அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -35

அண்ணா பிறக்காவிட்டால். . .

மண்மட்டும் இலையென்றால் குலுங்கி நிற்கும்
வயலெங்கே? பயிரெங்கே? உயிரெங்கே? பெண்மட்டும இலையென்றால் இனவ ளர்ச்சிப்
பெருமைமிகு வரலாறும் தொடர்வதெங்கே?
எண்மட்டும் இலைய்னறால் கணிதம் எங்கே?
எழிலார்ந்த சரித்திரத்தை அளப்பதெங்கே?
அண்ணாநீர் தமிழகத்தில் பிறக்காவிட்டால்
அழகுதமிழ் மொழிநடைக்கே நாதி ஏது?
தூங்கிவிட்ட தமிழினத்தை எழுப்பு தற்குத்
தூயவரே! உமைவிட்டால் ஒருவர் உண்டா? ஏங்கிநிற்கும் ஏழைகளின் சிரிப்பில் தானே
இறைவனுள்ளால் என ஒலிக்கக் குரல்தான் ஏது?
தீங்கிழைக்கும் ஆதிக்க இந்திப் பேயைத்
திருநாட்டை விட்டிங்கே விரட்டு வோர்யார்?
பாங்குடனே தாய்மண்டைத் தமிழ்நா டென்றே பாசமுடன் அழைப்பதற்கும் வழிதான் உண்டா?

குடிசையிலே வாழ்வோரும் கோட்டை சென்றே
கோலோச்ச வகைசெய்தோர் யாராம்? ஆழ்ந்த படிப்பாலே, உழைப்பாலே, தொண்டி னாலே
பாராள முடியுமென்றோர் யாராம்? என்றும்
நடிப்பில்லா எளிமையினால், இமயப் பண்பால்
நாட்டோரின் இதயமெலாம் ஈர்த்தோர் யாராம்?
முடிவினிலும் இலட்சோப இலட்சம் மக்கள்
மொய்த்தழவே விடைபெற்றோர் நீங்கள் அன்றோ?
(கவிவேந்தர் வேழவேந்தன்)


அண்ணா எடுத்த நடவடிக்கையை அனுபவசாலிகள் ஏன் எடுக்கவில்லை?

அண்ணாதுரை எத்தனையோ ஜோரான நடவடிக்கைகளை எடுததிருக்கிறார். அவற்றில் பல பெயர் மாற்ங்கள்! இவ்ற்றினூடே இரண்டு பெரிய நடவடிக்கைகளும் எடுத்து விட்டால். இரண்டில் ஒன்று துணிகரமானது; ரூபாய்க்கு ஒரு படி அரிசித் திட்டம்; இன்னென்று ஒழுங்கானது. மாவட்டக் கலெக்டர்களுக்குச் சுற்றறிக்கை.

மாவட்டங்களின் முதன் மந்திரியோ அல்லது மற்ற அமைச்சர்களோ சுற்றுப் பயணம் செய்யும்போது, கலெக்டர்களோ இந்த பெரிய அதிகாரிகளோ அவர்களுடன் கூடவே சுற்ற வேண்டியதில்லை என்று முதல்வர் கட்டளை விட்டிருக்கிறாராம்.

புதிய திக்கில் நிர்வாகத்தையே திருப்பிவிடும் ஒழுங்கான நடவடிக்கை இது.

இதென்ன பிரமாதம் என்று எவராவது கூறுவாரானால், அது அரசியல் பொறாமையாகவே இருக்க முடியும்.
இவ்வளவு சாதாரண நடவடிக்கையை இதற்கு முன் இருந்த பெரிய அனுபவசாலிகள் ஏன் எடுக்கவில்லை?
எங்கு சென்றாலும கலெக்டர்கள் தங்கள் பரிவாரங்களுடன் காத்திருந்து வரவேற்கும் பெருமையை இழுக்க மனமில்லை என்பதைத் தவிர வேறு என்ன சமாதானம் கூறமுடியும்? எல்லோரும் என்னை உச்சிமேல் வைத்து மதிக்க வேண்டும்; என்னையே மதிக்க வேண்டும் என்று ஆசைப்படாத அரசியல்வாதி உண்டா?

மக்கள் அண்ணாந்துபார்க்கக் கூடிய பெரிய அதிகாரிகள். அஞ்சி நடுங்கக்கூடிய போலீஸ்காரர்களும் ஒருவர் பின்னும் முன்னும் கூடவே ஓடி வருவதென்றால் சாதாரண மரியாதையா?

சாதாரணமான மற்றவர்களுக்கு எவராயிருப்பினும் - அது கிடைக்கக் கூடியதா? பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே நிலைநாட்டி அரசாளும் கோடீஸ்வரராக இருந்தாலும், அதிகாரியைப் பார்த்தவுடனே அடங்கவேண்டியதுதானே. அவரவர் தரத்திற்கு ஏற்ப!

அமைச்சர் பதவி அப்படியா? எவர் அமைச்சராக வந்தாலும, அதற்கு முந்தின நாள் அவர் எங்கு சுற்றியவராயிருப்பினும், வந்த நாளிலிருந்தே அதிகாரிகள் வளைத்துக் கொள்வார்களே?

சாதாரண நாலுமுழ வேட்டி, அரக்கைச் சட்டையுடன் விசுக், விசுக்கென்று தாங்கித் தாங்கி நடக்கும் ஒரு நோஞ்சான் அமைச்சரின் முன் கட்டு மஸ்தான காக்கி உடுப்புக்காரர்கள், குழாய் கோட்டு அதிகாரிகள் ஓடிவருவதை மக்கள் நேரில் பார்ப்பதென்றால்! சுற்றிலும ஆடம்பரம்; உள்ளே மத்தியில் எளிமை உடுபபில்தான் எளிமை! எணிமையின் உள்ளுக்குள்ளே உலகமெல்லாம பணிந்தாலும் போதாது என்று அலையும் மேதை மனம்.

இந்த ஆடம்பர எளிமைதான் பொதுச் சேவையின் முடிவிடம் அரசியலில் பொதுச் சேவையில் துடிப்பவர்களின் பொதுக் குறி இந்த கௌரவத்தில்தான் இந்தப் பகட்டான பெருமையை வேண்டபம் எனத்னே ஒதுக்குவது சாதாரணம் அல்ல. அது நிச்சயம் அசாதாரணமே.

(சுதேசமித்திரன், வாரப்பதிப்பு 14.05.1967 இதழில்)

 

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai