அந்த ஆட்சி வேண்டாம்!
அறிஞர் அண்ணா
பாதுஷாக்கள், பக்கீர்களின் கட்டளைக்கு
நடுங்கியும், மன்னாதி மன்னர்கள் போப்பாண்வரின் பாதந் தாங்கியும்,
ராஜாதிராஜர்கள், ரிஷிகளிடம் கைகட்டி வாய்பொத்தி நின்றம், அரசியலை
ஆஸ்ரமத்துக்கு அடிமையாக்கி, முடிதரித்தோர் ஜடை உடையோருக்குச் சேவகம்
செய்து வந்த காலத்திலே, அரண்மனை போகத்துக்கும், ஆஸ்ரமம் யோகத்துக்கும்
என்ற நிலையும், இவ்வுலக வாழ்புக்கு மன்னன் மொழியும் மறு உலகவாழ்வுக்கு
மரஉரியோன் மொயியும் வழி எனக் கருதிய மக்கள் நிலையும், உலகிலே,
பல்வேறு இடங்களிலே இருந்தது, மறைந்தது, இந்தியா எனம் இந்த நிலைகெட்ட
மனிதர் நடமாடும் இடத்தில் தவிர.
கலிபாவின் காலடியைத் தமது மணிமுடிமேல் கொண்ட சுல்தான்களும், பாதுஷாக்களும்
இன்ற இல்லை. போப்பாண்டவரின் புன்னகைக்குப் பொன்னையும், பொருளையும்
கொட்டிவிட்டு, கைகட்டி, முழுந்காற் படியிட்டு நிற்கும் மன்னர்கள்
இன்று இல்லை. ரிஷிகள் இல்லை. ஆனால் அவ்வழிவந்தோர் என்றுரைக்கம்
கார்ப்பனர் மட்டும இன்றம் அரசியலிலே, ஆதிக்கம் செலுத்துவதில் அணுவளவும்
குறைத்துக் கொள்ளவில்லை.
கலீபாவின் காணிக்கை பூமி போன்றிருந்த உதுமானிய
சாம்ராயம் இன்று இல்லை. போப்பாண்டவரின் தலை அசைத்தால், மஇன்னர்களின்
நிலை அசையும் விதமாக அமைக்கப்பட்டிருநத புனித ரோமானிய சாமராஜ்யமுமில்லை.
இவ்விரு பெரும் அமைப்புகளம் காலத்தால் கலனாக்கப்பட்டதுடன், மனித
சுதந்திரம் மதத் தலைவர்களின் எதேச்சாதிகாரத்துக்குச் சிறைப்படுத்தப்படக்
கூடாது என்ற கூறிச் சீறிப்போராடின விடுதலை வீரர்கள் விடுகணையால்
தூளாக்கப்பட்டுப் பொடியாகிவிட்டது. உதுமானிய சாம்ராஜ்யத்திலே பண்ணைகள்
போலிருந்துவந்த இடங்கள் இன்று தனித்தனி நாடுகளாகித் திகழ்கின்றன.
கலிவாவின் ஆதிக்கம் போனதால், கலை போகவில்லை, மக்களின் நிலைகலையவில்லை.
மண்டலங்களின் மதிப்பு மங்கவில்லை. வல்லரசுகள் கைலாகு கொடுக்க,
தூதுவர்கள் துதிபாட, ராஜதந்திரிகள் உபசாரம் செய்ய, ரம்மியமாக வாழும்
துருக்கி, உதுமானிய சாம்ராஜ்யத்தின் ஓர் பட்டியாகக் கிடந்தகாலை,
ஐரோப்பியர்களின் வேட்டைக்காடாக, கேளிக்கைக் கூடமாக இருந்ததுடன்,
ஐரோப்பாவின் நோயாளி என்ற ஏளனம் செய்யப்பட்டு வந்தது. இன்றோ! துருக்கியின்
தோழமையைப் பெற சான்பேபன் தூபமிடுவதும், நேசநாடுகள் புன்னகை பூசுவதுமாக
இருக்கும் காட்சி காண்கிறோம். காலமானது காலிபாவின் ஆட்சியே தவிர,
இஸ்லாத்தின் மாட்சிமையல்ல! இஸ்லாம், இருதய கீதம், ஆத்மார்த்த விஷயம்.
அதை அரசபோகத்துக்குப் பொறியாக்கிய பிறகே காலிபாவின் ஆட்சியைப்
பற்றிச் சுதந்திரவாதிகள் கண்டிக்கலாயினர். மதத்தலைவதையா கண்டிப்பது,
இகபரத்துக்கு வழிகாட்டும் காலீபாவின் பதவியையா பழிப்பது என்று
கைபிசைந்தும் கண்பிசைந்தும் ஒரு கூட்டம் பேசியபோது, துருக்கியின்
தலைவன், முஸ்தபா கமால், முன்வைத்த காலைப் பின் வையேன் என்று முழக்கமிட்டு,
காலிபா போகத்தான் வேண்டும் மக்கள் வாழ்வு வளம் பெற வேண்டும் என்று
கூறி, உள்நாட்டு வெளிநாட்டு எதிர்ப்பைத் தவிடுபொடியாக்கி, மதம்
மனத்துக்கு விருந்து மருந்து, ஆட்சிக்கு அதனை அமர்த்தக் கூடாது
என்று கூறி, அரசியலையும் மதத்தையும் வேறாக்கி, அருள் தேடிக் கொள்ள
அவடி தொழுங்கள். இங்கு சுகம் பெற இவ்வழி காணுங்கள் என்று இருநெறி
வகுத்துத் தந்தார். அதனால், இன்று துருக்கி இணையிலா இஸ்லாமியச்
சிங்கமாகி விட்டது. கலிபாவின் ஆட்சி போனால், பிறை பறக்குமா, கொரான்
சிறக்குமா என்ற கண்ணீர் உகுத்தவர்கள் இன்று துருக்கியில், மதமும்
மக்களும், பட்டியும் மாடுகளம் போலவோ கடிவாளமும குதிரையும் போலவோ
இன்றி விழுயும் ஒளியும், மலரும் மணமும் போலிருத்தலைக் கண்டு களிக்கின்றனர்.
அது போன்றே, மன்னர்களின் பட்டத்தைப் பறிமுதல் செய்யவும், பாவமன்னிப்புச்
சீட்டுக்காக, பாசத்தை வீசும் விழியர், பவளச் செவ்வாய்க் கன்னியரைப்
பள்ளியறைக்கிழுக்கும் காமக் கூத்தருமாக இருந்த பாதிரி ஆட்சி ஒழிந்த
பிறகே, பண்பும் வளமும், மக்களிடையே சுகமும் பூத்தது. பக்கீர் ஆட்சி,
பாதிரி ஆட்சி பார்பபன ஆட்சி என்ற மூறாட்சிகளே மூன்று பாகங்களில்,
ஆதிக்கம் செலுத்தின. மூன்றாவது மட்டும் இன்றும் கடைசி மூச்சு இருக்கும்
வரை போராடுவேன் என்று கூறிடக் காண்கிறோம். பக்கீராட்சி பாதிரியாட்சி
என்பவை போய்விட்டால், மக்கள் அங்கெல்லாம் மார்க்கத்துறை கெட்டோ,
வாழ்க்கைத்துறை கெட்டோ போகவில்லை. மது ஆட்சி கூடாது என்ற முழுக்கமிட்ட
முஸ்தபா கமாலும், மார்ட்டின் லூதரும் முறையே, இஸ்லாத்துக்கும்
கிருத்துவ மார்க்கத்துக்கம் ஊறு தேடினாரில்லை, அந்த மார்க்க தலங்களிலே
புகுந்துகொண்டு மக்களை நொந்திய வைத்த தொந்தியினரின் வாழ்வைப் போக்கினர்.
எனவே, இவ்விரு ஆட்சிகள் போனதால், அங்கு இன்பம் பொங்கினது போன்றே
இங்கும் பார்ப்பன ஆட்சி போனால், மக்களாட்சி உண்டாகும்.
துருக்கிப் பத்திரிகைக் குழுத் தலைவர் தோழர் ஆதெ
துருக்கியிலே, மதம், தனிப்பட்ட மக்களின் ஆத்மீகப் பிரச்னையே தவிர,
அரசியல், நிர்வாகம் ஆகியவைகளுக்கும், மதத்துக்கும் தொடர்பு கிடையாது
- என்று கூறினார். இதனை நாம் மிகப் பாராட்டுகிறோம். பார்ப்பன ஆட்சி
போகவேண்டும் என்ற நாம் கிளர்ச்சி செய்வதன் காரணமும் இதுவே. இதுமானிய
சாம்ராஜ்யமெனும் பெருவெளியிலே, கலீபா எனம் தளைபூட்டிக் கொண்டிருந்த
துருக்கி, தளை போனபிறகு, பெருவெளியிலே நெறிமுறையின்றி நடமாடுவதை
நிறத்திக்கொண்டு, தனி இல்லம் வகுத்துக்கொண்டு தரணி போற்ற வாழ்வதுபோன்ற
நிறை வேண்டும் என்றுரைக்கிறோம். இதற்குத்தான் இங்கு எவரெவரோ எதிர்ப்பைக்
கிளப்பிடக் காண்கிறோம். பக்சீராட்சியைவிடப் பார்ப்பன ஆட்சி பாதக
மிகுந்தது. கலீபாக்களிலும் போப்பாண்டவர்களிலும் கண்ணியமும் காருண்யமும்,
மக்களிடம் அன்பும், மதத்திடம் மதிப்பும், ஒபக்கத்தில் அக்கரையும்,
போகத்தில் வெறுப்பிம் பொண்ட சீலர்கள் பலர் உண்டு. அன்ற தொட்டு
இன்று வரை, எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்றுரைக்க முடியாது
என்பதுபோல், பார்ப்பன ஆட்சியிலே எவராட்சி, எக்கால ஆட்சி மக்களுக்கு
இதம் புரிந்தது என்றுகூற முடியாது. சீறாத பிலி, அரிக்காதவெல்,
கொட்டாத தேன், கசக்காத எட்டி, இல்லை! பார்ப்பன ஆட்சியிலும், பாதகமின்றி
வேறு காண முடியாது. அதன் அமைப்பும் நோக்கமும் அஃதன்றி வேறில்லை.
மக்களின் மனதை மயக்குவதிலே, அபின்; விழியாலும் மொழியாலும் மக்களிடம்
ஜாலம் புரிவதிலே ரஸ்புடீன், மக்களின் பொருளைக் கவர்வதிலே ஆல்கபோனின்
தந்திரம், இவைகள், பார்ப்பன ஆட்சியின் திறத்தின் முன் நிற்காது
என்போம்.
அந்த நாட்களிலே, அரசமன்றத்திலே தேசவிசாரணையில்
மன்னன் ஈடுபட்டிருக்கும்போது முனிவனோ ரிஷியோ, உள்ளே நுழைந்தால்,
மன்னன், சிங்காதனத்திலிருந்து எழுந்து, கை வப்பித் தொழுது, கால்கழுவிப்
பூச்சூட்டி மகிழ்ந்து, ஏழையின் குடிசையிலே தங்கள் பாதகமலம் பட்டதால்,
என் வம்சமே புனிதமாகிவிட்டது என்று கூறிட, ரிஷி கெம்பீரமாக உட்கார்ந்துகொண்டு,
ஏ! ராஜன்! எனக்கு யானை மீதேறிக் கவண்விட்டால் எவ்வளவு உயரமாகக்
கல் போகிறதோ அந்த உயரத்துக்குப் பொன்குவியல் வேண்டும் என்றுரைக்கவும்,
தங்கள் சித்தம் என் பாக்கியம் என்று மன்னன் கூறவுமான நிலைமை இருந்தது
என்றால், நாளாவட்டத்தில் ராஜாதிராஜன் ஜெமீன்தாராகி, ரிஷி, ஒரு
சங்காச்சாரி அல்லது சங்கராச்சாரி என்றாகி, யானைமீது ஏறி கவண்விடுவது,
இத்தனை ஆயிரம் என்று குறிவிடுவது என்று வகையிலே மாற்றம் ஏற்பட்டிருக்குமே
தவிர ஆட்சி முறையிலே மாற்றமில்லை.
அன்று அயோத்தியிலே ஒரு வசிஷ்டனும், அவந்தியிலே
ஒரு வசிஷ்டனும் இருந்தகொண்டு, அரசுகளின் சக்கரங்களாக இருந்துபோலவே
இன்று மைசூரில் மாதவராவும், திருவாங்கூரில் சர்.சி.பி.யும், மேவாரில்
சர்.டி.விஜயராகவாச்சாரியும், பரோடாவில் சர்.கிருஷ்ணமாச்சாரியும்,
காஷ்மீரில் கோபால்சாமி ஐயங்காரும் என்று உள்ளனர். ஆட்களைத் தள்ளுங்கள்.
ஆட்சிமுறை, மக்கள் மன நிலையைப் பாருங்கள், சர்வம் விரம்ம மயமாகவே
இருத்தல் தெரியும்.
துருக்கியின் நிலைமையைத் தோழர் ஆதே கூறும்போது,
இங்குள்ள நிலை நமக்கு நினைவிற்கு வரவில்லையா! நெஞ்சம் வேகவில்லையா!
வெட்கம் பிறக்கக் கூடாதா? வீணராட்சியை வீழ்த்த வேண்டுமூ என்று
விவேகம் தோன்றலாகாதா! கமாலின் கல்லறை கவனத்திற்க வரக்கூடாதா? லெனினின்
நினைவு வீரமூட்டக் கூடாதா! எந்நாடே இன்னமும் எத்தனை நாட்கள்தான்
ஆரீயம் உலவும் கூடாக இருக்கப் போகிறாய் என்று கேட்கும் துணிவு
ஏற்படவேண்டாமா என்று கேட்கிறோம்.
துருக்கி நாட்டுப்பற்று என்ற கொள்கைக்காக நீங்கள்,
அகில உலக இஸ்லாமிய ஐக்யம் என்ற உயர்ந்த கொள்கையைக் கைவிட்டுவிடலாமா?
என்ற கேட்டதற்குப் பதில் அளிக்கையில், தோழர் ஆதே கூறின பதிலைத்
தோழர்கள் கூர்ந்து நோக்க வேண்டுகிறேன். உதுமானிய சாம்ராஜ்யம் பல
துண்டுகளின் இணப்பு. இணைப்புக் கர்த்தா, கலுபா. துண்டுகள், இன்று
ஈராக் ஈரான், எகிப்து, துருக்கி, அரபி என்று பல்வேறு நாடுகளாகித்
தனித்தனியாக வாழுகின்றன. தனியான காரணத்தால், ஒன்றாவது இஸ்லாத்தையோ
சுதந்திரத்தையோ இழக்கவில்லை அதுமட்டுமா? ஒன்றுக்கொன்று பகைத்துக்கொளளவுமில்லை.
இதனைத் தோழர் ஆதே எடுத்துக் காட்டினார். 1942லிருந்து எங்களிடம்
இருந்து வந்த கிருஸ்தவ சிறுபான்மையோர் பிரச்னை தீர்ந்துவிட்டது.
அரபுநாடுகளக் எங்களிடமிருந்து பிரிந்து போயின. பகையும் போய் விட்டது
என்ற கூறுகிறார், தோழர் ஆதே. உதுமானிய சாம்ராஜ்யத்தில் சிக்கியிருந்த
பல மணிகள் இன்று தனித்தனியான ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைத் தோழர்
ஆதே எடுத்துரைத்தது, பாகிஸ்தானுக்கு ஆதரவாகும் என்றே நாம் கருதுகிறோம்,
ஏனெனில், முஸ்லிம் வட்டாரமும், இந்திய பூபாகத்தின் ஒர் பண்ணையாக
இருப்பதைவிடத் தனித்திருந்தால்தான் துருக்கிபோல், என் துரக்கியைவிடப்
பன்மடங்கு அதிகமான ஜொலிப்புடன் விளங்க முடியும்.
தோழர் ஆதே, மொத்த இந்தியாவின் பாதுகாப்பைக் கவனிக்கவேண்டும்
என்று குறிப்பாகக் கூறினார். ஆகவே அவர் நாட்டுப் பிரிவினையை ஆதரிப்பதாகச்
தெரியவில்லை என்ற மெயில் எழுதுகிறது. ஆதே அவர்களின் அபிப்பிராயத்தை
அறிய வேண்டுமானால் நாம் ஆவலாக இருப்போமேயன்றி, ஆதரவை எதிர்பார்த்துத்தான்
காரியத்தை நடத்த வேண்டுமென்கிறோம். ஏனெனில் பாகிஸ்தான் இங்குள்ள
பிரச்னை, தோழர் ஆதே துருக்கிவாசி! ஆனால், இந்தியாவின் மொத்தப்
பாதுகாப்பைக் கவனிக்கவேண்டும் என்றுரைத்ததை, பாகிஸ்தானுக்கே ஆதரவு
தேடுவதாகவே கூறமுடியும். ஏனெனில், அத்தகைய பாதுகாப்புப் பாகிஸ்தான்
ஏற்பட்டால் மட்டுமே உண்டாகும்.
துருக்கித் தோழரின் உரைகள், நமக்கு, பக்கீராட்சி
பாதிரியாட்சி போனதுபோல் பார்ப்பன ஆட்சியும் போய் உதுமானிய சாம்ராஜ்யமெனும்
பெருவெளியில் ஒதுக்கிடமாக இருந்த நிலைமை போய், தனி நாடாகித் துருக்கி
திகழ்வதுபோல், இந்தியாவெனம் உபகண்டத்தில் பண்ணைகளாக இருக்கும்
நிலை மாறி, பாகிஸ்தான், திராவிட நாடு தனித்தனி நாடுகளாகித் திகழவேண்டும்
என்பதையே உறுதி செய்கின்றன.
(திராவிடநாடு - 31.01.1943)