அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை குறிப்புகள்
டாக்டர் அண்ணா பரிமளம்

15-09-1909-ல் பிறப்பு காஞ்சிபுரம், தந்தை: நடராசன், தாய்: பங்காரு அம்மாள்.
வளர்ப்பு: இராசாமணி அம்மையார் (சிற்றன்னை) - தொத்தா

1914: பச்சையப்பன் தொடக்கப்பள்ளியில் கல்வி.

1927: காஞ்சி நகராட்சியில் எழுத்தர் பணி.

1928: சென்னை பச்சையப்பன் கல்லூரிக் கல்வி

1930: இராணி அம்மையாரை மணந்துகொள்தல்

1931: மாணவர் செயலராதல், போட்டிகளில் பரிசு பெறல்.

19.03.1931: பெண்கள் சமத்துவம் எனும் முதல் கட்டுரை. தமிழரசு இதழில்

1932: முதல் ஆங்கிலக் கட்டுரை 1933: காங்கேயம் - செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் முதல் பொழிவு

11.02.1934: முதல் சிறுகதை `கொக்கரக்கோ` ஆனந்த விகடனில் வெளியாதல்

1934: முதுகலைப்ப பட்டப் படிப்பில் தேர்ச்சி

1936: `பாலபாரதி` ஆசிரியர் பொறுப்பு

1934: திருப்பூர் - செங்குந்தர் இளைஞர் மாநாடு பொழிவு. பெரியாருடன் முதல் சந்திப்பு

1935: கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் ஆசிரியர் பணி.

1936: சென்னை நகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடல். (பெத்துநாயக்கன் பேட்டையில்)

1936: பெரியாருடன் வடாற்காடு மாவட்டச் சுற்றுப்பயணம்

04.04.1937: `நீதிக்கட்சி` செயற்குழு உறுப்பினராதல்

1937: செட்டிநாட்டு அரசர், தம் தனிச் செயலாளராகப் பணியாற்ற வேண்டல்.

09.12.37: முதற்கவிதை `காங்கிரசு ஊழல்` விடுதலையில் வெளிவரல்

1937: `நவயுகம்`, `விடுதலை`, `குடியரசு` இதழ்களின் துணை ஆசிரியர் பொறுப்பு

02.09.38: முதல் மடல் பரதன் பகிரங்கக் கடிதம் விடுதலையில் வெளிவரல்

26.09.38: இந்தியை எதிர்க்க மக்களைத் தூண்டியதாக நான்கு மாத வெறும் காவல் தண்டணை: ராணியம்மை வாழ்த்துச் செய்தி (குடியரசு, விடுதலை)

13.01.39: இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்த தாளமுத்து நடராசன் இரங்கல் கூட்டத்தில் உரை

18.01.39: தமிழர் திருநாள் விழாவில் டாக்டர் சி.நடேசனார் படத் திறப்பு (சென்னை)

10.02.39: சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்பு உரை

07.1939: முதல் குறும் புதினம் `கோமளத்தின் கோபம்` (குடி அரசு)

12.11.39: `கபோதிபுரக் காதல்` தொடக்கம்

10.12.39: நீதிக்கட்சியின் செயலாளர் ஆதல்

06.01.40: பம்பாயில் பெரியார்-அம்பேத்கர் உரையாடல் மொழி பெயர்த்தமை

23.03.40: முதல் புதினம் `வீங்கிய உதடு` தொடக்கம் (குடி அரசு)

02.06.40: காஞ்சியில் திராவிட நாடு பிரிவினைத் தீர்மானத்தைக் கொனரல்

08.11.40: தி.க.சண்முகம் நடித்த `குமஸ்தாவின் பெண்` நாடகத் திறனாய்வு (குடியரசு)

08.03.42: திராவிடநாடு மதழ் தொடக்கம் தலையங்கம் கொந்தளிப்பில் கவிஞர் பாரதிதாசனின் `தமிழுக்கு அமுதென்று பேர்` எனும் பாடல் முகப்பில்.

1942: சென்னையில் அண்ணா தலைமையில் நீதிக்கட்சி மாநாடு

07.02.43: சென்னைச் சட்டக் கல்லூயில் ரா.பி.சேதுப்பிள்ளையுடன் - சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர்

05.06.43: திருவத்திபுரம் லட்சுமி விலாஸ் அரங்கில் `சந்திரோதயம்` எனும் தம் முதல் நாடகத்தில் துரைராஜாவாக நடித்தல்

1944: சேலம் மாநாட்டில் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக்கும் தீர்மானத்தை முன்மொழிதல்

05.12.45: சென்னையில் சிவாஜி கண்ட இந்துராஜ்யத்தில் காகபட்டராக நடித்தல்

13.01.46: `பணத்தோட்டம்` கட்டுரை வெளிவரல்

மே 46: இந்தி எதிர்ப்பு போரில் அண்ணாவின் தலைமையில் பலர் சிறை ஏகல்

மே 46: மதுரையில் நடைபெற்ற கருஞ்சட்டை மாநாட்டில் உரை 11.10.46: ஓர் இரவு பற்றி பெர்னாட்சா என்று கல்கி பாராட்டு

29.07.46: நாவலர் பாரதியார் தலைமையில் கவிஞர் பாரதிதாசனுக்கு ரூ.25000 பணமுடிப்பு வழங்கல்

25.04.47: அண்ணாவின் `வேலைக்காரி` படம் திரையிடல்

01.06.47: `நீதி தேவன் மயக்கம்` நாடகம் அரங்கேறல்

10.08.47: ஆகஸ்டு 15 துக்க நாள் என்ற பெரியாரை மறுத்து அது திருநாளே எனத் திராவிட நாடு ஏட்டில் வெளியிடல்

17.08.47: தஞ்சையில் நடைபெற்ற வேலைக்காரி நாடகத்திற்கு தலைமையேற்ற திரு.வ.ரா.வையும், என்.எஸ்.கே. வையும் பாராட்டல்

23.09.47: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், நிலையும் நினைப்பும் என்ற தலைப்பில் உரை

14.12.47: திராவிட நாடு அலுவலகம் காஞ்சியில் 95, திருக்கச்சி நம்பித் தெருவில் அமைத்தல்.

14.01.48: அண்ணாவின் `நல்லதம்பி` படம் திரையிடல்

17.07.48: இந்தி எதிர்ப்பு மாநாட்டில் உரை

02.08.48: இந்தி எதிர்ப்பு மறியலுக்கு தலைமையேற்றல் பின் சிறையேகல்

23,24,10.48: ஈரோடு திராவிடர் கழகத் தனி மாநாடு தலைமையேற்று நடத்தல். காலை ஊர்வரத்தில் அண்ணாவை அமர வைத்து ஊர்வரத்தின் முன் பெரியார் நடந்து வந்தமை, `பெட்டிச் சாவியைத்தருகிறேன்` என்று பெரியார் மொழிந்தமை.

1948 அரசு அறிவித்த கருஞ்சட்டை எதிர்ப்புக்கு எதிராகக் கூட்டப் பெற்ற மாநாட்டில் கலந்து கொள்ளல்.

25.06.48: திராவிட நாடு ஏட்டில் 04.04.48, 18.04.48 ஆகிய நாட்களில் எழுதிய கட்டுரைகள் வகுப்புக் கலவரத்தைத் துண்டுகின்றன எனக் குற்றம் சாட்டி ரூ.3000 பொறுப்புத் தொகை கட்ட அரசு ஆணை பிறப்பித்தது.

18.03.49: அழகிரி மரணத்தால் தவித்த குடும்பத்திற்கு நாடகம் நடத்தி ரூ.5000 வழங்கல்

18.06.49: பெரியார் - மணியம்மை திருமண அறிவிப்பு

03.07.49: பெரியாரின் திருமணத்தைக் கண்டித்தல் கண்டன அறிவிப்புக்கு வேண்டுகோள் விடுத்தல்

17.07.49: `கண்ணீர்த்துளிகள்` தலைப்பில் எதிர்ப்பாளர் பட்டியல் வெளியிடல்

10.08.49: `மாலை மணி` நாளிதழ் ஆசிரியராதல்

21.08.49: `மாஜிகடவுள்` கட்டுரைத்தொடர் தொடக்கம்

17.09.49: சென்னைப் பவளக்காரத் தெரு 7 ஆம் எண் இல்லத்தில் (காலை 7 மணிக்கு) குடந்தை கே.கே.நீலமேகம் தலைமையில் திராவிடர் கழகத் தோழர்களின் எதிர் காலப்பணி குறித்து உரையாற்றல்

17.09.49: மாலை இராபின்சன் பூங்காவில் தி.மு.கழகத்தொடக்க விழா உரை

18.09.49: கழகப் பொதுச் செயலாளரானார்

18.09.49: திராவிட நாடு ஏட்டில் எழுதிய கட்டுரைகளுக்காக (04,18.04.48) நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல், எதிர்ப்புக்கண்டு பத்தாம் நாள் விடுதலை செய்யப்படல்

25.09.49: `வெள்ளி முளைத்தது` தி.மு.க.தொடக்கம் குறித்த தலையங்கம்.

04.11.49: வழக்கு விசாரணையில் ஈட்டுத் தொகை கட்ட பணிக்கப்பட்ட அரசு ஆணையைநீதிமன்றம் தள்ளுபடி செய்தல்.

13.11.49: ஈட்டுத் தொகைக்கு கழக ஆதரவாளர் அனுப்பிய நன்கொடைகளைத் திருப்புதல்

12.01.50: எங்கும் பொங்கல் விழா எடுக்க அறிக்கை விடல்

12.01.50: திருச்சி சிறையில் இலட்சிய வரலாறு எழுதுதல்

06.08.50: சமநீதி பார்ப்பதாகச் சட்டமன்றத்தில் அறிவித்த அரசின் முடிவுக்கு அறிக்கை

18.09.50: ஆரியமாயை நூல் எழுதியமைக்காக ரூ700 தண்டமும் கட்டத் தவறினால் ஆறு திங்கள் சிறை வாழும் என அறிவிக்கப் பெற்றமை.

24.10.50: அமைச்சர் இராசகோபாலாச்சாரியாருக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு

1950 இந்தி நல்லெண்ணக்குழுவுடன் சந்திப்பு

20.01.51: திருச்சி உழவர் கிராம ஒன்றிய மாநாட்டில் உரை

01.03.51: ஆரிய மாயை நூலை எங்கும் தடையை மீறிப் பலர் படித்தல்

01.03.51: தடை மீறி ஆரியமாயை 159 இடங்களில் படிக்கப்படல்

15.03.51: காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி நிதிக்காக நாடகம் நடத்தியமை 15.03.51: காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி நிதிக்காக நாடகம் நடத்தி ரூ.21000 வழங்கியமை

06.04.51: இராசேந்திர பிரசாத்துக்குக் கறுப்புக் கொடி

29.04.51: சிதம்பரம் திலையரங்கில் சந்திரமோகன் நாடகம் நடத்தியமை

13.08.51: சர் தியாராயர் கல்லூரி உதவி நிதிக்காகத் தம் குழுவினருடன் நீதிதேவன் மயக்கம் நாடகம் நடத்தியமை

02.11.51: அறிவகம், கட்டிடத் திறப்பில் தலைமையேற்றல்

14.12.51: சென்னையில் தி.மு.கழக முதல் மாநில மாநாடு. அண்ணா மாநாட்டு தலைமையேற்றல்

12.03.52: வடநாட்டு ஆளுநர் நியமனக் கண்டனக் கூட்டத்தில் ஆளுநரை மக்கள் தேர்ந்தெடுத்தல் வேண்டும் என்று கோரியமை.

06.04.52: கழக இளைஞர் மஜீத் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரல்

01.08.52: இந்தி எதிர்ப்பு அறப்போர்

28.08.52: ராயல்சீமா பஞ்சநிலைக்கு அண்ணா நன்கொடை அனுப்பியமை

1953: கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க திருச்சியில் துணி விற்றல்.

25.04.53: திருச்சி மாநாட்டில் காதல் ஜோதி அரங்கேற்றல்

28.04.53: புயல் நிவாரண நிதியாக ரூ 27000 வழங்கல்.

06.06.53: கழக இளைஞர் குடும்பத்துக்கு நிலம் அளித்தல்

15.06.53: நம்நாடு ஏட்டின் ஆசிரியர் பொறுப்பு

08.07.53: குலக்கல்வி கண்டன ஊர்வலத்தில் (காஞ்சிபுரம்) தலைமை

13.07.53: குலக்கல்வி, ரயில் நிறுத்தல், கல்லக்குடி இம் மூன்றையும் உள்ளடக்கிய மும்முனைப் போராட்டத்தைத் தூண்டியதாகக் கைதாதல். மூன்று மாதம் சிறை செல்லல்.

01.09.53: மும்முனைப் போராட்டத்திற்கு ரூ.5000 அபராதத் தொகை (அண்ணா மற்றும் சிலருக்கு) எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதி மன்றம் கலையும் வரை காப்பு.

03.05.54: மொழிவழி மாநிலம் அமைய ஆணையிடம் அறிக்கை அளித்தல்

14.01.55: அண்ணாவின் சொர்க்கவாசல் திரையிடப்படல்

20.03.55: ஐந்தாண்டுத் திட்டம் கண்டன நாள் என அறிவித்தல்.

31.05.55: திருச்சி, இராமநாதபுரம் பகுதில் புயலால் பாதிக்கப் பெற்றவருக்கு நிதி வழங்கியமை

20.02.56: தேவிகுளம் பீர்மேடு பகுதிகளைத் தமிழகத்துடனும், செங்கோட்டை வட்டததின் ஒரு பகுதியைக் கேரளத்துடனும் இணைக்க வேண்த் தெரிவிக்கப்பட்ட கண்டனக் கூட்டததில் பொது வேலை நிறுத்தம் பற்றி விளக்கல்.

17,18,19. 05: 1956: திருச்சி இரண்டாவது மாறில மாநாடு.

20.05.56: தேர்தலில் போட்டியிட முடிவு, அண்ணாவின் கருத்துரைமூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு விருது

11.03.57: தேர்தல் முடிவு அறிவிப்பு, அண்ணா வெற்றி பெறல்

09.06.57: ஆங்கில வார இதழ் தொடங்கல் ழடீஆநு டுஹசூனு 07.07.57: எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அண்ணா உரையாற்றல்

03.01.58: நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு. தடையை மீறிப பேசச்செல்லுகையில் கைது செய்யப்படல்.

02.03.58: தி.மு.க. மாநிலக் கட்சியாகவும், உதயசூரியன் அதன் சின்னமாகவும் இந்திய அரசு ஏற்றல்

22.06.58: இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள் கொண்டாடல்.

06.11.58: பூதவராயன் பேட்டையில் எதிரிகளால் கொலை செய்யப்பட்ட கழகத் தொண்டர் ஆறுமுகம் என்பவர் குடும்பத்துக்கு 1 ஏக்கர் நிலம் வழங்கல்

24.04.59: சென்னை மாநகராட்சிப் பொறுப்பைத் தி.மு.க. ஏற்றல்

20,21.06.59: திருச்சி மாவட்ட தி.மு.க 3வது மாநில மாநாட்டில் உரை

15.05.60: சந்திரமோகன் நாடகம் வழி திரு.பி.பாலசுப்பிரமணியன் நிதிக்கு ரூ.10000 வழங்கல்

01.08.60: சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமை ஏற்றல்

25.09.60: சென்னையில் கூடிய பொதுக் குழுவில் அண்ணா பொதுச் செயலாளா ஆதல்.

1960: திராவிட நாடு விடுதலை வார விழாப் பளியில் மாண்ட திரு. கணேசனின் (திருப்பூர்) மனைவியிடம் ரூ.5000 மதிப்புள்ள வீட்டை வழங்கல்.

1962: சம்பத் விலகல் குறித்து அண்ணா வருந்தி அறிக்கை வரைதல்

26.02.62: சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுறல்

26.02.62: சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா, பாராளுமன்ற மேலவை உறுப்பினராதல்

04.03.62: செயின்ட்மேரி மண்டபத்தில் அண்ணாவின் தலைமையில் தி.மு.க.சார்பில் வெற்றி பெற்ற 48 எம.எல்.ஏ. 8 எம்.பி. களுக்குப் பாராட்டு

20.04.62: டில்லி மாநிலங்களவை உறுப்பினராதல்

01.05.62: டில்லி மாநிலங்களவைறில் முதல் சொற்பொழிவு

10.06.62: நெசவாளர் மீது விதித்த வரிக்கொடுமைக் கண்டன ஊர்வலம் நடத்தியமை. அண்ணா கைதாதல்.

19.07.62: வேலூரில் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடந்த மறியலில் கைதாதல்.

02.08.62: அண்ணா தம்மீது தொடரப்பட்ட வழக்கில் தாமே வாதாடல்

03.08.62: விலைவாசி உயர்வுப்போர் - வேலூர் சிறையில் பத்து வாரம்.

02.12.62: சென்னையில் போர் நிதி திரட்டல்.

09.12.62: இந்திய-சீனப்போர் பற்றிய வானொலி உரை

1962: ழடிஅந சுரடந இதழ் தொடக்கம் 07.01.63: சீனர்களின் ஆதிக்கசெறி குறித்துச் சென்னை வானொலியில் ஆங்கில்ப் பேருரை

25.01.63: மாநிலங்கள் அவையில் பிரிவினைத் தடை மசோதா மீது உரை

01.09.63: மகன்கள் பரிமளம், இளங்கோவன் திருமணம்

03.11.63: கட்டாய இந்தியை எதிர்த்ததால் அமைந்த கரையில் கைதாதல்

17.11.63: கட்டாய இந்தி 17 வது மொழிப் பிரிவு சட்டம் எரித்ததல் அன்றே கைதாகி, ஆறு மாதம் சிறைத் தண்டனை ஏற்றல்.

02.12.63: இந்தியைப் புகுத்தும் சட்டப் பிரிவை எரித்தல்

10.12.63: ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை பெறல்

08.01.65: குடியரசு நாளை இந்தி எதிர்ப்பு நாளாகக் கூறல்.

17.01.65: இந்தி எதிப்ப்பு மாநாடு

26.01.65: துக்க நாளாகக் கொண்டாடியமைக்காக கைது.

29.01.65: விடுதலை ஆதல்

09.02.65: இந்தி எதிர்ப்பில் மாணவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தக் கூறல்.

09.02.65: சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் சென்று திரும்பிய அண்ணாவிற்கு வரவேற்பு

26.01.66: இந்தித் திணிப்பிற்காகக் குடியரசு நாளைத் துக்க நாள் எனல். அதனால் கைது ஆதல்.

31.12.66, 01.01.67: சென்னை மாவட்ட மாநாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் அமர வைத்தல்

27.02.67: பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெறல்

06.03.67: தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் தம்யியருடன் 138 பேர் அமர்ந்திட, அண்ணா தமிழக முதல்வர் பொறுப்பேற்றல். அன்றே அரசு ஊழியரிடையே உரையாற்றல்

09.03.67: சென்னை மாநகராட்சி வரவேற்பில் உரை

14.03.67: முதலமைச்சராக வானொலியில் உரை

15.03.67: சட்ட மன்ற வளாகத்தில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றல்.

16,03.67: இந்தி எதிர்ப்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல்.

11.04.67: தலைமை அமைச்சர் இந்திராவை சந்தித்தல்

14.04.67: சென்னை அரசு தமிழ்நாடு அரசு எனப் பெயரிடப்பட்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு தலைமைச் செயலகம் என மாற்றிப் செயர்ப் பலகை அமைத்தல்,

22.04.67: சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படல்

26.04.67: மேலவை உறுப்பினராகப் பதவியேற்றல்

09.05.67: அண்ணாவின் அரசால் ஆகாஷ்வாணி வானொலி என வழங்கப்படல்

15.05.67: ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கல்.

17.06.67: புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து, பேருந்துகள் அரசுடைமை ஆதல், ஏழைகளுக்கு இலவசக் கல்வி, கலப்புமணப் பரிசு, குடிசைவாசிகளுக்குத் தீப்பிடிக்காத வீடு, காவிரித் திட்டம். 08.07.67: ஒரு கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்க செலவிட முடிவு.

23.10.67: சீரணியின் நோக்கத்தைப் புலப்படுத்தல்.

1967: அண்ணாமலைப் பேருரை

02.01.68: தமிழ் அறிஞர்களுக்குச் சிலை எடுத்தல்

04.01.68: இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு செயற்குழுத் தலைமை

10.01.68: இரண்டாவது இலகத்தமிழ் மாநாடு எடுத்து உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் நிற்றல்

23.01.68: இருமொழித் திட்டம் கொணரல்

15.04.68: உலகப் பயணம் மேற்கொள்ளல், யேல் பல்கலைக் கழக அழைப்பு

22.04.68: அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் உரை, சப்பெலோஷிப் எனும் சிறப்பு விருதினைப் பெறல்

12.05.68: அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளைக் கண்டு திரும்பல்.

21.08.68: பள்ளிகளில் என்.சி.சி.அணியில் இந்தி ஆணைச் சொற்கள் நீக்கல்.

08.09.68: அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பேரறிஞர் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பெறுமை பெறல்.

09.10.68: புற்று நோயால் பாதிக்கப் பெற்று அமெரிக்கா செல்லல்.

06.11.68: அமெரிக்க மெமோரியல் மருத்துவமனையில் டாக்டர் மில்லரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தமிழகம் திரும்பல்.

01.12.68: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தமைக்கு விழா கொண்டாடல்

14.01.69: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு.

02.02.69: இரவு 12.22 மணிக்கு உடல் இயக்கம் நின்றது.

03.02.69: தமிழ் மக்கள் பேரறிஞர் அண்ணாவை இழந்து துன்பக்கடலில் மூழ்கல்

04.02.69: முற்பகல் 11.40-க்கு முப்படையினர் மரியாதையுடன் அண்ணாவின் உடல் புதைக்கப்பட்டது,

03.02.70: அண்ணா அஞ்சல்தலை - மைய அரசு வெளியிடல்.