதியும், மனவலிமையும் இல்லாமலே போய்விடுகின்றன அக்குழந்தையானது ஒரு சமயம் தன்னுடைய பேரறிவினுதலியால், துண்டாதாரும் தன்னைப் போலவே மனிதர்கள்தாம் எனக் கருதி, அவர்களையும் மக்களென நினைக்கக்கூடிய நிலையையேற்பட்ட போதிலுங்கூட, அக்குழந்தையானது இளமையாயிருக்கும்போது, அதனுடைய உள்ளத்தில் ஆழமாகவும் அழுத்தத்திருத்தமாகவும் பதிய வைக்கப்பட்ட கருத்துக்களால் தன்னையுமறியாமல் ஒரேவழி பாதிக்கப்படவுங் கூடும்.

இந்துக்களாக இருப்போர், தாங்கள் முன்பிறப்பில் ஏதோ புண்ணியம் செய்து இப்பிறப்பில் இந்துவாகப் பிறந்திருபபதாகவும், ஆகையால் இதர மதக்காரர்களைவிடத் தாங்களே உயர்ந்தவர்களென நினைக்கவும் படியான எண்ணங்ககொண்வர்களாக இருககக் காண்கிறோம். ஆகவேதான், இவர்கள் அன்னியர்களைக் கண்டால் மிகக் கேவலமாக நினைப்பவர்களாக இருக்கிறார்கள். கல்வித் துறையில் இத்தகு மதசம்பந்தமான கல்வியைப் புகுத்திவிடுவார்களேயானால், மாணவர்களுக்குப் பரந்த நோக்கமும், விரிந்த அறிவும், பிறர்க்குதவும் எண்ணமும் தோன்றுவதற்கு இடமேற்படாது என்று கருதியே, கல்வியைப் புகத்தக் கூடாதென, அறிஞர்கள் பலர் உறுதியாக எதிர்த்துப பேராடிக் கொண்டு வருகிறார்கள்.

மத சம்பந்தமான பழக்கவழக்கங்களை, ஒவ்வொருவரும் கண்டிப்பாகக் கடைப்பிடித்துத்தான் துரவேண்டுமெனக் கூறப்படுவது, பொதுவாகவே மாணவர்களால், ஒருவித சுமையாகக் கருதப்பட்டு, இழிவாகவும், பரிகாசமாகவுங் கூட கருதப்பட்டு வருகின்றது. மேலும் பள்ளி நிலையங்களைப் பார்ப்பதற்காகப் பார்வையாளர்கள் சுற்றி அழைத்துக்கொண் செல்லப்படும்பொழுது, பயபக்தியை உண்டாக்கக் கூடியயதொன்றையும் அங்கே அவர்கள் காணுவதுங் கூடிய யாதொன்றையும் அங்கே அவர்கள் காணுவதுங் கிடையாது. வழிபாடு அல்லது ஜபம் செய்யும் மண்டபம் அவர்களுக்குக் காட்டப்படலாம். ஆனால், அவ்வித வந்தனை வழிபாடுகளில் கலந்துகொள்ளும் படியான மாணவர்களின் முகங்களை உற்று நோக்கினால், அவர்களின் முகங்களில் குறிப்பிடத்தக்கதான யாதொரு கம்பீரமான தோற்றத்தையுங் காண்பது அரிதாகும்.

மதசம்பந்தமான சடங்குகள் யாவும், நாளாவட்டத்தில் நடைமுறைவாழ்வில் பேரில் பார்க்கும்போது, யாதொரு விதமான அறிவையோ அல்லது ஒழுக்கத்தையோ புகட்டியிருப்பதாகத் தென்படவேயில்லை.
மதசம்பந்தமான பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் மாணவர்கள், இதர மதத்தைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிப் பழகுவதில்லை. இவ்வித நிலைமை ஏற்படுவதால், மக்களனைவரையும் சமமாக எண்ணி நடக்க வேண்டுமென்கிற பரந்த ஒற்றுமை நோக்கமானது, அப்பள்ளி நிலையங்களில் அழிக்கப்படுகின்றது. மாணவர்கள், பள்ளிக் கூடத்தில் ஒன்றாகச் சேர்ந்து ஒரேவித ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்டு, அவர்களாலேயே பொதுவாக நடத்தப்பட்டு வருவதாலும, விளையாட்டிடங்களிலும் சங்கங்களிலும் கூடிப்பழகிவருவதாலுமே, என்றும் நீடித்திருக்கக் கூடிய நட்புமுறை மாணவர்களிடையே ஏற்படக்கூடும். அப்படி ஏற்படும் நட்பு. கைம்மாறு எதுவும் கருதாமலேற்படக் கூடிய நட்பாகும் என்பதை யாவரும் அறிவர். ஆனால், இந்தியாவில் பல்வேறு மதங்களை ஆதாரமாகக் கொண்டே கல்வி நிலையங்கள், பல்வேறு வகுப்புகளையும் சார்ந்த இளைஞர்களுக்குள் ஏற்படக் கூடிய நட்பு, ஒற்றுமை, தொடர்பு ஆகீய எல்லா வாய்ப்புகளையும் நாசமாக்கிக் கொண்டே வருகின்றன.

கல்வித்துறையில் உலக சம்பந்தமான கல்வியும், அறிவுந்தான் மாணவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும் என்னும் இன்றியமையாமையைக் குறித்து, நாம் அழுத்தந்திருத்தமாகக் கூறிவருகிறோம். ஆயினும் மாணவர்களின் அறிவு பலவழிகளிலும் விரிந்து நிற்கக்கூடிய செய்திகளும் கல்வியுடன் சேர்ந்து வேர்களுக்குப் போதிக்கப்பட்டாக வேண்டும். குறிப்பாக, விஞ்ஞானம் பாடத்திட்ட வரிசையில் முதன்மையானதாக இருக்கவேண்டும். அவ்வாறிருந்தால் மட்டுந்தான் மாணவர்களுடைய நியாயத்தின் வழிபட்ட மனஆற்றல் வளர்ச்சிபெற்று, இயற்கைக்காட்சிகள் நிரம்பிய இவ்வுலகில், எல்லாப்பக்கங்களிலும் நீதியும், அமைதியும் குடிகொண்டு உலாவுவதைக் கண்டறிந்து கொள்ள வசதியுண்டாகும். வானநூல், உயிர் நூல், மனித இனநூலு போன்ற விஞ்ஞானத் துறைகள் பற்றிய அறிவும், ஆராய்ச்சியுந்தான் மடப் பழக்க வழக்கங்களால் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்யைத்தகர்த்தெறியக் கூடிய வல்லமை வாய்ந்தவைகளாகும். இயற்கையின் சட்டத்திட்டங்களையும், பண்புகளையும் ஆதியிலிருந்தோர் அறிந்துகொள்ளாதிருநத காரணத்தினால்தான், அவ்வித மூடநம்பிக்கைகள் அவர்களுக்கேற்பட்டன.
நாம் எப்படியிருநதால் இரட்சிக்கப்படுவோம், என்னசெய்து கொண்டு வந்தால் முக்தியடைவோம், எப்படி நடந்துகொண்டு வந்தால் பரமபதம் அடைவோம் என்பனபற்றி போதிக்கும்படியான கல்வி அறிவானது, எவ்வளவுதான் பெருமை வாய்ந்ததாகக் கூறப்பட்டு வந்தபோதிலும் சரியே, அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமலும, அவ்வறிவை மாணவர்களுக்குப் போதியாமலும் இருநதுவர வேண்டும். வளர்க்கும் மதக்கல்வி எந்த முறையிலும் புகுத்தப்படக் கூடாது என்பதே அறிஞர்களின் கருத்தாகும்.
(15.05.49)


கட்சிகள் இருப்பது, குறிப்பிட்ட சில இலட்சியங்களுக்காகவேயன்றி யாரால் அதிகமான தலைகளைச் சீவ முடிகிறது என்று கண்டறிய அல்ல. அதற்குக் கட்சிகள் வேண்டாம்.

. . . . ஒவ்வொறு கட்சியும், நடத்தும் விசாரணை தத்தமது (காங்கிரஸ், லீக், இந்து மகாசபை) கட்சியில் இருந்துகொண்டு, கட்சியின் கண்ணியம் கெடுகிறவரையில், நடந்துகொண்டவர்களைக் கண்டுபிடித்து விலக்குவதற்குப் பயன்படவேண்டுமே ஒழிய பிற கட்சியின் முது குற்றப்பத்திரிக்கை தாயிரப்பதற்காக இருத்தலாகாது. ஏனெனில், எந்தக் கட்சியும் இவ்விதமான நடத்தையில், பழகியவர்களை வைத்துக்கொண்டு, எந்த மகத்தான காரித்தையும் சாதித்துக் கொள்ள முடியாது. அந்தந்த கட்சியின் கை ஓங்கியிருக்கும்போது களிப்பு தோன்றக் கூடும். ஆனால் மொத்தத்தில் பார்த்தால் பெருநஷ்டம் . . . நாட்டின் எதிர்காலம் காட்டுமுறையாகிவிடும்.
(25.08.1946)


 


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai